அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 41


எங்கள் கம்பெனிகள் மொத்தமாக என் அப்பாவினால் நிர்வகிக்கபட்டு வந்தாலும், குருப்பின் சேர்மேனாக தாத்தாவே இருந்துவந்தார். இந்த மீட்டிங் தாத்தாவுக்கு என்றே பிரத்தேயகமாக நடத்தபடும் மீட்டிங், எங்கள் குழுமத்தின் செயல்பாடுகளை தாத்தாவுக்கு விளக்குவதற்கும், அவரது ஆலோசனைகளை கேட்பதற்கும். சும்மா வேடிக்கை பார்க்க, பின் தாத்தாவி கட்டாயத்தால் என இதற்கு முன் சிலமுறை இந்த மீட்டிங்கில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். எப்பொழுதும் மீட்டிங்கில் அமைதியாக இருக்கும் நான், அன்று ஐந்து நிமிடத்திற்க்கு ஒரு கேள்வி என் கேட்டுக் கொண்டிருந்தேன் அமைதி இல்லாமல், என் மனதைப் போல. ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல், அப்பா என்னை கொஞ்சம், கேள்வி கேட்காமல் அமைதியாக இருக்கும் படி கடிந்து கொள்ள,

என்னப்பா, அவன் தெரிஞ்சுக்கதான கேக்ககுறான்?,நீ எதுக்கு இவ்வளவு கோபப்டுறே?” எனக்கு சப்போர்ட்டாக தாத்தா

இல்ல மாமா, இப்படியே போன நாளைக்கு வரைக்கும் போகும் இந்த ரிவ்யு மீட்டிங்" அப்பா தன் பக்கத்து ஆதங்கத்தை சொல்ல, தாத்தா என்னைப் பார்த்தார். புரிந்து கொண்டேன். மீட்டிங் முடிந்ததும், ஆடிட்டிங் டீம் லீட கூப்பிட்ட என் தாத்தா,

“Mr. மோகன், நெக்ஸ்ட் ரிவ்யுல இருந்து எக்ஸ்ட்ரா ஒரு நாள் தேவைப்படும், தம்பிக்கு கொஞ்சம் தனியாவும் பண்ணனும்? முடியுமா?” என்றதற்கு அவரும் சரியென தலை அசைத்தார்.

-------------------------------------

அரைமணிநேரம் கழித்து

தாத்தாவின் ஆபீஸ் அறையில் இருந்தோம். சிறிது நேரத்தில் அப்பா வந்தார்.

சிவகுரு, அந்த சோலார் இண்டஸ்ட்ரி வேணுமா?” தாத்தா கேட்க, அப்பா என்னைப் பார்த்தார்

அவன் இருக்கட்டும்!” தாத்தா சொல்ல, உயிர்க்கொள்ளும் புறக்கணிப்பை தொடர்ந்து உடனே புதிதாக கிடைத்த முக்கியத்துவம் என்னை ஏதோ செய்தது.

சோலார் மின் உற்பத்திக்கு தேவையான தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை அப்பா, பத்து வருடங்களுக்குள் முன் ஆரம்பித்திருந்தார். எந்த தொழில் செய்தாலும், இரண்டு மூன்று வருடங்களுக்குள், அந்த தொழில் லாபம் பார்க்க ஆரம்பித்து விடும் அவர், குறைந்த விலை சீன இறக்குமதி காரணமாக, இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார். செய்யப்பட்ட முதலீடுகளே திரும்பி வராத நிலையில், அப்பா அதை பெரிய அளவில் விஸ்தரிக்கும திட்டம் வைத்திருந்தார். இன்று நடந்த மீட்டிங்ல கூட இந்த விஷயம் தான் சூடாக விவதிக்கப்பட்டது.

எனக்கு உங்க புரியுது மாமா!!, இன்னைக்கு வேணா அது நமக்கு பாரமா இருக்கலாம்!!, ஆனா இன்னும் கொஞ்சம் முயற்சி பன்னா, நம்ம பிஸினஸ்ல அடுத்த லெவல்க்கு இது எடுத்துட்டு போகும்!!”

