அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 58

தனது மறைவிற்குப் பிறகு, தன் பெயரில் இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் சிவகாமிக்கும், அவளது வாரிசுகளுக்கும் சேருமாறு எழுதிய உயில் பத்திரத்தின் நகலை தான் சிவகுருவிடம் காட்டினான் மணி. அதைப் படித்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல், அறையிலிருந்த ஷோபாவில் அமர்ந்திருந்த சிவகுருவின் மனதில் பலவாறான எண்ணங்கள்.

சொத்து முழுவதும் மணியின் பெயருக்கு எழுதி வைத்த அடுத்த நாளில் இருந்து, மணி கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தான். மணி கல்லூரிக்குச் செல்லும் கார் ஓட்டுனரில் இருந்து, எலும்பு முறிவுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் முதற்கொண்டு அனைவரையும் தன் கட்டுக்குள் வைத்திருந்தான் சிவகுரு. சிவகுரு இல்லாமல் அவர்களது குழுமத்தை நிர்வகிப்பது கடினம் என்பது சிவகுருவின் பாலம் என்றால், ஒரே பலகீனமாக சிவகுரு கருதுவது சிவகாமிக்கும் தனக்கும் இருந்த உறவு, மணிக்கும் தெரியும் என்பதுதான். அதேபோல், அவர்களுக்குள்ளான உறவு தனக்கு தெரியும் என்பதால், அதை துருப்புச் சீட்டாக உபயோகப்படுத்த மாட்டான் மணி, என்பது சிவகுருவின் கணக்கு. அதே நேரம் தனது குட்டு வெளிப்பட்டு விட்டால், இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்க்கை, ஒன்றுமில்லை என்று ஆகிப்போகும் என்று உணர்ந்த சிவகுரு, இதுவரைக்கும் எதை வைத்து மணியை பலவீனப்படுத்தி இருந்தானோ, அதே சுபாவின் அன்பை வைத்தே, அவனை மேலும் பலவீனப்படுத்தி, தனக்கு எதிராக எந்த எதிர்வினையையும் ஆற்ற விடாமல் செய்ய முயன்றான்.

அன்னையின் அன்பை, மணியின் மீது ஆயுதமாகப் பயன்படுத்தும் காலம் கடந்து விட்டதை உணரவில்லை சிவகுரு. மணி கண்டிப்பாக, தன்னை அருகில் அனுமதிக்க மாட்டான் என்பது தெரிந்திருந்தாலும், அவன், தன் மனைவி சுமாவை மட்டுமல்லாது, பெரியவர்களையும் அருகே அனுமதிக்க மறுத்தது கொஞ்சம் உறுத்தியது. மணியின் இந்த விலகளை எதிர்பார்க்காத அவனது தாத்தா, கோயம்புத்தூரிலேயே தங்கிவிட முடிவெடுத்தது சிவகுருவை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. தன் மேலான அதிக நம்பிக்கையிலும், மணியை, சிறுவன் தானே என்று எண்ணி உதாசீனமாக எண்ணினாலும், ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை சிவகுரு. மணியின் கவனத்தை டென்னிஸ் மீது திருப்ப, தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தான், அதிலும் அவனுக்கு தோல்வி தான். மதுவை வைத்து முயற்சி செய்யலாமா என்று கூட ஒரு எண்ணம் வந்தது, ஆனால் அதை அடுத்த நொடியிலேயே நிராகரித்து விட்டான்.

சிவகாமியையோ, அவளின் மகளையோ திரும்பவும் அவர்களது வாழ்விற்குள் இழுத்து, புதிதாக ஏதேனும் சிக்கலை தானே உருவாக்கக் கூடாது என்ற எண்ணம் தான் அதற்குக் காரணம். யாரிடமும் பேசாமல், தான்தோன்றித்தனமாக கல்லூரிக்கு மட்டுமே சென்று வந்து கொண்டிருந்த மணி, அப்படியே இருப்பதுதான் தனக்கு நல்லது என்று நினைத்தான். பிணம் போல் சுற்றிக் கொண்டிருந்தவன், திடீரென்று எப்படி வந்து தனக்கு சவால் விடுவான் என்பதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை சிவகுரு. எல்லாம் அவன் நினைத்தது போலவே நடந்து வந்த நிலையில்தான் மணியின் இந்த செயல், சிவகுருவை சற்று அதிர்ச்சி அடையச் செய்தது.

