அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 49

"எல்லாம் சரியாயிடும் பா, தூங்கு" மணி ஒன்றை தாண்டியும் தூங்காமல், முழித்துக்கொண்டிருந்த மதுவைப் பார்த்து நேத்ரா சொல்ல, தலையாட்டியவள் போர்வையை எடுத்து முகத்தைப் போர்த்திக் கொண்டாள்.

கண்டிப்பாக தூங்க மாட்டாள் என்று தெரிந்தது நேத்ராவிற்கு. மொபைலை எடுத்து நோண்டியவள், இன்னும் தாங்கள் பழனியை கூடத் தாண்டவில்லை என்று தெரிந்துகண்டு, மீண்டும் படுத்து விட்டாள் நேத்ரா. இருண்ட முகத்துடன் வந்து நின்ற மதுவைப் பார்த்ததும், ஏதோ பெரும் பிரச்சனை என்று ஊகித்து கொண்டவள், என்ன என்று கேட்க, தன் தாயிடம் சிறிய சண்டை, என்று சொன்ன மதுவின் குரலில் இருந்த வலி இருந்தே புரிந்து கொண்டாள். அவள் அதைப் பற்றி பேச விரும்பவில்லை என்று. எதையும் கேட்காமல், அவளாகவே சொல்லட்டும் என்று அமைதி காத்தவள், அவள் பித்துப் பிடித்தவளைப் போல இருப்பதை பார்த்ததும், வற்புறுத்தி அழைத்துச் சென்றாள் திருநெல்வேலிக்கு, நேத்ராவின் வீட்டிற்கு.

போர்வைக்குள் கண்கொட்டாமல் விழித்திருந்த மதுவுக்கு, தன் வாழ்க்கையே சூனியமாக தோன்றியது. மணிதான் தன் வாழ்க்கை என்றாலும், அந்த வாழ்க்கையின் அஸ்திவாரம் அவள் தாய். அந்த அஸ்திவாரமே சுக்குநூறாக உடைந்து போக, இன்று காலை பிரகாசமாய் தோன்றிய வாழ்க்கை, கார்இருளில் கரைந்து போனது. அமிலமாக அவள் காதில் விழுந்த வார்த்தைகள், திரும்ப திரும்ப செவிப்பறையில் எதிர்ஒலித்துக் கொண்டிருக்க, சிந்திக்க திறனற்று, செயலிழந்து போய் இருந்தது அவளது மூளை. வாழ்க்கையே வெறுமையாக தோன்ற, நெஞ்சத்தின் படபடப்பு மட்டும் அடங்கவில்லை இன்னும்.

மறுநாள் மணியுடன் பேசிய பின்பு உணர்வு பெற்றவளாய், அடக்கமாட்டாமல் அழுதவளை என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியாமல் பரிதவித்துப் போனால் நேத்ரா.

"என்னாச்சு பானு? ஏதாவது சொன்னால் தானே என்னால ஏதாவது பண்ண முடியும்?" என்று கேட்ட நேத்ராவிடம், அதற்கு மேலும் பொறுக்க மாட்டாமல் கொட்டித் தீர்த்தாள்.

தன் தாயின் செயலால் பாதி வருந்தி அழுதாள் என்றாள், தன் காதலின் எதிர்காலம் என்னவாகும் என்று தெரியாத பயத்தில் வந்தது, மீதி அழுகை. நேத்தராவிடம் தன் தாயின் தகாத உறவைச் சொன்னவள் அது யாருடன் என்பதை மறைத்துவிட்டாள். தன் தோழியின் துயர் உணர்ந்து துடித்துப் போனாள் நேத்ரா, அதன் பின்பு அவளிடம் எதுவும் கேட்கவில்லை. அதன்பின் மணி அழைத்த போதெல்லாம் அவளே சமாளித்தாள். தனி ஒரு பெண்ணாய், இந்த சமூகத்தில் மதுவின் அம்மாவிற்கு இருக்கும் பெயருக்கு, இது சற்றும் பொருந்தாத, ஈனத்தனமான என்ற செயல் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒரு பெண்ணிற்கான தேவைகள், அவள் பக்கம் இருக்கும் நியாயம், காரணம் இருக்கும் என்பதையும் நெதராவின் அவளது மனம் நினைக்க தவறவில்லை. இருந்தும், அவள் அம்மா பக்கத்து நியாயத்தை சொல்லி, தன் தோழியை மேலும் காயப்படுத்த விரும்பாமல், அவள் தேடும் ஆறுதலாய் இருக்கவே விரும்பினால் நேத்ரா.

