அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 62

சிவகுருவை வீழ்த்திய அன்று, நடு இரவு,

கொடைநாடுலிருந்து கிழக்குப் பக்கமாக இருக்கிறது ,டைகர் வேலி எஸ்டேட். ஒரு வருடத்திற்கு முன், இந்த எஸ்டேட்டை விலைக்கு வாங்கியிருந்தது மணியின் நிறுவனம், அதுவும் அவனது வற்புறுத்தலால். அடர்ந்த இருட்டில், ஒரு மலைமுகட்டின் மீது அமர்ந்திருந்தான், மணி. அடித்தக்கொண்டிருந்த வாடைக்காற்று, அவனது கொதித்து கொண்டிருந்த மனதுக்கு, இதமாக இருந்தது. தன் முன்னே தெரிந்த, அந்த இருண்ட பள்ளத்தாக்கை, வெறித்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்குப்பின், மனதில் கொஞ்சமே கொஞ்சம் நிம்மதி குடியேறுவதை போல உணர்ந்தவன், அமர்ந்திருந்த மலைமுகட்டில் இருந்து இறங்கினான். அருகிலேயே இருந்த ஒற்றை, ஓடு வேய்ந்த, கற்களால் கட்டப்பட்ட வீட்டினுள் நுழைந்தான். போர்வையை வெறும் தரையில் விரித்தவன், நீண்ட நாட்களுக்கு பிறகு, படுத்ததும் தூங்கிப்போனான்.

**************

மணி வெளியேறியதும், சிவகுருவும், சுமாவும், என்ன நடந்தது என்பது கூடப் புரியாமல், பித்து நிலையில், நெடுநேரம் அமர்ந்திருக்க, தன் மகனின் சொற்களில் இருந்த உண்மை, கொஞ்சம் கொஞ்சமாக சுமாவின் மனதில் இறங்கியது. தான், வாழ்ந்த வாழக்கையே பொய்யோ என்ற எண்ணம் எழ, உடைந்து அழ ஆரம்பித்தாள், சுமா.

சுமாவின் அழுகை, சிவகுருவை, நிஜ உலகிற்கு கொண்டு வந்தது. தயங்கி, தயங்கி, அவள் அருகில் சென்றவன், அவள் தோளை தொட்டான். சிவகுரு தொளைத் தோட்டதும், நிமிர்ந்து அவனைப் பார்த்த சுமா, வெடித்து அழுதாள். மனைவியின் அழகை, சிவகுருவுக்கும் கண்ணீரை வரவழைத்தது. அவன், அப்படியே மனைவியின் அருகே அமர்ந்து, அவள் தோள்களை ஆதரவாகப் பற்றிக்கொள்ள

"ச்சீ!!" என்றவள், நெருப்பால் தீண்டப்பட்டதைப் போல், துள்ளி எழுந்தாள். அழுதுகொண்டே மாடிக்குச் சென்று அறையை பூட்டிக் கொண்டாள். பதறிய சிவகுரு, தன் மனைவியின் பின்னால் ஓடினான். தன் மனைவி எங்கே தன்னை மாய்த்துக் கொள்வாளோ என்று பதறிவன், அறையின் கதவை பலம் கொண்டு தட்டினான். ஒரு கட்டத்தில் சோர்ந்து அப்படியே சாத்திய கதவில் சாய்ந்து அமர்ந்துதவன்

"அவன் ஏதோ முட்டாதனமா பேசுறான் டி!!, நான்...... உன்ன சந்தேகப்படுவேன்னு.... நீ நம்புறியா?" பெருங்குரலெடுத்து கத்தினான். உள்ளே இருந்து "" என்று ஓலமிட்ட சுமாவின் அழுகை, அவனுக்கு கொஞ்சம் சாக மாட்டாள் என்ற ஆறுதலோடு, அவன், கேள்விக்கான பதிலையும் சொன்னது. நிம்மதி இழந்தான், சிவகுரு.

*************

மறுநாள் காலை,

மணியின் பார்வையில்,

நேற்றிருந்த மனநிம்மதி இல்லை, இப்பொழுது, என்னிடம். நேற்று, இரவைப் போலவே, அதே மலைமுகட்டில் உட்கார்ந்து, எதிரே விரிந்துகிடந்த பள்ளத்தாக்கை வெறித்துக் கொண்டிருந்தேன். மனதிலும், கண்களில் இருந்த அதே வெறுமை. இதே மலைமுகட்டில் மதுவின் மடியில் படுத்துக்கிடந்து கொஞ்சிக் கொண்டிருந்தது, என் நினைவு வந்தது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது, ஏதோ போன ஜென்மத்து நிகழ்வு போல் தோன்றியது

மது!!. பத்தொன்பது வயதுக்காரிக்கு!!, பதினாறே வயதான!! நான்!! இட்ட பெயர்!!. என்னை அன்னை, போல் அரவனைத்த, என் மது!!

