அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 37


பத்து நிமிடத்தி திரும்பி வருகிறேன் என்று சென்றவன், இரண்டு மணி நேரம் கழித்து திரும்பி அறைக்கு வந்தேன்.

கோச்சின் அறைக்கு சென்றதும், "சின்னதா செலிபரேட் பண்ணலாம்!! அப்படியே லஞ்சும் சாப்பிட்டு விடலாம்!!” என்று கூறி மொத்த டீமும், கீழ் தளத்தில் இருந்த ரெஸ்டாரன்ட் சென்றோம். ஒரு கேக் ஆர்டர் செய்து, எனது வெற்றியை கொண்டாடி விட்டு, அப்படியே மதிய உணவையும் சாப்பிட்டோம். என் எதிர்கால திட்டம், நான் அன்று ஆடிய ஆட்டத்தைப் பற்றிய விமர்சனம், பாராட்டு என விவாதத்துக்கு இடையே மதிய உணவை உண்டு முடித்தோம். அப்பொழுது நான் உடனே கிளம்புவதை அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பும் போது, கண்டிப்பாக சாப்பிட்டு மது இருக்க மாட்டாள் என்று தோன்றியது. அவளுக்கும் ஒரு பிரியாணி பார்சல் செய்து வாங்கிக் கொண்டேன்.

நான் கதவைத் திறந்தது கூட உணறாமல் தூங்கிக்கொண்டு இருந்தாள் மது. தூக்கத்திலும் கவலையின் ரேகைகள் அவளது முகத்தில். உணர்வுகளை மட்டுப்படுத்தும் வலிமை கண்ணீருக்கு எவ்வளவு உண்டோ, அதே போல உணவிற்கும் உண்டு என்று நினைக்கிறேன். சாப்பிட்ட சாப்பாடும், அங்கு நடந்த விவாதங்கள் இடையே, பின் மண்டையில், இவள் இங்கு காலையிலேயே வந்து இருக்க வேண்டும் என்றால், எப்பொழுது கோயம்புத்தூரில் இருந்து கிளம்பி இருக்க வேண்டும், எனக்காக எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு இருக்கிறாள், என்றெல்லாம் என் எண்ணங்களில் ஓட, என் கோபம் எல்லாம் கரைந்து விட்டிருந்தது. குழந்தையைப் போல தூங்கும் அவள் முகத்தைப் பார்த்ததும் கொள்ளை கொள்ளையாய் இவள் மீது நான் கொண்ட காதல் என் சிந்தையையும், இதயத்தையும் நிரப்ப, ஆசையாய் அவள் முகம் பார்த்தேன்.

மொபைலை எடுத்து கோயம்புத்தூர் செல்வதற்காக டிக்கெட் புக் செய்தேன். சென்னையில் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காக, இங்க இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கும் என்று தனித்தனியாக இரண்டு டிக்கெட் புக் செய்தேன். எனது உடைமைகளை பேக் செய்தேன். எதையும் மறந்து விட்டுவிடவில்லை என்று உறுதி செய்து கொண்டு, தூங்கிக் கொண்டிருந்த மதுவை எழுப்பினேன். எழுந்ததும் என்னைப் பார்த்து சிரித்தவள், என் உணர்ச்சியற்ற முகத்தை பார்த்ததும், அவள் முகம் மீண்டும் கெஞ்சும் பாவனைக்கு மாறியது.

"ரீபிரேஷ் பண்ணிட்டு வா!!.... கிளம்பலாம்!!” என்று முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் சொல்ல, மீண்டும் என கெஞ்சுவது போல் பார்த்தவள், நான் அசையாது இருக்கவே, எழுந்து பாத்ரூம் சென்றாள்.