சில நாட்களில் ஓரளவு தேறி இருந்த மதுவிற்கு தெரிந்தது, தன்னால் தன் தாயின் செயலை என்றுமே மன்னிக்க முடியாது என்று. ஆனால், அவள் முன்பு ஒரு பெரிய கேள்விக்குறியாக நின்றது அவளது காதல். அவளுக்கு தெரியும் கண்டிப்பாக மணியினை, அவனது குடும்பத்தில் இருந்து பிரித்து எடுப்பது என்பது, நடவாத காரியம். எல்லாம் கூடி வந்தாலும் அவனை திருமணம் செய்து கொண்டு, அவனது வீட்டில், அவனது தந்தையை நிதமும் பார்த்துக்கொண்டு வாழ்வது, அவளால் என்றுமே முடியாது. அவனை விட்டு விலக மனமில்லாமல், தன் காதல் கைகூட, எந்த வழியும் தெரியாமல் பெரும் மணவலியுடன் தவித்திருந்தாள். அந்தச் சூழ்நிலையில், அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல் மணி, அருகில் இல்லாதது தான்.

நேத்ரா உடன் தனியாக வீடு எடுத்து தங்க ஆரம்பித்தவள், "உன் சந்தோசத்திற்கு தொந்தரவாக இருக்க விரும்பவில்லை" என்ற ஒற்றை வாக்கியத்தில், தன் தாயின் வாயை அடைத்தாள். தன்னுடைய தகாத உறவு தன் மகளுக்கு தெரிந்துவிட்டதை அவள் வார்த்தைகளில் இருந்து உணர்ந்து கொண்டவள், அதை தன் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவை பார்த்து உறுதிசெய்து கொண்டாள். உறுதி செய்து கொண்டவளுக்கும், தன் வாழ்க்கை சூனியமாகத் தெரிந்தது, தன் மகளைப் போலவே, அவளும் சொல்லமுடியாத துயரில் இருந்தாள் தன் தவறால். கொஞ்ச நாள் போனால், தன் மகள், தன் நிலையை உணர்ந்து கொண்டு மன்னிப்பாள் என்ற நம்பிக்கையில் கொஞ்சம் விட்டுப் பிடிப்பது என்று அமைதியானாள்.

*************

"பந்து இங்கே இருக்குனு மனசுல நினைச்சிக்கிட்டு, இப்படி அடி" என்று கையைக் காட்டி, ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த ஒருவனிடம், தான் ஸ்பெயினில் கற்றுவந்த வித்தையை, மணி காட்டிக்கொண்டிருக்க, நெஞ்சம் படபடக்க அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இந்த இரண்டு மாதங்களில், எவ்வளவு யோசித்தும், ஒரு வழியும் புலப்படாமல், அழுகையை அடக்கிக்கொண்டு அவனிடம் சென்றாள்

"என்ன ஆச்சு? உடம்பு முடியலையா?" தன்னை நோக்கி வந்த மதுவை கண்டு, வேகமாக அவளிடம் வந்தவன், அவளின் சோர்வான முகத்தை கவனித்துவிட்டு, நெற்றியில் கைவைத்து கேட்க, ஒன்றும் இல்லை என்று தலையாட்டியவள், அவன் கையை பற்றி இழுத்து சென்றாள், தங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு.

இரண்டு மணி நேரம் கழித்து,

எவ்வளவு கேட்டும், எந்த பதிலும் சொல்லாமல் தன்னை அட்டைபோல் ஒட்டிக் கொண்டிருக்கும் மதுவை, இறுக்கி அணைத்தவாறு, அவள் தலை எங்கும் முத்தமிட்டுக் கொண்டிருந்தான் மணி.

அறையில் நுழைந்ததுமே, ஆவேசமாய் அவனை முத்தமிட்டவள், 20 நிமிடத்தில் ஆவேச கூடலுக்கு பின் அழுக அரம்பித்தவள்தான், இன்னும் விசும்பி கொண்டிருக்கிறாள். அவள் தலையில் முத்தமிட்டு முடித்தவன், நெற்றி, கண்கள், கண்ணம், மூக்கு தடம் பிடித்து முத்தமிட்டு, கொஞ்சம் விலகி, அவள் கண்ணோடு கண் நோக்க, கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்தவள், அவன் உதடுகளை கவ்வி சுவைத்தாள்.

