அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 46

மறுநாள், ரெசிடென்சி ஹோட்டல் பாரில்.

தலையைக் கவிழ்த்தால் காலைப் பிடித்து தலைகீழாக யாரோ வாரிவிடுவது போலும், நிமிர்ந்து அமர்ந்தால், தலையை பிடித்து மல்லார்ந்து கீழேவிழுவது போலும் இருக்க, இரண்டுக்கும் நடுவே என்னை சமாளித்து நிலைநிறுத்தி, ஒரு பெண்டுலம் போல ஆடிக் கொண்டிருந்தேன் போதையில். போதையில் உடல் தளர்ந்திருந்தாலும், உள்ளம் விழிப்பாகவே இருந்தது. என் தோளில் யாரோ கை வைத்ததை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான், என்னை முறைத்துக் கொண்டிருந்தான் பிரதீப்.

"ஹாய்ய்ய்ய்!!, வா!! வா!! வா!! உக்காரு!!" அருகே இருந்த இடத்தைக் தட்டி, அவனை அமரச் சொன்னேன்.

"உன் மொபைல் என்னடா ஆச்சு?” நான் சொன்னதை அவன் கண்டுகொள்ளவில்லை,

"தெரியலையே!!” உதட்டைப் பிதுக்கினேன், ஒரு நீண்ட யோசனைக்குப் பின். என் அருகில் அமர்ந்தான்.

"காலையிலிருந்து, ஊரெல்லாம் உன்னை தேடிட்டு இருக்கேன் டா!!” என்றவனை நிமிர்ந்து பார்த்து

"ஊரெல்லாம் எதுக்கு தேடுன?, ஸ்ட்ரைட்டா இங்க வந்திருக்க வேண்டியதுதான!!” நான் சொல்ல சிரித்தான். உளறுகிறேன் என்று தெரிந்தாலும், வார்த்தைகளை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

"ஆமா!! நீ எதுக்கு என்ன தேடுன?” நான் கேட்க, கண்களை மூடி பெருமூச்சு விட்டான்.

"சொல்றேன்!!, முதல்ல இங்கிருந்து கிளம்பலாம்!!” என்றவன் எழுந்து, என் கையை பிடிக்க நான் முடியாது என்று தலையாட்டினேன்.

"இப்பதான் வந்த, குடிக்கலாம்!! இன்னைக்கு என்னோட ட்ரீட்!!” என்ன நினைத்தானோ, மீண்டும் என் அருகிலேயே அமர்ந்தான். அப்பொழுது, நான் ஏற்கனவே ஆர்டர் செய்திருந்த விஸ்கி வந்தது.

"எப்ப இருந்து இவன் குடிச்சுக்கிட்டு இருக்கான்?” விஸ்கியை டேபிளில் வைத்தவரிடம் கேட்டான் பிரதீப்

"காலையிலே வந்துட்டார் சார்!!” அவரின் பதிலில் பெருமூச்சு விட்டவன், திரும்பி என்னை பார்த்தான்

"ஆமா, பிரதீப்!! கடை திறக்கும் போதே வந்துட்டேன்!!, ஃபர்ஸ்ட் நான் தான் வந்தேன்!! இல்ல அண்ணா!! என்றேன் இருவரையும் பார்த்து பெருமையாக. தலையில் அடித்துக் கொண்டான் பிரதீப்.

"டேய் மணி இரண்டாகுது டா!!, போதும்!! போலாம்!!” என் கையை பிடித்து இழுத்த அவனிடம் இருந்து, என் கைகளை உதறிக் கொண்டு

"போலாம்!!, முதல்ல சொல்லு எதுக்கு என்ன தேடின?” மதுதான் தேடச் சொன்னாள் என்று அவன் சொல்லமாட்டானா என்று ஒரு நப்பாசை.