ஒரு சின்ன குறுஞ்சிரிப்பு என் முகமெல்லாம் படர்ந்திருக்க, சொல்ல முடியாத உற்சாகத்துடன், மனது ஒரு துள்ளலான மனோபாவத்தில் இருந்தது. எப்பொழுதும் அவளதும் முறைப்புக்கு கட்டுப்பட்டு, நான் பம்மிக்கொண்டு, அவளைக் கெஞ்சிக் கொண்டு, அவள் மிஞ்சிக்கொண்டு இருந்துதான் பழக்கம். எப்போதுதாவது தான் அவள் கெஞ்சுவதும் நான் மிஞ்சுவதும் நடக்கும். கடைசியாக "அக்கா" என்று அழைக்க வேண்டாம் அவள் கெஞ்சியதாக நினைவு. அந்த சமயங்களில் எல்லாம் இவளை என் போக்குக்கு ஆடவைத்து எவ்வளவோ மகிழ்ந்திருக்கிறேன். நான் ஆட்டி வைக்கும் படி எல்லாம் ஆடி இருக்கிறாள்.

"லவ்" பண்ணுவதற்கு முன்னாடி கூட அவ்வப்போது இவளிடம் கோபப்பட்டு இருக்கிறேன். எனக்கு லவ் சொன்னாளோ, அன்றிலிருந்து எங்கள் வாழ்க்கையில் இவள் வைப்பதுதான் சட்டம் என்று ஆகிப்போனது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றுதான் என்னிடம் இப்படி கெஞ்சிக் கொண்டிருக்கிறாள். இப்படிப்பட்ட வாய்ப்பை, அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்க என் மனது தயாராக இல்லை. கோவை போகும் வரைக்கும், இவளை என் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம் என்று மனதில் ஒரு திட்டத்தை வகுத்தேன். அந்தத் திட்டத்தின் முதல் படியாக, மீண்டும் மொபைலை எடுத்து ஆன்லைன் செக்கிங் செய்தேன். முகம் கழுவி விட்டு திரும்பி வந்தாள்,

"வேற டிரஸ் மாத்திக்கோ?” என்னையே பார்த்துக் கொண்டிருந்தவளை, திரும்பிக்கூட பார்க்காமல் சொல்லிவிட்டு, வாங்கி வந்த பிரியாணியை, அங்கு இருந்த தட்டில் எடுத்து வைத்தேன்.

"பரவா இல்ல!! இதுவே இருக்கட்டும்!!” என்றாள் அடிக்குரலில், புதிதாக இருந்தது எனக்கு. அவள் அறியாமல், சத்தமில்லாமல் சிரித்துக்கொண்டேன்.

"சாப்பிடு!!” காபி டேபிலில், இருந்த பிரியாணியை தட்டை காட்டினேன். அவள் எதுவும் சொல்லாமல், என்னையே பார்த்துக் கொண்டு இருக்க, அவளை இழுத்துக்கொண்டு வந்து சேரில் அமர வைத்து அவளுக்கு ஊட்ட, அவள் வாய் திறக்காமல், என்னையே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

"காலையில சாப்பிட்டியா?”

"...........…" இல்லை, என்று தலையாட்டினாள். அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு, தலையாட்டும் மதுவைப் பார்த்த எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு

"ஒழுங்கா சாப்பிடு!!.. டைம் இல்ல!!.. கிளம்பனும்!!” என்று என் குரலை உயர்த்த, வாயை திறந்தாள். அடிக்கு பயந்து சாப்பிடு பிள்ளை போல் அவள் சாப்பிட, "சீக்கிரமா முழுங்கு!!, வேகமா சாப்பிடு!!, வாயைத் திற!!, மெதுவா சாப்பிடு!! நல்ல மென்னு சாப்பிடு!!” என்று ஆயிரம் அறிவுரை சொல்லி, பலவாறு மிரட்டி தட்டிலிருந்த பிரியாணியை அவளுக்கு ஊட்டி முடித்துவிட்டு விட்டு, கிளம்ப எத்தணிக்கையில், என் கையை பிடித்தாள்.