"உன்ன ரொம்ப மிஸ் பண்னேன் பாப்பா!!" மூச்சில்லா முத்தத்தின் முடிவில் அவனைப் பார்த்துக் கூறியவள்

"ஐ லவ் யூ, சோ மச்!!" அவன் கழுத்தில் முகம் புதைத்து, மீண்டும் இறுக்கிக் கொண்டாள். எப்போதும் உணர்ச்சிவசப்படும் மணி, அவள் தன்னை எவ்வளவு தூரம் மிஸ் பண்ணி இருக்கிறாள் என்பதை உணர்ந்து, அவளை காட்டிலும் இன்னும் இறுக்கமாக இறுக்கி அணைத்துக் கொண்டான். ஆனால் அவன் அறியாதது, அவளின் அணைப்பு எல்லாம், அடுத்தடுத்து அவன் வாழ்க்கையில் வரப்போகும் சூறாவளியை, எதிர்கொள்ள அவனை தயார்படுத்தும் அணைப்பு என்று.

***************

தன் மருத்துவப் படிப்பை முடித்து விட்டால், தன்னை மட்டுமல்ல, மணியும் தன்னால் பார்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை மதுவிற்கு இருந்தாலும், அவனோடு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டு எந்த மூலையில் வாழ்ந்தாலும், மணியின் குடும்பத்திரக்கு இருக்கும் செல்வாக்கிற்கு, சிலநாட்களில் தங்களை கண்டுபிடிப்பது எளிது என்பதை, அவள் அறிந்திருந்தாள். அவன் தன்பக்கம் இருந்தாலும், அவன் குடும்பத்தில் இருந்து பிரிப்பது முடியாத காரியம், அது தனக்கும், மணிக்கும் துன்பத்தையே தரும் என்று உணர்ந்து, அவனே தன்னை வெறுக்க வைப்பதுதான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்து, அதற்கான திட்டங்களை வகுத்தாள். முதலில், தன் காதல் கைகூடாது என்று உணர்ந்து அழுது தீர்த்தவள், பின் விரக்தியில் அதன் காரணமாகவே கோபமானாள். தன் அழுகையையும், கோபத்தையும், மணியிடம் காட்டினால் வெறுக்க ஆரம்பிப்பான் என்று அவள் செயல்பட, அவள் எதிர்பார்ப்புக்கு மாறாக, திரும்பத் திரும்ப தன்னையே நாடி வரும் மணியை, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த இருந்தாள், மது.

அந்த தவிப்பை, தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கினான் மணி, டெல்லி ஏர்போர்ட்டில். மது எத்தனையோ முறை கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி, கேட்க துடித்த, ஏக்கப்பட்ட வார்த்தைகளை, அவன் சொல்ல முடிவு எடுத்த சமயத்தில், மணி என்ன சொல்லப் போகிறான் என்று உணர்ந்ததும், கலவரமான அவள், என்ன செய்வதென்று தெரியாமல்தான், தன்முன் முழங்காலிட்டு, தன்னிடம் அந்த வார்த்தைகளை சொல்ல முற்பட்டபோது பொது இடமென்றும் பாராமல் அடித்துவிட்டு, அங்கிருந்து ஓடினாள். எவ்வளவு கட்டுப்படுத்த முயன்றும் கண்களிலிருந்து, சாரை சாரையாய் கண்ணீர் வந்து கொண்டிருக்க, உள்ளுக்குள்ளே கதறி அழுது கொண்ட, வாயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தவள், பின் மனது கேட்காமல், கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, ஸ்டார் பக்ஸ்ஸை நோக்கி, திரும்பி நடந்தாள். மூன்று நிமிடங்கள் கூட இருக்காது, எந்த இடத்தில் வைத்து ஐ லவ் யூ என்று சொல்ல வந்தவனை அடித்தாளோ, அந்த இடத்தில் அவன் இல்லை.

