நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#51
பேசிகொண்டே பஸ் ஸ்டாப்பிற்கு வந்துவிட்டோம்.பேருந்து நிலையம் என்ற பெயரில் இருந்த நிழற்குடை சோடியம் வெபர் விளக்கின் வெளிச்சத்தில் இருட்டை விரட்டியத்திருந்தது.பக்கத்தில் ஒரு ஓலை குடிலின்கீழ் செருப்பு தைக்கும் கடை அதன் உரிமையாளர் இல்லாமல் ல் வெறிச்சோடிபோய் இருந்தது.எதிரில் இருந்த பெட்டி கடை புகைபிடிக்கும் இளைஞர்களை நம்பி திறந்திருந்தது.மக்கள் தொகை எண்ணிக்கை சொற்பமாகவே இருந்தது அந்த நெடுஞ்சாலையை அரைத்து கொண்டு ஒரு லாரி "பள்ளி பகுதி பார்த்து செல்லவும் "என்ற போர்டை அலட்சியபடுத்திவிட்டு சென்றது. பத்து நிமிடத்தில் ஒரு பேருந்து வந்தது நானும் அவளும் முதன் முதலாக சந்தித்த அதே பேருந்து.நான் அவளை பார்த்து குறும்பாக சிரித்தேன்.பஸ்சில் ஏறி அருகருகே அமர்ந்தோம்.பெரிதாய் ஒன்றும் கூட்டமில்லை.

"உனக்கு ஞாபகம் இருக்குதா அந்த பஸ்சுலதான் உன்னை முதன்முதலாக பார்த்தேன்"என்றேன்.

"சரி அதுக்கென்ன இப்போ" என்றாள்.

"உனக்கு எதுவும் தோணலையா டியர்"என்றேன்.

"எனக்கு உன்னை ஓங்கி ஒரு உதை உதைக்கனும் னு தோணுது டியர்"என்றாள் சிரித்துகொண்டே.

"நீ இப்படி சிரிச்சுகிட்டே இருக்கனும் அதை நான் பார்த்துகிட்டே இருக்கனும்"என்றேன்.தன்னுடைய பர்ஸை திறந்து அதிலிருந்த தன்னுடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை எடுத்து என் கையில் திணித்துவிட்டு 

இந்தா இதவச்சிகிட்டு பார்த்துகிட்டே இரு" என்றாள்.அதில் அவள் ஒற்றை ஜடையில் அழகாக சிரித்துகொண்டிருந்தாள்.

நான் அதிர்ந்து போனேன் "ஏய்!இதெல்லாம் கொஞ்சம் ஓவர் இப்படி திடீர் னு மனசு மாறுனா xossipy வாசகர்கள் என்ன முட்டாள்களா அவர்கள் எப்படி நம்புவார்கள்"என்றபடி அதை என் சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டேன்.அவள் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்து கொண்டே "யார் நம்பினாலும் நம்பாமல் போனாலும் எனக்கு கவலை இல்லை.உன்கூட இருக்கும் போது எனக்கு பாதுகாப்பாக இருப்பதாக தோன்றுகிறது "என்று கூறிவிட்டு மீண்டும் வேடிக்கை பார்த்தாள்.

அந்த கணம் அந்த நேரத்தில் அவள் ஒரு குழந்தை போல் தெரிந்தாள் எனக்கு.நான் மெல்ல அவள் கைகளை என் கைகளோடு சேர்த்தேன். அவள் திரும்பி பார்த்து என் கைகளை மேலும் இறுக்கி கொண்டாள்.நான் மெல்ல என் முகத்தை அவள் உதட்டருகே கொண்டு சென்றேன்.அவள் என்னையே பார்த்துகொண்டீருந்தாள்.ஆனால் நான் அவள் உதட்டில் முத்தமிடாமல் அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு டக்கென திரும்பி தலையை குனிந்துகொண்டேன்.பின் இருவரும் சிரித்துகொண்டோம்.அதற்குள் நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது.இருவரும் இறங்கினோம்.

அவள்"ஏன் என்னாச்சு" என்றாள். 

"ஒண்ணுமில்லை நீ என்னை விட்டு விலகி இருக்கும் போது எனக்கு உன்னை தப்பாக பார்க்க தோணுச்சு,பட் இப்போ நீ பக்கத்துல இருக்கும் போது கூச்சமாவும்,பயமாகவும் இருக்கு "என்றேன்.

[b]"ஒண்ணுமில்லை நீ என்னை விட்டு விலகி இருக்கும் போது எனக்கு உன்னை தப்பாக பார்க்க தோணுச்சு,பட் இப்போ நீ பக்கத்துல இருக்கும் போது கூச்சமாவும்,பயமாகவும் இருக்கு "என்றேன்.
[/b]



"ஹே தோடா"என்று என்னை பார்த்து தலை சாய்த்து சிரித்தாள்.



"அப்படி சிரிக்காதேடீ,"என்று மனதிற்குள் பெருமூச்சு விட்டேன்.



"சரி நாளைக்கு WEEKLY TEST க்கு படிச்சுட்டு வந்துடு அப்புறம் பார்த்து எழுதி என்கிட்ட திட்டு வாங்காதே"என்றாள்.



"சும்மாவே நான் உன்னையே நினைச்சிட்டு இருப்பேன் இன்னைக்கு வேற நீ என்னைய ரொம்பவே உசுப்பேத்தி விட்டுட்ட இன்னிக்கு நான் தூங்குறதே சந்தேகம்தான் நீ என்னடான்னா படிக்கலாம் சொல்லி டார்ச்சர் பண்றே பார்க்கலாம்" என்றேன்.


[b]அவள் தனது மென்மையான குரலால்"நீ மட்டும் நாளைக்கு test ல் first mark எடுத்துட்டீனா நீ எப்பவும் எனக்கு குடுப்பியே ஒன்னு அதை நான் உனக்கு கொடுக்கிறேன்"என்றாள்.[/b]
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 01-04-2019, 09:27 AM



Users browsing this thread: 1 Guest(s)