"உங்க அம்மா, உனக்கு கால் பண்ணிருக்காங்க, ரீச் பண்ண முடியலன்னு பானுக்கு அடிச்சிருக்காங்க!! அவ எனக்கு அடிச்சா!! போதுமா!! போலாம் டா!!” என்றவன் எழுந்து கொள்ள, அம்மாதான் தேடியிருக்கிறாள் என்று அவன் சொன்னது, எனக்கு பெரும் வருத்தத்தை கொடுக்க, எழுந்து நின்றேன், தள்ளாடிய என்னை அவன் தாங்கிக் கொள்ள, அவனது உதவியுடன் பாரில் வெளியேறினோம். லிஃப்டில் ஏறியதும், நான் நான்காவது தளத்துக்கான பட்டனை அழுத்த,

"எதுக்குடா போர்த் ப்ளோர்?” என்னை எரிச்சலாக பார்த்தான்

"அங்க, ஒரு வீடு வாங்கிருக்கேன்!!” மீண்டும் தலையில் அடித்துக் கொண்டான்.

நாலாவது தளத்தை அடைந்தவுடன், எந்த ரூம் என்று கேட்டவனிடம், கையில் இருந்தா கார்டை எடுத்துக் கொடுக்க, என்னை இழுத்துக் கொண்டு அறைக்கு வந்தான்.

"என் நேத்ரா டார்லிங்க, உஷார் பண்ணிட்டியா?” அறையில் நுழைந்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்ததும் நான் கேட்க

".....................” அங்கிருந்த சேர்ரில் அமர்ந்தவன், அமைதியாய் என்னை பார்த்தான்

"இன்னும் இல்லையா?” மீண்டும் நான் கேட்க

".....................” சிரித்தான்

"பிரதீப் நீ என் பிரண்டு தான?” உளறினேன்.

".....................” எதுவும் பேசாமல் கைகளைக் கட்டிக்கொண்டு என்னைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

"இங்க பாரு ஒழுங்கா பதில் சொல்லு!!, இல்ல, என்ன திருப்பி கொண்டுபோய் பார்ல விடு!!” தள்ளாடி எழுந்து நின்றேன். என் தோள்களைப் பற்றி அமரவைத்தவன்.

"எப்பா!!.... நான் உன் பிரண்டு தான் டா" சலித்துக் கொண்டவனைப் பார்த்து சிரித்தேன்.

"என் ஃப்ரெண்டு உன்ன, நான் மச்சான்னு கூப்பிட்டா?”

"கூப்பிட்டுக்கோ!!” என் அருகிலேயே அமர்ந்தான்.

"இல்ல!! இல்ல!!” குவித்து வைத்த என் உதடுகளில், விரலால் தட்டியவாரே யோசித்தேன்

"நீ, என் நேத்ரா டார்லிங் ஹஸ்பன்ட் ஆக போற!! அதனால, உன்னை நான் மாமானு தான் கூப்பிடுவேன்!! ஓகேவா?” பெரிதாக சிரித்தாவறு கேட்டேன்.

"கூப்பிட்டுக்கோ!! கூப்பிட்டுக்கோ!!” அவனும் சிரித்தான்

"என் டார்லிங்க, நீ நல்லா பாத்துக்கணும்!!” ஒரு விரல் காட்டி, அவனை எச்சரித்தேன்.

"என்னடா ஆச்சு உனக்கு!!” சிரித்தவாறே கேட்டான்.

"ஒன்னு இல்ல மச்சான்!!, சாரி...... மாமா!! I am cool!!" தோளை உலுக்கினேன்.

அப்பொழுது அவன் மொபைலுக்கு அழைப்பு வந்தது. எழுந்தவன், நடந்தவாரே, அழைப்பை எடுத்து, மொபைலை காதுக்கு கொடுத்தான்

"சொல்லுங்க பிரதர்!!” அவன் பேச ஆரம்பிக்க, நான் அப்படியே சோபாவில் தலை சாய்ந்தேன்.

".....................”

"ம்ம்!!, இப்ப எங்க கூடத்தான் இருக்கான்!!”