சுற்று முற்றும் தேடிப் பார்த்தவள், அவன் காணக் கிடைக்காமல், திரும்ப வந்தவள் டேபிளில் இருந்த வெற்றிக் கோப்பயையும், பரிசு காசோலையையும் பார்த்தவள், அதை எடுத்து முகத்தில் வைத்துக் கொண்டு அழுதாள். சற்று நேரத்துக்கு முன், முழங்கால்களில் நின்று "ஐ லவ் யூ!!" என்று சொல்ல வந்தவனை அடித்துவிட்டுப் போனவள், திரும்ப வந்து அவன் விட்டுச் சென்ற பொருட்களை எடுத்து, முகத்தில் வைத்து கொண்டு பரிதாபமாக அழுதவாறு இருந்தவளை, வினோதமாக பார்த்தது, அந்த காபி ஷாப்பபும், அதிலிருந்த மனிதர்களும். செத்துவிடலாம் என்று ஒரு நொடி கூட யோசிக்காதவள், அப்படி யோசித்த முதல் தருணம் அது. அந்த வெற்றி கோப்பையையும் காசோலையையும் பார்த்தபடி தனது அறையில், அழுது கொண்டிருந்தாள், வாழக்கை இரக்கமில்லாமல் அவர்களது வாழ்க்கையில் விளையாடிய விளையாட்டை எண்ணி.

***************

அவனுடன் சேர்ந்து வாழ்வது முடியாது என்று உணர்ந்து கொண்ட பின், அவனை நினைத்து கொண்டே தன் வாழ்வினை வாழ்ந்து விட வேண்டும் என்று முடிவு செய்தாள். அந்த முடிவில் மதுவுக்கு இருந்த ஒரே பயம், அதை எப்படி மணியை உருக்குலைக்காமல் செய்வது என்பது மட்டும்தான். டெல்லி நிகழ்வதற்கு முன்வரை, அதை ஓரளவு வெற்றிகரமாக செயல்படுத்துக் கொண்டிருந்தாள் (அல்லது அப்படி நினைத்துக் கொண்டிருந்தாள்) என்றே சொல்ல வேண்டும்.

மணியை விட்டு தான் விலகினால், அவனது கவனம் முழுவதும் டென்னிஸ் பக்கமே செல்லும் என்று அவள் நினைத்தது போலவே நடந்தது. ஆனால், அவன் அப்படி கவனம் செலுத்தியதே, அவளது கவனத்தை ஈர்க்கத்தான், அவள் தன்னிடம் இருந்து விலகாமல் இருக்க தான் என்று தெரிந்ததும், அவன் தன்மீது கொண்ட காதலுக்காக இன்பம் கொள்வதா? இல்லை தங்கள் காதல் கை கூடாது என்று நினைத்து துன்பப்படுவதா? என்று தெரியாமல் உழன்று நின்றாள்.

ஒன்றில் மட்டும் தெளிவாக இருந்தால் மது, என்றுமே தனக்குத் தெரிந்த உண்மை அவனுக்கு தெரியக்கூடாது என்பதில். அவனை, விலகி நின்று வாட்டி, வதைத்த போதெல்லாம், அதை அவன் அமைதியாக ஏற்றுக்கொண்டு, திரும்பத், திரும்ப தன்னிடமே வந்ததிலிருந்து உணர்ந்து கொண்டாள், அவனை காயப்படுத்தாமல், அவனிடம் இருந்து விலகுவது என்பது இயலாத காரியம். ஒருபோதும் அவன் தன்னை வெறுக்கப் போவதில்லை என்று அவள் முடிவுசெய்ய, அப்படி ஒரு தருணத்தை அவள் திட்டமிடயமலே அவளுக்கு தந்தது அந்த டெல்லி நிகழ்வு

தன்னிடம் முதல் முறையாக "ஐ லவ் யு!!” என்று சொல்ல வந்தவனை அடித்துவிட்டு, துன்பத்தில் உழன்று கொண்டிருந்தவளுக்கு, அந்த யோசனை வந்தது. அதை செயல்படுத்த திட்டமிட்டு தன் வீட்டிற்கு வரவழைத்தாள், திட்டமிட்டபடியே அவன் தன்னை வெறுத்தாலும், அவன் தாலிகட்டியதும், பின், மிருகமாக நடந்துகொண்டதும், அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோபப்படுவான் அல்லது அழுதுவிடுவான் என்று நினைத்தே “fuck toy” என்ற வார்த்தை அவள் உபயோகப்படுத்த, அவனோ மிருகமாக நடந்துகொள்ள, துணுக்குற்றவள், உண்மையிலேயே பயந்து போனாள். அவனை எந்த நிலையில் வெளியே விட்டால், முட்டாள்தானமாக ஏதாவது செய்து கொள்வானோ என்று நினைத்ததும், அவனை விலக்குவது இப்போதைக்கு வேண்டாம், அதை தள்ளிப் போடலாம், தற்போது அவனை அணைத்து ஆறுதல் படுத்தினால் போதும் என்று நினைத்து, அவனை ஆறுதல் படுத்த முயல, அவள் எதிர்பாராத விதமாக வெளியேறினான்.