போலாம்!! இப்போ கிளம்பினாத்தான் ஃப்ளைட் புடிக்க முடியும்!!” என்று கையை உதறிக்கொண்டு கத்த,

பட்டென கலங்கிய கணங்களில் இருந்து கண்ணீர் சிந்தியது. பாத்திரத்தில் ஒன்றி கொஞ்சம் அதிகமாக போய்விட்டோமோ என்று தோன்ற, என் ஷோல்டர் பேக்கில் இருந்த மெடலை எடுத்து அவள் கழுத்தில் போட்டு, அவளை அணைத்தேன். பின் அவள் நெற்றியில் முத்தமிட, சிறு புன்முறுவலுடன் என்னைப் நிமிர்ந்து பார்த்தவளிடம்

இன்னும் கோபமாத்தான் இருக்கேன்!!” என்று முறைத்துவிட்டு, பைகளை எடுத்துக்கொண்டு கிளம்ப, என்னை பின் தொடர்ந்தாள்.

********

ஃப்ளைட்டில் சீட் பெல்ட் அணிந்து கொள்ள சொல்லி அறிவிப்பு வரவே, என் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டேன். அப்போது என் மொபைல் அடிக்கவே, எடுத்துப் பார்த்தால், நான் நினைத்ததைப் போலவே மதுதான் அழைத்தாள். நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். எரித்து விடுவது போல் அவள் என்னை பார்க்க, அதில் எண்ணை ஊற்றுவது போல் அவளை ஏளனமாகப் பார்த்தேன்.

“sir, switch off your mobile please!!” விமான பணிப்பெண் சொல்லவே, மொபைலை ஃப்ளைட் மோடில் வைத்துவிட்டு, மீண்டும் எனக்கு இரண்டு வரிசைக்கு முன்னால் அமர்ந்து இருக்கும் மதுவைப் பார்த்தேன், இன்னும் கண்களால் என்னை எரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

ஹோட்டலில் இருந்து கிளம்பிய டாக்ஸியில் பின் கதவை அவளுக்கு திறந்துவிட்டு, அவள் அமரந்தவுடன், முன்னால் சென்று டிரைவருக்கு அருகில் அமர்ந்து வெறிப்பேற்றினேன்.
ஆன்லைன் செக்கிங்கின் போது, வேண்டும் என்றே இருவருக்கும் வேறு வேறு சீட் தேர்ந்தெடுத்து இருந்தேன். அவளை விமானத்தில் சீட்டை காட்டி அமரச்சொன்ன போது "எனக்கு விண்டோ சீட்" என்று என்னை முந்திக்கொண்டு அமர்ந்து, என்னைப் பார்த்து சிரித்தவள், நான் இரண்டு வரிசை தாண்டி சென்று அமர்ந்ததும், என் திட்டத்தை உணர்ந்து, முறைக்க அரம்பித்தவள்தான், இன்னும் முறைத்துக் கொண்டு, இல்லை இல்லை, என்னை பார்வையாலேயே எரித்துக் கொண்டு இருக்கிறாள்.

விமானம் பறக்க ஆரம்பித்த 15 நிமிடம் கழித்து,

“Excuse me!!” என்று மதுவின் குரல் கேட்கவே, நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். அவளோ என் அருகில் இருந்தவரை அழைத்திருந்தாள்.

“Yesssss!!” என்று அவளுக்கு பதில் அளித்தவருக்கு, ஒரு அம்பது வயது இருக்கலாம், சபாரி சூட் அணிந்திருந்தார், அப்பொழுத்து தான் கவனித்தேன்.

“Can you do me a favour!!” என்று விண்ணப்பித்த மதுவை, ஏற இறங்கப் பார்த்தார்.