புரியுதுப்பா, நாம ஆரம்பிக்கும் போதே நாலு யூனிட்னு, பெரிசா ஆரம்பிச்சட்டோம்!!, அது இன்னும் பிரேக் ஈவென் ஆகலங்குறது கூட பரவா இல்ல!!, ஆனா இந்த டைம்ல இன்னும் நாலு புது யூனிட் வேணுமா?” னு தாத்தா கேட்க, ஏனோ என்னால் வாயை அடக்க முடியவில்லை.

எனக்கும் அப்பா சொல்லுறது கரெக்ட்னு தோணுது தாத்தா!!, சோலார் பவர் ப்ரொடியூஸ் பண்ற ப்ராடக்ட்ஸ் தேவையில், 90 பர்சண்ட் இம்போர்ட் தான் பண்ணுறோம் நம்ம நாட்டுல!!, அப்பா சொல்லுற மாதிரி இன்னும் நாலு யூனிட் ஆரம்பிச்சா, டொமாஸ்டிக் மானியூபாக்சரிங்ல டாப் டென்ல நாமளும் இருப்போம்!” தாத்தாவும் அப்பாவும் ஏதோ அதிசயத்த பார்ப்பதுபோல் என்னைப்பார்க்க, தாத்தாவின் கண்களில் அப்படி ஒரு பெருமிதம்.
அப்பா அதிசயமாக என்னைப் பார்த்தவாறு ஆமோதித்தார். அப்பாவின் ஆமோதிப்பை பார்த்த தாத்தாவுக்கு பெருமிதம். எல்லாம் மதுவின் வற்புறுத்தலால், நான் எங்க காலேஜ்ல ப்ரெசெண்ட் பண்ணிய பேப்பர் தந்த அறிவு, இப்படி பயன்படும்னு நான் கனவில் கூட நினைத்ததில்லை.

நீங்க ரெண்டுபேரும் முடிவு பண்ணிட்டிங்க!, சரி விஸ்தரிப்போம்!”னு தாத்தா சொல்ல அப்பாவுக்கு சந்தோஷம். சும்மா ஏதோ என் அப்பாவுக்கு நிகர பேசணும்னு, பேசுன எனக்கும் அந்த முடிவுல பங்கு இருக்குனு, தாத்தா சொன்னதுல பெரும் போதையை கொடுத்தது எனக்கு.

தாங்க்ஸ் மாமா" அப்பா சொல்ல

இந்த தொழிலின் வெற்றிதான் உன் திறமைய தீர்மானிக்க போறதில்லை, இந்த தொழிலை இழுத்து மூடினாகக் கூட, நீ என்ன விட நூறு மடங்கு சிறந்த பிஸினஸ்மேன். சில நேரம் நமக்கு பிடிச்ச விஷயத்துல, நம்ம அறியாமலே நமக்கு ஒரு கூறிகிய பார்வை வந்துரும். சில நேரம், அத கொஞ்சம் தள்ளி நின்னு பாக்குறதுதான் நமக்கும் நல்லது, அந்த தொழிலுக்கும் நல்லது. என்ன கேட்ட, நாம ஏதாவது டர்னோவர் எக்ஸ்பர்ட் ஹீயர் பண்ணலாம், நீ கொஞ்சம் தள்ளி நின்னு நிர்வாகம் பண்ணு. ஏதோ எனக்கு பட்டதை சொன்னேன், உனக்கு தெரியாததை ஒண்ணும் நான் சொல்ல.

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்


குறள்ல சொன்ன மாதிரி. என்னப்பா?” தாத்தா பேசிமுடிக்க, அப்பா சரியென்று ஆமோதித்து ஏதோ பேசினார். ஆனால் தாத்தா பேசியது, பிஸினஸ்க்கு மட்டும் அல்ல, என் தற்போதைய நிலமைக்கும் பொருந்துவது போல் தோன்ற, நான் அந்த சிந்தனையில் மூழ்கிப் போனேன்

**********

அன்று இரவு.