"என்னைப் பற்றி, இவன் பேசும், அந்த பிரதமர்.. ச்சீ.... அந்த பிரதர் யார்?” என்ற எண்ணத்தோடு பிரதிப்பை பார்த்தேன்.

"அதெல்லாம் நல்லாத்தான் இருக்கான்!! நல்லா குடிச்சிருக்கான்!!”

"ஆமா ஆமா நிறைய குடிச்சேன்!!"

"இல்ல!! வேணாம்!! அவன் பேசுற நிலைமைல இல்லை!!”

"வாழ்ற நிலைமையிலேயே இல்லை!!”

"அவ எப்படி இருக்கிற?, கண்முழிச்சா எனக்கு கால் பண்ண சொல்லுங்க!!” என்று பிரதீப் சொன்னதும், நிறை போதையிலும், அவன் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறான் என்பது எனக்கு தெளிவாக விளங்கியது. "கண்ணு முழிச்சதும் கூப்பிடுங்க!!” அப்படின்னா? என்று யோசிக்க சட்டென்று, எனக்கு போதை குறைந்தது போல ஓர் உணர்வு, எழுந்து சென்று பிரதிப்பிடம் இருந்து போனை பிடுங்கி

"மதுவுக்கு என்னாச்சு?” பதறினேன்

"ஒன்னுமில்ல!! ஒன்னுமில்ல!!” நேற்று இரவு கெட்ட அதே குரல்.

"ப்ளீஸ் ரஞ்சூ!! மதுக்கு என்ன ஆச்சு?” கெஞ்சினேன், ஏன் அவனை ரஞ்சூ என்று அழைத்தேன் என்று, எனக்கு சுத்தமாக தெரியவில்லை

"ஒன்னும் இல்ல!!, சின்ன அடி, நேத்து மாடியிலிருந்து கீழே இறங்கும்போது ஸ்டெப்ஸ ஸ்லிப் ஆயிட்டா!!” அவன் சொல்ல சொல்ல என் போதை இறங்கியது.

"ப்ளீஸ்!! ப்ளீஸ்!! ப்ளீஸ்!! மதுகிட்ட குடுங்க!! நான் தப்பா எதுவும் பேச மாட்டேன்!! ப்ளீஸ்!! ப்ளீஸ்!! ப்ளீஸ்!!” மீண்டும் கெஞ்சினேன்.

"ப்ரோ, வலிக்கு தெரியாம இருக்க செடேட் போட்டிருக்காங்க!!, தூங்கிட்டு இருக்கா!! எழுந்ததும் நானே கால் பண்றேன்!!” அவன் சொல்ல,

"ப்ளீஸ்!! வீடியோ கால் பண்ணுங்க!! நான் ஒரே ஒரு டைம் பாத்துக்குறேன்!!” மதுவுக்கு என்ன ஆனதோ என்று பரிதவித்தேன்.

"ப்ரோ!! விசிட்டிங் டைம் முடிஞ்சிடுச்சு!! நானே வெளியேதான் இருக்கேன்!!” என்னை நானே நொந்து கொண்டு அமைதியானேன்.

"ப்ரோ, நான் ஒன்னு சொன்னா கேட்பிங்களா?” நான் அமைதியாய் இருக்க, அவனே ஆரம்பித்தான்.

"ப்ளீஸ்!! முட்டாள்தனமாகவும் பண்ணாதீங்க!! உங்களையும், அவளையும், நான் சேர்த்து வைக்கிறேன்!!” அவன் சொல்ல சிரித்தேன்,

"விட்டு கொடுக்கறீங்களா?” என்னையே நொந்து கொண்டேன்.

"நீங்க எப்படி வேணா நினைச்சுக்கோங்க!! ஆனா ப்ளீஸ், முட்டாள்தனமாக ஏதும் பண்ணிக்காதீங்க!!” அவன் சொல்ல, மொபைலை பிரதிபிடம் கொடுத்தேன், வாங்கி, ஏதோ பேசிவிட்டு வந்து, என் தோளைலில் கை வைத்தான்.