தன் கெஞ்சலை, அழுகையை கண்டுகொள்ளாமல் வெளியேறும் அவனையையே வெறித்துப் பார்த்தவள், அவசர அவசரமாக உடை அணிந்து கொண்டு வெளியே வர, அவன் ஏற்கனவே சென்று விட்டிருந்தான். அவன் அலைபேசிக்கு அழைக்க, அது அனைத்து வைக்க பட்டிருந்தது, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தவள், நேராக நேத்ராவிடம் சென்றாள்.

**************

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென்று அலங்கோலமாய் வந்து நின்றதும் மதுவை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் நேத்ரா. என்ன? ஏது? என்று கேட்பதற்குள், தன்னை விலக்கிக் கொண்டு, அறைக்குள் சென்றவளின் பின்னால் சென்றவள், கட்டிலில் குப்புறப்படுத்து அழுது கொண்டிருப்பவளை, அதிர்ச்சி விலகாமல் பார்த்த நேத்ரா, பின் சுயஉணர்வு கொண்டு, மதுவின் அருகில் சென்று அமர்ந்து, தோளில் கை வைத்து

"என்னாச்சு?" என்று கேட்டவளிடம், தான் பேசவில்லை விரும்பவில்லை என்பதைப் போல, இடதும் வலதுமாக தலையாட்டி, பின் தலையணையில் முகம் புதைத்து அழுதால் மது.

மணி பிரியவேண்டும் என்று மது எடுத்த முடிவில் கொஞ்சமும் உடன்பாடு இல்லாத நேத்ராவால், தன் தோழி படும் துயரைக் கண்டு தாணும் துவண்டு போனாள். தான் பார்த்து, பார்த்து வளர்த்த, ரசித்த, இதே போல் தனக்கும் வேண்டும் என்று ஏகப்பட்ட, காதலை காப்பாற்ற முடியாமலும், தன் தோழியின் துயரை துடைக்க வழி தெரியாமலும், கையறு நிலையில்தான் தவித்து நின்றாள். நெதராவிற்கு இருந்த ஒரே நம்பிக்கை, என்ன நடந்தாலும் மணி, தன் தோழியை விட்டு ஒருபோதும் விலக மாட்டான் என்பதுதான். காலம் அவள் காயத்தை ஆற்றியவுடன், அவர்களை சேர்த்து வைக்க தன்னால் முடியும் என்றே நம்பினாள், காலம் அவர்களது வாழ்வில் போடப்போகும் அலங்கோலம் தெரியாமல்.

************

"வேண்டாம் ப்ளீஸ்!!" என்று கெஞ்சியவாறு, நேத்ராவின் கையில் இருந்த மொபைலை பறிக்க முயன்று கொண்டிருந்த மதுவை, கண்டுகொள்ளாமல் மணிக்கு அழைத்தால்.

நேற்றிலிருந்து அழுது கொண்டிருந்தவள், மதுவின் கழுத்தில் கண்டறிப்போய் இருந்தா காயத்தைக்காட்டி, நேத்ரா துருவித் துருவிக் கேட்க, வேறு வழியில்லாமல், முந்தைய நாள் நிகழ்வினை மொத்தமாக கொட்டிவிட்டாள் மது. மதுவின் நிலையை உணர்ந்த நெதராவால், மணி, மதுவிடம் மிருகமாக நடந்து கொண்டதை, கொஞ்சமும் ஜீரணிக்க முடியாமல், மணியின் மீது கொலை வெறியில் இருந்தாள். மணி அழைப்பை எடுத்ததும் பொரிந்து தள்ள, நேத்ரா பேச்சில் கவனம் செலுத்திய சமயத்தை பயன்படுத்திக்கொண்டு, மொபைல்லை எட்டி பிடுங்கி, அழைப்பை துண்டித்தால் மது. மதுவின் செயலால் மேலும் கோபமுற்ற நேத்ரா, அவளை முறைக்க

"ஏற்கனவே அவன ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன், நேத்ரா!!" பரிதாபமாக சொன்ன மதுவை மேலும் பரிதாபமாக பார்த்தாள் நேத்ரா.

