அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
டிஸ்கி 

நிகழ்காலம் 


"இது நான் இல்லை, நான் இப்படியே ரெம்ப நாள் இருக்க போவதும் இல்லை!! எல்லாம் மாறும் என்ற ஒரு சின்ன நம்பிக்கையை பற்றிக்கொண்டே, எனது வாழ்க்கையின் இந்த இருண்ட காலத்தை கடத்திக் கொண்டு இருக்கிறேன்!!. இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு பயம், இப்படியே இருந்து விடுவேனோ? என் வாழ்வில் அஸ்தமித்த சூரியன், மீண்டும் உதிக்காதோ என்று, சில் நொடிகள் வரும் நினைப்பு கொடுக்கும் பயம் அது!!” பலமான இடி சத்தத்தில், நிஜ உலகத்துக்கு வந்த மணி அப்படியே எழுந்து பால்கனிக்கு சென்றான். கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது மழை. அந்த மழையில் நனைய வேண்டும் என்று தோன்ற, அறையிலிருந்து வெளியேறியவன், மாடிக்கு சென்றான், கொட்டும் மழையில் நனைந்து கொண்டிருந்தவனுக்கு, தன் மனதைப் போலவே வானமும் கலங்கி இருப்பதாக ஒரு மாயை. ஒன்றரை மாதத்துக்கு பின், ஏனோ திடீரென்று அவனுக்கு மதுவின் நினைவு. அவளை நினைக்க கூட தனக்கு தகுதியில்லை என்று அவன் உணர்ந்து இருந்தாலும், ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்தது அவளுடன் இணைந்து விட மாட்டோம் என்று எங்கும் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை அவனால். கொட்டும் மழையிலும் "இதுவரை உனக்கு நடந்ததெல்லாம் கனவு!!" என்று வானத்திலிருந்து ஒரு தேவதை இறங்கி வந்து ஆறுதல்படுத்த மாட்டாளா? என்று நினைக்கையில், கண்ணிமையின் கட்டுக்குள் அடங்காமல் வந்த கண்ணீர் கலந்தது மழைத்தண்ணீருடன்.

*****************

மணி கோயம்புத்தூரில் மழையில் நனைந்து கொண்டிருந்த அதே சமயம்,

"கண்டிப்பா, எல்லாம் நல்லபடியா, நடக்குமா?" மொபைல் இணைப்பில் இருந்த "ரஞ்சூ" என்னும் ரஞ்சித்திடம் கேட்டுக்கொண்டிருந்தாள் மது.

"கண்டிப்பா, எல்லாம் நல்லபடியா நடக்கும்!!, தேவையில்லாம கவலைப்படாதே!!, டைம் ரெண்டு ஆச்சு!!, என்ன தூங்க விடு!!, நாளைக்கு லேப் போகணும்!!" தலையிலடித்துக் கொண்டவன், அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

"ஒன்னும் ப்ராப்ளம் ஆகாது இல்லை?" அவள் விடுவதாக இல்லை.

"என்ன ப்ராப்ளம் ஆகும்?, அக்கவுண்ட்ல காசு டெபாசிட் ஆனதும், அவனைக் கூப்பிட்டுட்டு நெதர்லாந்து போயிடு!!, அங்க போனதும் மொதல்ல, கல்யாணம் பன்னிக்கோ!! அப்புறம் ஸ்பின்லே போய் காலேஜ் ஜாயின் பண்ணு!!, சந்தோஷமாக இரு!! இப்ப என்ன தூங்க விடு!!" புலம்பிக் கொண்டிருந்தான் ரஞ்சித்.

"தூங்கி தொல!!" என்றவள், அழைப்பை துண்டித்து விட்டு, தொடு திரையில், அவளது மடியில் படுத்திருந்த மணியின் உருவத்தை தடவியவாறு,

"சாரி டா பாப்பா!! ரெம்ப கஷ்டப்படுத்தகிட்டேனா?" என்றவள், அவன் நிழல் படத்துக்கு முத்தமிட்ட அவளின் கண்கள் கலங்கியிருந்தது, அதற்கு மாறாக அவளது முகமோ செம்மை பூசி இருந்தது.

***************

மணி மதுவை நிணைத்து மழையில் நின்றிருக்க!!, மது, மணியின் புகைப்படத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்த அதே நொடி!!, இங்கேயே கோயம்புத்தூரில், அறையை விட்டு வெளியே வந்த சிவகுரு, யாருக்கோ அழைத்துக் கொண்டிருந்தான் தொலைபேசியில். அழைப்பு எடுக்கப்பட

"சொல்லுங்க ஜி!!" கனமான வடக்கத்திய வாடை வார்த்தைகளில், அதைக்காட்டிலும் தூக்கம் அப்பியிருந்தது அதில்.

"சேட், 5% இல்ல, 10% அதிகமாக கேட்டாலும் பார்ட்டி கிட்ட ஓகே சொல்லு, டீல் இந்த வாரமே முடிஞ்சாகாணும்!!" அர்த்தராத்திரியில் ஒருத்தனை எழுப்பி இருக்கிறோம் என்ற எந்த குற்றவுணர்வும் இல்லாமல், தான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து வட்டான் சிவகுரு. வன்மமே முகமாய் மாறியிருக்க, "நான் பொட்டையா?" மனதிற்குள் கர்ஜித்தான். "சாவடிக்கிறன் ரெண்டு பேரையும், ஆனா சாவுக்கு முன்னாடி, சாவைவிட படுமோசமாக ஒரு தண்டனை கொடுக்கிறேன்!!. அப்புறம் சாவடிக்கிறன், நான் சாவடிக்கிறது கூட, அந்த தண்டனையிலிருந்து விடுதலைனு தான் தொணனும் அவங்களுக்கு!!, நான் பொட்டையா?” எரிமாலையாய் குமிறிக் கொண்டிருந்தான்.

******************
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 19-11-2020, 09:34 PM



Users browsing this thread: 7 Guest(s)