மதுவிடம் நேத்ராவை வைத்து பேசலாமா என்று யோத்து, நேத்ராவை அழைக்கலாமா வேண்டாமா என்ற யோசனையிலேயே இரநாடு மணி நேரம் கையில் அலைபேசியை வைத்துக்கொண்டு, என் அறையில் அங்கும் இங்கும் அலைந்துகொண்டு இருந்தேன், மது என்னை நிராகரிதத்தின் வலி தந்த பயத்தில். என் காதல் கொண்ட நெஞ்சோ அவள் காயப்படுத்தமாட்டாள் என்று என்னை தெம்பூட்ட, காயங்களுடன் என் பிரதிபலிப்பு என்னை எளனமாக பார்ப்பது போல் தோன்ற, கண்ணாடியில் முகம் பார்ப்பதை தவிர்த்தேன்.

என் மனப்போராட்டங்களை உணர்ந்தது போல நேத்ராவிடம் இருந்து அழைப்பு வந்தது. நெதராவிடம் இறந்து வந்த அழைப்பில், என் காதல் மனம் குதூகலிக்க, என் காயப்பட்ட நெஞ்சமோ, காதுகளை பொத்திக்கொண்டு கதறி அழுதது. பெரும் மானபோராட்டத்துக்கு இடையே என் காதல் மனதை தழுவிக்கொண்டு, அழைப்பை எடுத்தேன்.

நீயேல்லாம் மனுசனாடா!! பணத்திமிர் பிடிச்ச நாயே!! ........” நேத்ரா பொறிந்து தள்ளிக்கொண்டிருக்கும் பொழுதே கால் கட்டானது. உடனே நேத்ராவுக்கு அழைத்தேன், அழைப்பு தூண்டிக்க பட்டது, கிரும்பவும் அழைத்தேன், ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது, உடனே மதுவுக்கு அழைத்தேன் அதுவும் ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது.

அத்திரத்தி நிலைகொல்லாமல் ஸ்விட்ச் ஆஃப் என்று அறிந்தும் இருவரது மொபைல்க்கும் திரும்ப திரும்ப அழைத்தேன். மனதில் ஒரே ஒரு கேள்வி மட்டும்தான்

நான் பணத்திமிர் பிடிச்சவனா?”

என் கடைசி நம்பிக்கையாய் இருப்பாள், என்று நினைத்த நேத்ரா என்னை சொற்களால் சுட்டெறிக்க, என் பக்கத்து நியாயங்களை காது கொடுத்து கூட கேட்க யாரும் தயாரில்லையா என்ற எண்ணம் என்னை வதைக்க, சற்று முன் நான் உதறி தள்ளிய மிருகம் பெரும் பலத்துடன் என்னை ஆட்கொண்டது.

------------------------------------------

அடுத்த ஆறு மாதங்களில் நடந்தவை சில

மோகன் சாரின் கைகளைப் பற்றிக்கொண்டு, பிஸினஸ் அரிச்சுவடி படிக்க ஆரம்பித்திருந்தேன். பொறுமையும், எதையும் முதலில் முழுதாக புரிந்து கொள்ளுதலும், முக்கியமாக, அடுத்தவரின் எண்ணத்திற்கும், பேச்சுக்கும், காது கொடுப்பதும், பின் அதை அனைத்து கோணங்களிலும் சிந்தித்து, சுயமாக முடிவெடுப்பதும் ஒரு பிஸினஸ்மேன்க்கு ரெம்பம் முக்கியம் என்பது, என் பால பாடங்களுள் சில. அதை நான் அப்படியே உள்வாங்கிக் கொண்டது, அதை என் சுயவாழ்வுக்கும் பொருந்தும் என்ற எண்ணம் எனக்கு வராமல் போனது, வாழ்வின் முரண்.