உள்ளுக்குள் தன்னை தைரியப்படுத்திக் கொண்டாலும், ஒரு சின்ன பதட்டம் சிவகுருவுக்கு. எந்தக் காரணத்தைக் கொண்டும் தனக்கும், சிவகாமிக்கும் உள்ள உறவு, தன் மனைவிக்கு தெரிந்துவிடக்கூடாது என்பது மட்டுமே சிவகுருவின் எண்ணமாக இருந்தது. சிவகாமியுடன் இருந்த உறவும் உணர்வுபூர்வமான ஒன்றுதான் என்றாலும், சுமா, அவனது காதல் மனைவி. தன் மனதின் எச்சங்களையும், வக்கிறங்களையும், கொட்டுவதற்கு மட்டுமே சிவகாமியை பயன்படுத்தி வந்தான், சிவகாமியும் அப்படியே, தேவையின், சிவகுருவின் அருகாமையில் கிடைக்கும் பாதுகாப்பின் பொருட்டுதான் அவனை பயன்படுத்தி வந்தாள். அதற்கு அவர்கள் “தங்களால் யாரும் புண்படவில்லை” என்ற சப்பையை கட்டி முட்டுக் கொடுத்து வந்தனர். அதேபோல் சிவகுருவுக்கு மணியை கொல்ல வேண்டும் என்ற எண்ணம், சிவகாமியும் மணியும், தன்னை அசிங்கமாக பேசிவதற்கு முன், இருந்ததில்லை. மணியன் மரணம், தன் மனைவி சுமாவை கடுமையாக பாதிக்கும் என்பதை நன்கு உணர்ந்திருந்த சிவகுரு, அதைப்பற்றி சிந்திருக்கவில்லை. இன்னொரு குழந்தை மட்டும் அவர்களுக்கு பிறந்திருந்தால், மணியின் கதை சிறு வயதிலேயே முடிந்திருக்கலாம். சிவகுருவின் கெட்ட நேரமோ? மணியின் நல்ல நேரமோ? அப்படி எதுவும் நடக்கவில்லை.

மணியை கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்ததற்கு முக்கியமான காரணம், இருவருக்குள் இருக்கும்வரை தான் அது ரகசியம், மணிக்கு தெரிந்த தன் கள்ள உறவு எந்த சூழ்நிலையிலும் தன் மனைவிக்கு தெரியக்கூடாது என்பதுதான். என்ன, தன்னை அசிங்கப்படுத்தியதற்காக, சிவகாமிக்கு, மணிக்கும் இருக்கும் தொடர்பை, மதுவுக்கு தெரியப்படுத்தி, அதனால் அவர்கள் இருவரும் படப்போகும் துன்பத்தை ரசித்துவிட்டு, பின் அவர்களை தீர்த்துக்கட்டலாம் என்று திட்டமிட்டு இருந்தான். மதுவே வலிய வந்து தன் பெயரிலான ஷேர்களை விற்க முயன்றதை, சேட்-டீன் மூலமாக வாங்க கிடைத்த வாய்ப்பை, போனஸாகவே கருதினான். அதிர்ஷ்டம் அன்று தோன்றிய நிகழ்வுகள், இன்று தவறவிட்ட தருணங்களாக தோன்றியது. தன் ஈகோவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், காரியத்தை முடிப்பதில் மட்டும் கவனமாக இருந்திருக்க வேண்டுமோ? என்ற கேள்வி எழுந்தது.  மீண்டும் தன் வாழ்க்கையை 22, 23 வருடங்கள் பின்னால் சுழன்று அதைப் போல உணர்ந்தான் சிவகுரு

பெரு மூச்சுவிட்டு, தன் மனதில் எழுந்த எண்ணங்களால் தான் பலவீனப்பட்டு விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டான். நடப்பது எதுவும் அவன் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத பொழுது, அனுமானத்தின் பெயரில் புதிதாக எந்த குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என்று எண்ணிக்கொண்டான். மீண்டும் கண்களை மூடி, தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தவன், இன்னும் கொஞ்சம் மணி விட்டுப் பிடிக்கலாம் என்று முடிவு செய்தான்

மணி தூக்கி எறிந்து விட்டு போன அட்டையில் இருந்த வாசகத்தை நினைவு வந்தது அவனது மூளை. உதாசீனச் சிரிப்பை உதிர்த்தான்

Ok, let's Play. முனுமுனுத்தான்.