நினைவு தெரிந்து, அவளைத் தவிர, வேறு யாரையும் காயப்படுத்தியிருக்காத, நான், நேற்று, யாரின் அன்பிறக்காக, என் சிறுவயதில் எங்கித் தவித்தேனோ, அவர்களை உயிரோடு கொன்று புதைத்துவிட்டு, எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல், மனம் முழுக்க வெறுமையோடு. மனம் போலவே, பார்வையும், இலக்கில்லாமல் விரிந்து கிடந்த பள்ளத்தாக்கை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள், இல்லாது போன இந்த காலகட்டத்தில், நான், நானே அறியாத, புரிந்துகொள்ள முடியாத, என்னவாகவோ மாறிப்போனேன்.

அந்த பைக் ஆக்சிடென்ட் க்குப் பிறகு, முதன் முதலாக கோயம்புத்தூர் வந்ததில் இருந்து அவ்ளது எண்ணங்களை, எட்டியே வைத்திருந்தேன். நேத்ரா, அவள்தான், என் அலுவலக கதவைத் திறந்து கொண்டு வந்தவள், அதுவரை, நான் தள்ளி வைத்திருந்த, என் மதுவின் நினைவுகளை, நெருப்பென ஊற்றி போனாள், என் மனதில். ஒரு காலத்தில், மாசு தீண்டா இளம் தென்றலாய், என்னை சிலிர்க்கச் செய்த மதுவின் நினைவுகள், வெடித்துச் சிதறிய எரிமலை குளம்பு ஓடும் நெருப்பாற்றில், என்னை தள்ளிச் சென்றாள், நேத்ரா. வெளியேறும் வழியே இருந்தாலும் வெளியேற விரும்பாத, சுட்டெரிக்கும் வெப்பமே, இயல்பென மாறியிருந்த மதுவின் நினைவுகளில், துடித்துச் சாவதுதான், நான் செய்த பாவத்தின், விலை என்பதை, முதல்முதலாக உணர்ந்த தருணம் அது. என் முன்னால் விரிந்து கிடந்த பள்ளத்தாக்கை வெறித்துக் கொண்டிருந்தேன்.

"தம்பி!!" என்ற சத்தம் என் வெறுமையை விரட்டியது.

திரும்பிப் பார்த்தேன், நாற்பதுகளின் நடுவில், எனது வயது என்று சொல்லும், தொப்பையும், ஆங்காங்கே நரைத்த முடியுமாக, ஒருவர் நின்றிருந்தார்.

"இப்பதான் தம்பி, வாட்ச்மேன் சொன்னாரு!! நீங்க நைட்டு வந்தீங்கனு!!" பேசிக் கொண்டிருந்தவர், என் முகத்தில் தோன்றிய எரிச்சலில் உணர்ந்துகொண்டார் போல

"தம்பி!! நான் எஸ்டேட் மேனேஜர்!!" அவர் அறிமுகப்படுத்திக் கொள்ள, தலையசைத்தேன்.

"தம்பி!! நீங்க தங்குறதுக்கு பங்களோ ரெடி பண்ணிட்டேன் ...........!!" சொல்லிக்கொண்டு இருந்தவரை இடைமறித்து

"இந்த கேட்டோட சாவி, இருக்கா?" சற்று தூரத்தில், எஸ்டேட்டின் எல்லைவேலியில், இருந்த கேட்டை காட்டி, கேட்டேன்.

"இருக்கு தம்பி!! நம்ம கிட்ட ஒன்னு, ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் கிட்ட ஒன்னு!! ரெண்டு கீ இருக்கு தம்பி!! உங்களுக்கு........"

"எனக்கு அந்த கீ வேணும்!!" மீண்டும் அவரை இடைமறித்தேன் , சரி, என்று தலையசைத்தவர், அருகிலிருந்த ஜீப்பில் ஏறப் போனார்.

"உங்க பேர் என்ன?"