மேலும் அவர் இதுவரை ஒரு இருவது புத்தங்களாவது என்னை படிக்க வைத்திருப்பார்.

அத்தோடு, பிசினஸ் சம்பந்தமாக சிறுவயதில் இருந்தே தாத்தா என்னிடம் பேசியது, புரிக்கிறதோ இல்லையோ அப்போது அவரிடம் காது கொடுத்து கேட்டது, "சொல்றத எல்லாம் கவனமா காதுல வாங்கிக்க, இப்போ புரியாவிட்டாலும், பின்னாளில் புரியும்" என்று தாத்தா சொல்லியது, பல நேரம் எனக்கு, சில தொழில் நுணுக்கங்களை எளிதில் புரிந்து கொள்ள வசதியாக இருந்தது.

இப்பொழுதெல்லாம் அடிக்கடி பிஸினஸ் காலந்துரையாடல்களின் போது, நான் சொல்லும் ஏதோ ஒரு யோசனையோ, கேட்கும் ஏதோ ஒரு கேள்வியோ, அங்கிகரிக்க அல்லது அதிசயக்க படும்போது, ஏறும் போதைக்காகவே, இன்னும் முனைப்புடன் செயல்பட்டேன். சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்கள், முதலாளின் மகனது யோசனையோ, கேள்வியோ, உதாசீனப்படுத்த முடியாது, அதை அங்கிகரிக்க அல்லது அதிசியத்தே தீர வேண்டும், என்பது எனக்கு புரிந்திருந்தாலும், அது தரும் போதை, அதிகாரம் என்னும் போதை, என் வலிகளை மறக்கடிக்க எனக்கு தேவையானதாக இருந்தது.

இப்படி இருக்க, குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, ஆனால் எனக்கு என் மேல் பெரும்நம்பிக்கை தரும் ஓர் நிகழ்வு நடந்தது.

-----------------------------------------

திடீர் என்று வந்த யோசனையில், என் அறை புரட்டிபோட்டு, அலசி, ஆராய்ந்து, கடைசியாக அந்த விசிட்டிங் காரட்டை கண்டுபிடித்து விட்டேன். காலேஜ் பிரசன்டேஷனின் போது கேள்விகளால் துளைத்து எடுத்து, பின்பு பாராட்டிய, புரொஃபசரின் காரட்தான் அது, புரொஃபசர் மீர் அலி. இன்று தாத்தாவிடம் பேசிக்கொண்டிருந்த அப்பாவின் உரையாடலின் மூலம் அறிந்துகொண்டது செய்தி தான் நான் விசிட்டிங் காரட்டை தேடிப்பிடிக்க காரணம். சோலார் மின் உற்பத்திக்கான தளவாடங்கள் தயாரிக்கும் கம்பெனியின் விரிவாக்கம் குறித்து தாத்தா சொன்ன யோசனைகளை ஏற்றுக்கொள்வதாக சொன்னார். சரியான ஆட்களை தேர்ந்தெடுக்க ஏற்கனவே ஆரம்பித்துவிட்டாதாகவும் சொன்னார்.

உடனே தாத்தாவுக்கு ஃபோன் செய்தேன். இவரைப் பற்றி சொன்னேன், சோலார் பவர் தான் இவரின் phd தீஸிஸ், நாங்கள் தேடிய டெக்னிகல் எக்ஸ்பர்ட் இவராய் இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும், தாத்தாவை இவரிடம் பேசிப் பார்க்க சொன்னேன். புதிதாக கிடைத்திருந்த அங்கீகாரத்தின் போதையில்.

தம்பி, புரொஃபசர்னு சொல்லுற, முதல்ல நீ, அவர்ட பேசு, அவருக்கு நம்ம கம்பெனில சேர விருப்பம் இருக்கானு கேளு?, அவருக்கும் விருப்பம் இருந்தா, அப்புறம் பிராப்பர HR மூலமா பேசலாம்!!” என்றார் தாத்தா நிதானமாக.