***************

ஒரு வாரத்திற்கு முன்.

எப்பொழுதும்போல் மாதாந்தர ரிவியூவ் மீட்டிங் நடந்தது. இரண்டு நாட்களுக்கு முன் தான், சோலார் மின் உற்பத்தி தளவாடங்கள் விற்பனைக்கான மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்து ஆகியிருந்தது. மீட்டிங் முடிந்ததும் அதற்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

"எல்லாம், தம்பி கொடுத்த ஐடியாவால்தான்" மணியின் தாத்தா, அவனை உற்சாகமூட்டும் முயற்சியில், அனைவருக்கும் முன்பு தெரிவித்தார். மொத்த கூட்டம் கைதட்டியது, அதை கொஞ்சமும் ரசிக்கவில்லை சிவகுரு, காது கொடுத்தே கேட்கவில்லை மணி.

**************

"தப்பான நம்பிக்கை கொடுக்காதீங்க மாமா!! அதவிடவும் மத்தவங்களா டிஸ்கிரடிட் பண்ணாதீங்க!!" மூவரும் மட்டும் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் வாய்ந்ததும், பொறுக்க மாட்டாமல் சிவகுரு

"புரியல சிவா!!" சிவகுரு எதைப் பற்றி பேசுகிறான் என்பது பபுரிந்தும், புரியாதது போல கேட்டார், மணியின் தாத்தா.

"இந்த காண்ட்ராக்ட் கிடைக்கிறதுக்குப் பின்னால் பத்து வருஷம் உழைப்பு இருக்கு, அதுக்கான மொத்த கிரடிட்டும் எப்படி இவனுக்கு போகும்?" அருகில் இருந்த மணியை பார்த்து சிவகுரு.

"நாம புதுசா 3 யூனிட் ஆரம்பிக்காமல் இருந்தா, இந்த காண்ட்ராக்ட் கிடைச்சீருக்குமா?" மாமனாரின் கேள்வியிலேயே, தான் பேசியிருக்க கூடாது என்பதை உணர்ந்த சிவகுரு

"கிடைத்திருக்காது!!" சிவகுருவின் குரல் தாழ்ந்தது, மணியின் செவிகள் முதல் முறையாக அந்த உரையாடலை உள்வாங்கிக் கொண்டது.

"சப்ளை கேப்பாசிட்டி இல்லணு ரிஜக்ட் ஆகியிருக்கும், தம்பி மட்டும் ஒரு வருஷத்துக்கு முன்னால பேசி என்னை கன்வின்ஸ் பண்ணலன்னா, கண்டிப்பா, அந்த விரிவாக்கத்துக்கு நான் ஒத்துக்கிட்டிருக்க மாட்டேன். இப்பவும் சொல்றேன், அந்த காண்ட்ராக்ட் கிடைக்கிறது மணி தான் காரணம்" சொல்லி முடித்த விதத்திலேயே இதற்குமேல் இதை பற்றி பேச விரும்பவில்லை என்பதையும் சேர்த்தே சிவகுருவுக்கு உணர்த்தினார், மணியின் தாத்தா.

மணிக்கு, தான் பதற்றத்தில் இருந்த போதெல்லாம், எதிராளி அடித்த பந்தின் "டொக்" சத்தம், எப்படி அவனை உசுப்பேற்றி விடுமோ, அப்படி உசுப்பேற்றி விட்டு இருந்தது, சுருங்கிப்போன சிவகுருவின் முகம். அன்று, இரவு அறையில் நிலைகொள்ளாமல் நடந்து கொண்டிருந்தான். காற்றுப்புகாத அறையில் அடைப்பட்டு கிடந்தவனுக்கு, அந்த அறையின் சுவர்கள் எல்லாம் காற்றில் கரைந்து போனால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு மனநிலையில் இருந்தான். கொஞ்சம் தெளிவடைந்து இருந்தான் அவன். எங்கு அடித்தால் சிவகுருவுக்கு வலிக்கும் என்பது, கொஞ்சம் புரிந்தது போல் இருந்தது அவனுக்கு. கண்ணாடியின் முன் அமர்ந்து, அதில் தெரிந்த பார்வையில் தன்னைத் தொலைத்தான்.

