Fantasy தாலி மட்டும் தான் கட்டினேன்
தாலி மட்டும் தான் கட்டினேன் - Ep26

ராஜாராம் ராகுலிடம் நடந்து கொண்ட விதத்தையும் கிஷோரிடம் நடந்து கொண்ட விதத்தையும் கண்டு உள்ளுக்குள் சந்தோசத்துடன்  "ஆ.. ஆமாப்பா" என்று புன்னகையுடன் ராஜாராமிடம் சொன்னாள்..

சரி கலை நான் கிளம்புறேன் என்று கிஷோர் அங்கிருந்து விடைபெற முற்பட..கலை அவனை செல்லமாக முறைத்து அவன் கையை பிடித்து அழுத்தினாள்.. "இருடா அதுக்குள்ளே உனக்கு என்ன அவசரம்" என்று கலை மெதுவாக அவனிடம் சொல்லிவிட்டு ராஜாராமிடம் திரும்பி "ப்பா!! மேல மாடிக்கு வாங்களேன்.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.."

கலை எதைப்பற்றி பேச அழைக்கிறாள் என்பதை ராஜாராம் உடனே ஊகித்துவிட்டு அடுத்த வினாடியே சோஃபாவில் இருந்து எழுந்து நின்றார்..

மஞ்சு: ஏய் தனியா? என்னடி தனியா? இங்க வச்சு பேச முடியாதோ?

ராஜாராம்: உன் முன்னாடி பேச புடிக்காம தான் தனியா பேசணும் ன்னு சொல்றா? கொஞ்ச நேரம் உன் ஓட்ட வாய மூடிக்கிட்டு உக்காரு.. நான் பேசிட்டு வந்து சொல்லுறேன்..

மஞ்சு முகத்தை திருப்பிக் கொண்டு முணுமுணுக்க, ராஜாராம் கலையை அழைத்துக் கொண்டு மாடிப்படி ஏறினார். அந்த ரம்மியமான மாலைப்பொழுதில் குளுமையான காற்று வீசிக்கொண்டிருக்க இருவரும் மொட்டைமாடிக்கு வந்ததும்,

"ப்பா!! ப்பா!! ஒரு நிமிஷம் இங்கயே இருங்க.. நான் கிஷோரையும் கூட்டிட்டு வந்துறேன்.. அவன் அங்க தனியா உக்காந்திட்டு இருப்பான்" என்றாள் கலை..

ராஜாராம்: "ஏன் கிஷோர் என்ன குழந்தையா? தனியா இருக்க மாட்டாரா??"

கலை உதட்டை பிதுக்கி "ப்ப்பாஆஆ!! பாவம் ல ப்பா!! தனியா உம்முன்னு உக்காந்திட்டு இருப்பான். இந்த அம்மா வேற வந்ததுல அவனை முறைச்சிட்டே இருக்கு"

செல்லம் கொஞ்சும் தன் மகளின் அழகை ரசித்த ராஜாராம் புன்னகையுடன் "சரிம்மா போய் கூட்டி வா"

"ஈஈஈஈ..." என்று பற்களை காட்டிவிட்டு அங்கிருந்து கீழே ஓடி வந்தாள்.. அங்கே கிஷோர் பாவமாக திருவிழாவில் தொலைந்த குழந்தை போல அமைதியாக உக்காந்திருக்க, அந்த குழந்தையை கடத்த போகும் பிள்ளைபிடிப்பவர்கள் போல மஞ்சுவும் ராகுலும் அவனை முறைத்து முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இறக்கைகள் இல்லாத தேவதையாக அங்கு வந்த கலை அவன் கையை பிடித்து இழுத்து மாடிக்கு அழைத்துச் சென்றாள்.. தன்னுடைய கையை அவளிடம் விட்டுவிட்டு பின்னாலிருந்து அவளை ரசித்துக் கொண்டு, அவள் கூந்தல் முடிகளின் உரசல்களை முகத்தில் வாங்கிக் கொண்டு, அவள் பெண் வாசனையை நாசிக்குள் இழுத்துக் கொண்டு, அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று கொண்டிருந்தான்..

படிக்கட்டின் பாதியில் நின்ற கலை அவன் தோளை பிடித்து சுவற்றோடு சாய்த்தாள். சுடிதாரில் முட்டி நிற்கும் அவள் மார்பை கிஷோரின் நெஞ்சில் அழுத்தி அவன் மேல் சாய்ந்த கலை, இமைகள் பாதி மூடிய கண்களோடு அவனை காதலாக பார்த்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். 

"ஏய் கலை!! உங்கப்பா இல்லேன்னா உங்கம்மா யாராச்சும் வந்துட போறாங்க டி"

அவன் பதற்றத்தை சட்டை செய்து கொள்ளாமல் "எங்கப்பா க்கு உன்னை பிடிச்சுருக்கு டா, ப்ளீஸ் டா சீக்கிரமே எனக்கு புருஷனாகிரு டா" என்று அவன் உதட்டில் முத்தமிட்டாள் கலை..

"எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு டி, ஆனா உங்கம்மா க்கு என்னை கொஞ்சம் கூட பிடிக்கல போலருக்கு.."