“Can we switch seats please!!” கெஞ்சும் தோரணையில் கேட்ட மதுவிடம்

“No!! I like window seat!!” முட்டாய் தரமாட்டேன் என்று மறுப்பாக தலையாட்டும் குழந்தை போல் அவர் மறுக்க, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்னைப் பார்த்து முறைத்த மது, பின் அவர் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு

“Sir, mine is also a window seat!! Two rows in front!!” அவள் சீட்டை கை காட்டி மீண்டும் இறைஞ்சினாள்

“Sorry!! NO!!” அருகில் இருந்தவர் என்ன நினைத்தாரோ, திட்டவட்டமாக மறுத்தார். சோர்ந்து போனவளின் முகம் வாடிவிட்டது. வாடிய முகத்துடன் திரும்பிச் சென்று, இருக்கையில் அமரும் முன் "ஏன் டா இப்படி பண்ணுற?” என்று கேட்பது போல் என்னை ஒரு முறைப் பார்த்தாள், அவளின் இந்த முகவாட்டத்துக்கு காரணாமான சபாரி மனிதர் மேல் கோபம் வந்தது எனக்கு.

சில நேரம் கழித்து “ப்ரோ!!” என்று சத்தம் கேட்டு, மொபைலை நொண்டிக்கொண்டிருந்த நான் நிமிர்ந்து பார்த்தேன். மதுவின் அருகே அமர்ந்திருந்த நபர், 25 வயது இருக்கலாம்,

ரெம்ப ஃபீல் பணறாங்க!! நீங்க வேணா என் சீட்ல உக்காந்துக்கோங்க!!” அவர் சொல்ல, மதுவை திரும்பிப் பார்த்தேன். அவளும், வலது கை பெருவிரல் நகத்தை கடித்தவாறு, என்னைப் கெஞ்சும் பார்வை பார்க்க,

தாங்க்ஸ் ப்ரோ!!” என்று சொல்லிவிட்டு எழுந்து மதுவிடம் சென்றேன், அமரவில்லை. “என்ன?” என்பதுபோல் என்னைப் பார்த்த மதுவிடம்,

விண்டோ சீட்!!” விரைப்பாக்க சொன்னேன். முறைத்துக்கொண்டே எழுந்து எனக்கு சன்னல் இருக்கை தர, சிரித்துத்தவாறு அதில் அமர்ந்து கொண்டேன். அருகில் நான் இருக்கிறேன் என்ற நிம்மதியோ, மகிழ்ச்சியோ அல்லது பயண களைப்போ அடுத்த ஐந்து நிமிடத்தில் தூங்கிப் போனாள்.

***********

கோயம்புத்தூர் ஃப்ளைட் எத்தன மணிக்கு?” லக்கேஜ் எடுத்து டிராலியில் வைத்துக் கொண்டிருந்த என்னிடம், ஃபோன் பேசிக் கொண்டே என்னிடம் இருந்து விலகி சென்ற மது, திரும்ப என் அருகில் வந்து கேட்டாள்.

“10.45!!” அவளை கண்டுகொள்ளாமல், அடுத்த விமானத்துக்கு போர்டிங் போட, டிராலியை தள்ளினேன்.

இன்னும் ஃபோர் அண்ட் ஹாஃப் ஹவர்ஸ் இருக்கா?” என்று என்னை உரசியவாறு, நான் தள்ளிக்கொண்டு சென்ற டிராலியில் அவள் கை பையை வைத்தாள். நான் டிராலியை தள்ளுவதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்து முறைத்தேன்.

பீச் போலாமா?” என் முறைப்பை சட்டை செய்யாமல் கேட்டவளை, “கிறுக்கா உனக்கு?” என்பது போல் பார்த்தேன்.