"சண்முகம்!! " லேசாக சிரித்தவாறு என்னை நோக்கி வந்தார்

"சண்முகம்!!, அந்த கீ-யோட, நாலு இட்லி!!, ஒரு ஆம்லெட் வேணும்!! நீங்க, உங்க வேலைய பாருங்க!! நான், கேட்டத யார்கிட்டயாவது கொடுத்து விடுங்க!!" மீண்டும் அவரை பார்க்க விரும்பவில்லை என்பதை, அவருக்கு உணர்த்தினேன்.

"ஓகே, சார்!!" அவரிடம் அந்த கேட்டின் சாவியை கேட்டது, அவரை அப்புறப்படுத்த என்பதை உணர்ந்து கொண்டார், அப்படியே என்னையும்.

***************

அரை மணி நேரம் கழித்து,

அதே மலை முகட்டில் அமர்ந்திருந்தேன். இந்த முறை, வேலியில் இருந்த கேட்டிலேயே, என் பார்வை இருந்தது. கேட்டின் அந்தப்புரம், மிருங்கள் வாழும் அடர்ந்த காடு, நான் அமர்த்திருந்தது, மனிதர்கள், தங்கள் வாழவதற்கு ஏதுவாக, செம்மை படுத்திய, நிலம். கையில் இருந்த அந்த கேட்டின், சாவியை உருட்டிக் கொண்டிருந்தேன். என் மனதில், ஏதோ ஒரு சின்ன உறுத்தல். நேற்று, நான் ஆடிய ஆட்டத்தில், ஏதோ ஒன்று இன்னும் எனக்கு புலப்படாமல் இருந்தது. ஏன், என் அப்பா, அவரிடம் இருக்கும், நானும் சிவகாமியும் கூடிக் களித்த வீடியோவை காட்டி, என்னை மிரட்டவில்லை?? மொத்தமாக அடித்து வீழ்த்தப்படப் போகிறோம் என்று தெரிந்தும், எப்படி ஒருவனால், தன்னிடம் மிச்சமிருக்கும், ஒரு பலமான ஆயுதத்தை உபயோகிக்காமல் இருக்க முடிந்தது?? சின்னதாக ஆரம்பித்த கேள்வியின் மன உறுத்தல், நேரம் செல்லச்செல்ல அழுத்தமாகியது. மனதில் அழுத்தம் கூட, கூட, புலப்படாத அந்த உண்மை என் முன்னே வந்து நின்று சிரித்தது. நம்பமாட்டேன் என்று, அதை நான் உதற தள்ளிவிட்டு, எழுந்து வேலியில் இருக்கும் கேட்டை நோக்கி நடந்தேன். ஒரு நொடி கூட யோசிக்காமல், பூட்டைத் திறந்து, அந்தக் காட்டில் நுழைந்தேன்.

*************

மணி காட்டில் நுழைந்த, அதே நேரம்,

ஹாலில் அமர்திருந்த சிவகுருவுக்கு மொத்த வழக்கையும் இருண்டுவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாகத், தான் கட்டியெழுப்பிய சாம்ராஜ்யத்தில் இருந்து, தான் மொத்தமாக அப்புறப்படுத்தப்பட்டது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம், காலையில் இருந்து, முகம் கொடுத்து பேச மறுக்கும் சுமா. அடுத்தடுத்து வாங்கி அடிகளில், மனம் பாரமாய் இருக்க, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு சோபாவில் இருந்து சுருண்டு விழுந்தான், சிவகுரு

************

இரண்டு மணி நேரமாக மழை இறங்கி கொண்டிருப்பதன் வெளிப்பாடாக, மணியின் உடல் எங்கும் வேர்த்திருந்தது. நீலகிரி மலையின் கிழக்குச் சரிவில், வேகமாக இயங்கிக்கொண்டு இருந்தான், இல்லை இல்லை, அந்த உண்மையிடம் இருந்து தப்பி ஓடிக் கொண்டிந்தருந்தான். காடு, மலையென, அந்த உண்மையும், என்னை விடாமல் தூரத்தியது.

ஆறு மணி நேரம் கழித்து.

