நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#20
அத்தியாயம் 6:


பூம்பொழில் டைரியிலிருந்து:

அலாரம் அந்த அமைதியை கிழித்து கொண்டு அலறியா அந்த அதிகாலை 5 மணி 30வது நிமிடம் அரைதூக்கத்தில் இருந்த நான் கண்களை கசக்கி கொண்டு எழுந்தேன். விடியாமலே இந்த உலகம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என எண்ணிக்கொண்டேன்.

ஓட்டின் மீது விழுந்த "தட்..தட்...தட்"என சத்தம் மழை நான் இன்னும் நிற்க வில்லை என சத்தியம் செய்தது சாரல்காற்று முகத்தில் அடித்து ஒரு வித சுகத்தை தந்தது.எழுந்து சென்று பல்துலக்கி, குளித்து விட்டு ,காபி போட்டு குடித்து அம்மாவுக்கு கொடுத்து விட்டு, சமையல் செய்து சாப்பிட்டு அம்மாவை சாப்பிட்ட சொல்லிவிட்டு,வாசலில் வந்து செருப்பை மாட்டிதிரும்பிய போது மணி எட்டு இன்னும் தூறல் போட்டு கொண்டிருத்தது. "ஸ்கூலுக்கு கிளம்பிட்டியாமா"பின்னால் அந்த குரல் கேட்டது திரும்பி பார்த்தேன்.சந்திரசேகர் அங்கிள் நின்று கொண்டிருந்தார்.

"வாங்க அங்கிள்...!"


"ஸ்கூலுக்கு கிளம்பிட்டீயாமா...?


"ஆமா அங்கிள்"


"ஒன்னும் இல்லம்மா.பக்கத்துல சொந்தகாரங்க வீடு இருக்கு அவங்கள பார்த்துட்டு அப்படியே உங்களையும் பார்த்து விட்டு போலாம்னு வந்தேன்.


சந்திரசேகர் அங்கிள் மிக நல்லவர்,அப்பாவின் உயிர் நண்பர்.எங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.ரிட்டயர்டு ப்ரம் ஆர்மி.அப்பா இறந்த பின் எனக்கு அப்பா மாதிரி இருப்பவர்.கடன் காரர்கள் தொல்லை செய்த போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை புரியவும் இல்லை அந்த இக்கட்டான சமயத்தின் போது எங்களுக்காக பேச கூட ஆளில்லை எங்களுக்காக பேசி அந்த கொடுமையான நிகழ்வுகளிலிருந்து எங்களை வெளியே கொண்டு வந்தவர்.


"உள்ளே வாங்க அங்கிள்"


"இல்லம்மா நான் சும்மாதான் வந்தேன் அப்புறம் இந்தா..."என்று பாக்கெட்டில் கை விட்டு ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார்.


"அங்கிள் இது..."நான் தயங்கினேன்.


"வாங்கிக்கோமா உங்க செலவுக்கு வச்சிக்கோமா"


"அங்கிள் ரொம்ப நன்றி ஆனா இது வரை நீங்க செய்த உதவிக்கு நான் என்ன கைமாறு செய்ய போறேன்னு தெரியல இதுல இது வேற வேண்டாம் அங்கிள் என்னை மேலும் மேலும் தர்மசங்கட படுத்தாதீங்க"


"இதுல என்னம்மா தர்மசங்கடம் நீ என் பொண்ணு மாதிரி உனக்கு உதவாம நான் வேற யாருக்கு உதவ போறேன்.உனக்கு ஹெல்ப் பண்றதுல எனக்கு ரொம்ப சந்தோசம் ஒரு ஆத்ம திருப்தி.உங்கப்பா..."


"அங்கிள் போதும்.நீங்க என்ன சொன்னாலும் கேட்க மாட்டிங்க அப்புறம் நானும் உங்கப்பாவும் னு ஆரம்பிச்சிங்கனா இன்னிக்கு ஃபுல்லா பேசிட்டே இருப்பிங்க.கொடுங்க வாங்கிக்கிறேன்"


"ம்ம்...அப்படி வா வழிக்கு"
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 06-03-2019, 11:37 AM



Users browsing this thread: 1 Guest(s)