பிளீஸ்!! பிளீஸ்!!பிளீஸ்!! எனக்கு உன் கூட பீச்க்கு போகணும்னு ரெம்ப நாள் ஆசை!!” என் கையை பிடித்துக் கொண்டு கெஞ்சினாள், நிறைய உற்சாகத்துடன் சிறு குழந்தையைப் போல,

முதல்ல!! என் கைய விடு!!” அவளது கண்களில் இன்று மதியத்தில் இருந்து இருந்த, கெஞ்சல் இல்லாமல் போகவே, விரைப்பாக அவளப் பார்த்து முறைத்தேன். எனது முறைப்பும், சொற்களும் தனது வேலையை சரியாக செய்ய, அவளது உற்சாகம் எல்லாம் வழிந்தோடியது.

பிளீஸ்!! பாப்பா!! பிளீஸ்!!பிளீஸ்!!” என்று மீண்டும் கெஞ்சியவள், என் முறைப்பின் கணம் கூடுவதை கண்டு

சாரி!!” தலையை குனிந்து கொண்டாள்.

டைம் இல்ல!!” அவள் வாடிய முகத்தை பார்க்க முடியாமல், என் விரைப்பை தளர்த்தினேன்.

டிரைன்ல போலாம், நாப்பது நிமிஷம் தான் ஆகும்!! ஒரு டென் மினிட்ஸ் போதும் திரும்ப வந்துரலாம்!! பிளீஸ்!! பிளீஸ்!!பிளீஸ்!!” மீண்டும் கெஞ்சினாள்.

ரெம்ப டையர்டா இருக்கு மது!! என்னால லக்கேஜ் தூக்க முடியாது!! பிளீஸ்!!” என்னை அறியாமல் நானும் கெஞ்சினேன்.

நான் தூக்கிக்கிறேன்!! நீ சும்மா மட்டும் வா!!.... பிளீஸ்!!” விடுவதாய் இல்லை அவள். என் கிட் பேக் எப்படியும் ஒரு பதினைந்து கிலோ இருக்கும், அதுவும் போக என் துணிகளை வைத்திருக்கும் டிராலி பேக்கும் அதே கணம் இருக்கும்.

முடியலனு என்ன தூக்க சொன்ன, கடுப்பாயிருவேன்" நான் அவளை மிரட்ட, வாயெல்லாம் பல்லாக, டிராலியை தள்ளிக்கொண்டு வெளியே சென்றாள்.

**************

திரிசூலம் சப்-வெயில் இறங்கி, பின் ஏறும் போதே, என் இரண்டு பைகளை சிரமப்பட்டே தூக்கிக் கொண்டு சென்றாள். அவள் தான் சென்று டிக்கெட்டும் வாங்கி வந்தாள். எங்கள் ராசியோ, அதிஷ்டமோ, உடனே டிரைன் வந்தது. டிரைனில் எறியதுமே எனக்கு, எங்களது முந்தைய டிரைன் பயணம் நினைவுக்கு வர, என்னவோ போல் ஆகிவிட்டது, உணர்ச்சியில் கொந்தளித்த மனதை அமைதி படுத்த, சன்னல் ஓரத்தில் அமர்ந்தேன். முதல் வகுப்பில் டிக்கெட் எடுத்திருந்ததால், அதன் கூட்டம் இல்லாத, இருக்கைகள் குறைந்த விசாலமான சூழல் என் உணர்வுகளை மட்டுப்படுத்த பெரிதும் உதவியது.

எனக்கு ஃபலூடா சாப்பிடணும் போல இருக்கு!!” பத்து நிமிடம் கழித்து என்னைப் பார்த்து கூறினாள்.

என்ன வேணாலும் சாப்பிடு!! ஆனா பத்து நிமிஷத்தில் கிளம்பனும்!!” உறுதியாக சொன்னேன்.

எனக்கு தெரிஞ்ச ஒரு கடைல ஃபலூடா நல்ல இருக்கும்.........… பார்க் ஸ்டேஷன்க்கு வெளியில!!” கொஞ்சம் தயங்கி தயங்கி சொன்னாள்.