"உங்க ரெண்டு பேரையும் எப்படி பார்க்கிறதுக்கு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!! அவன்ட பேசலாம் மது!!" சோர்வாய் அமர்ந்திருந்த மதுவின் கன்னத்தை வருடினாள்.

"விதி எங்களுக்கு அவ்வளவுதான் எழுதி வச்சிருக்கு!!" விரக்தியாக சிரித்த மதுவை, எப்படி தேற்றுவது என்று தெரியாமல், நேத்ராவும் விரக்தியானாள்.

******************

"அவன் இல்லாமல் என்னால் வாழ முடியுமா?"

"உன் தாயின் முகத்தையும், அவன் அப்பாவின் முகத்தையும் பார்த்துக்கொண்டு, உன்னால் வாழ முடியுமா?"

"நீ இல்லாம அவன் துடித்து போவான்?"

"மணியோட அப்பா என்ன கேட்டார்னு ஞாபகம் இருக்கா?"

"அவன் ரொம்ப கஷ்டப்படுவான்?"

"அவன் கூட, அவன் வீட்டில் வாழ்வது, அதை விட கஷ்டம்!!"

"எங்காவது ஓடிப்போய் கல்யாணம் பண்ணிட்டு, ஏதாவது ஒரு மூலையில் நிம்மதியாக வாழலாம்!!"

"அவனும் என்ன ஒன்னும் இல்லாதவனா? அவங்களுக்கு இருக்கிற செல்வாக்குக்கு, ரெண்டு நாள்ல, நீங்க இந்தியாவில், எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவாங்க!!"

"அப்போ உண்மையிலேயே பிரிஞ்சு தான் ஆகனுமா? இனிமே அவன கொஞ்சவே முடியாதா? மிரட்டி, உருட்டி, அவன காதலிக்கிறதுக்கு வாய்ப்பே இல்லையா? அவன் இல்லாம உயிரோடு வாழத்தான் வேண்டுமா? ஐயோ!!" என்று அலறி துடித்த மனதுடன், சேர்ந்து அவளும் துடித்தாள்.

பிரதீப்பின் மூலம் அடுத்தடுத்த நாட்களில் மணியின் செயல்பாடுகளை அறிந்துகொண்டவள், தான் விருப்பபட்டது போலவே, அவனது செயல்பாடுகளும் இருக்க, முதல்முறையாக எங்கே திட்டமிட்டபடி தன்னிடம் இருந்து மொத்தமாக விலகி விடுவானோ என்று தோன்றியதும், மது பட்ட துன்பம் சொல்லி மாளாது. பிரிவது தான் இந்த பிரச்சனக்கான ஒரே தீர்வு என்று முடிவு செய்து தன் மீதி வாழ்க்கை வாழ்வதற்கான உயிர் மூச்சாய் அவனது நினைவுகளை அள்ளி சேர்க்க ஆரம்பித்தாள். அந்த நினைவுகளுடனே வாழவும் ஆரம்பித்தாள்.

****************

உயிர்கொல்லும் துன்பத்திலிருந்து, அதிசயங்களை தவிர, வேறு எதாலும் மனிதனை மீட்டெடுக்க முடியாது அப்படி மதுவின் வாழ்வில் நடந்த அதிசயம்தான் ரஞ்சித். வாழ்வில் எத்துணை பெரிய துன்பம் வந்தாலும், வாழந்தாக வேண்டும் அல்லவா. அனைவருமே முதுகலை மாணவர்கள் என்பதாலும், பலர் வேலை பார்த்துவிட்டு,, சிலவருடம் முயன்று நுழைவு தேர்வில் வென்று சேர்ந்திருந்ததாலும், இளங்கலை போல நடப்பு பாராட்ட பழக்கம் முதுகலை படிப்பில் இல்லை. அதுவே பெரும் ஆறுதலாக இருந்தது மதுவிற்கு. உள்ளுக்குள் உயிர்க் கொல்லும் துன்பம் இருந்தாலும், வேறு வழி இல்லாமல், படிப்பில் கூட்டாக சில காரியங்கள் செய்ய வேண்டியிருக்கும் என்பதால் மட்டுமே, அந்த தெலுங்கு பெண்களிடம் பழகினாள் மது, அதுவும் போக, அவர்கள் மூவரை தவிர்த்து அனைவரும் வட இந்தியர்கள், அவர்களது துறையில். மணியின் நடவடிக்கைகளை பிரதீப்பின் மூலம் அவ்வப்போது பேசி அறிந்து கொண்டாள். எப்பொழுதும் போல பிரதீப்புடன் தொலைபேசி பேசிக் கொண்டிருந்தவள், போனை வைத்துவிட்டு திரும்ப

"நீங்க தமிழா?" அச்சுப் பிறழாமல் தமிழில் கேட்ட ரஞ்சித்தை, அதிசயமாக பார்த்தாள் மது.

