அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 40

தாத்தாவிடம் செல்ல வேண்டுமென்று பழனி நோக்கி கிளம்பியவன், பொள்ளாச்சி வந்ததும்தான் தான் தாத்தா, கோயம்புத்தூரில் இருப்பது நினைவுக்கு வந்தது. என்னை நானே நொந்து கொண்டு, திரும்ப கோயம்புத்தூர் செல்ல மனமில்லாமல், பொள்ளாச்சியில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி விட்டேன்.

கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான், அந்த ஹோட்டலில் வேலை பார்க்கும் பையன், அங்கிருந்த டேபிளில் தண்ணீர் பாட்டிலை வைத்து விட்டு

"வேறு ஏதாவது வேணுமா சார்" என்ற வினவியவனின் வயது என் வயதோ அல்ல இரண்டோ, மூன்றொ கூடுதலாக இருக்கலாம், ஆனால் உருவத்தில் என்னைவிட மிகவும் சிறியவனாக இருந்தான் பார்ப்பதற்கு.

"சரக்கு வாங்கிட்டு வா!!” 2000 ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவனை நோக்கி நின்றேன்

"என்ன சரக்கு சார்?”

"கெலேனபிட்டிக்!!” என்ற என்னை குழப்பமாக பார்த்தான், குடித்தது இல்லையென்றாலும், அந்த நேரத்தில் எனக்கு நினைவு வந்த சரக்கு பெயர் இதுதான், பிரதீப் மிகவும் விரும்பி அருந்தும் விஸ்கி.

"விஸ்கி!!” அவனது குழப்பம் தீர்க்க சரக்கின் வகையை விளக்கிய என்னை மேலும் குழப்பமாகப் பார்த்தான்.

"மானிட்டர்!!, மெக்டவுல்!!, டே-நைட்!!, சிக்னேச்சர்!! இதுதான் சார் கிடைக்கும்!!” என்றவனை பார்த்து பெருமூச்சு விட்டு

"ரெண்டு பீயர் வாங்கிட்டு வா!!” என்ற என்னை வினோதமாக பார்த்தான்.

"சார்!! வேற?”

“2 தோசை!!” நான் சொல்ல, அவனது முகத்தில் தோன்றிய சிரிப்பை அடக்குவது முயல்வது போல் தோன்றியது எனக்கு.

"சார்!! வேற?” தலைகுனிந்து கொண்டான்.

"அவ்வளவுதான்!! சீக்கிரம் வாங்கிட்டு வா!!” வெளியே கிளம்பினான்.

இருபது நிமிடங்கள் கழித்து, மீண்டும் கதவை தட்டிக்கொண்டு, நான் கேட்டதை வாங்கி வந்தான். அவன் டேபிள் வைத்த பியரை எடுத்து, வெறும் கையால் திருகி திறக்க முயல, பீயர் மூடியின் கூர்முனை, என் விரல்களை அழுத்த, “ஆஆஆ" என்றவாறு கையை உதறிக் கொண்டேன். அப்பொழுது, என் பார்வை, இன்னும் அங்கு நின்று கொண்டிருந்த அவனின் மீது பட, அவனது முகத்தில் ஒரு ஏளன சிரிப்பு. அந்த சிரிப்பே சொன்னது இந்த பியர் பாட்டிலை கைகளால் திருகி ஓபன் பண்ண முடியாது என்று. பிடித்து இழுக்கும் வசதியோடு வரும் பீயர் பாடல்களையும், கைகளால் திருகி ஓபன் பின்னும் பீயர் பாட்டில்களை மட்டுமே எனக்கு தெரியும்

"சார்!! நான் ஓபன் பண்ணி தரட்டா?” என்று இன்னும் ஏளனம் மாறாமல் கேட்ட அவனிடம், வேறு வழியில்லாமல் பாட்டிலைக் கொடுத்தேன். லாவகமாக அங்கிருந்த மேசையின் ஓரத்தில், மூடியை வைத்து அதன் தலையில் தட்ட, பரந்த மூடியை ஒரு கையில் பிடித்தவன், மற்றொரு கையில் இருந்த பீயர் பாட்டிலை நீட்டினான் என்னை நோக்கி.

அவனிடம் இருந்து வாங்கிய பாட்டிலை குடிக்காமல், கையில் வைத்திருக்க, அவன் என்னை பார்த்தவாறு நின்றான்.

"என்ன?” எரிச்சலுடன்.