அடுத்த ஸ்டேஷன்ல இறங்குறோம், தீரும்பி ஏர்போர்ட் போறோம்!!” கடுப்பானேன். அமைதியாகிவிட்டாள். சிறிது நேரம் கழித்து, என்னை நெருங்கி அமர்ந்து என் கையை, ஆவள் கைகளால் கோர்த்துக் கொண்டு, என் தோளில் சாய்ந்தாள். நான் எரிச்சலில் "ப்ச்" என்றேன்.

என்னங்க!!” குழைந்தாள்.

(முன்பொரு முறை கல்யாணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில், நான் “மது நம்ம கல்யாணத்திற்கு அப்புறம், என்ன எங்கனு கூப்பிடுவியா? இல்ல என்னங்கனு கூப்பிடுவியா?னு" கேட்டதுக்கு "ம்ம்....எரும மாடுனு கூப்பிடுவேன்!!” என்று சொல்லி என் முதுகில் மொத்தினாள்).

அவளே தீடிர் என்று நான் எதிர் பார்க்கத நேரம் "என்னங்க!!” என்று கூப்பிட, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. திரும்பிக்கொண்டேன்.

எங்க பிளீஸ்ங்க!!” மீண்டும் அவள் காதோரம் கிசுகிசுக்க,

அவளிடம் இருந்து கையை விடுவித்துக் கொண்டு, சன்னலை நோக்கி திரும்பி அமர்ந்து கொண்டேன், வெக்கத்துடன். விரலால் அவள் என் முதுகை சுரண்ட, முகத்தில் இருந்த சிரிப்பை துடைத்துவிட்டு, விரைப்பாக்க திரும்பினேன். இன்னும் நான் விரைப்பாகவே இருப்பேன் என்று அவள் எதிர்பார்க்கவில்லை என்பதை வாடிய அவளது முகமே காட்டி கொடுத்து.

பாப்பா!! உண்மைலேயே சாரி டா!! நீ கூப்ட உடனே வந்திருக்கனும்!! சாரி டா!! அடுத்த ஸ்டேஷன்ல இறங்கலாம் டா!! உன் கால்ல வேணா விழுறேன்!!” அவள் கெஞ்ச

"உன் கால்ல வேணா விழுறேன்!!” என்ற வார்த்தைகளை என் மூளை பிடித்துக் கொண்டது. இறங்குவாள் என்று தெரியும், ஆனால் இவ்வளவு இறங்குவாள் என்று நானே நினைக்கவில்லை. மீண்டும் கண்களால் கெஞ்சினாள், எழுந்து நின்றேன், அவள் லக்கேஜை எடுக்க முனைந்தாள், தடுத்தேன், கேள்வியாக பார்த்தவளிடம்

கால்ல விழு!!” என்றேன் சிரிப்பை அடக்கிக் கொண்டு, நான் சொன்னதை நம்ப முடியாமல் பார்த்தாள், பின் நாங்கள் இருந்த கம்பார்ட்மெண்டை சுற்றிப் பார்த்தாள்.

சரி!! வேண்டாம்!!” என் சீட்டில் அமரப் பார்த்தேன்.

என் கைகளைப் பிடித்து நிறுத்தினாள். எவ்வளவோ முயன்றும், என் உதட்டோரத்தில், எட்டிப் பார்த்தது சிரிப்பு. மீண்டும் ஒரு முறை சுற்றிப் பார்த்தாள், இரண்டு மூன்று பேர், எங்கள் செய்கையால், எங்களை கவனித்துக் கொண்டிருந்தனர். எழுந்தவள், என் தோள்களில் இரு கையையும் கோர்த்து, ஏக்கி, அழுத்தமாக என் கன்னத்தில் முத்தமிட்டாள்.

