அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 61


அவனின் அறைக் கதவு திறக்கப்பட்ட போதே, ஆத்திரப் படக்கூடாது, தன் செயலால் யாருக்கும் காயப்பட்டு விடக்கூடாது என்று, அவனுக்கு அவனை விதித்திருந்த கட்டுப்பாடெல்லாம், காற்றோடு போயிற்று. சுண்டு விரலையும், பெரு விரலையும், தவிர்த்த மூன்று விரல்களும், வாஷ்ரூமின் கதவிடுக்கில் இருக்க, வாயில், வாஷ் ரூமில் கை துடைக்க வைக்கப்பட்டிருந்த துண்டை இறுக பற்களால் கடித்தான் மணி. மற்றொரு கையால் கதவை அறைந்து சாத்த முற்பட்டவன், கதவின் அழுத்தம் விரல்களில் கொடுத்த வலியை தாங்கமாட்டாமல், மேலும் கதவை தள்ள வலு இல்லாமல், கைகளை எடுத்தான்

கண்களை மூடிக்கொண்டு பற்களைக் கடித்தான்.

"ஏண்டா இப்படி பண்ண?" சற்று முன் அவனை நோக்கி எழுப்பப்பட்ட கேள்வி, மீண்டும் அவன் காதில் ஒலிக்க, நொடியில் மீண்டும் கதவிடுக்கில் மூன்று விரல்களை வைத்தவன், ஒரு காலால், மொத்த பலத்தையும் கொடுத்து, கதவை உதைத்தான். அறைந்து சாத்தப்பட்ட கதவு, இவன் விரல்கள் கொடுத்த அழுத்தத்தால், கதவில் இருந்த மூன்று கொண்டிகளில், மேல் இரண்டு கொண்டிகள் உருவிக் கொண்டு வந்தது. அதற்கு முன்னமே "" என்ற அலறல் மணியின் வாயில் இருந்து வெளிப்பட, கையில் இருந்த துண்டை பற்களுக்கிடையே கொடுத்து, கடித்துக்கொண்டு, வலியையும், அதனால் ஏற்பட்ட அலறளையும் சேர்த்தே கட்டுப்படுத்த முயன்றான்.

"ஐயோ!!.... சார் என்ன ஆச்சு?", மணியின், அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்த, அவனது உதவியாளர், தொங்கிக்கொண்டிருந்த கதவையும், விரல்களைவிட்டு வெளியே தொங்கிக் கொண்டிருந்த நகங்களையும் பார்த்து, பதறிப் போய்க் கேட்க, நொடியில் சுதாரித்து, வாயில் இருந்த துண்டை எடுத்து தன் விரல்களை சுற்றினான்.

"ஒன்னும் இல்ல!!.......... நான் சொல்ற வரைக்கும் யாரையும் உள்ளே அனுப்பாதீங்க!! நீங்க இப்போ வெளிய போங்க!!" விரல்களிலிருந்து நகம் பெயர்ந்து தொங்கிக் கொண்டிருக்க, சொட்டு கண்ணீர் கூட இல்லாத கண்களுடன், நிதானமாக பேசுபவனை, மூச்சு விடவும் மறந்து பார்த்துக் கொண்டிருந்த, அந்த உதவியாளரை,

"நீங்க கொஞ்சம் வெளிய போங்க!!" மணி, மீண்டும் தன் உதவியாளரை தொட்டுச் செல்ல

"சார் கையில........" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே

"Get the f*** out of my room!! right now!!" வேதனையிலும், ஆத்திரத்திலும், அடித் தொண்டையிலிருந்து கத்திய மணியைப் பார்த்து, ஒரு நிமிடம் அரண்டு போன அவனது உதவியாளர், உடனே நகர்ந்து அரைக் கதவை நெருங்கும் வேளையில்

"நான் சொல்ற வரைக்கும் யாரையும் உள்ளே விடாதீங்க!!, இங்க நடந்த எதையுமே நீங்க பார்க்கல" அந்த நிலையிலும், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை, தெளிவாக தன் உதவியாளருக்கு உணர்த்தினான் மணி.