"பிரதீப்!! என்ன வீட்ல டிராப் பண்ணு பிளீஸ்!!” பரிதாபமாக நான் கேட்க, தலையசைத்தான்.

************

"பிரதீப்!! ஒரு ஹெல்ப் பண்றியா?” ஹோட்டலை விட்டு வெளியேறியதும் கேட்டேன், சொல்லு என்பது போல் பார்த்தான்.

"எனக்கு, ஒரு மொபைல் வாங்கணும்!! அப்படியே சிம்கார்டு, என் நம்பர்ல!! ப்ளீஸ்!!” மது அழைத்தால், பேசுவதற்கு மொபைல் தேவைப்படும். மீண்டும் சரி என்று தலையசைத்தான். ஏதோ ஒரு கடையின் முன்பு அவன் காரை நிறுத்த, எனது கிரெடிட் கார்டை எடுத்துக் கொடுத்தேன். 15 நிமிடத்தில் வந்தவன், மொபைல் என்னிடம் நீட்டினான்.

"இன்னும் நம்பர் ஆக்டிவேட் ஆகல, முப்பது நிமிஷத்துல அக்கிடுமனு சொன்னாங்க!!” சொன்னவன் என்னை வீட்டுக்கு அழைத்துச்சென்றான், மொபைலை பற்றிய கைய நெஞ்சில் வைத்துக்கொண்டு, கண்களை மூடினேன், உறங்கிப் போனேன்.

***********

மொபைலில் சத்தம் கேட்டு விழித்தேன், மது தான் அழைத்தாள். எடுத்துக் காதுக்கு கொடுத்ததும்

“ஃபைவ் மினிட்ஸ்ல திரும்ப கூப்பிடுறேன்!!” என்று சொல்லிவிட்டு, அவள் பதிலை எதிர்பார்க்காமல் வைத்தேன்.

மணியை பார்த்தேன், ஒன்பது என்று காட்டியது, நேற்றிலிருந்து சாப்பிடவில்லை என்பதால் நல்ல பசி, கிச்சனுக்கு அழைத்தேன், சாப்பாடு எடுத்து வரச் சொல்ல. ஏற்கனவே, அரைமணி நேரத்துக்கு முன்பே, எனது டேபிளில் வைத்துவிட்டதாக எனக்கு சொல்லப்பட, அப்பொழுதுதான் டேபிளில் இருந்த ஹாட்பாக்ஸை கவனித்தேன். ஜூஸ் மட்டும் சொல்லிவிட்டு, எழுந்து சென்று குளித்தேன். குளித்து முடித்து, சாப்பிட்டுவிட்டு, மொபைலில் எனக்கு தேவையான ஆப்களை எல்லாம் இன்ஸ்டால் செய்த பின்பு, மதுவுக்கு அழைத்தேன்.

"ஏன்டா இப்படி பண்ற!!" அழுகையுடன் தான் ஆரம்பித்தாள், தலையில் கட்டுடன் தொடுதிரையில் அவளைப் பார்த்ததும், அதுவரை வெறுமை மட்டுமே சூழ்ந்திருந்த மனதில் சின்னதாய் ஒரு வலி. அவள் அழுது கொண்டிருக்க, அவளது அழுகை நிற்க, நான் காத்துக்கொண்டிருந்தேன் எதுவும் பேசாமல்.

"மது, நான் பேசுறேன்!!” அழுது முடித்தவள், ஏதோ பேச முயல நான் கூறுக்கிட்டேன். சரி என்று தலையாட்டினாள்.

"கவலைப்படாத!!, கண்டிப்பா நான் தற்கொலை எல்லாம் பன்னிக்க மாட்டேன்!!” கசந்த சிரிப்புடன் கூறினேன்.

