கதை படிப்பவர்கள் கவனத்திற்கு
#1
நண்பர்களே கதை.படிப்பவர்கள் தயவு செய்து கதை பற்றிய உங்கள் பின்னூட்டத்தை பதிவு செய்யுங்கள். 

குறைந்த aபட்சம்  இந்த இடம் எனக்கு பிடித்திருக்கிறது எனக்கு பிடிக்கவில்லை என்றாவது பதிவிடுங்கள் பிச்சை எடுப்பது போல கமெண்ட் பிச்சை கேட்குறான் என்று.நீங்கள் நினைத்தாலும் பரவா இல்லை.

2 முதல் 3  மணி.நேரம் கதை எழுதி அதை பதிவிட்ட பிறகு நீங்கள் கூறும் கருத்து இதோ. 

Awesome update good narration continue

Waiting for next update

தொடருங்கள் சகோ

Please update quickly

Update?

Super story. Please continue.

sema.super. next enna.

continue.

adutha padhivu eppodhu nanbane.



ஏன் நண்பா இந்த கஞ்சத்தனம். இதற்கு.மேல் கதையை பற்றி மேலும் இரண்டு வரிகள் எழுதினால் உங்களுக்கு மரியாதை இழுக்கு ஏற்பட்டு விடுமா,இல்லை உங்களிடம் பணம் கேட்பார்களா. 
 உங்களை கதைக்கு ஜால்ரா அடிக்க சொல்லவில்லை. நீங்கள் படித்ததில் நன்றாக இல்லை, நன்றாக இருக்கிறது என்று சொன்னால் மட்டுமே கதை மெருகேறும். 

நீங்கள் படித்த கதை.பற்றி கருத்து கூற கூட உங்களுக்கு நேரம்.இல்லையா. உங்கள் கருத்துக்களால் பல நல்ல.கதைகள் பிறந்ததும் இங்கே தான்,நல்ல கதை ஆசிரியர்கள் பாதியிலே கதையை விட்டு விட்டு தொடராமல் போனதும் இங்கே தான்.

தயவு செய்து அப்டேட் கேட்பதை விடுத்து கதை பற்றிய உண்மையான கருத்தை பதிவிடுங்கள். நீ எத்தனை கதைக்கு நீ சொல்வது போல கருத்து சொல்லி இருக்க என்று நீங்கள் கேட்கலாம்.


இன்றில் இருந்து நானும் நான் படிக்கும் கதைகளுக்கு பின்னூட்டம் இடுகிறேன். நாம் மாறினால் தான் இங்கு பாதியில் கைவிடப்பட்ட பல கதைகள் உயிர் பெரும்.

இல்லை எனக்கு பின்னூட்டம் இட தெரியாது. எனக்கு தெரிந்த பின்னூட்டம் super continue தான் என்றால் கடைசி வரை super continue தான்.
[+] 6 users Like tamillmadhi's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
கதை படிப்பவர்கள் கவனத்திற்கு - by tamillmadhi - 06-08-2020, 11:32 PM



Users browsing this thread: 1 Guest(s)