உதவியாளர் கதவை அடைத்து விட்டு சென்றதும், தாங்க முடியாத வலியில் தொங்கிக்கொண்டிருந்த கதவை உதைத்தான். அது மொத்தமாக பெயர்ந்து கீழே விழுந்தது. காயம்பட்ட கைகள் சுற்றப்பட்டிருந்த வெள்ளைத் துண்டில், பாதி சிவப்பாய் மாறி இருந்தது. வாஷ்ரூமிற்குள் சென்றவன், துண்டை கைகளிலிருந்து உருவ, நடு விரல் நகம் துண்டோடு வந்தது. குழாயில் தண்ணீரைத் திறந்தவன், ரத்தம் வழியும் விரல்களை விழுந்து கொண்டிருந்த தண்ணீரில் நீட்டினான். காயப்பட்ட விரல்களை தண்ணீர் தீண்டிய அடுத்த நொடி, சுள்ளென்ற வலி,அவன் மூளையில் உதைத்தது. மற்றொரு கை, தன்னிச்சையாகவே துண்டை அவன் வாயிற்கு கொண்டு செல்ல, பற்களால் அதை கடித்துக் கொண்டான். கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கும் போல் இருந்தது. இமைகளை நொடிக்கு, பலமுறை திறந்து மூடி, வெளியே வர முயன்ற கண்ணீரை, மீண்டும், கண்களுக்கு உள்ளேயே விரட்டியடித்தான்.

வாயில் இருந்த துண்டை எடுத்து கீழே வைத்தவன், சிலமுறை வாயால் காற்றை ஆழ உள்ளிழுத்து, வெளியே தள்ளினான். ஆட்காட்டி விரலில் தொங்கிக் கொண்டிருந்த நகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், நொடியில் சட்டென்று அதை பிடுங்கி எடுத்தான். ஆட்காட்டி விரல் துடித்துக் கொண்டிருக்கும் போதே, மோதிர விரலில் பெயர்ந்து தொங்கிக் கொண்டிருந்த நகத்தையும் பிடுங்கினான். விரல்களில் தொடங்கி, மூளைவரை "விண்!! விண்!!" என்று தெறிக்க, வாயால் காற்றை இழுத்து ஊதி, வலியைப் பொறுக்க முயற்சி செய்து, முடியாமல் போகவே, மீண்டும் துண்டை எடுத்து பற்களுக்கு இடையே கடித்துக்கொண்டு உறுமினான்.

எதிரில் இருந்தா கண்ணாடியை நிமிர்ந்து நோக்கியவனின் பார்வையில், அந்தக் கண்கள் பட்டது. கூர்மையான பார்வை, அகோரப் பசியுடன்,உலகப் பெருவெள்ளம் அனைத்தையும், மொத்தமாகக் இட்டு நிரப்பினாலும், கொடுத்ததெல்லாம் பத்தவில்லை இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்கும், ஒளிகூட தப்பிக்க முடியாத, ஆளி பெருஞ்சுழி போல், அவன் ஆன்மாவை கேட்ட, அந்த ஓநாயின் பார்வை. கண்ணாடியின் பிம்பத்தில், தெரிந்த அந்த ஓநாய், அவன் பார்வையை பீடித்துக்கொள்ள, பற்களுக்கிடையே அவன் கடித்திருந்த துண்டில் இருந்த இரத்தம், அவன் நாவை தீண்டியது, ஓநாயின் கண்கள் சிரித்தது.

******************

பத்து நிமிடம் கழித்து,

"சங்கரபாணியை உடனே வரச் சொல்லுங்க, ரெண்டு நிமிஷத்துல, என் முன்னாடி அவர் இருக்கணும்" தன் உதவியாளருக்கு அழைத்து கட்டளை இட்டவன், தன் டேபிளில் இருந்த காகிதங்களில், சில திருத்தங்களைச் செய்தான்.

மணி, திருத்தங்களை செய்து முடிக்கவும், சங்கரபாணி அந்த அறையின் கதவுகளை தட்டவும், சரியாக இருந்தது.

"எஸ்!! கம் இன்!!" என்றவன், அவர் உள்ளே நுழைந்ததும், தான் திருத்தம் செய்த காகிதங்களை எடுத்து அவரை நோக்கி நீட்டினான். அவரது கவனம் முழுவதும், தன்னை நோக்கி நீட்டிய காகிதங்களை கவனிக்காமல், பெயர்ந்து கிடந்த வாஷ்ரூம் கதவில் இருந்தது.