நான் எப்படி தாத்தா பேசுறது?” தயங்கினேன்.

அத நீ தான் முடிவு பண்ணனும்!!” பெட்டென்று முடித்துவிட்டார்.

------------------------------------------

இரண்டு வாரங்கள் கழித்து, லீ மெரிடியன், இரண்டாவது தளத்தில் உள்ள ரெஸ்டாரன்ட்டில்

மீர் அலி ஸாருக்காக, வெயிட் பண்ணிக் கொண்டிருந்தேன். தாத்தாவுடன் ஃபோன் பேசி முடித்த அரைமணி நேரம் கழித்து, அவரிடம் பேசினேன். என்னை அறிமுகப் படுத்திக் கொண்டதும், என்னை அவருக்கு நினைவு இருப்பதாக சொல்லி, அந்த உரையாடலை எனக்கு கொஞ்சம் இலகுவாக்கினார். பின் நேரில் சந்திக்க வேண்டும் என்றதற்கு, தானே இரண்டு வாரங்கள் கழித்து கோவை வருவதாகவும், அப்போது சந்திக்கலாம் என்று சொல்ல, இங்கு இப்போது அவருக்க காத்திருக்கிறேன். நேரம் தவறமை, தாத்தா சொன்னது, சொன்ன நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக வந்திருந்தேன். அவர் சொன்ன நேரத்துக்கு வர,

ஹாய், மணிகண்டன்!, ஹோவ் ஆர் யு!” கைகொடுத்தார்

ஃபைன் சார், ஹோவ் டூ யு டூ?” நானும் குசலம் விசாரிக்க, எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டார்

ஐ அம் ஃபைன், நைஸ் ரெஸ்டாரன்ட்!” சுற்றி பார்த்தவாறே அவர் சொல்ல, எப்படி என் முதல் பிஸினஸ் உரையாடலை ஆரம்பிப்பது என்ற பதட்டம் மனதில் இருந்தாலும், வெளிக்காட்டமல்

சார், எங்க சோலார் பவர் பிஸினஸ்ஸ விரிவாக்கம் பண்ணலாம்னு ஒரு திட்டம் இருக்கு, எங்களுக்கு டெக்னிகல் எக்ஸபேரடிஸ் தேவைப்படுது, உங்களுக்கு எங்க கம்பெனில ஜாயின் பண்ணுறதுக்கு விருப்பம் இருக்க?” பட்டென கேக்க, முதலில் திடுக்கிட்டவர், பின் சிறிதாக சிரிக்க ஆரம்பித்தவர், பின் வாய்விட்டு சிரித்தார். பின் சிரித்த முகத்துடன்

யு ஆர் ரியல்லி எ பிஸினஸ்மேன்ஸ் ட்ரூ ஹியர்!, ஸ்ட்ரைட் டூ த பிஸினஸ்!!” என்று சொல்ல,

தாங்க்ஸ், சும்மா உங்க டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்னு தான்!” சொல்ல, கையை நீட்டி, என் கையை குலுக்கியவர்

அப்போ நான் சொல்லப் போற பதில்ல தான், இன்வைட் பண்ண டின்னர், வாங்கி தரனுமா? இல்லயானு முடிவு பண்ணனுமா?” சிரித்தார், நான் வெயிடரை அழைத்தேன்.

டின்னர் சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் பதில் சொன்னப் போதும் சார்" வந்த வெயிடரிடம் இருவருக்கும் தேவையானதை ஆர்டர் செய்தோம்.

பேக்கேஜ் ஓகேனா!, ஜாயின் பண்ணுறதுல ப்ராப்ளம் இல்ல!”

ஃபார் அ ரைட் பெர்சன், பேக்கேஜ் இஸ் நாட் அ ப்ராப்ளம்" எங்கள் உரையாடல் தொடர்ந்தது.