சட்டைப் பையிலிருந்து எடுத்த மீதி காசை என்னைப் பார்த்து நீட்ட

"நீயே வச்சுக்கோ!!” நான் யார் என்று அவனுக்கு உணர்த்த முற்பட்டேன். நம்ப முடியாமல் பார்த்தவன் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

"சார்!! இதையும் ஓபன் பண்ணி தரவா?” இரண்டாவது பாட்டிலை கண்களால் காட்டினான்.

"வேண்டாம்!!” மறுத்ததேன், அவனை வெளியே அனுப்ப கண்களால் கதவைப் பார்த்தேன்.

"சார்!! வேற எதவாது வேணுமா?” வெளியே செல்லாமல் மீண்டும் கேட்டான். எரிச்சலுடன் கேள்வியாக என்னைப் பார்த்தான்.

சார்!! வேற ஏதாவது!!” தயக்கமாக கூறினான், தலையை சொறிந்ததாவாறு. அவன் செய்கையில் குழப்பமாக, வேறு ஏதாவது தேவைப்படுமா என்று யோசித்ததில், ஒன்று தேவைப்படாது என்று தோன்றவே, வேண்டாம் என்று தலையாட்டி, கதவருக்கே சென்றேன். புரிந்துகொண்டவன், கொடுத்த டிப்ஸ்க்கு நன்றி சொல்லிவிட்டு வெளியேறினான்.

அவன் வெளியே சென்றவுடன், மீண்டும் தனிமை, உடலும் உள்ளமும் பற்றி எரிய, இதயம் படபடக்க, ஹோட்டல் அறையில் ஒரு நிலையாக நில்லாமல் நடந்தேன். என் மனது நிலையில்லாமல் தவிக்க, மதுவை ஊற்றி அதை அணைக்க எத்தனித்தேன். அவன் கொடுத்த பியர் பாட்டிலை எடுத்து உதட்டருக்கே, கொண்டு செல்ல, அதிலிருந்து வந்த வாசனை, எனக்கு குமட்டலை கொடுத்தது. அதை அப்படியே டேபிளில் வைத்து விட்டு, எரிச்சலில் கண்களை மூடினேன்.

நான் கண்களை மூடிய ஔடகத நொடி, நினைவில் வந்து ஒட்டிக்கொண்டாள் மது. ஆத்திரத்தில் அவள் நினைவை தலையை சிலுப்பி உதறிவிட்டு, அந்த அறையில் நிலையில்லாமல் நடந்தேன். மதுவை நான் காயப்படுத்தியதற்கோ அல்லது அவள் என்னை உதாசீனப்படுத்தியதற்கோ, கிஞ்சித்தும் வருத்தம் இல்லாமல், ஆத்திரத்தால் ஆட்கொள்ளபட்டு, இலக்கில்லாமல் நடப்பதும் சுவரில் மோதி திரும்புவதுமாக நிலையில்லாமல் தவித்தேன்.

எனக்கு உண்டான பயத்தை அவளுக்கு புரிய வைக்கவே, அந்த தாலியை கட்டினேன். என்னிடம் பரிவாக ஒரு வார்த்தை.… ஒரே ஒரு வார்த்தை, பேசிவிட்டு அவள் தாலியை கழட்டி இருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருப்பேனோ, என்னவோ. ஆனால் எனது மனதின் போராட்டங்களை, பயத்தை, கொஞ்சம் புரிந்து கொள்ளாமல், அவள் அதை கழட்டி தூக்கி ஏறிய, என் நிலையை அவளுக்கு புரிய வைக்க முடியாமல் போன ஆற்றாமையில், ஆத்திரம் கொண்டேன். நான் அவளிடம் வேண்டியது எல்லாம், ஒன்றே ஒன்றுதான், அவளை இழந்து விடுவேனோ என்ற பயத்தை நீக்கும் விதமாக, அவளிடமிருந்து ஒரு பார்வையோ!! ஒரு சொல்லோ!! ஒரு அணைப்போ!! மட்டும்தான். அதை செய்துவிட்டு, நான் கட்டிய தாலியை கழட்டி இருந்தால்கூட ஒன்றுமே சொல்லியிருக்க மாட்டேன் என்று நம்புகிறேன்.