"சங்கர பாணி!!" மணியின், மிரட்டும் சத்தத்தில், இவனை நோக்கி திரும்பியவரிடம்

"போர்ட் மெம்பர்ஸ் லிஸ்ட், சேர்மன் நாமினேஷன் பேப்பர்லையும் கொஞ்சம் திருத்தம் பண்ணியிருக்கேன்!! நான் பண்ணின திருத்தங்களை, அப்படியே டைப் பண்ணி, பத்து நிமிஷத்துல திரும்ப கொண்டு வாங்க!!" மீண்டும் சங்கரபாணியை நோக்கி காகிதங்களை நீட்ட, அதைப் பெற்றுக் கொண்டவர், மணி, என்னன்ன திருத்தம் செய்து இருக்கிறான், என்று வாசித்தார்.

"சார்!! ஒரு வார்த்தை சிவகுரு சார்கிட்டயையும் கேட்டுக்கலாமே!!" உடைந்து கிடக்கும் கதவையும், மணியின் முகத்தையும் மாறி மாறிப்பார்த்தவாறு, தயக்கத்தோடு சிவகுருவின் மீதான தன் விசுவாசத்தை காட்டினார், சங்கரபாணி

"சக்கரபாணி சார்!! வாங்குற சம்பளத்துக்கு விசுவாசமா இருப்பீங்களா? இல்ல, சிவகுரு சார் கா?" காட்டமாகவே கேட்டான், மணி.

"..................." தலையை குனிந்து கொண்டார் சங்கர பாணி.

"வாங்குற சம்பளத்துக்கு விசுவாசமா இருந்தீங்கன்னா!! பத்து நிமிஷத்துல, நான் சொன்ன கரக்ஷன்ஸ்ஸோட, இந்த பேப்பர்ஸ், என் டேபிள்ள இருக்கணும்!! இல்லேன்னா, ரெண்டு நிமிஷத்துல உங்க ரெஸைனேஷன் லெட்டர், என் டேபிளில் இருக்கணும்!! Your time starts right now!!" என்று மணி தன் கையிலிருக்கும் கடிகாரத்தை காட்டும் பொழுதுதான், கைவிரல்களில் ரத்த காயத்தோடு நாங்கள் இல்லாமல் இருப்பதை கண்டார். அவருக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை, நொடியில் முகம் வெளிறிவிட்டது. "சரி" என்று தலையை அசைத்தவாறு வெளியேறினார்.

"சங்கர பாணி!! ஆபீஸ் நர்ஸ்ஸ, ஃபர்ஸ்ட் ஏய்டு கிட், எடுத்துக்கிட்டு வரச்சொல்லுங்க!!" சங்கர பாணி, கதவை அடைக்கும் முன் சொன்ன மணி, தொலைபேசியை எடுத்து, ரெசிடென்சி ஹோட்டலுக்கு அழைத்தான்.

"ரூம் நம்பர் 303, அவைலபிலா இருக்கா?"

........................”

"நோ, எனக்கு அந்த ரூம்தான் வேணும்"

........................”

"ஓகே, நான் ஒரு ஆஃபர் கொடுக்கிறேன்!! அந்த ரூமை, எனக்கு அரேஞ்ச் பண்ணிக் கொடுத்தா!! ஒரு மாசம் புக் பண்ணிக்கிறேன்!!"

........................”

"தேங்க்யூ!!, என்னோட அசிஸ்டன்ட், ஒரு அஞ்சு நிமிஷத்துல, டீடெயில்ஸ்ஸோட கால் பண்ணுவார்!!" தொலைபேசியை வைத்தவன், தன் உதவியாளரை அழைத்து, ஒரு மாதத்துக்கு, தனது பெயரில் ரெசிடென்சியில், அறை எண் 303-னை, பதிவு செய்ய அறிவுறுத்தினான்.

15 நிமிடம் கழித்து,

"ஓகே!! உங்க பாஸ் கிட்ட கொடுத்து, இந்தப் பேப்பர்ஸ்ஸ பிராசஸ் பண்ண சொல்லுங்க!!" தான் சொன்ன திருத்தங்களை, சங்கர பாணி, சரியாக செய்திருப்பதை உறுதி செய்ததும், அந்த காகிதங்களை அவரிடம் நீட்டி சொன்னான். அவன் சொல்லி முடிக்கவும், கைகளில் இருந்த காயங்களுக்கு, நர்ஸ் கட்டுப் போட்டு முடிக்கவும் சரியாக இருந்தது.

