அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 70 

மணி அமர்ந்திருந்த விமானம் கோயம்புத்தூர் நோக்கி பறந்து கொண்டிருந்தது. மணியின் பதட்டம் கொஞ்சம் தணிந்திருந்தது, ஆனால், இரண்டு மணிநேரத்துக்கு முன், வாழக்கை அவனுக்கு கொடுத்த அதிர்ச்சியில் இருந்து, இன்னும் அவன் முழுமையாக மீண்டுருக்கவில்லை, முடியுமா? என்றும் தெரியவில்லை. அந்த கருத்தரங்கத்திற்கு செல்லும் பொழுது, மிகவும் தெளிவான மனநிலையுடன் இருந்தான். அந்தக் கருத்தரங்கத்தில் கேட்கப்படப் போகும் கேள்விகளில், ஒரே ஒரு கேள்விக்கான பதிலை அளிக்கத்தான், அந்த கருத்தரங்கத்தில் கலந்து கொள்ளவே ஒப்புக் கொண்டு இருந்தான்.

சில மாதங்களுக்கு முன் திட்டமிட்டது போலவே, அந்த அமைப்பு அனைத்து தொகுதிகளிலும் தோற்றிருந்தது. அதைத் தொடர்ந்து, எதிர் கட்சி ஆட்சிக்கு வர, மணியின் நிறுவனத்தின், ப்ராஜக்ட் கட்டுமானப் பணிகள், வெகு ஜோராக நடந்து கொண்டிருந்தது. கட்டுமான பணியின் போது ஏற்பட்ட, ஒரு சிறு விபத்தில், ஏழு பேர் மரணித்துவிட, அதை பெரும் பிரச்சனையாக்கி, தேர்தல் தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது, அந்த அமைப்பு. ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது, வியாபார கணக்குகளை காட்டிலும், உளவியல், உணர்வுகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த விபத்தின் காரணமாகவும், அதைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தின் காரணமாகவும், மணியின் நிறுவனத்தின் பெயர் ரொம்பவே அடி வாங்கியிருந்தது. அதை சரிக்கட்டும் முயற்சிகளின், ஒரு பகுதியாக, அவன் இந்தக் கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள சம்மதித்தான். இளம் வயதில் வெற்றி கொள்பவர்களை பெரிதாக தூக்கிக் கொண்டாடும் சமூகம், நமது, இந்திய சமூகம். சமூகத்தின் அந்த இயல்பை, தன் வயதை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஊடகங்களின் வழியே, தனது நிறுவனத்தின் முகமாக, தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம், அவனுக்கு. அந்த விபத்தைப் பற்றிய கேள்விக்கான பதிலை, ஏற்கனவே தயாராக வைத்திருந்தான். அதை மட்டுமே மனதில் ஓட்டியபடி, தெளிவாக அந்த மேடையில் அமர்ந்திருந்தான்.

இவனோடு சேர்த்து மொத்தம் நான்கு இளம் தொழில் முனைபவர்கள், அந்த கருத்தரங்கத்தில் விருந்தினராக பங்கேற்றிருந்தனர். நான்கு விருந்தினர்களையும் அறிமுகப்படுத்தி பேசினார், நிகழ்ச்சியின் தொகுப்பாளர். அவருக்கு ஐம்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் வயது, நாட்டின் மிகப் பிரபலமான ஊடகவியலாளர்களில் ஒருவர். மணியை, அறிமுகப்படுத்திப் பேசும் பொழுது, அவனது நிறுவனத்தின் செயல்பாடுகளை காட்டிலும், அவனது வயதையே முன்னிறுத்தி பேசினார். எதை மணி தன் பலமாக நினைத்துக் கொண்டு இந்த நிகழ்வில் கலந்து கொள்ள நினைத்தானோ, அதைவைத்தே அவனை சிறுமைப் படுத்துவது போல, வஞ்சப் புகழச்சியில் பேசினார். இந்தியத் தொழில் துறையின் "போஸ்டர் பாய்", "மேன் வித் தி மிடஸ் டச்" என்று அவர் மணியை அறிமுகம் செய்து பேசியது நல்ல எண்ணத்தில் கூட இருக்கலாம். மணியை அறிமுகப் படுத்திப் பேசும் பொழுது அவர் உபயோகப்படுத்திய "வொண்டர் கிட்" வார்த்தை அவனை உரச கூடாத வகையில் உரசி, அவன் உணர்வுகளை தட்டி எழுப்பியது. சிலர் நொடிக்கு முன் அமைதியாக இருந்த மணியின் மனது, கொந்தளித்துக் கொண்டிருந்தது, அந்த ஒரு சொல்லால்.