மீண்டும் மதுவுடன் அவன் காதலித்து கசிந்துருக்கிய நாட்கள் நினைவுக்கு வந்தது. வாழ்க்கையை அவள்தான் என்று, யாரை நினைத்திருந்தானோ, அவள், இனி அவன் வாழ்க்கையில் இல்லை, அவளுக்குத் தான் தகுதியானவனும் இல்லை என்பது அவனுக்கு தெளிவாக புரிந்தது. அந்தத் தெளிவுதான், அந்த வலிக்கு காரணமானவனை அழித்தே தீருவது என்று அவனை உறுதி கொள்ளச் செய்தது, தான் செய்த தவறுகள் புரிந்தது. முதன்முதன்முதலாக மது, முடியாது என்று சொன்ன பொழுதே, நேராக தாத்தாவிடம் சென்றிருக்க வேண்டும். அதுதான் தான் ஆடி இருக்கவேண்டிய ஆட்டம். தன்னுடைய ஆட்டம் என்று நினைத்து, சிவகுரு-சிவகாமியின் ஆட்டத்தில் ஆடியதுதான், தான் செய்த தவறு என்பது உறைத்தது. அதில் தான் இழைத்த தவறால், பண்ணக்கூடாத பாவங்களை எல்லாம் பண்ணி, இன்று விமோசனத்துக்கு வழியில்லாத இல்லாத, இழிநிலை தனக்கு.

எப்படி மதுவின் மீதான வெறுப்பில், அவளின் கவனத்தை ஈர்ப்பதரக்காக, முதன்முதலாக தொழில் விஷயங்களில் ஈடுபாடு காட்டினானோ, அதேபோல் ஒரு ஆர்வ மிகுதியில், தன்பக்கம் தன் சகமாணவர்களின் கவனத்தைத் ஈர்க்கத்தான், முதன்முதலாக டென்னிஸ் கோர்டுக்குள் நுழைந்தான். டென்னிஸ் அவனுக்கு கைகூடியது போல், தொழிலும் கைகூடும் என்று நம்பினான். அப்படியே கைகூடாவிட்டாலும், இந்தமுறை தன்னால் யாருக்கும், எந்த இழப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.

வலி ஒருவனை ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும். அவனுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட வலியை வைராக்கியமாக பற்றிக்கொண்டான்.

ஒருவனுக்கு சாவதை காட்டிலும் அதிக வலி கொடுப்பது, இதுதான் தன் வாழ்க்கை என்று அவன் நம்புவதை அழிப்பதுதான் என்பதை அவன் வாழ்க்கையே அவனுக்கு கற்றுக் கொடுத்திருந்தது. தன் அப்பாவுக்கு, அவர் மனைவியோ அல்லது சிவகாமியோ வாழ்க்கை இல்லை. ஃப்யூச்சர் குரூப்ஸின் இயக்குனர், என்பதும், சமுதாயத்தில் அதுதரும் மதிப்பும், அதிகாரமும், மரியாதையுமே அவரது வாழ்க்கை என்பது அவர் சொத்தை எழுதிக் கொடுத்த, போதும், கிரெடிட் மொத்தமும் அவனுக்கு கொடுக்கப்பட்டபோதும் சுருங்கிப்போன சிவகுருவின் அவனுக்கு புரியவைத்தது. ஃப்யூச்சர் குரூப்ஸின் இயக்குனர் என்ற நிலையில் இருந்து, அவரை இறக்கி, அவருக்கு இருக்கும் அடையாளத்தை இல்லாமல் செய்வதுதான், அவருக்கு மரணத்தைக் காட்டிலும் அதிக வலி கொடுக்கும், அதைத்தான் தான் கொடுக்க வேண்டும் என்று உறுதி பூண்டான்.