அவள் தாலியை கழட்டியதை விட, அதற்கு முன், என்னை துச்சமாக பார்த்து முறைத்தது, என் நினைவலைகளில் மீண்டும் மீண்டும் ஓட, டேபிளில் வைத்த பாட்டிலை எடுத்து தொண்டைக்குள் கவிழ்த்தேன். ஒவ்வாமையில் வெளியே தள்ள முயன்ற உடலை மூச்சைப் பிடித்து அடக்கினேன். இதற்கு மேலும் முடியாது என்ற நிலையில்தான் பாட்டிலை மீண்டும் வைத்துவிட்டு, மூச்சு விட, மீண்டும் உள்ளே சென்று மதுவை, வெளியே தள்ள முயற்சித்த உடலை, பற்களை கடித்துக் கொண்டு மனதின் வேதனையை, காரணம் காட்டி அடக்கினேன். உடலோ பெரிதாக மூன்று, நான்கு ஏப்பங்களை, வெளியே அனுப்பி, தன் தோல்வியை ஒப்புக் கொள்ள, அந்த தோல்வியின் கசப்பு, என் வாயை நிறைத்தது. நெஞ்சும் குடலும் எரிவது போல், இருக்க காரணம் நான் குடித்த மதுவா? அல்லது மதுவா? என்பதை கடவுள் தான் அறிவார்.

மீண்டும் வந்த சில தொடர் தொடர் ஏப்பங்கள் என் வாயின் கசப்பை அதிகரிக்க, பாட்டிலில் மீதம் இருந்ததை ஊற்றி, அந்த கசப்பை நீக்க முனைந்தேன். ஆனால் என் மனதில் இருந்த கசப்பை போல, வாயிருந்த கசப்பும் கூடியதே தவிர குறையவில்லை. நிமிடங்களில், உள்ளே சென்ற மது அதன் வேலையை காட்ட, தலை சுற்றுவது போல் தோன்றியது. தலையை சிலுப்பிக்கொண்டு நேராக அங்கிருந்த, சேரில் அமர்ந்தேன். என் எதிரில் இருந்த கண்ணாடியில் என் பிம்பம் பிரதிபலித்தது.

மதுவின் மாயமோ என்னவோ, என் பிம்பத்தை பார்த்து அடக்க மாட்டாமல் அழுதேன். ஆனால் நொடி அழுகையை மென்று துப்பிவிட்டு, கண்களைத் துடைத்துக்கொண்டு, "இனி அழ மாட்டேன், எதுக்கு நான் அழனும்? என்று கண்ணாடியில் தெரிந்த எனது பிம்பத்தைப் பார்த்து கூறினேன், ஆத்திரத்துடன்.

*************

ஆயிரமாயிரம் முறை ஆசையாக முத்தமிட்ட கண்களில், பயத்தையும் வலியையும் பார்த்த ஆத்திரம்.

காத்திரமாய் என்னை புதைத்துக்கொண்டு, காதலாய் எண்ணிக்கை இல்லா முத்தமிட்ட, அதே கழுத்தில், விரல் அச்சு பதிய நெரித்து, அவளை மூச்சுத்திணற வைத்த ஆத்திரம்.

"அம்மாவாக மட்டுமில்லாமல்!!, உனக்கு எல்லாமாய் இருக்கிறேன்!!" என்றும்,

"பாப்பா!! பாப்பா!!” என்றும், காதலுடன் கொஞ்சிய!! கெஞ்சிய!!, அதே வாயால் "பாப்பா!!” என்று பரிதாபத்துடன் கதற வைத்த ஆத்திரம்.

என் அறிவை இழக்கச் செய்த ஆத்திரம்

கண்ணாடியில் தெரிந்த என் பிம்பத்தை வெறித்துப் பார்த்தேன். ஆத்திரத்தை அனைத்துக்கொண்டேன், ஆத்திரம் என்னை ஆட்கொண்டது.

*************

தூங்கினேனா? இல்லயா? என்று கூட தெரியாத குழப்பத்தில் எழுந்து, மொபைல் ஆன் செய்யப்பட்ட அடுத்த வினாடி, ரிங் அடித்து. அம்மா அழைத்தாள், எடுக்க

டேய்!! எங்கட போய் தொலஞ்ச? எது....”

இப்போ என்ன வேணும், எதுக்கு ஃபோன் பன்னீங்க? அதச் சொல்லுங்க?” அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே, இடை மறித்து, நான் அவளை விட சூடாக கேட்க, அவள் அமைதியானாள். இடைப்பட்ட காலத்தில் அவளிடம் சாதாரணமாக பேச ஆரம்பித்திருந்தாலும், இது வரை கோபப்பட்டது கிடையாது, இதுவே முதல்முறை.

அவள் பேசாமல் இருக்க, கால் கட் செய்தேன், எந்த வித தயக்கமும், குற்ற உணர்ச்சியும் இன்றி.