"ஆமா அதுல என்ன சந்தேகம்.. ஆனா அப்பாக்கு பிடிச்சுருக்குல டா அது போதும்.. அப்பா இருக்குற வரைக்கும் எல்லாம் நல்லபடியா போகும், எந்த பிரச்சனையும் இல்ல டா" மறுபடியும் அவன் உதட்டில் மெல்லிய முத்தம் இட்டு மறுபடியும் அவன் கையை பிடித்து மாடிக்கு இழுத்துச் சென்றாள். மாடியின் ஒரு ஓரத்தில் அவனை நிற்க வைத்து "ஹேய் கொஞ்ச நேரம் இங்கயே நில்லு.. நான் அப்பா ட்ட பேசிட்டு உன்னை கூப்பிடுறேன்" என்றாள்..

அந்த மொட்டைமாடியின் மறுபுறத்தில் கம்பீரமே தனது யதார்த்தம் என்பது போல் நின்று சாலையை ரசித்துக் கொண்டிருந்த ராஜாராமின் அருகில் வந்தாள் கலை..

அவள் அருகில் வந்ததும், ராஜாராம் :"அந்த தம்பி பேரு என்னம்மா சொன்ன கிஷோரா?? தம்பி என்ன பண்றார்?"

"ஒரு பெரிய MNC கம்பெனி ல நல்ல சம்பத்துல வேலை ப்பா."

"ஓ அப்படியா?? சொந்தமா தொழில் வச்சு நடத்துனா நல்லா இருக்கும், சரி சரி அது ஒண்ணுமில்ல அப்புறம் கூட பாத்துக்கலாம்.. தம்பிக்கு சொந்த ஊரு சென்னையா?" என தொடங்கி குடும்பம் என தொடர்ந்து கிஷோரின் ஜாதகத்தை தவிர மற்ற அணைத்து விஷயங்களையும் கலை மூலமாக விசாரித்து முடித்தார்..

பேச அழைத்து என்னவோ கலை.. ஆனால் மகளின் மனதில் இருந்ததை படித்ததை போல் ராஜாராமே அனைத்தையும் பேசி முடித்தார்..

கேள்விகள் மட்டுமே இவ்வளவு நேரம் ராஜாராமிடம் இருந்து பெற்றுக் கொண்டிருந்த கலை அவரிடமிருந்து ஒரே ஒரு பதிலை மட்டும் பெறுவதற்கு ஆவலாக எதிர்பார்த்து அவர் கண்களை பார்த்து கொண்டிருந்தாள்.. ராஜாராம் எதுவும் கூறாமல் அந்த மாடியின் மற்றொரு மூலையில் சுவற்றில் லேசாக சாய்ந்து என்ன நடக்கிறது என்று புரியாமல் இவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த கிஷோரை பார்த்தார்.

ராஜாராமின் பார்வை தன் மேல் விழுந்ததும், காவலர் உடல்தகுதி தேர்வுக்கு நிற்பவனை போல சட்டென நிமிர்ந்து நின்றான் கிஷோர். அதை பார்த்ததும் ராஜாராம் சிரித்து விட்டு தன் மகளை பார்த்து புன்னகை பூத்தார்.. முகத்தில் சந்தோசம் தவழ அப்பாவின் வாயில் இருந்து சம்மத வார்த்தைகளை கலை எதிர்பார்த்துக் கொண்டிருக்க.. 

ராஜாராம் "சரிம்மா!!!" என்றார்.. சட்டென பாய்ந்து அவள் அப்பாவை கட்டிப்பிடித்து அவர் நெஞ்சில் புதைத்து கொண்டாள்.. அவளையும் மீறி கண்களில் இருந்து சில ஆனந்த துளிகள் எட்டி பார்த்தது.. கலையின் தலையை ஆதரவாக பிடித்து தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்ட ராஜாராம், கிஷோரை பார்த்து "ஏன் அங்கேயே நிக்குறீங்க!! வாங்க இப்படி" என்றார் அந்த கம்பீரம் மங்காத குரலோடு..

கிஷோர் அருகில் வந்ததும் "என் மக சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டா.. நீங்க என்ன சொல்றீங்க" என்று கேட்டார்.. ராஜாராமின் நெஞ்சில் தன் தலையை சாய்த்தவாறே சற்று திருப்பி ஓரக்கண்ணால் கிஷோரை பார்த்து "சொதப்பாம தைரியமா பேசுடா" என்று வேண்டிக் கொண்டாள்..

"எனக்கு உங்களை பிடிச்சுருக்கு ரொம்ப" என்று முதல்முறை கலையிடம் சட்டென உடைத்ததை போல காரசாரம் குறையாமல் அதே பாணியில் "எனக்கு உங்க பொண்ணை பிடிச்சுருக்கு ரொம்ப" என்று சட்டென உடைத்தான்.. 

கலை பெருமிதத்தோடு சிரிக்க,, ராஜாராம் "அப்புறம் என்ன மாப்ள.. நீங்க சொல்லிட்டீங்க, இதே மாதிரி உங்கப்பா அம்மாவையும் சொல்ல வைங்க.. மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்க்கலாம்" என்றார்..
Like Reply


Messages In This Thread
RE: தாலி மட்டும் தான் கட்டினேன் - by manaividhasan - 22-08-2020, 08:29 PM



Users browsing this thread: 4 Guest(s)