".....................” எதுவும் சொல்லாமல், என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எனக்கு புரியுது!!, it's just...... am mourning!!, இந்த.... நெருக்கமா இருந்தவங்க செத்துப்போயிட்டா, கொஞ்சநாள் வருத்தப்படுவோம்ல, அந்த மாதிரி!! செத்துப்போன என் காதலுக்காக!! கொஞ்சம் வருத்தப்பட்டு இருக்கேன்!!. கொஞ்ச நாள்ல சரியாயிடும், கவலைப்படாத!!” உணர்வே இல்லாமல் பேசினேன், என் மனதில் ஒரே ஒரு எண்ணம்தான், ஒருவன் விட்டுக் கொடுக்கும் அளவுக்கு என் மதுவை நானே தாழ்த்தக் கூடாது என்பதுதான்.

".....................” ஒரு கையால் முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதாள். என் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டேன்.

"மது!!” என்று அழைக்க, கண்களில் கண்ணீருடன் என்னை பார்த்தாள்

"நைட் கோபத்துல மொபைல்ல ஓடச்சுட்டேன்!!, பீல் பண்ணாத!!, இனிமே அப்படி பண்ண மாட்டேன்!!” நான் சொல்ல, கண்ணைத் துடைத்தவள்

"பா!.........” என்றவள், நிறுத்தி, ஒரு மூச்சு விட்டாள், என் உதடுகளில் ஒரு கசந்த சிரிப்பு.

“You are an early bloomer!!................” மீண்டும் உதடுகளை கடித்துக்கொண்டு நிறுத்தினாள். வந்த அழுகையை அடக்கிக்கொண்டேன்.

"உனக்கு டென்னிஸ்ல ரொம்ப பெரிய பியூச்சர் இருக்கு!!. தயவுசெய்து அதுல கான்சன்ட்ரேட் பண்ணு!!. அதேமாதிரி, உங்க பிசினஸ பாத்துக்குற, பெரிய பொறுப்பு இருக்கு உனக்கு!!. You have to carry forward your family's legacy, அதுக்கு உன்ன தயார்படுத்திக்க!! நான் உனக்கு பண்ணின பாவத்துக்கு, முடிஞ்சா என்ன மன்னிச்சிடு!!, சாரி!! Its not your fault, we are just not meant to be!!” தெளிவாக ஆரம்பித்தவள் குரல் தழுதழுக்க முடித்தாள். அவள் பேசப்பேச, நான் அதற்கு வேகமாக தலையை மட்டும் ஆட்டினேன், எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை, எனக்கு நன்றாக தெரிந்தது நான் அவளிடம் கேட்டேன் proper closure இதுதான் என்று.

"தலையில என்ன ஆச்சு!!” பேச்சை மாற்றினேன்.

"சின்னதா அடி!!” என்றாள்.

"ஸ்டிட்ச் போட்டு இருக்காங்களா?” ஏன் கேடிஎன என்றெல்லாம் தெரியவில்லை, அதற்கு இல்லை என்று தலையாட்டினாள்.

பின் இருவரும் பேசிக்கொள்ளவில்லை, அவளும் தொடுதிரையை பார்த்திருக்க, நானும் தொடுதிரையை பார்த்திருந்தேன். இரண்டு, மூன்று நிமிடங்கள் இருக்கலாம், அடக்கி வைத்திருந்த கண்ணீர் என் கண்களை அடிக்கொள்ள, திரையில் தெரிந்த அவளது பிம்பம் மெலிதாக மங்கத்தொடங்கியது, லேசாக சிரித்தவாறு, துண்டித்தேன்.

"" என்று அழுத மனதை பற்களை கடித்து, விரல்களை மடக்கிக் கட்டுப்படுத்தி, நேராக சென்று ஷவரை திறந்து அடியில் அமர்ந்து விட்டேன்.
[+] 5 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 16-11-2020, 08:44 PM



Users browsing this thread: 6 Guest(s)