-----------------------------------

தம்பி!” ரூம்க்கு செல்ல மாடிப்படிக்களில் எறிக்கொண்டிருக்கும் போது, தாத்தாவின் சத்தம் கேக்க, நின்று திரும்பிப் பார்த்தேன்.

ஹால்ல ஆளு இருக்குறது கூட உனக்கு கண்ணுக்கு தெரியலையா?” அவர் சிறித்தவாறு கேட்க, அந்த சிரிப்பில் உயிர் இல்லத்திருந்ததை கவனித்த, எனையும் வருத்தியது, இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை. எந்த சூழ்நிலையிலும் என்னை வருத்தாத ஒரே உயிர், தாத்தா.

இன்னைக்கு குவர்டர்லி ரிவ்யு மீட்டிங் இருக்குது இல்ல, அதுக்கு கிளம்புர அவசரத்துல, உங்கள கவனிக்கல?”னு அவர் கை அவரை சமாதான படுத்த சொல்ல,

அதிசயமா இருக்கு, கைய புடிச்சு இழுத்தாக்கூட வரமாட்ட!! எப்போவும் சலிச்சுக்குவே?” உண்மையான சந்தோஷத்தில் அவர் பூரித்துப்போனார், சற்று முன் இருந்த வருத்தம் நீங்கி. அவர் முகத்தில் நான் பார்த்த சந்தோசத்துக்காக, இன்னும் இது போல எத்தனை பொய் சொல்லவும் தயாராய் இருந்தேன்.

என்னைக்கி இருந்தாலும், நான் எடுத்துக்க வேண்டிய பொருப்புதானே!!, அதான் நீங்க சொன்ன மாதிரி இப்போவே ஏறங்கிராலாம்னு முடிவு பண்ணிட்டேன்" சில நிமிடங்களுக்கு முன்னால் இருந்தா என் மனநிலைக்கு, நான் இப்பொழுது பேசியது எனக்கே வியப்பாய் இருந்தது.

சந்தோஷம் கண்ணா!!, சீக்கிரம் போய் கிளம்பி வா!!, டைம்க்கு போலாம்!!, நேரந்தவராமை, அதுதான் இன்னைக்கு உனக்கு முதல் பாடம்!!”

தாத்தா என் தோளில் தட்டி சொல்ல, நான் என் ரூம்க்கு வந்து, உடைகளை கலைந்து, ஷவரில் நனைந்தேன், எதிரில் இருந்த கண்ணாடியில் என் பிம்பம்.

பிளீஸ்!! பிளீஸ்னு!! கெஞ்சினாலே டா, பாவி!!, அவளப் போயி!!” என் உள்ளம் விழித்துக்கொண்டது.

அதே பிளீஸ்!! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ அவள கெஞ்சல!! எள்ளி நகையாடியாது, என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த எனது பிம்பம்.

உன்ன பாப்பா வா, தூக்கி சுமந்த, அவ நெஞ்சுல, மிதிச்சி!!”

அதே நெஞ்சுல இருந்துதான், உன்ன அவ fuck toy! சொன்னா"

நீ அவ்வளவு கேவலமா, நடந்துக்கிட்ட பின்னடியும் கூட, பிளீஸ்!! பிளீஸ்!! சொல்லி அழத்தான செஞ்சா, அவளப் போயி.. !!!”

நீ பிளீஸ்னு சொல்லி அழும்போது கூட, அவ உன்ன படுக்க தான கூப்பிட்டா?”

மது இல்லாம உன்னால இருக்க முடியுமா?”

என் முடியாது?, உன்கிட்ட இல்லாத பணமா? உன் கிட்ட இல்லாத திறமையா? நீ த்ரீ டைம்ஸ் நேஷனல்ஸ் வின் பண்ணின ஒரு சாம்பியன்!!”

நீ இல்லாம அவளால இருக்க முடியாது!!”

ஹா, ஹா, ஹா.... நியாபகம் இல்லையை? நேத்துதன் உன்னப் பார்த்து சொன்னா, அவ கூட படுக்க நிறைய ஆளு இருக்குனு?”

இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகால, அவளுக்கு வேற ஏதோ ப்ராப்ளம், இல்லன அவ இப்படி பண்ண மாட்டா!! போய் பேசு, எல்லாததையும் சரி பண்ணலாம்!!”

அறு மாசமா, அவ உன்ன பேசாவிட்டாளா?!!, உன் நம்பர கூட பிளாக் பன்னிதான் வச்சிருப்பா!! தேவைபட்டா மட்டும்தான, உன்ன அன்பலாக் பண்ணுவா!!”

