நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#55
 பெண்கள் புகழ்ச்சி பிடிக்காதவர்கள் போலவே நடிப்பார்கள். நீங்கள் ஒரு பெண்ணை பார்த்து "நீங்கள் மிகவும் அழகு" என கூறி பாருங்கள்.

பெரும்பாலும் அவர்களின் பதில் "பொய் சொல்லாத"என்பதாகவே இருக்கும் ஏனென்றால் அப்பொழுதுதான் அவர்களை பற்றி மேலும் புகழ்வார்கள்.

அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன நானும் அதே "பொய் சொல்லாதடா" வை சொன்னேன்.

பேசிகொண்டே பஸ் ஸ்டாப்பிற்கு வந்துவிட்டோம்.

பஸ் ஸ்டாப்பில் கூட்டம் ஒன்றும் அதிகமில்லை.சிறிது நேரத்தில் ஒரு பேரூந்து வந்தது.இருவரும் அதில் ஏறி அமர்ந்தோம்.அந்த பேருந்தில் தான் நான் அவனை முதன் முதலில் பார்த்தேன் என்பது அவன் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது.

அவனுடன் இருக்கும் சமயங்களில் நான் இந்த உலகையே மறந்துவிடுகிறேன் என்பதற்கு அதுவே சாட்சி ஒரு ஆண் பெண்ணுடன் இருக்கும் போது எல்லாம் அவனுக்கு நினைவிற்கு வருகிறது.

ஆனால் பெண் உலகைமே மறந்து அவன் மடியில் கிடக்கிறாள் ஒரு கவிதை புத்தகத்தில் படித்தது எவ்வளவு நிதர்சனமான உண்மை.

அவன் என்னை பார்த்துகொண்டே இருக்கவேண்டும் என கேட்டான்.நான் வேலைக்கு சேரும் விண்ணப்பத்தில் ஒட்டுவதற்காக இரண்டு பாஸ் போர்ட் சைஸ் போட்டோ எடுத்து வைத்ததும் அதில் ஒன்று என் கைப்பையில் இருப்பதும் எனக்கு அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது.அதில் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தேன்.அதற்கு அவன் சொன்னான் நான் மாறிவிட்டேனாம்.

உண்மையில் அவனை நான் அன்றுதான் புரிந்துகொண்டேன் என்னை விட வயதில் குறைந்தவன்.என் மாணவன் நான் அவனுக்கு ஆசிரியை என்பதெல்லாம் மறக்க செய்து ஏதோ ஒரு உணர்வு அவன் அருகில் அவன் கைகளை இறுக்கி பிடித்தபடி என்னை அமரவைத்திருக்கிறது.

அவன் என் கைகளை மேலும் இறுக்கி பிடித்தபடி அவன் முகத்தை என் முகத்திற்கு அருகில் கொண்டு வந்தான்.நான் தயாரானேன்.மீண்டும் ஒரு முத்தத்திற்கு இன்றைக்கு இது மூன்றாவதாக இருக்க போகிறது என நினைத்தேன்.ஆனால் நெருங்கி வந்த அவன் உதடுகள் என் கன்னத்தை உரசி விட்டு போனது.

அவன் விலகி போனதும் நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.பின் இருவரும் பார்ந்து சிரித்து கொண்டோம்.

பேரூந்து நிறுத்தம் வந்தது இருவரும் இறங்கி கொண்டோம்.நாளைக்கு ஒரு வீக்லீ டெஸ்ட்க்கு அவனை நன்றாக படித்து வா எனகூறினேன்.

ஆனால் அவன் நான் சொன்னதை காதில் வாங்கிகொண்ட மாதிரியே இல்லை எனக்கு அவனை எப்படியோவது படிக்க வைக்க வேண்டும் என நினைத்தேன்.

"சரி வர்றேன்"என கூறியவனை கையை பிடித்து நிறுத்தினேன். அவன் முகத்தருகே போய் மெதுவாக கூறினேன்"நீ மட்டும் நாளைக்கு டெஸ்ட் ல FIRST MARK எடுத்திட்டே எப்பவும் நீ குடுப்பியே ஒண்ணு அதை நான் கொடுக்கிறேன் உனக்கு"என்று கூறி விட்டு நடந்தேன். என் முன்னால் சென்ற பேருந்தின் MIRROR ல் அவன் உறைந்து போய் நிற்பது தெரிந்தது.
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 03-04-2019, 11:13 AM



Users browsing this thread: 1 Guest(s)