முதலில் அவளது செய்கையில் அதிர்ந்த நான், பின் சுற்றிப் பார்க்க, சிறிய சலசலப்புடன் சிலர் எங்களை பார்த்து சிரிப்பதும், சிலர் அதிர்ச்சியில் வாயை பிளந்து பார்ப்பதை கண்டு வெட்கமாகிப் போனது எனக்கு. இவளோ, யாரோ யாருக்கோ முத்தமிட்டது போல் நிற்க, டிரைன்னும் நின்றது. என் லக்கேஜ் இரண்டையும் எடுத்துக்கொண்டு வேகமாக இறங்கி, வாயிலை நோக்கி நடந்தேன்.

*************

என் இதய துடிப்பு, என் நடையை விட வேகமாக துடித்தது. வாயிலை அடைந்ததும் எங்கு செல்வது என்று தெரியாமல் நிற்க

"சப்-வே க்ராஸ் பண்ணனும்!!" எனது ஷோல்டர் பேக்கையும், அவளது கை பையையும் தூக்கியவாறு, என் அருகில் நின்றாள் மது. அவளைப் பார்த்து முறைக்க, கண்டுகொள்ளாமல் எனக்கு முன்னால் நடந்தாள். அவள்தான் லக்கேஜ் தூக்கவேண்டும் என்ற நிபந்தனை எல்லாம் மறந்து, அவளை பின் தொடர்ந்தேன்.

இருபது நிமிடம் கழித்து, ரிப்பன் பில்டிங் அருகில் இருந்த ஒரு கடையில் ஃபலூடாவை ருசித்துக் கொண்டிருந்த மது, முறைத்துக் கொண்டிருந்தன் நான். முறைப்பதை உணர்ந்தாளோ என்னவோ, நிமிர்ந்து என்னைப் பார்த்தாள், ஒரு முத்தத்தை என்னை நோக்கி பறக்கவிட்டவள், மீண்டும் ஃபலூடாவில் மூழ்கிப்போனாள். “முடியல!!" என்று வடிவேல் போல் என் மனதில் சொல்லிக்கொண்டு, நானும் ஃபலூடாவை ருசிக்க ஆரம்பித்தேன்

டைம் ஆச்சு!! சீக்கிரம்!!” இரண்டாவது ஃபலூடாவை மெதுவாக சுவைத்துக் கொண்டிருந்தவளை, நான் அவசரப்படுத்த, அவள் அவசரமே காட்டாமல் பொறுமையாக சாப்பிட்டாள். பணத்தை அவள் தட்டில் வைக்க, ஹோட்டேல் பணியாளர் அதை எடுத்துச்சென்றார்.

பாப்பா!!” என் கையை பற்றி அழைத்தாள், நாள் முழுவதும் அவள் அப்படி அழைத்த போதெல்லாம் முறைத்த என்னிடம், இந்தமுறை எந்தவித எதிர்ப்பும் இல்லை. 

நான் கூப்டு போற இடத்துக்கு, எதுவும் சொல்லாம வருவியா?” நிதானமாக, நான் மறுக்க முடியாத குரலில் அவள் கேட்க, நான் தலையாட்டினேன்

அவள் "என்னங்க" என்று அழைத்த போதே, சகலத்தையும் இழந்த நான், அவளை என் எண்ணத்திற்கு ஆட்டி வைக்க வேண்டும் என்று போட்ட திட்டம் எல்லாமல், அவள் கொடுத்த முத்ததில் முழுதாக மூழ்கிப்போக, மொத்தமாக சரணாகதி அடைந்திருந்தேன். கோவைக்கு இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஃப்ளைட் என்பது எல்லாம் மறந்து போனது எனக்கு. அவள் லுக்கேஜை தூக்கிக் கொண்டு நடக்க, அவள் பின்னால் நடந்தேன் நான். சென்ட்ரல் ஸ்டேஷன்க்குள் நுழைக்கையிலேயே எனக்கு ஏதோ புரிவது போல் இருக்க, அங்கிருந்த போர்ட்டரிடம் லுக்கேஜை கொடுத்து "சேரன் எக்ஸ்பிரஸ்" என்று மது சொல்ல, பொட்டில் அறைந்தது போல் தெளிவானது எனக்கு