**************

கல்லூரிப் படிப்பை ஒப்புக்கு முடித்தவன், படிக்கும்போதே படிப்பை காட்டிலும் தொழில்தான் கவனம் அதிக கவனம் செலுத்தினான். அதிலும், அவனது அப்பாவுக்கு மிகவும் பிடித்த சோலார் பிரிவின் மீது தனி கவனம் செலுத்தினான். படிப்பு முடிந்த ஆறு மாதத்திலேயே தங்கள் கம்பெனிகளின் தினசரி நடவடிக்கையில், இவனது தலையீடு அதிகமாக, சிவகுருவிடம் இருந்து வந்த எதிர்ப்பை, தாத்தாவை வைத்து சமாளித்தான். நெருங்கும் முயன்ற தாயையும் தள்ளியே வைத்திருந்தான்.

தேடித்தேடி படித்தான் இரவு பகல் பாராமல் உழைத்தான். கிடைக்கும் அத்தனை சந்தர்ப்பங்களிலும் அவனது தந்தையின் முக்குடை தான், அவனது தந்தையால் மூக்கடைப்பும் பட்டான். ஆரம்பத்தில் அதிக மூக்குடைபட்டாலும் போகப்போக தொழிலில் தெளிவுபெற இவன் அவனது தந்தையின் கிடைக்கும் எண்ணிக்கைகள் அதிகமாயின. சமுதாயத்தில் அவர் அடைந்திருக்கும் நிலையில் இருந்த அவரை அப்புறப்படுத்துவது ஒன்றையே வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டவன், அதை செயல்படுத்தவும் ஆரம்பித்தான். முடிந்த அளவு, தனக்கும், தன் அப்பாவுக்கும் நடக்கும் சம்பாஷனைகளின் போது, அருகில் தாத்தா இல்லாமல் செய்வதில்லை அவன்.

**************

மொத்த குடும்பமும் இரவு உணவு அருந்திக் கொண்டே இருக்க, ஆரம்பித்தான் மணி.

"நாமே, ஏன் ஒரு லைஃப்ஸ்டைல் ஸ்டோர் தொடங்கக் கூடாது? “ ஆர்வகோளாரில் மணி.

"நாம எதுக்கு சிலர வியாபாரம் எதுக்கு தொடங்கணும்?” சலிப்பாக சிவகுரு.

"டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரி வைச்சிருக்கோம், கார்மெண்ட்ஸ் வைச்சிருக்கோம், நாமேலே அத ரீடைலும் பண்ணினனா லாபத்தை அதிகப்படுத்தலாம்!!” விடாமுயற்சி மணி.

"நம்மாளளோட கஸ்டமர்ஸ்க்கு, நாமே காம்படீஷன் ஆனா, உள்ள பிஸினசும் போயிடும். இந்த மாதிர் கொஞ்சம் கூட லாஜீக்கே இல்லாத ஐடியாவா எடுத்துக்கிட்டு வந்து என்னோட டைம வேஸ்ட் பண்ணாத!!” மூக்குடைத்த சிவகுரு, மணியை, ஏளனமாக பார்க்க, சிவகுருவின் சூடான வார்த்தைகளை தாங்கள் அங்கீகரிக்க வில்லை என்பது போல் சிவகுருவை பார்க்க, சுதாரித்த சிவகுரு.

"கஸ்டமர்ஸ்க்கு, நாமே காம்படீஷன்னா இருக்குறது கூட ஓகே, மேனேஜ் பன்னிக்கலாம், நம்ம டெக்ஸ்டைல் பிசினஸ் இன்னும் வருஷாவருஷம், குறைஞ்சது 6 டூ 8 பர்சண்ட் வளர்ந்துகிட்ட தான் இருக்கு. எப்பவுமே ஒரு வளர தொழில் கையில் இருக்கும் போது, அதில் உச்சம் தொடுகிற வரைக்கும், நம்ம கவனமெல்லாம் அதுல தான் இருக்கணும். இதுதான் அடிப்படை!!” வேறு வழி இல்லாமல் நெருக்கடியால், தானே மணிக்கு பிஸினஸ் நுணுக்கங்களை கற்றுக்கொண்டுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவான்.

***************

"நாம ஏன் மின்சாரத் தயாரிப்பில் ஈடுபட கூடாது?” ஆர்வகோளாரில் மணி.

“..........................” சலிப்புற்ற சிவகுரு.