"மெயின்டனன்ஸ்ஸ கூப்பிட்டு, இந்த கதவ, சரி பண்ண சொல்லுங்க"அறையை விட்டு வெளியே வந்ததும், தன் உதவியாளரிடம் சொல்லிவன், அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறினான்.

***************

அரை மணி நேரம் கழித்து,

ரெசிடென்சியின், அறை எண் 303, திறக்கப்பட, ஹோட்டல் உதவியாளரிடம் நன்றி சொல்லிவன், உள்ளே சென்று கதவை அடைத்தான். சாத்திய கதவில், அப்படியே சாய்ந்து அமர்ந்தான்.

அவன் நினைவலைகளில்,

பிரதீப்பை பின் தொடர்ந்து, மீண்டும் அவன் வாழ்வில் நுழைந்தால் மது, நேத்ராவின் வடிவில். அவளின் முறைப்பில் தெரிந்த உண்மை, மணியின் பார்வையை பிரதீப்பிடம் தக்க வைத்தது. சிரித்த முகத்துடன் வந்த பிரதீப், மணியை கட்டி கொண்டான். மணியின் வளர்ச்சியை வியந்து போற்றினான். தங்கள் காதலுக்கு, இரு வீட்டாரின் சம்மதத்தை பெற்ற கதையை, சிலாகித்து கூறியவன், அவனுக்கும், நேத்துராவுக்கும் நடக்கவிருக்கும் திருமண அழைப்பை கொடுத்து, கண்டிப்பாக வரும்படி, நான்கைந்துமுறை வற்புறுத்திச் சொன்னான். அவன் சொன்னது மட்டுமல்லாமல், நேத்ராவையும், சொல்லச் சொல்ல

"அவனுக்குத் என்ன பண்ணும்னு தெரியும்!!" மிரட்டும் தோணியில் சொன்ன நேத்ரா, கிளம்பும் பொழுது, பிரதீப்பை வெளியே சென்று காத்திருக்கச் சொன்னாள்.

பிரதீப், வெளியே சென்றதும், எழுந்து மணியின் அருகில் வந்தவள், அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

"மது!! மது!! அவள உரசிக்கிட்டு உருகுனது எல்லாம் பொய்யா டா?, அவளுக்கு, இப்படி ஒரு துரோகத்தை பண்றதுக்கு, எப்படி டா உனக்கு மனசு வந்துச்சு!!" மீண்டும் அடித்தாள்.

"இப்போ சொல்றேன் டா!! அவளுக்கு பண்ண துரோகத்திற்கு, நீ யாரும் இல்லாமல் தாண்டா சாவே!!" என்றவள், மீண்டும் இரண்டு அடி அடித்துவிட்டு ஓய்ந்து போனாள். அவள் கண்கள் கலங்கியிருந்தது. தன்னை கொஞ்சம் ஆசுவாச படுத்திக் கொண்டவள்

"ஏண்டா இப்படி பண்ண?" உடைந்த குரலில் கேட்டாள், நேத்ரா.

"சாரி நேத்ரா!!" அவள் ஆத்திரத்தில் அடித்தபோது அமைதியாக இருந்தவனால், ஏனோ அவளது உடைந்த குரலின் வலியை கேட்டபின், அமைதியாக இருக்க முடியவில்லை

"ச்சீ!!, நீ பண்ண காரியத்துக்கு, சாரி சொல்றதுக்கு கேவலமா இல்ல?" மீண்டும் ஆத்திரத்தில் அடிக்க ஓங்கிய கையை, பாதியில் நிறுத்தினாள்

"உன்ன பாக்குறது கூட பாவம்!! உன் முகத்திலேயே முழிக்க கூடாதுணு நினச்சிருந்தேன்!! அறிவுகெட்டவன், சொல்ல சொல்ல கேட்காம.... " பிரதீப்பை கரித்துக் கொட்டியவள், அறையின் கதவை நோக்கி நடந்தாள்.

"பிரதீப் கூப்பிட்டானு, தயவுசெய்து கல்யாணத்துக்கு வந்திராத!! உன்ன மட்டும் கல்யாணத்துல பார்த்தேன்!! அடுத்த செகண்டு அங்கிருந்து கிளம்பிப் போயிட்டே இருப்பேன்!!" கதவை திறந்து வெளியேறினாள்.