உணர்ச்சியில் கொதித்து கொண்டிருந்த என்னை அவள் கண்டுகொள்ளாமல், போர்ட்டரின் பின்னால் நடக்க, எங்கள் கம்பார்ட்மெனட்டை கண்டு பிடித்து, எங்களது கூபேயில் பெட்டியை வைத்துவிட்டு சென்ற, போர்ட்டரின் பின்னால் நானும் இறங்கி, பிளாட்பாரத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன். டிரைன் எடுப்பதற்கு இன்னும் முக்கால் மணி நேரம் இருக்கையில், மதுவுடன் கூபேயில் தனியாய் இருந்தால், என்னால் கட்டுபாடாக இருக்க முடியாது என்று நம்பியதால். சிறிது நேரத்தில் கையில் காஃபியுடன் வந்தாள் மது, எனக்கென்று அவள் நீட்டிய கோப்பையை வாங்கி குடித்தேன்

கோபப்பட்டேன் என்ற ஒரே காரணத்திரக்காக, அதிகாலை எழுந்து, இரண்டு விமானம் பிடித்து, என்னை சமாதானப் படுத்த ஆயிரம் கிலோமீட்டற்கு மேல் பயணம் செய்து, என் சிறுபிள்ளைத் தானமாக கோபத்தை எல்லாம் பொறுத்து, எனக்காக இவ்வளவு செய்பவளை பார்க்க, கண்கள் கலங்கியது. அப்படியே எழுந்து, அவளுக்கு முதுகுகாட்டி, சிறிது தூரம் நடந்தேன். கொஞ்சம் மனது சமநிலை அடைந்தது போல் இருக்க, மீண்டும் வந்து அவள் அருகே அமர்ந்து கொண்டேன்

என்ன டா?” என் தோளில் தடவியவாறு, காதல் பொங்க பார்த்தாள். ஒன்றுமில்லை என்று தாலாட்டி, ஆசை, ஆசையாய் அவளைப் பார்த்து, உதடு குவித்து ஒரு முத்தத்தை பறக்க விட்டேன். சிரித்தவள், என்னைப் பார்த்தும் ஒன்றை பறக்கவிட்டாள். மொத்த ரயில்நிலையமும் ஒரு வெளியில் இருக்க, நாங்க அந்த ரயில்நிலையத்திலேயே தனி வெளியில் இருந்தோம். என் மொபைலின் அழைப்பு மணி என்னை நிகழ் காலத்துக்கு இழுத்து வர, எடுத்து பேசினேன்.

என் அம்மா தான் அழைத்திருந்தார். என்னை ஏர்போர்ட்டில் இருந்த அழைத்து வர பணித்திருந்த ஓட்டுநரின் தகவலை அவர் சொல்ல, நான் இங்கு சென்னையில் தங்கிவிட்டு, காலையில் தான் புறப்படுவதாக சொன்னேன். எனது பயணத்தின் இந்த தீடிர் மாறுதலில் எரிச்சல் ஆணாவர், என்னை "எப்படியும் போ" என்று நேரடியாக சொல்லாமல் திட்டியவர் ஃபோனை வைத்துவிட்டார். என் மேல் சிறிது அக்கறை இருந்தாலும், தாத்தா, சொன்னபடி கோவைக்கு அன்று சாயுங்காலமே வந்துவிட்டதால், அவரை நான் காத்திருக்க வைத்ததால் வந்த கோபம் அவருக்கு. அம்மாவுடனான அந்த உரையாடல் என் உணர்வுகளை மட்டுப்படுத்தி விடவே, பழைய ஃபார்ம்க்கு திரும்பினேன் நான்

*************
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 01-11-2020, 12:45 AM



Users browsing this thread: 7 Guest(s)