"சோலார் பவர் உற்பத்தி பண்றதுக்கு தேவையான மொத்த பார்ட்ஸ்சும் நாமதான் தயாரிக்கிறோம், ஏன் மின்சாரமும் நாம்மலே உற்பத்தி செய்யக் கூடாது? விடாமுயற்சி மணி.

"இன்னும் நம்ம சோலார் பிசினஸில், லாபம் சம்பாதிக்க ஆரம்பிக்கல, அதுவுமில்லாம புதுசா தொழில் தொடங்க கேபிட்டல் எங்க இருக்கு? முதலீடு எங்கிருந்து வரும்?” மூக்குடைத்த சிவகுரு. தன் மாமனாரின் பார்வையை, பார்த்து மீண்டும் சலிப்புற்று

மாமா, ஸ்பூன் பீட் பண்ண முடியாது. ஆபீஸ்ல இருக்கும் போது, I am his M. D, அவ்வளவுதான்!!” என்று இப்பொழுதெல்லாம் கொஞ்சம் சூடாக ஆரம்பித்தான்.

****************

இப்படி தன் தந்தையின் கைகளால் மூக்குடைபட்ட போதெல்லாம், கூடுதல் உத்வேகத்துடன் உழைக்க ஆரம்பித்தான் மணி. யாரிடமும் முன் அனுமதி கேட்க தேவையில்லை என்ற ஒரே காரணத்திற்காக தனியாக ஒரு பெரும் தொகையை பெற்றுக்கொண்டு, முதலீடுகள் செய்வதற்கு என்றே, தனியாக பியூச்சர் ஹோல்டிங் என்று ஒரு கம்பெனி ஆரம்பித்தான். சிவகுருவை வெறுப்பேற்ற வேண்டும் என்று, அவன் செய்த இந்தச் செயல் உங்களுக்கு மேலும் பலம் சேர்த்தது. பணமுதலை ஒண்ணும் உள்ள இறங்கிருக்கு என்று பிஸினஸ் வட்டத்தில் தகவல் பரவ, முதலீடுகளை எதிர்பார்த்து, பல விதமான தொழில் புரிபவர்கள் வருவார்கள், இவனை தேடி வருவார்கள். அப்படி வருபவர்களின் தொழில் அறிவை, மொத்தமாக உள்வாங்கிக் கொண்டு, தன்னைத் தானே மேம்படுத்தி கொண்டான். இவன் செய்த பல முதலீடுகள் சொதப்பி இருந்தாலும், சில முதலீடுகளில் நம்பிக்கை தந்தது. அது கொடுத்த தெம்பில், தன் ஆட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை முன்னெடுத்தான்.

************

சிவகுரு அலுவலகத்தில் நுழைந்ததில் இருந்து, எதிர்ப்பட்ட அனைவரும் அவனுக்கு வாழ்த்துச் சொன்னார்கள், சிலர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். முதலில் குழம்பினாலும், சமாளித்துக்கொண்டு அனைவரது வாழ்த்துக்களையும், சிரித்த முகத்தோடு பெற்றுக்கொண்ட சிவகுருவின் மனதோ பதட்டம் அடைந்தது. கடந்த ஒன்றரை வருடங்களாகவே, இதே போன்ற ஒரு பதட்டம் எப்பொழுதும், சிவகுருவின் அடிமனதில் இருந்து கொண்டேதான் இருந்தது. தன்னை மீறி எதேனும் நடந்துவிடுமோ என்ற எண்ணம் கொடுக்கும் பதட்டம். ஏனோ, இன்று அந்தப் பதட்டம் சற்று அளவுக்கு அதிகமாய் இருந்தது.

அறைக்குச் செல்ல திரும்பும்பொழுது தான்

"சார், சேர்மன் சார், உங்கள, அவர் ரூமுக்கு வரச்சொன்னார்!!" இடைமறித்த சிவகுருவின் செக்ராடரி சங்கரபாணி.