திரும்ப!! திரும்ப!! உன்கிட்டதான வந்தா!! உண்ண கட்டிப்பிடிச்சு எப்படி எல்லா அழுதிருக்கா!!”

திரும்ப!! திரும்ப வந்தாலும், அதுக்கு மட்டும்தான உன்ன யூஸ் பன்னிருக்கா!! பாசமா ஒரு வார்த்தை சொல்லிறுப்பாளா?, இதுக்கு மேலையும் நீ அவ கிட்ட இறங்கிப் போனே, நீ எல்லாம் ஆம்பளையே இல்ல!!”

நீயெல்லாம் மனுசனே இல்ல!!"

என்று மாறி மாறி, என் காதல் மனம், என்னிடம் மன்றாட, அவளை காட்டாயப்படுத்தி புணர்ந்த மிருகம்/ஈகோ, என்னை மிரட்ட, பதின்ம வயதிலேயே, வாழ்க்கையின் மீது பெரும் வெறுப்போடு, என்னை நானே வேறொன்றாக வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

எப்படி? உன்னால இப்படி ஒண்ணுமே நடக்காதது மாதிரி நடிக்க முடியுது"

என்ன நடந்துச்சு?”

மது! என்ன பண்றாளோ, எவ்வளவு கஷ்டபாடுறாளோ?

அது நேத்து கத, நேத்தே முடிஞ்சிருச்சு!, இனி எனக்கு யாரும் முக்கியம் இல்ல, என்னத்தவிர!! வேணும்னா அவளா வரட்டும்!!"

இப்படி மாறி மாறி மீண்டும் என் மனசும், ஈகோவும் அடித்துக் கொள்ள, ஏனோ, என் ஈகோவின் பக்கமே நியாயம் இருப்பதாக எனக்கு தோன்ற, ஷவரோடு, சேத்து என் மனதையும் அடைத்து விட்டு, டிரஸ்ஸோடு, என் ஈகோவையும் அணிந்து கொண்டு கிளம்பினேன் குவர்டர்லி ஆடிட் ரிவ்யு மீட்டிங்கிற்க்கு.

சிறுபிள்ளையாய் சாமி கும்பிடும் பொழுது, இந்த உலகத்தில இருக்கிற அனைவரும் நல்லா இருக்கணும் என்றுதான் எல்லோரும் வேண்டியிருப்போம். அதே வேண்டுதல் இளமையில், தானும் தனக்கு வேண்டியவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று சுருங்கும். காலப்போக்கில் தனக்கு வேண்டியதை மட்டுமே வேண்டிக்கொள்வோம். இதற்கு காரணம் எல்லோருக்கும் இருக்கும் குழந்தைத்தின் அளவுதான். குழந்தைகளுக்கு தீராத பிரச்சனை என்று ஒன்று இல்லவே இல்லை, பிரச்சனைகளை பெற்றோரும், உறவினரும் இல்லை கடவுளை தீர்த்து வைப்பார் என்று நம்புவோம். அது குறைந்து கொண்டே வரும் காலப்போக்கில், சரியாக சொல்லப்போனால் குழந்தை தனத்தை இழக்க, இழக்க, அந்த நம்பிக்கையும் அதற்கு ஏற்றவாறு குறைந்துகொண்டே இருக்கும்.

அப்படி எனக்குள் இருந்த குழந்தையை சீராட்டி என் இளமைப் பருவம்வரை உயிர்போடு வைத்திருந்த மதுவே, அந்த குழந்தையின் அழிவுக்குக் காரணமானாள். மதுவின் செயல்களுக்கு ஆயிரம் சரியான காரணங்கள் இருந்தாலும், என்னில் இருந்த குழந்தை தனத்தை படிப்படியாக வேதனையில் ஆழ்த்திக் மூச்சுத் திணற வைத்தாள். களங்கமில்லாத தூய அன்பை மட்டுமே அவளிடம் காட்டி அந்த குழந்தையை அவளைக் கொன்று புதைத்தாள். குழந்தை தானம் இல்லாத மனிதன் மிருக்கத்துக்கு சமானம், மிருக்கத்துக்கு அதன் தேவையே பிரதானமாக இருக்கும்.

நான் முழுதாக மிருக்கமாக மாறிய தருணம் அதுவாக கூட இருக்கலாம்.
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 06-11-2020, 12:42 AM



Users browsing this thread: 2 Guest(s)