நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#18
ஏற்கனவே போதையில் இருந்த நான் மேலும் போதையானேன்.

"ஏதோ கேக்கனும் னு சொன்னில்ல இப்ப போய் கேளு"என்றான்.

நான் அவனை பார்த்தேன்.அவளையும் பார்த்தேன்"எனக்கு என்னடா பயம் இப்ப போய் கேக்குறேன் பார்!"என சொல்லி அவளை நோக்கி சென்றேன்.

கோவிலில் அன்று அவ்வளவு கூட்டம் இல்லை.இரண்டு பிச்சைகாரர்கள் வலதுபுறமும் இடது புறமும் அமர்ந்திருந்தனர்.நான் இடதுபுறம் எனது செருப்பை அவழ்த்துவிட்டு உள்ளே சென்றேன்.இடதுபுறம் அமர்ந்திருந்த பிச்சைகாரன் என்னை நோக்கி தட்டை நீட்டினான்.அவனுக்கு பிச்சை போடும் எண்ணத்தை கை விட்டேன்,என்னவள் என்னை மீண்டும் ஏமாற்றி விட்டு வேறு வழியில் சென்றுவிடுவாள் என்ற பயத்தால் அவனை புறக்கணித்து விட்டு உள்ளே நடந்தேன்.அவள் வரவேற்பறையில் இருந்த பிள்ளையாரை கண்மூடி பிரார்த்தனை செய்துகொண்டிருந்தாள்.

அவள் அழகுக்கு இந்த உலகில் ஈடு இணையே இல்லை எனக்கு தோன்றியது அவள் மூக்கின் நுனியில் இருந்த வியர்வை துளி ரோஜாவின் இதழில் இருக்கும் பனிதுளி போல் இருந்தது.

நான் அவளையே பார்த்து கொண்டிருந்தேன்.பின் கண்களை திறந்தவள் என்னை பார்க்கவே இல்லை.அப்படியே திரும்பி நடந்தாள் நான் அவள் பின்புறத்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்தேன்.வினோத் என்னருகில் நின்றிருந்தான்.

"என்னடா ஏதோ கேக்கபோறேன் சொன்னே அப்படியே வெறிச்சி போய்நின்னுட்ட எதையோ பார்த்து பயந்துட்டியா"என்றான்.

எனக்கு பட்டென்று ஒரு யோசனை தோன்றியது.முதலில் வினோத்தை பேச சொல்லலாம்.பிறகு அவனை சாக்காக வைத்து நாம் பேசலாம்.

நான் வினோத்திடம் சொன்னேன்.அவன்"அய்யய்யோ என்னால முடியாது.ஆளவிடு சாமி"என்று நழுவ பார்த்தான்.

"டேய்,நீ இப்ப போய் பேசலனா நான் உன் கூட எப்பவும் பேசமாட்டேன்" என்றேன்.
இதை சொன்னால் போதும் வினோத் எனக்காக எதை வேண்டுமானாலும் செய்வான் என் நண்பன்.ஏன் என்றால் அவனுக்கு என்னை அவ்வளவு பிடிக்கும்.
அவனும் நானும் அவள் பின்னாலே சென்றோம்.நாங்களும் அவள் ஒருமுறையாவது திரும்புவாள் என நினைத்து நினைத்து ஏமாந்ததுதான் மிச்சம்.அவள் திரும்பவே இல்லை அவள் கர்ப்பகிருகத்திற்கு உள்ளே சென்றாள்.நாங்களும் சென்றோம் அவள் அர்ச்சனை தட்டை ஐயரிடம் கொடுத்து கண்மூடி நின்றாள்.நாங்கள் அவள் முன்பு சென்று நின்றோம்.அவள் கண்களை திறந்தாள் எங்களை பார்க்கவேண்டும் என்பதற்காக.அவள் கண்களை திறந்து எங்களை பார்க்கவில்லை.திரும்பி சாமியை பார்த்து கன்னத்தில் தப்பு போட்டுகொண்டாள்.

அவள் எங்களை பார்த்தாளா இல்லை வேண்டுமென்றே நடிக்கிறாளா என்றே தெரியவில்லை.திரும்பி வந்த ஐயரிடம் அர்ச்சனை தட்டை வாங்கி கொண்டு திரும்பிபார்க்காமல் நடந்த அவள் மேல் எனக்கு கோபம்கோபமாய் வந்தது.

ஏன் இந்த மாற்றம்,இவளுக்கு என்னாயிற்று ஏன் என்னை வெறுக்கிறாள்.அதற்கு மேல் என்னால் அவள் பின்னால் செல்ல விருப்பம் இல்லை.வினோத்திடம் "வாடா போலாம்"என்றேன்.

நாங்கள் புறப்பட ஆயத்தமான போது சட்டென அவள் திரும்பினாள்.எங்களை நோக்கி வந்தாள்."நீ வினோத் தானே 11D "என்று வினோத்தை பார்த்து கேட்டாள்.நன்றாக கவனியுங்கள் வினோத்தை பார்த்து என்னை அவள் பார்க்கவே இல்லை.எனக்கே ஒரு சந்தேகம் நாம் அவள் கண்ணுக்கு தெரிகிறோமா என்று ஒரு ஒப்புக்கு கூட என்பக்கம் அவள் திரும்ப வில்லை.

வினோத் "ஆமா டீச்சர் உங்ககிட்ட பேசத்தான் நாங்கள் வந்தோம் ஆனால் நீங்கள் அப்ப பார்க்கவே இல்ல."என்றான்.

"ஸாரிப்பா நான் சரியாக கவனிக்க வில்லை.உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று யோசித்து கொண்டே இருந்தேன் அப்புறம் தான் ஞாபகம் வந்தது"என்றாள்.
.
"இட்ஸ் ஓகே மிஸ்"என்றான்.அவள் என்னை பார்ப்பாள் ஏதாவது கேட்பாள் என்று நினைத்தேன் ஆனால் அவள் கண்டுகொள்ளவே இல்லை.நான் வினோத்திடம் "டேய் நான் கிளம்பறேன் நீ வரியா இல்லையா"என கேட்டேன்.

இப்பொழுதுதான் அவள் என்னை பார்த்தாள் கேவலமான பார்வை.வாசலில் இருந்த பிச்சைகாரனை நான் பார்த்தது போல்,தெருவில் குப்பையை மேயும் நாயை பார்ப்பது போல் "இவன் யாரு உன் ஃபிரண்டா நம்ம ஸ்கூல்லயா படிக்கிறான்"என்றாள்.

நான் அதிர வில்லை இதை அவள் கேட்பாள் என்று எனக்கு தெரியும்.அதற்கு முன் போய்விடலாம் என நினைத்தேன்.ஆனால் கேட்டுவிட்டாள் என் என்பது ரூபாய் வேலை செய்ய ஆரம்பித்தது. நான் கோபமாக அவளை பார்த்து கேட்டேன்."உங்களுக்கு என்னை நிச்சயமாய் தெரியாது..?"என்று கேட்டேன்.

அவள் "தெரியாததால் தான் கேட்டேன்" என்றாள்.உடனே நான்"நேற்று காலை பஸ்ஸில் உங்களை உரசிகொண்டு வந்தேனே அவன் நான்தான்.என் பெயர் ஜெய்.உங்களுக்கு என்னை தெரியும் ஆனால் நீங்க நடிக்கிறீங்க.டேய் !நான் போறேன் நீ வந்தா வா இல்லனா போ" என கூறிவிட்டு விறு விறு வென நடந்தேன்.
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 05-03-2019, 09:57 AM



Users browsing this thread: 1 Guest(s)