அப்புறம் தாத்தா சொன்னதைப் போல, எல்லா ஃபார்மாலிட்டியும் முடிஞ்சதும், அவர் கேட்ட பேக்கேஜ் குடுக்க சம்மதிக்க, இரண்டு மாதங்களில், டெக்னிகல்லீடாக சேர்வதாக முடிவாயிற்று. அவர் வேலையில் சேரந்ததே, ஏதோ எங்கள் சோலார் பிஸினஸ், லாபத்தில் இயங்க ஆரம்பித்துவிட்டதை போன்ற சந்தோஷத்தை எனக்கு தர (பினாளில் அதுதான் நடந்தது), அதை விட ஒரு சரியான திறமைசாலியை நான் கண்டுபிடித்ததாக தாத்தா பெருமிதமாக சொன்னது, பெரும் நம்பிக்கையை தந்தது.

--------------------------------

மது என்னை பிளாக் செய்த காலம் போய், நான் அவளை பிளாக் செய்திருந்தேன். சில முறை, மது நேரடியாகவும், நேத்ரா, பிரதீப் மூலமாகவும் பேச முயன்ற போதெல்லாம், தட்டிக் கழித்தேன். என் மனதில் அப்பப்போ ஏற்பாடும் ஏக்கத்தை "fuck toy!” “don’t act like a kid!!” "காதலை இறைந்து நின்ற என்னை அவள் பலபேர் பார்க்க கன்னத்தில் அடித்தது!!" என்று அவள் என்னை உதாசீனப்படுத்திய, அவமானப்படுத்திய நினைவுகளக் கொண்டே கிழித்து எறிந்தேன்.

இப்பொழுதெல்லாம் கல்லூரி செல்வது, வருகை பதிவுக்காக என்று ஆகிப்போனது. பெரிதாக நண்பர்கள் யாரும் என்னை கண்டு கொள்வதில்லை, எல்லோரையும் மது குடுத்த டார்ச்சரால், எரிந்து விழுந்து பகைத்திருந்தேன், அதை சரி செய்ய எந்த முயற்சியும் நான் எடுக்கவில்லை. எல்லாம் நான் புதிதாக சுவைக்க ஆரம்பித்திருந்த அதிகாரம் என்னும் போதை தான் காரணம். எங்கள் கம்பெனியில் பெரும் சம்பளம் வாங்கும் ஆட்களே என்னை அனுசரித்து, அங்கீகரிக்கும் பொழுது, என் வயது ஒத்த கல்லூரி நண்பர்கள் என்னிடம் தாழந்துதான் போகவேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இந்த சமூகத்தின் இயக்க விதிகளை அறிந்திருக்காத அல்லது அறிந்துகொள்ள தேவைப்படாத பருவத்தில், என்னிடம் இருக்கும் பணம் அவர்களை எந்தவகையிலும் என்னைப் பாதிக்கவில்லை.

முன் பணக்காரன் என்ற எண்ணம் இல்லாமல் நான் அவர்களிடம் பழகிய பொழுது, வியந்து பார்த்த என் பணத்தை, இப்பொழுது துச்சம் என நினைத்தார்கள், என் ஆணவ நடவடிக்கையால். நான் இவ்வளவு நாளும் நடித்துக் கொண்டிருந்தேன், அவர்களை உபயோகப் படுத்திக்கொண்டிருந்தேன் என்றார்கள். அவர்களது இந்த நடவடிக்கை என்னை மேலும் ஆனவமாகத்தான் நடக்க தூண்டியது, நானும் நடந்தேன்.

திரும்பவும் டென்னிஸ் பயிற்சியில் ஈடு பட ஆரம்பித்திருந்தேன். குடிக்க பழக்கியிருந்தேன்.

இப்படியாக ஆறுமாத காலம் நிம்மதியாக(?) போய்க் கொண்டிருந்த வாழ்வில், மீண்டும் வந்தாள் மது!.