**************

நேத்ரா கிளம்பியது முதல், இப்பொழுது வரை, அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது அந்த கேள்வி. அவன் உயிருள்ளவரை அந்த கேள்வி ஒலித்துக் கொண்டே இருக்கும். மணியால் பதில் சொல்ல முடியாத கேள்வி, அவன் பாவத்தின் கேள்வி. மதுவின் நினைவுகளை தள்ளியே வைத்திருந்தவனுக்கு, தான் வாழ்ந்த, வாழ்ந்திருக்க வேண்டியே வாழக்கையை அந்த கேள்வி கண்ணாடி போல பிரதிபலித்தது. இத்தனை நாட்கள் அவள் இல்லாமல் வாழ்ந்து விட்டேனா என்ற எண்ணமே அவளை நோக்கி அவனை இழுத்துச் சென்றது. அவளிடம் செல்ல துணிவில்லாதவன், அவள் நினைவுகளை சுமக்கும் இந்த அறையை தேடிவந்தான், அரவணைப்பைப் தேடி. ஆனால் அந்த அறையோ, அவன் வாழ்க்கையைப் போலவே வெறுமையாக இருந்தது. அந்த வெறுமையை நிரப்பிக்கொண்டது "ஏண்டா இப்படி பண்ண?" என்ற நேத்ராவின் கேள்வி. அந்த கேள்வி, அவன் காதில் ரீங்காரமிட, கையில் இருந்த காயத்தை மறந்து, இரு கையாலும் தலையில் அடித்தான். காயம்பட்ட கையின் வலி தாளாமல், வலது கையை பற்களுக்கு இடையே வைத்து கடித்து, வலிக்கு, வலியையே மருந்தாக்கினான்

***************

இங்கே, சிவகுருவின் அலுவலகத்தில்,

சங்கரபாணி அனைத்தையும் சொல்லி முடித்திருந்தார். மணி சொன்ன திருத்தங்களோடு இருந்த காகிதங்கள், சிவகுருவின் கைகளில் இருந்தது. இண்டிபெண்டன்ட் போர்டு மெம்பர்களில், தனக்கு ஏதுவானவர்களை நீக்கிவிட்டு, அவன் தாத்தா சிபாரிசு செய்த நபர்களில், இருவரை, சேர்த்திருந்தான் மணி. போர்டு மெம்பர்கள் பரிந்துரைக்கும் சேர்மன் பதவிக்கான, லெட்டரிலும், சிவகுருவின் பெயர் நீக்கப்பட்டு, மணியின் பெயர் இருந்தது. தன் எதிர்பார்க்காத புது சிக்கலை, எப்படி எதிர்கொள்வது என்று குழப்பமாயிருந்தது சிவகுருவுக்கு. சங்கர பாணி கடைசியாக சொன்னது சிவகுருவின் மனதில் ஓடியது

"சார்!! தப்பா எடுத்துக்காதீங்க, சார்!! வெறி பிடிச்ச மாதிரி இருக்காரு!! சார்!!".

தேவையில்லாமல், மணியை, சீண்டி விட்டதால்தான், தனக்கு இந்த நிலைமை என்பது சிவகுருவுக்கு நன்றாக புரிந்தது. டென்னிஸ், சிவகாமியின் மகள் என்று சுத்திக் கொண்டிருந்தவனை, தேவை இல்லாமல், தன் குரூர புத்தியால் இப்படி இழுத்துவிட்டு, தேவை இல்லாமல் தான் இந்த இக்கட்டில் சிக்கிவிட்டதற்காக தன்னை தானே நொந்துகொண்ட சிவகுரு, அடுத்து என்ன செய்வது என்று சிந்திக்கலானான். இப்பொழுது சரிக்கு, சரி என்று மல்லுக்கு நிற்பது சரியாகப்படவில்லை அவனுக்கு. பெரியவர்கள் மூவரும், பழனியிலே இருந்ததுவிட்டது கூட ஒருவகையில் நல்லதுதான் என்று நினைத்தவன், மணியை எவ்வாறு சரி கட்டுவது இன்று சிந்திக்கலானார். முடிந்த மட்டிலும் அவனை தாஜா செய்வது, முடியாமல் போகும் பட்சத்தில் மிரட்டி பணியவைக்கலாம் என்று முடிவு செய்தான்.

*************
தொடர்ச்சி
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 27-12-2020, 07:25 PM



Users browsing this thread: 8 Guest(s)