ஆறடிக்கு சற்று கூடுதலாக உயரம் கொண்ட, முகத்தையும் முழுவதும் மூடி மறைக்கும் தாடியுடன், தலையிலுள்ள கொண்டையை, துணி வைத்து கட்டிய, ஒரு சீக்கிய இளைஞன், சுத்த தமிழில் பேசுவது, யாருக்குத்தான் அதிசயமாக இருக்காது. அவளுடன் படிக்கும் பையன்தான், இரண்டு வாரங்கள் கழித்தே, தாமதமாக வந்து கல்லூரியில் சேர்ந்தவன். எப்பொழுதும் எல்லோருடனும், கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பவன். மதுவிடம் கூட இரண்டொரு முறை பேச முயன்ற போது, ஒதுங்கியவளை, அதன்பின் தொந்தரவு செய்யாமல் இருந்தவன், திடீரென்று சுத்த தமிழில் பேச, திறந்த வாயைத் மூடவில்லை மது.

"நீங்க தமிழ் தானே?" பேசாமல் சிலையென இருந்த மதுவின் முகத்துக்கு முன்னால் கைகளை ஆட்டிய ரஞ்சித், திரும்பவும் கேட்க, கண்களை மூடி திறந்தவள், ஆமோதிப்பாக தலையாட்டினாள்.

"இல்ல!! எப்பவுமே நீங்க, அந்த இரண்டு தொலுங்கு பொண்ணுங்களோட தான் பேசிகிட்டு இருப்பிங்க, அதனால நீங்க ஆந்திரானு நினைச்சேன்!!" சரளமான தமிழில் பேசியவனை பார்த்தவாறே, தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு இருந்தாள் மது.

"தேங்க்ஸ் காட்!! அட்லீஸ்ட் ஒருத்தராவது கிடைச்சிங்களே, தமிழ்ல பேச!! என்ன கட்டிப் போட்ட மாதிரி இருந்தது!! தான் பதில் ஏதும் பேசாமல் இருந்த போதும், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த ரஞ்சித்தை அதிசயமாக பார்த்தாள் மது. கிட்டத்தட்ட அவளும் அதே எண்ணத்தில் தான் இருந்தாள். அவர்களது துறையில் அவள் மட்டுமே தமிழ், தாய்மொழி தெலுங்கு என்றாலும், அது சுத்தமாக வாராது மதுவுக்கு. அவளும் வேறு வழி இல்லாமல், தனக்கு தெரிந்த ஓட்டை தெலுங்கில் தன் தூரயில் இருந்தா இரண்டு தெலுங்கு பெண்களிடம் பேசிக்கொண்டிருந்தாள், இதுநாள் வரை.

"ஹாய்!! அம் ரஞ்சித்!!, லெட்ஸ் பீ ஃப்ரெண்ட்ஸ்!!, கால் மீ ரஞ்சூ!!" கைகொடுத்தவனிடம், தன்னை அறியாமல் கைகொடுத்தாள், மது.

5 நிமிடம் கழித்து அவர்களது காலேஜ் கேண்டீனில்

"மூன்றாவது தலைமுறை சென்னை பஞ்சாபி ஃபேமிலி எங்களோடது!!, அம்மா மெட்ராஸ் யுனிவர்சிட்டில தமிழ் ப்ரொபசர்!!, பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தான்!!" தன் வரலாறை சொல்லிக் கொண்டிருந்த ரஞ்சித்தை, இன்னும் அதிர்ச்சி விலகாமல், பார்த்துக் கொண்டிருந்தாள் மது. இப்படித்தான் ஆரம்பித்தது அவர்களுக்குள்ளான நட்பு.
[+] 6 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 02-12-2020, 08:30 PM



Users browsing this thread: 3 Guest(s)