குழப்பத்துடன் தனது மாமனாரின் அலுவலக அறையை நோக்கி நடந்தான். அறையின் வெளியே இருந்த பெயர்ப்பலகையை கண்டவனுக்கு அதிர்ச்சி. தனது மாமனார் பெயர் இருந்தா இடத்தில் தனது பெயர். குழுமத்தின், தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவாக இருந்தாலும், தன் மாமானாரின் மேல் உள்ள அபிப்ராயத்தால் அவராகவே கொடுக்கட்டும் என்று அவருக்கு எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை. இன்று தன் கனவுகளில் ஒன்று மெய்யாக, முழு மனதுடன், மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை, சிவகுருவால். தனக்கு சாதகமாக இப்பொழுதுவரை எல்லாம் நடந்து கொண்டிருந்தாலும், அது தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் நடப்பது வாடிக்கையாக இருந்தது சிவகுருவுக்கு. பெயர்பலகையைப் பார்த்தவாறு நின்றிருந்த சிவகுருவின் கவனத்தை, கைதட்டல் ஒலி தொலைத்தது.

முகம் கொள்ளா சிரிப்புடன், சிவகுருவை நோக்கி வந்தார் மணியின் தாத்தா.

"வாழ்த்துக்கள், சிவா. இன்னையோட நான் ரிட்டையர்ட் ஆகலாம்னு முடிவு பண்ணிட்டேன்" என்றவர், சிவகுருவின் தோள்களில் கைபோட்டு, சேர்மன் அறைக்குள், அழைத்துச் சென்றார். பின்னாலேயே, இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாத ஒரு சிரிப்பை முதன்முதலாக சூடிக்கொண்டு, அவர்களை தொடர்ந்தான் மணி.

**************

"இப்ப எதுக்கு மாமா இது, இன்னும் இறங்கி பார்க்க வேண்டிய வேல அதிகமா இருக்கு!! சோலார் பிசினஸ், இந்த குவாட்டர்ல பிரேக் ஈவன் ஆகிடும்!! அதுக்கு அப்புறம் உங்ககிட்ட, நானே, இதப்பத்தி பேசணும்னு தான் நினச்சுருந்தேன்" அரைமணி நேரம் கழித்து, தனக்கு கிடைத்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட சிவகுரு, சிரித்தார் பெரியவர்.

"அதனால தான் இன்னைக்கு, நல்ல வேளை, உங்களுக்கு வயசு ஆயிடுச்சுனு நீயா வந்து சொல்றதுக்குள்ள, நானே இடத்தை காலி பண்ணினது நல்லது, இல்லையா? " மீண்டும் சிரித்தார்.

"என்ன மாமா இது?" கொஞ்சம் பதட்டம் அடைந்த சிவகுரு.

"சும்மா பா!! பிசினஸ்ல எல்லா முடிவையும் சரியான டைம்ல எடுத்துக்கணும்!! இதுதான் கரெக்ட் ஆனா டைம்னு எனக்கு தோனிச்சு!! உன் அளவுக்கு இல்லாவிட்டாலும், நானும் ஒரு நல்ல பிசினஸ் மேன்தான்னு நம்புறேன்!!" தன் மருமகனை, தங்களது குழுமத்தின் தலைமை பொறுப்பில் அமர்த்திவிட்ட பெருமிதம், அவர் முகத்தில் தெரிந்தது. அவர் முகத்தில் தெரிந்த உண்மை, சிவகுருவை கொஞ்சம் தைரியம் படுத்தியது.

****************

ஒரு மணி நேரம் கழித்து, தனது இருக்கையிலிருந்து எழுந்து, மணியன் அலுவலக அறையை நோக்கி நடந்த கொண்டிருந்த சிவகுருவின் மனதில் "நேரடியா உனக்கு என்ன தான் வேணும்னு கேட்டு விடலாம்" என்ற ஆவேசம். உள்ளே நுழைந்த சிவகுருவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது போல், நின்றுகொண்டிருந்தான் மணி.

"Congratulations chairman sir!!" கண்ணடித்த மணி, தன் பாக்கெட்டில் இருந்து, ஒரு சிவப்பு அட்டையை எடுத்து டேபிள் போட்டுவிட்டு, அந்த அறையில் இருந்த வாஷ்ரூம்க்குள் நுழைந்து, கதவை அறைந்து சாத்தினான்.

தன்னியல்பில், அந்த அட்டையை எடுத்து வாசித்த சிவகுருவின் உதடுகள் முணுமுணுத்தது.

Checkmate!!

************
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 24-12-2020, 05:42 PM



Users browsing this thread: 5 Guest(s)