மலையடிவாரத்தை அடைந்து இருந்தான். அவன் உடலும், மனமும், சோர்வுற்று இருந்தது. அவன் காதுகளில் தண்ணீரின் சலசலப்பு கேட்டது. அவன் கால்களையும், மனதையும் தன்னிச்சையாக அந்த சத்தம் ஈர்த்தது. பாறைகளுக்கிடையே தெள்ளத்தெளிவாக ஓடிக் கொண்டிருந்தது, ஒரு காட்டாறு, ஒரு நற்பதடி பாறையின் மேல், நின்றுருந்தான், மணி
அவன் பார்வையில் பட்ட தண்ணீர், வறண்டு கிடந்த அவன், நாவையும், தொண்டையும், மேலும் வறட்சி ஆக்கியது. தண்ணீர் கேட்ட, உடலின் தாகத்தை தீர்க்க முனைந்தவன், திரும்பி நடந்த சில நொடிகளில், கால் இடறி உருண்டான், அந்த பாறையில். இடறி உருண்டவனின் வலது கையில், துருத்திக்கொணடிருந்த பாறையின் படிமம் சிக்க, அதை கெட்டியாக பிடித்துக்கொண்டவனை, தேடிப்பிடித்து அவனது தோளில் கெட்டியாக அமர்ந்து கொண்டது, அவனை துரத்தி வந்த, அந்த உண்மை. உண்மையின் கணம், அவன் மனதை அழுத்த, ஏற்கனவே ஏழு எலும்பு முறிவுகளை கொண்ட, அவன் வலதுகையில் வலி கூடியது.

அவன் தோளில் ஏறி அமர்ந்த உண்மை, வெற்றிபெற்ற குதூகலத்தில் துள்ளிக் குதிக்க, குனிந்து நாற்பது அடியில் கீழ் ஓடிக்கொண்டிருக்கும் காட்டாற்றைப் பார்த்தான். ஒரு நிமிடம், பிடியை விட்டுவிட்டு, பாறைகளுக்கிடையே ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் விழுந்து, உண்மையோடு, தன்னையும் மாய்த்துக் கொள்ளலாமா? என்று எண்ணிவன் மனதில், நேற்று சிவகுரு "நான் இல்லாமல், ஒரு ஆறு மாசம் கூட உன்னால நம்ம கம்பெனிகளை நடத்த முடியாது, திரும்பி வந்து என் கால்ல விழுவே!!" சொன்னது ஒரு நொடி வந்துபோனது. அவ்வளவுதான், தன் உடலில் மீதம் இருந்த மொத்த வலுவையும், வலது கைக்கு மாற்றிவன், பாறையின் மீது ஏறினான். காற்றைப் போல, அந்த காட்டைக் கிழித்துக்கொண்டு கீழ ஓடிக்கொண்டிருக்கும் காட்டாற்றை நோக்கி ஓடினான்

காட்டாற்றின் கரையை அடையும் முன்னே, ஒரு நொடி கூட யோசிக்கவில்லை, சுற்றும் முற்றும் பார்க்க வில்லை, மொத்த உடைகளையும் களைந்தவன், அற்றில் இறங்கினான் அம்மணமாக, ஆழம் அறியாமல், ஓடிக்கொண்டிருந்த நீரில் மூழ்கிப் போனான். காட்டற்றின் இழுப்பில், தன் தோளில் இருந்த உண்மையை கரைத்துவிட்டவனின், மனது இலகுவானது. தண்ணீர் அள்ளி குடித்தவனின் மன தாகம் தீரவில்லை, குளிர்ந்த நீர், அவன், மனசூட்டை தனிக்கவில்லை. அதுவரை கண்களில் மட்டுமே இருந்த அந்த ஓநாயை, அவனது, இரத்தம், சதை எலும்பு, நரம்பு என பற்றிப் படர்ந்தது. உண்மை-பொய், சரி-தவறு, பாவம்-புண்ணியம், அன்பு-வஞ்சம் என்று உணர்வுகள் எதுவும் இல்லாத, பசியையும், பிழைத்துக் கிடத்தலையும் மட்டுமே அறமாக, தர்மமாக, ஆதாரமாக கொண்டிருக்கும் காட்டில் ஒன்றென கலந்து, தண்ணீரில் இருந்து எழுந்தான், ஓநாயாய் மொத்தமாக மாறியிருந்த, மணி.

கரையேறி உடைகளை அணிந்து கொண்டவன், ஆற்றின் போக்கிலேயே சென்று, ஆழம் பார்த்து, ஆற்றுநீரின் இழுப்பை ஆராய்ந்து, அந்த காட்டாற்றை கடக்க பாதுகாப்பான இடம் தேர்ந்தெடுத்து, அதைக்கடந்து, மறுகரை ஏறினான், சற்றுமுன் அழமே தெரியாமல் அந்த காட்டாற்றில் விழுந்தவன். கண்ணில் பட்ட வழித்தடத்தில் நடந்தான், எதிர்பட்டது ஒரு கிராமம். அதை நோக்கி நடந்தவன், கண்ணில் பட்ட மனிதனிடம் 

"இந்த, ஊர் பெயர் என்ன?"