ஒருசொல், ஒருவரது வாழ்க்கையில் பெரிய உள்ள குழப்பத்தை ஏற்படுத்தும், அமைதி இழக்கச் செய்யும் என்பது அந்த வார்த்தை, ஒருவரது வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்பை, முக்கியத்துவத்தை கொண்டே உணர முடியும். திகட்டாத இன்பத்தையும், உயிர்கொல்லும் வலி என இரண்டையும், அவன் வாழ்வின் பதின் வயதிலேயே கொடுத்திருந்தான், அந்த "வொண்டர் கிட்" மணிகண்டன். சில நொடிகள், தான் எங்கு இருக்கிறோம் என்பதை மறக்கும் அளவுக்கு, அவனது புலன்கள் மரத்துப் போய்விட்டன. சில நொடிகளில்தான், சுதாரித்துக் கொண்டு, அறிமுகத்திற்கு நன்றி சொன்னாலும், அவனது உள்ளமோ எப்பொழுது இந்த மேடையில் இருந்து இறங்குவோம்? என்று நினைக்க ஆரம்பித்திருந்தது.

தொகுப்பாளர்: "இந்தியத் தொழில்துறையின் "வொண்டர் கிட்" ன்று உங்களை குறிப்பிடுவதை எப்படி பார்க்கிறீர்கள்?"

முதல் கேள்வியே அவனது மனசஞ்சலத்தை அதிகப்படுத்தியது. "முட்டாள்கள் தான் அதிசயத்தை நம்புவார்கள்" என்று சொல்லு இன்று கொந்தளித்த மனதை கட்டுப்படுத்திக் கொண்டு

மணி: "நான் அதிசயங்களை நம்புவதில்லை!!" புன்னகைக்க முயன்று தோற்றுப் போனான்.

இரண்டு வருடங்களுக்கு முன்வரை உணர்வுகளை கட்டிப்போடுவதில் இணை இல்லாமல் இருந்தவன, உணர்ச்சிப் பிழம்பாய் இருந்தான். இன்னும் விளக்கமாக பேசுவான் என்று எதிர்பார்த்திருந்த தொகுப்பாளர், அவன் பதில் சொல்லி முடித்து விட்டான் என்று உணர்ந்ததும், மற்ற மூவரிடமும், தன் அடுத்த சுற்று கேள்வியை, கேட்க ஆரம்பித்தார்.

தொகுப்பாளர்: "கடந்த ஒன்றரை வருஷத்துல, உங்களோட சொத்து மதிப்பு 46 மடங்கு!!, 46 சதவீதம் இல்ல, 46 மடங்கு உயர்ந்திருக்கு!! இந்த வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க?"

ஏற்கனவே சஞ்சலத்தில் இருந்தவனை, மேலும் தூண்டியது, அவனை நோக்கி கேட்கப்பட்ட, இரண்டாவது கேள்வி. நால்வருக்கு ஒரே மாதிரியான கேள்விதான் என்றாலும், வார்த்தைத் தேர்வுகளில் தெளிவாக அடித்தார், அந்த தொகுப்பாளர்.

மணி: "ஒரு சின்ன திருத்தம், 46 மடங்கு உயர்ந்தது, என்னோட சொத்து மதிப்பு இல்ல, ஃப்யூச்சர் குரூப்ஸ்ஸின் சந்தை மதிப்பு!!" தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பதிலளித்தாள்.

தொகுப்பாளர்: "இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?"

தொடர்ந்து சீண்ட பட்டான், மணி.

