நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#32
அத்தியாயம் : 9
வெளியே வந்த நான் விசிலடித்துகொண்டே கிளாஸ் ரூமை நோக்கி நடந்தேன்.எனக்கு பாடம் நடத்துபவளுக்கே நான் பாடம் நடத்திவிட்டேன் முத்தபாடம் இந்த முத்தபாடத்தை அவள் மறக்கவே மாட்டாள்.அதன் பிறகு நானும் வினோத்தும் சாப்பிட செல்லும் போது தான் அவளை பார்த்தேன்.என்னை எரித்துவிடுவது போல் பார்த்தாள்.நான் அவள் சாப்பிட அமர்ந்த டேபிளுக்கு பின்னால் அமர்ந்தேன்.அப்பொழுது திடீரென வாசலை பார்த்துவிட்டு வினோத் பாத்ரூம் நோக்கி ஓடினான்.ஏன் என் எனக்கு தெரியவில்லை.

"டேய் எங்கடா போற"

"இரு மச்சி வந்துடறேன்"

அவன் போன பின் நான் வாசலை பார்த்தேன்.சுஜிதா வந்துகொண்டிருந்தாள்.சுஜிதா ஏழாம் வகுப்பு மாணவி வினோத்தின் பக்கத்து வீட்டை சேர்ந்த என்ஜீனியர் தகப்பனுக்கும்.தமிழாசிரியை அம்மாவுக்கும் பிறந்தவள்.அப்பா அம்மா வேலைக்கு போய் விடுவதால் அவள் வீட்டில் இருந்ததை விட வினோத் வீட்டில் இருந்ததுதான் அதிகம்."அண்ணா வினோத் எங்கே.இப்பொழுது இங்குத்தானே இருந்தார்"என கேட்டாள்.

"பாத்ரூம் போயிருக்கான் இரு வந்துடுவான் சாப்பிட்டாயா"என்றேன்.

"ம்ம் அண்ணா,வினோத் தாங்களிடம் என்னை பற்றி கூறினாரா"என கேட்டாள்.சுஜிதா எப்பொழுதும் தூய தமிழில்தான் பேசுவாள்.காரணம் அவள் அம்மா தமிழாசிரியை அவளுக்கு நூடுல்ஸ்க்கு பதில் அகநானூறையும்,காம்ப்ளானுக்கு பதில் நளவெண்பாவையும் ஊட்டி வளர்த்தாள்.அதன் தாக்கம் "வீ வில் கோயிங் டூ அமெரிக்கா"என்ற இளசுகள் மத்தியில "தாங்கள் கூற வந்தது என்ன"வாகவே இருந்தாள்.அவளின் தூய தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

"இல்ல ஏன் கேக்குற" 

"அதை எப்படி உங்களிடம் சொல்லுவேன்.நீங்கள் அவர் வந்தவுடன் கேட்டு தெளிவுபடுத்திகொள்ளுங்கள்.நான் இருக்கும் வரை அவர் வரமாட்டார்"என கூறிவிட்டு ஓடிவிட்டாள்.
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 16-03-2019, 10:08 AM



Users browsing this thread: 1 Guest(s)