"தெங்குமரஹடா!! பதில் சொன்னவர், இவனை, ஏற, இறங்கப் பார்த்துவிட்டு, தன் போக்கில் சென்றார்.

மொபைலை எடுத்து தனது டிரைவருக்கு அழைத்தவனுக்கு சிவகுருவின் நிலை சொல்லப்பட்டது. எந்த சலனமும் இல்லாமல் தன்னை எங்கு வந்து அழைத்து செல்லவேண்டும் என்று சொல்லிவிட்டு, மீண்டும் அந்தக் காட்டை நோக்கி நடந்தான்.

*****************

சிவகுருவை பேருக்கு இரண்டு முறை ஹாஸ்பிடல் சென்று பார்த்ததோடு சரி, அதன்பின் வேலையில் முழகிப்போனான், மணி. குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். ஆச்சிகள் இருவரும், சிவகுருவின் உடல்நிலையை பார்த்து வருந்திக் கொண்டிருக்க, சுமாவோ, பொய்யாகிவிட்ட, தன் வாழ்க்கைக்காக வருந்துவதா??, உடல் பலவீனப்பட்டு படுக்கையில் இருக்கும், தன் கணவனுக்காக வருந்துவதா?? இல்லை அவளது வாழ்க்கையைய் பொய்யாக்கிய உண்மையைச் சொன்னா மகனின், மனம் அதை தெரிந்து கொண்டபோது எவ்வளவு துன்பப்பட்டு இருக்கும் என்று வருந்துவதா?? என்று தெரியாமல், எல்லாவற்றுக்கும் சேர்த்து தன்னை வருத்திக் கொண்டிருந்தாள்.

மணியின் தாத்தாவோ, ஒருபுறம், மருமகனின் உடல் நிலை கண்டு வருந்தினார் என்றால், மறுபுறம், தந்தையின் உடல்நிலை மோசமான அதிலிருந்து, ஏற்கனவே தன் வயதுக்கான வாழ்வை வாழாமல், பித்து பிடித்தவன் போல் இருந்தவன, மொத்த பொறுப்பையும் தன் மேல் இழுத்துப்போட்டுக்கொண்டு, வெறியாக உழைக்கும், தன் பேரனை நினைத்து வருந்துவதா?? அல்லது தொழில் குழுமத்தின் அடுத்த கட்ட நகர்வின், முக்கியமானதொரு நேரத்தில், அதை வழிநடத்த வேண்டிய, தொழிலதிபர் சிவகுருவின் இழப்பை நினைத்து வருந்துவதா என்று தெரியாமல் தினறிப்போனார். தங்கள் தொழில் குழுமத்தின் முப்பது வருட தூண் சரிந்ததை தொடர்ந்து, தொழில் போட்டியை சமாளிக்க, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். பின் சிவகுரு உடல்நிலை தேறிவரும்வரை, தானே அந்த பொறுப்பை ஏற்று நடத்துவது என்று முடிவு செய்தவர், அதைப்பற்றி விவாதிக்க, மணியை அழைத்தார்.

உள்ளே நுழைந்த மணி, கைகளில் திருத்தி எழுதிய பேப்பருடன் வந்தான். அமர்ந்தவன் அதை, அவன் தன் தாத்தாவிடம் கொடுக்க, படித்த பார்த்தவர், என்ன சொல்வதென்று தெரியாமல் இவனை நிமிர்ந்து பார்த்தார்.

"நமக்கு உரிமையுள்ளத, நாமதான் எடுத்துக்கணும், யார்கிட்டயும் கேட்கக்கூடாது!!. எனக்கு இப்ப புரியுது தாத்தா!! மொத்த சொத்தையும் எழுதி கொடுத்த நீங்க, ஏன், நான் கேட்டதும் என்ன சேர்மன் ஆக்கலனு!! தைரியமா கையெழுத்துப் போடுங்க!! இப்ப, நீங்க போடுற கை எழுத்துக்காக, எப்பவுமே வருத்தப்பட மாட்டிங்க!!" நிறுத்தி, நிதானமாக, தெளிவாக பேசினான் மணி

என்ன நினைத்தாரோ, கையெழுத்திட்டு, அந்த காகிதங்களை மணியிடம் நீட்டியவர் கண்களில், பெருமிதமும், அதைத் தாண்டிய நிம்மதியும்.

***************
தொடர்ச்சி......
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 29-12-2020, 12:02 AM



Users browsing this thread: 5 Guest(s)