மணி: "என்னோட சொத்துன்னு நான் நம்புவது!! ஃப்யூச்சர் குரூப்ஸ்ஸில் நேரடியாகவும், மறைமுகமாகவும், வேலை பார்ப்பவர்களைத் தான்!!. அப்படி பார்த்தா, கடந்த மூணு வருஷத்துல, என்னோட சொத்து மதிப்பு எட்டு மடங்கு உயர்ந்திருக்கு"

தன்னிலை இழக்கும், விழும்பில் இருந்தான், மணி. அவன் சொன்னது உண்மையா அல்லது பொய்யா என்பதை அவன் மட்டுமே அறிவான்.

தொகுப்பாளர்: "உங்களுக்காக வேலை பாக்குறவங்கதான் உங்களோட சொத்துனு சொல்றீங்க!! மகிழ்ச்சி!! ஆனா, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, நாக்பூரில், உங்க கம்பெனி கன்ஸ்ட்ரக்ஷன் சைட்ல ஏழு பேர் இறந்திருக்கிறார்கள்? இல்லையா?"

உண்மையிலேயே, மணி, இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்வது, அந்த தொகுப்பாளருக்கு பிடிக்கவில்லை தான், போல.

மணி: "அது ஒரு விபத்து, விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை!! எங்க சைடுல நிர்வாக ரீதியா இன்னும் முழுமையான விசாரணை முடியல!! அதே மாதிரி சட்ட ரீதியான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்!! ஆதனால், இதைப்பற்றி, இதுக்கு மேல, விரிவாகப் பேசுறது, இப்போ, சரியாக இருக்காது!! நீதிமன்ற விசாரணை முடிந்ததும், விரிவா பதில் சொல்றேன்!!”

எந்த கேள்விக்காக, இந்த கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்தானோ, அந்தக் கேள்விக்கு மிகவும் சுருக்கமாகவே பதிலளித்தான். இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீடு!!, குடும்பத்தில் வேலை பார்க்கும் தகுதி உடைய, அத்தனை பேருக்கும் வேலை!!, படித்து கொண்டு இருப்பவர்களின் முழு கல்விச் செலவையும் ஏற்றுக் கொண்டது!! என விரிவான, ஒரு பதிலை வைத்திருந்தான். ஆனால் அப்படி தான் சொல்லப்போக்கும் பதிலில் இருந்தே, மீண்டும் கேள்வி கேட்கப்பட்டால், எங்கே, தன் கட்டுப்பாட்டை இழந்து விடுவோமோ, என்ற பயத்தில், மிகவும் சுருக்கமாகவே பதிலளித்தான்.

தொகுப்பாளர்: "22 வயதில், உங்க குழுமத்தின் தலைமை பொறுப்பை ஏற்ற பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?"

மணி: "ஏஜ் இஸ் ஜஸ்ட் அ நம்பர்!! முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு மட்டுமே வயது ஒரு சவாலாக இருந்திருக்கும்!! Business is part of our dinner table conversations!! சின்ன வயசுல இருந்தே தொழில் சூழலில் வளர்ந்த எனக்கு, எப்படியும் ஒருநாள் அந்த பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று தெரியும்!! அதனால அந்த நேரத்துல, என்னை நிரூபிக்கணும்ங்கிற உறுதி மட்டுதான் மனசுல இருந்துச்சு!!"

இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு இருக்கக் கூடாது என்றுதான், மணியின், பின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

தொகுப்பாளர்: "முன்னாடி ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, உங்ககிட்ட வேலை பாரக்கிறவங்க தான், உங்களுடைய சொத்துனு சொன்னிங்க!! ஆனா இந்த வருஷம், எழு தனி விமானங்கள் வாங்கி இருக்கீங்க!! உங்க பேச்சும்!!, உங்களோட செயல்பாடும்!! முரணாக இருக்கே?" கருத்தரங்கின் கருத்தே, தடம் மாறிக் கொண்டிருந்தது.

மணி: "உங்க கையில கட்டியிருக்கிற வாட்ச்சோடா மதிப்பு என்ன?"

சில நொடிகள் தன்னை நிதானித்துக் கொண்டவன், தொகுப்பாளரின் கேள்விக்கு, முதல் முதலாக, சரியான பதிலளிக்கத் தயாராகியிருந்தான்.