***************

ஜினாலியின் பிறந்தநாள் பார்ட்டி. அவள் அழைப்பை மறுக்க முடியாமல் (அவளுடன் மட்டும் தான், கொஞ்சம் சகஜமாக பேசிக் கொண்டிருந்தேன், அப்பொழுது), அதே பப்புக்கு போயிருந்தேன், விஷ் பண்ணி, கிப்ட் கொடுத்ததும் கிளம்புவது தான் திட்டம். அவள் ஆட அழைத்தும் உறுதியாக மறுத்து விட்டு, ரெண்டு ரவுண்ட் சரக்கடிக்கலாம் என்று தோன்ற, ஒரு முலையில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தேன்.

ஹேய், மணி! வாட் அ சர்ப்ரைஸ்!” என்றவாறு என்னை நோக்கி ஓடிவந்தான் பிரதீப், அவனை கண்டதுமே வயிற்றில் புளியை கரைத்து எனக்கு!.

என்னடா, இப்போ எல்லாம் கண்ணலையே படுறதில்லை?" என்று கேட்டவனிடம்

மது வந்திருக்காளா?” என்று ஒருவித பதட்டத்துடன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அவள் என் கண்ணில் பட்டாள். “இங்கிருந்து உடனே கிளம்பு!” என மனசு சொல்ல! “எதுக்கு போகணும்!, அவள கண்டுக்காம நீ உன் இஷ்டத்துக்கு குடி!” என் ஈகோ, என்னை தூண்ட, மீண்டும் நான் ஈகோவின் பக்கம் சாய்ந்தேன்.

ஆமா டா, எங்க கிராஜூவேஷன் பார்ட்டி டுடே!” ஏற்கனவே போதையில் இருந்தான்

வாழ்த்துக்கள்!! பிரதீப்" என்று கைகுடுக்க, என் கையை தட்டிவிட்டவன், கட்டிப்பிடித்துக் கொண்டான். கையோடு என்னை அழைத்துக் கொண்டு போய்,

"இங்க பாருங்க, கிராஜூவேஷன் பார்ட்டி ஸ்பெஷல் கெஸ்ட்" அவர்கள் இருந்த டேபிளில் அமர வைத்தான். நான் அவர்களுடன் இருப்பது, மதுவுக்கும், நெதராவுக்கும் பிடிக்கவில்லை என்பது எனக்கு பார்த்தவுடன் புரிந்தது. ஆனால் மதுவின் கலங்கிய கண்களை கண்டதும், என் ஈகோ குஷியாகி, அவளை கொஞ்சம் கஷ்டப்படுத்து என்று சொல்ல, நானும் அதற்கு தயாரானேன்.

அப்புறம் பானு! எப்படி இருக்க!” மது என்று சொல்லாமல், வேண்டும் என்றே பானு என்றழைத்து, நாக்கலாக கேக்க,

அவளுக்கு என்ன, அவ நல்லா இருக்க!, நீ மூடிக்கிட்டு, மொதல்ல இங்கிருந்து கிளம்பு!” சூடாக நேத்ரா, என் மூக்கை உடைக்க, சுள் என்று வந்த கோபத்தில் எழுந்து கொள்ள, வழியில் வந்து கொண்டிருந்த ஒருவன் மீது இடிததுவிட்டேன். அவன் வைத்திருந்த பீர் முழுவதும் என் மீது கொட்டி விட்டது. ஏற்கனவே சூடாக இருந்த நான், "சாரி" கேட்டவனிடம், “fuck your, sorry “ என்று சொல்லி, அவன் சட்டையை பிடித்து முகத்தில் விட்டேன் ஒரு குத்து. சுதாகரித்த அவன், பதிலுக்கு விட்ட குத்தில் அப்படியே சரிந்து விழுந்தேன், காதில் மதுவின் அலறல் சத்தம்.
[+] 1 user Likes Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 07-11-2020, 01:29 PM



Users browsing this thread: 9 Guest(s)