நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#33
இவ ஏன் இவ்வளவு வெக்கப்படுறா.அவள் போன இரண்டு நிமிடம் கழித்து வினோத் வந்தான்."அவ போயிட்டாளாடா" 

"அவ போயிட்டா,அவ ஏண்டா இவ்வளவு வெக்க பட்டுட்டு ஒடுறா" 

"அவ ஏண்டா உன்ன பாத்து வெக்கபட்டா"

மச்சி!அந்த கூத்த ஏண்டா கேக்குற நேத்து நீ போனதுக்கு அப்புறம் நான் மாடியில தனியா நின்னுகிட்டு இருந்தேன்டா.அப்போ அவளும் மாடிக்கு வந்தா.

பிளாஷ் பேக் ஆரம்பம் :
"வினோத் நீங்கள் இங்குதான் உள்ளீர்களா நான் உங்களை தேடி எங்கெல்லாம் அலைந்தேன் தெரியுமா எங்கு போனீர்கள்"என்றாள்.

"என்ன விசயம்"னு கேட்டேன்.

"ஓன்றுமில்லை ஒரு முக்கியமான விசயம் பேச வேண்டும்.வினோத் நான் மிகவும் மனக்குழப்பத்தில் இருக்கின்றேன். என்னால் சரியாக சாப்பிடமுடியவில்லை,தூங்கமுடியவில்லை,யாரிடமும் சரியாக பேச முடியவில்லை"னு சொன்னாடா.

நான்"அய்யய்யோ!என்னாச்சி டாக்டர போய் பாத்தியா இப்ப பரவாயில்லயா"னு கேட்டேன்.

அதுக்கு அவ"விளையாடாதீங் வினோத்.நான் மறைமுகமாக கூற விரும்பவில்லை.என் சிறுவயது முதலே நீங்கள் எனக்கு ஒருசிறந்த துணையாக இருந்துள்ளீர்கள் கிச்சுகிச்சு தாம்பளம் முதல் கண்ணாமூச்சி உட்பட அனைத்து விளையாட்டையும் நான் உங்களுடன் மட்டுமே விளையாடி உள்ளேன்.நான் தோல்வியுறக்கூடாது என பலமுறை நீங்கள் எனக்கு விட்டுகொடுத்துள்ளீர்கள்.ஆதலால் முடிவு செய்தேன் வாழ்க்கையிலும் உங்களை விட சிறந்த துணை எனக்கு யாரும் கிடைக்க மாட்டார்கள்.நான் கூறுவது உங்களுக்கு புரிகிறதா ராஜகுமாரா"இது அவ.

"ம்ஹீம்,ஒன்னும் புரியல"இது நான்.
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 16-03-2019, 10:09 AM



Users browsing this thread: 1 Guest(s)