தொகுப்பாளர்: "6000 டாலர்ஸ்!!" மணி கேள்வி கேட்க, தொகுப்பாளர் பதிலளித்தார்.

மணி: "அது தொலைஞ்சி போனா, அதத்தேடி உங்ககிட்ட கொடுத்தா, அதிகபட்சமா எவ்வளவு சன்மானம் தருவீங்க?"

கருத்தரங்கின் சுவாரசியத்தை அடுத்த கேள்வியில் கூட்டினான், மணி.

தொகுப்பாளர்: "ஒரு இரண்டாயிரம் ரூபாய்!!" பதில் சொல்ல, சிரித்தான்.

மணி: "என் கையில் இருக்கிறது Aldo வாட்ச்!!, அதிகபட்சம் 150 டாலர் இருக்கலாம்!!, இது தொலைஞ்சி போனா, திரும்பக் கிடைக்கிறது!! என்னோட, தனிப்பட்ட மொத்த சொத்தையும் செலவு பண்றதுக்கு, ஒரு நொடி கூட யோசிக்க மாட்டேன்!! இரண்டு பேர் கையில் இருக்கிறது நேரத்தைமட்டுமே காட்டக்கூடிய வாட்ச்தான்!! ஆனா, அந்த வாட்ச் மேல, ரெண்டு பேருக்கும், வேற வேற மாதிரியான, மதிப்பு இருக்கு!!. அதே மாதிரிதான், சிலருக்கு சொத்து மதிப்புங்கிறது பணமாக இருக்கலாம்!! ஆனா, எனக்கு ஃப்யூச்சர் குரூப்ஸ்ஸில் வேலை பார்க்கிறவங்க தான்!! வாழ்க்கையில, நான் எதை அதிகமா மதிக்கிறேன்னு எனக்கு தெரியும்!! வாழ்க்கையைப் பத்தின என்னோட மதிப்பீடு, அடுத்தவர்களின் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது!!"

சிரித்தவாறே மணி சொல்லி முடிக்க, அரங்கத்தில் பலத்த கைதட்டல். கைதட்டல் அடங்கியதும் மீண்டும் தொடர்ந்தான், மணி.

மணி: "இப்போ உங்கள் கேள்விக்கு பதில் சொல்றேன்!! ஏழு விமானங்கள் வாங்கியது, ஃப்யூச்சர் குரூப்ஸ்ஸின் தேவைக்காக!!. மணிகண்டன், என்ற தனி மனுஷனோட, தேவைக்காக இல்லை!!.

கொஞ்சம் பெரிதாகவே சிரித்தான். எதிராளியை அடித்து வீழ்த்துவதைவிடவும், வெற்றிபெருவது சாவாலானது, அப்படி ஒரு சாவலான வெற்றியத்தான் பெற்றுவிட்டதாக நினைத்தான். மணியின் மனது இலகுவாக இருந்தது.

அதற்குப் பின்பு கேட்கப்பட்ட இயல்பாக கேள்விகளுக்கு இயல்பாகவும், நேர்த்தியாகவும் பதிலளித்தான்.

ஒரு மணி நேர உரையாடலுக்கு பின்.

தொகுப்பாளர்: "நிகழ்ச்சியின் கடைசிக் கட்டத்திற்கு வந்து விட்டோம், கடைசியாக இரண்டு பர்சனல் கேள்வி்!!. நாலு பேருக்கும் ஒரே கேள்விதான்!!. நீங்க நாலு பேருமே சின்ன வயசிலேயே பெரிய பொறுப்புகளை எடுத்துக் கொண்டவர்கள்!! அதனால சொந்த வாழ்க்கையில் நிறைவேறாத ஆசைகள்னு ஏதாவது இருக்கா?

மற்ற மூவரும் தங்களின் நிராசைகளை கூற, மணி, தனக்கு அப்படி எதுவும் இல்லை, சிறுவயதிலிருந்து தொழில் தான் தன்னுடைய ஒரே ஆசை என்று சொல்லி முடித்தான்.

தொடர்ச்சி.... 
[+] 1 user Likes Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 28-01-2021, 12:23 AM



Users browsing this thread: 8 Guest(s)