நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#47
அவள் எழுந்து என் அருகில் வந்தாள்.

"நான் இன்னும் சாப்பிடலை உன்னாலதான் நான் இன்னும் சாப்பிடாம இருக்கேன் தெரியுமில்ல"

"தெரியும்"

"அப்புறம்"என்றாள் என்னை உற்றுபார்த்துவிட்டு பிறகு மீண்டும்"எனக்கு ரொம்ப பசிக்குது போ ,போய் நான் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வந்து குடு"என்றாள். நான் சட்டென நிமிர்த்தேன்.என்னை சுற்றி தேன் மழை பொழிகிறது.குளிர்ந்த காற்று என் உடலை தழுவி செல்கிறது(அந்த புழுக்கமான அறையிலும்)பிண்ணனியில் இளையராஜா இசை ஒலித்துகொண்டே இருக்கிறது.இவை அனைத்து அவள் கூறிய அந்த ஒற்றை வார்த்தையின் மகிமையில் காட் இஸ் கிரேட் என மனதில் நினைத்துகொண்டேன்."நீ.நீ எ..என்ன.. ச சொன்னே" 

"எனக்கு பசிக்குது சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வா னு சொன்னேன்"

"நி.நிஜமாதான் சொல்றியா"என நம்பமுடியாமல் கேட்டேன்.எப்படி நம்புவது கொஞ்சநஞ்ச டார்ச்சரா அவளூக்கு கொடுத்திருக்கிறேன்.

அவள் என்னை பார்த்தி சிரித்துவிட்டு"போடா டேய்"என்றாள். 

நான் உற்சாகத்தில் ஹ்ர்ரேரேரரேய் எனகத்தி கொண்டே வேகமாக திரும்பி "பத்து நிமிஷம் இரு உடனே வந்துடறேன் என கூறிவிட்டு ஏறக்குறைய ஒடினேன். 
அவள் "பார்த்து போ எங்கயாவது விழூந்துட போற "என்றாள்.நான் ஜிவ்வென்று வானில் பறப்பது போல் உணர்ந்தேன்.
சொன்னது போல் ஏழே நிமிடத்தில் சாப்பாடு வாங்கி கொண்டு வந்து கொடுத்துவிட்டு நின்றேன்.அவள் "தேங்க்ஸ் "எனக்கூறி வாங்கி கொண்டாள்.நான் அங்கேயே நின்றிருந்தேன்.அதற்கு அவள்"என்னாச்சு கிளம்பு கிளாஸ்க்கு" என்றாள்.நான் சட்டை பையிலிருந்து ஒரு TABLET ஐ எடுத்து கொடுத்துவிட்டு,இந்தா இது தலைவலி மாத்திரை சாப்பிட்டு போட்டுக்க எனகூறி அவளிடம் கொடுத்தேன்.அவள் அதை வாங்கி பார்த்துவிட்டு "ஏய் எனக்கு தலை வலினு உனக்கு எப்படி தெரியும் "என கேட்டாள்.

அதற்கு நான் அதான் இன்னிக்கு நான் உன்னை கிஸ் பண்ணேன்ல கண்டிப்பா உனக்கு அதனால தலை வலி இருக்கும் னுநினைச்சு வாங்கிட்டு வந்தேன்"என்றேன்.

"சரி அப்படி வச்சிட்டு நீ கிளம்பு"என்றாள்.

"ம்.சரி" என்றபடி நகர்ந்தேன். கதவை திறந்து வெளியேற முற்பட்ட போது அவள்"ஏய் கொஞ்சம் நில்லு"என்றாள். நான் நின்று என்ன என்பது போல் அவளை பார்த்தேன். அவள் "ஈவ்னிங் பஸ் ஸடாப்பில் 6 மணிக்கு வெயிட் பண்ணு சேர்ந்து போகலாம்.நான் வர கொஞ்சம் லேட்டாகும்."என அவள் கூறியதும் என் மனதில் "வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது"பாடல் ஒலிக்க தொடங்கியது.நானும் அவளும் பஸ்ஸில் என் அணைப்பில் அவள் நினைக்கும் போதே குளு குளுவென தான் இருந்தது.என் கனவுலகை அவள் குரல் கலைத்தது."என்ன வெயிட் பண்றீயா"என்றாள். நான் "கண்டிப்பா பண்றேன்.அப்புறம்"என்று இழுத்தேன். அவள் "என்ன அப்புறம் "என்றாள்.நான் மழுப்பியபடி ஒண்ணுமில்லை.
"சரி ஈவனிங்,6 O'CLOCK, பஸ் ஸ்டாப் ரெண்டு பேரும் ஒண்ணா போகலாம் "

"சரி ஈவ்னிங் பாக்கலாம்"என்றாள். 

"ஒகே ஈவ்னிங்,6 மணி,பஸ் ஸ்டாப் உனக்காக நான் வெயிட் பண்றேன் மறக்காம வந்துடு"என்று மீண்டும் கூறினேன். "சரி வந்துடறேன் கிளம்பு"என்று என்னை துரத்தினாள். 

"ரொம்ப உளர்ரேன் இல்ல"என்றபடி தலையை சொறிந்தபடி வெளியேறினேன்.
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 27-03-2019, 06:00 PM



Users browsing this thread: 3 Guest(s)