நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#22
"யாருக்காகவோ காத்திருந்தானோ வினோத் கூட இங்கதான் இருக்கான்.அப்புறம் யாருக்காக காத்திருந்தான். ஒருவேளை அது எனக்காக இருக்குமோ"என்று எண்ணினேன்.நினைக்கும் போதே கேவலமாகதான் இருந்தது.ஆனால் ஏன் நான் அப்படி நினைத்தேன் என்று எனக்கே தெரியவில்லை.

பிறகு பிரேயர் முடிந்தது.முதல் பீரீயட் அவன் கிளாஸ் தான் பார்த்துகொள்ளலாம் லேட்டா வந்தா வெளிய நிக்க வைக்கனும் அப்போதான் நான் யார்னு அவன் புரிஞ்சிக்குவான்.

ஸ்டாப் ரூமிற்கு சென்று நோட்ஸ்களை ஒருமுறை பார்த்துவிட்டு பிறகு விறுவிறுவென கிளாஸிக்கு சென்றேன்.அவன் இன்னும் வரவில்லை.

நான் வகுப்பெடுக்க தொடங்கி இருபது நிமிடம் கழித்து வந்தான்.மழையில் முழுதாக நனைந்திருந்தான்.என்னை பார்த்தது அதிர்ந்தது அவன் கண்களில் தெரிந்தது. அதிலிருந்து அவன் எனக்காக தான் காத்திருந்தான் என்பது தெளிவாக எனக்கு விளங்கியது.லேட்டாக வர காரணம் கேட்டேன் பஸ் வரவில்லை,லேட் என கதை சொன்னான்.

நான் உள்ளுக்குள் சிரித்துகொண்டேன்.அதை வெளிகாட்டிகொள்ளாமல் கேட்டேன்."எட்டரை மணியிலிருந்து பஸ்ஸே வரவில்லையா...?"என,அவன் திருதிருவென முழித்தான்.நான் அவன் தடுமாறுவதை ரசித்தேன்."இன்னைக்கு ஒருநாள் வெளியே நிக்க வச்சாதான்,இனிமே லேட்டா வரமாட்டே"என கூறியதும் அவன் முகத்தை பார்க்கவேண்டுமே பேயறைந்தது போல் ஆனான்.

பின் நான் வகுப்பெடுக்க சென்றுவிட்டேன்.அவ்வப்போது அவனை ஓரகண்ணால் பார்த்தேன்.அவன் பாவமாக நின்றிருந்தான்.ஆனால் அவன் மேல் எனக்கு இரக்கம் வரவில்லை ஒரு பெண்ணின் மரணத்திற்கு காரணமானவனை வதைக்கிறோம் என்ற குரூர மகிழ்ச்சிதான் எனக்குள் அதிகமாயிருந்தது.

முதல் பீரியட் முடிந்ததற்கு அடையாளமாக "ட்ரீங்"என்று ஒரு மணிசத்தம் கேட்டது.நான் நாளை வீக்லீ டெஸ்ட்க்கு படிக்க வேண்டியதை ஒருமுறை மாணவர்களுக்கு நினைவு படுத்திவிட்டு வெளியே வந்தேன். அவன் என்னையே பார்த்தான் நான் கண்டுகொள்ளாதது போல் முகத்தை ராணுவவீரன் போல் விறைப்பாக வைத்துகொண்டு ஸ்டாப்ரூம் நோக்கி நடந்தேன்.அதன் பிறகு அவனை அன்று இரண்டுமுறை பார்த்திருப்பேன்.அதன் பிறகு பார்க்கவில்லை.மாலை பள்ளி முடிந்ததும் மந்தாகினியுடன் ஸ்கூட்டியில் சென்றுவிட்டேன்.

வீட்டிற்கு வந்ததும் முகம் கழுவி காபிபோட்டு குடித்து அம்மாவுக்கும் கொடுத்துவிட்டு,காலையில் சமையல் செய்த பாத்திரங்களை கழுவினேன்.பின் யேதேச்சையாக காலண்டரை பார்த்தபோது இன்று சதுர்த்தி என்பது தெரிந்தது.முன்பெல்லாம் சதுர்த்தியின் போது குடும்பத்தோடு கோவிலுக்கு செல்வோம் அப்பொழுது ஏகபட்ட மகிழ்ச்சி இருந்தது ஆனால் இப்பொழுது வெறுமைதான் மிஞ்சியிள்ளது.அப்பா என் கையை பிடித்துகொண்டு "அம்மா இது சரஸ்வதி நல்லா கும்பிட்டுக்கோ,உனக்கு நல்லா படிப்பு வரும்" என்று ஒவ்வொரு தெய்வத்தின் பெருமையையும் கூறுவார். 
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 06-03-2019, 11:39 AM



Users browsing this thread: 2 Guest(s)