Adultery இரண்டாம் முடிச்சு
#50
இந்திராவின் குடும்பத்தினர் கிளம்பினர். விசாலாட்சியின் வீடே அமைதியா இருந்தது. அவரவர் அறைக்குள்ளேயே முடங்கியிருந்தனர். விசாலம் சாப்பாடை எடுத்துக் கொண்டு மருமகளை பார்க்கச் சென்றாள். இந்திரா படுத்திருந்தாள்.

"இந்திரா.. எழுந்திரிமா.. சாப்பாடு கொண்டு வந்திருக்கேன். சாப்பிடுமா"

"வேணாம் அத்தே.. "

"மனசுல கஷ்டம் இருக்குனு சாப்பிடாம இருந்தா, உடம்பு என்னத்துக்கு ஆகுறது. சாப்பிடுமா"

இந்திரா எழுந்து உக்காந்தாள்.
"அத்தே எங்கம்மா பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் அத்தே "

"அதெல்லாம் நான் எப்பவோ மறந்துட்டேன்மா. அவங்க பேசுனது கூட உன்னோட நல்லதுக்குத் தானே. விடுமா. நீ சாப்பிடு "

"அத்தே என் வாழ்க்கை நடக்குறதெல்லாம் நல்லதா கெட்டதானு எனக்கு ஒன்னுமே புரியலை. அத்தே நான் எப்படி இந்த வாழ்க்கைய ஏத்துகிறது. "

"நல்லதோ கெட்டதோ, அதை ஏத்துகிற மனப்பக்குவம் நமக்கு வேணும்மா. அப்போ தான் வாழ்க்கையை எதிர்க்கொள்ள முடியும். உடனே உன் மாத்திக்கோனு சொல்லல. படிப்படியா மாத்திக்கோ. முதல்ல இந்த ரூமுகுள்ளயே அடைஞ்சு கெடக்காம வெளிய வா.. நீ நல்லா படிச்சுருக்க. வேலைக்கு போ. நாலு பேரு கூட பழகு. அப்போதான் உனக்கு ஒரு மாற்றம் கிடைக்கும். இப்போ சாப்பிடு."

விசாலம் பேசிய வார்த்தைகள் இந்திராவிற்குள் ஒரு நம்பிக்கையை விதைத்தது.

விசாலம் கமலிடம் சென்று பேசினாள்.

"கமல் அம்மா மேல கோவமா. உன்னைய கட்டாயப் படுத்திடேன்னு."

"கோவம் இல்லம்மா. ஆனா அண்ணிக்கு இது கஷ்டமா இருக்காதா."

"இந்த கஷ்டம் கொஞ்ச நாள்ல சரியாகிரும்டா. இதை செய்யலனா வாழ்க்கை முழுசும் கஷ்டப்படுவாப்பா."

"அவங்களுக்கு வேற கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு நெனச்சீங்க சரி. வேற ஒரு பையனை பாத்து கட்டிவச்சுருக்கலாமே "

"நீ சொல்ற மாதிரி செய்யலாம். ஒருவேளை அவ கல்யாணம் பண்ணிப் போற குடும்பத்துல, நீ இன்னொருத்தனை கல்யாணம் செஞ்சவ தானே, கல்யாணமாகி கொஞ்ச நாள்லயே புருஷனை கொன்னவதானே, இது மாதிரி வேற எதாவது சொல்லி அவளை கஷ்டப்படுத்திட்டா, அவளோட வாழ்க்கையே நரகமாயிரும். அவளோட பழைய வாழ்க்கை சொல்லிக்காட்டாத ஒருத்தரை நாம எப்படி தேடி கண்டுபிடிக்கிறது. அதான் இந்த முடிவு எடுத்தேன். "

"ஆனா நாங்க எப்படி "

"கேள்வியா கேட்டுக்கிட்டே இருக்காதடா. எல்லாம் சரியாகிரும். நீ எப்பவும் போல இரு. "

அன்றைய பொழுது கழிந்தது. அடுத்தடுத்த நாட்களில் இந்திரா வேலை முயற்சி செய்து அவள் படிப்பு ஏற்றவாறு ஒரு நல்ல வேளையில் சேர்ந்தாள். கமலும் காலேஜ் சென்று வரத் தொடங்கி விட்டான். இந்திரா வேலைக்குச் சென்றால் இரவு 7 மணிக்குத்தான் திரும்புவாள். வீட்டுக்கு வந்தவுடன் அறைக்குள் புகுந்து கொள்வாள். மாமனார், மாமியாரிடம் மட்டும் ஒரு சில வார்த்தைகள் பேசுவாள். கமலும் இந்திராவும் பேசிக்கொள்ளாமலே இருந்தது. 5 மாதங்கள் கடந்திருந்தது. இந்திராவின் அம்மா அன்று வீட்டுக்கு வந்திருந்தாள்.

இந்திராவின் அம்மா, அவர்கள் இருவரின் நடவடிக்கையையும் கவனித்தாள். இருவருக்குள்ளும் இடைவெளி இருப்பதை புரிந்து கொண்டாள். அடுத்த நாள்..

இந்திரா காலையில் அவசரமாக வேலைக்குக் கெளம்பினாள்.

"இந்திரா தினமும் ஆபீஸ்க்கு எதுல போற."

"பஸ்ல தான்."

"இனிமே பஸ்ல வேணாம். மாப்பிள்ளை கூட வண்டீல போ"

"மா.. சும்மா இரு. எல்லாம் எனக்குத் தெரியும்"

"இனிமே நீ வண்டீல தான் போற. நான் சொல்றதை நீ கேளு. " அப்போ கமல் கெளம்பி வந்தான்.

"தம்பி இவளை உங்க வண்டீல கூட்டிட்டு போய் ஆபீஸ்ல இறக்கி விட்டுருங்க."

கமல் என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தான்.

"மா அதெல்லாம் வேணாம் விடுமா"

"தம்பி அவ கெடக்குறா. நீங்க வண்டிய எடுங்க"

கமல் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
All is well
[+] 4 users Like kamappithan's post
Like Reply


Messages In This Thread
RE: இரண்டாம் முடிச்சு - by kamappithan - 17-01-2021, 12:43 PM



Users browsing this thread: 1 Guest(s)