அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 19

அவனின் பதினெட்டாவது பிறந்தநாள் அன்று

காலையில் அஞ்சு மாணிக்கே, எழுந்து, நெதராக்கு ஃபோன் அடிக்க, எடுத்தவுடன் திட்டியவள், பின்பு

"டிரைன்ல இருந்தோமே,,,அந்த மாதிரி ஒரு ரெண்டு நாள், என் பாப்பாவா இருக்கனுமாம் சாருக்கு,  நைட் சொன்னான், டீ"னு சொல்ல, சிரித்தவள்

“என்னடி ஆடு அதுவா வந்து அறுங்குது!”னு சொல்லி சிரிக்க

“அறுத்துருவோம்!”னு நான் பதிலுக்கு சொல்லி சிரிக்க, சிரிப்பு நின்றதும்

“பானு!, என்ன நடந்ததாலும் சரி, கண்ட்ரோல் ரொம்ப முக்கியம், பிளான் நல்லா நியாபகம் இருக்குல?”னு கேக்க,

“இருக்குடி!”

“இங்க பாரு பானு!, நானே லவ் பண்ணாக்கூட இப்படி பிளான் பண்ணுவனானு தெரியாது, ரெம்ப யோசிச்சுறுக்கேன், இன்னைக்கி மட்டும் நீ சொதப்புன, நான் மனிஷியாவே இருக்க மாட்டேன்!”னு சொல்ல, நான் நன்றியோடு

“தாங்க்ஸ் டீ"னு சொல்ல

“உன் தாங்க்ஸா, நம்ம பிளானா சக்ஸஸ் பண்ணிட்டு வந்து சொல்லு, அப்போ அக்சப்ட் பண்ணுறேன்”

“ஓகே"

“சரி, கிளம்பு, டைம் அச்சு!”அவ சொல்ல, ஓகேனு சொல்லி நான் வைக்கப் போக

“ஏய்"னு சத்தம் கேட்டு, திரும்பவும் ஃபோனை காதில் வைக்க

“இருக்கியா?”னு அவள் கேட்டதுக்கு, “ம்" கொட்ட

“முக்கியமான விஷயத்த மறந்துட்டேன், "ஹாப்பி கன்னி கழியிற டே!”னு சொல்லி அவள் சிரிக்க

“ச்சீ, கண்டிப்பா கல்யாணத்துக்கு அப்புறம் தான் அவனுக்கு பொங்கல்!, இப்போ எனக்கே கான்ஃபிடன்ஸ் வந்துருச்சு, சோக பால் கூட தேவை இல்ல, பாச பால்னு, ஒரு புது பிளான் இருக்கு, அதவச்சே விக்கெட் எடுத்துருவேன்"னு சொல்லி, சிரிக்க

“ஹா,,,,,, ஹா,,,,, ஹா,,,,,, பார்டா , நீ எந்த பாலையும் யூஸ் பண்ணு, ஆனா தயவு செய்து விக்கெட் எடுத்துரு!. பானு, ஓவர் கான்ஃபிடன்ஸ் நமக்கே அப்படிக்கும், எதுக்கும் நீ எல்லாத்துக்கும் ரெடியா இரு, டேப்லெட் போட்டுக்கோ, ஒரு சேஃப்டிக்கு”னு அவள் சீரியஸ்ஸா சொல்ல  

“ம்" கொட்டி, ஃபோனை வைத்து விட்டு, வெட்கத்தோடு பாத்ரூம் சென்றேன்.

ஹேர் ரிமூவர், ஸ்ப்ரே வைத்து அடித்து, சிறிதாக முளைத்திருந்த முடிகளையும், ஷவர் திறந்து நீக்கி விட்டு, அதை உறுதி செய்து, திருப்தி ஆனதும், மீண்டும் ஷவரில் நனைந்து கொண்டு நேத்ராவின் பிளானை மனதில் ஓடவிட்டேன்.

குளித்து முடித்து, டிரஸ் பண்ணி, கொஞ்சமா மேக்கப் பண்ணி, ஓகேனு திருப்தி ஆனதும், கிளம்பினேன். அம்மா சாப்பிட சொல்ல, வேண்டாம்னு சொல்லிட்டு, சேஃப்பா டிரைவ் பண்ணு சொல்லியவளிடம், டாடா கட்டிவிட்டு, காரை ஸ்டார்ட் செய்து, கால் பன்னினேன் அவனுக்கு          

“ஹலோ"னு அவன் சுரத்தே இல்லாமல் சொல்ல, என்னவா இருக்கும் என்று நினைத்தவாறே  

“என்னடா பர்த்டே பேபி,,, ரெடியா? இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்"னு நான் சொல்ல

“15 மினிட்ஸ்"னு, எனக்கு முதல் சான்ஸே குடுத்தான், அவனை வறுத்தெடுக்க.    

“இன்னும் பதினஞ்சு நிமிசமா?”னு கோபத்தோடு கேக்க

“பின்ன, நீ சொன்ன மாதிரி வேஷ்டி கட்டனும்னா டைம் ஆகும்,,,, பாண்ட் ஓகேனு சொல்லு இப்போவே கீழ வாறேன்"னு அவனும் கோபத்தோடு சொல்ல, “கொஞ்சம் பொறுமை, அவசரம் கூடாதுனு" எனக்கு நானே சொல்லிக் கொண்டு  

“ஒண்ணும் வேண்டாம், கூட ஃபைவ் மினிட்ஸ் கூட எடுததுக்கோ, பட் வேஷ்டி தான்"னு சொல்ல, நான் ஃபோனை வைத்து காரை அவன் வீட்டை நோக்கி விட்டேன்.

ஐந்து நிமிடம் கழித்து, அவன் வீட்டுக்குள் நுழைய, சுமா ஆண்ட்டி தான் இருந்தார்கள், அங்கிள் பிஸினஸ் ட்ரிப் போயிருந்தார்.

“என்னமா?, இன்னைக்கு சரீ?”னு சுமா ஆண்ட்டி கேக்க

“மணி பர்த்டே ஸ்பெஷல், நல்லா இருக்கா?”னு கேட்டு, பவசே குடுக்க, என் அருகில் வந்தவள், இரு கைகளால் என் முகத்தை சுற்றி, நெட்டி முறிததவள்

“உனக்கே தெரியாத?, என் கிட்ட கேக்கணுமா?”னு சொல்ல, சந்தோஷமானேன், பசிப்பது போல இருக்க,

“ப்ரேக்ஃபாஸ்ட் ரெடியா?”னு கேட்டு, டைனிங் டேபிளில் அமர, அவர்களும் என் அருகில் அமர்ந்து கொண்டார்கள்.    

பத்து நிமிடம் கழித்து, விசில் சத்தத்தை கேட்டதும், அவன் தான் என்று தெரிந்து,  சிரித்தவாரே அவனைப் பார்த்தால், அடுத்த சான்ஸ், இத விடக்கூடாதுனு முடிவு பண்ணி
கோபமாக

“உன்ன நான் வேஷ்டி தான கட்டச் சொன்னேன்"னு, கேக்க,

கண்டுகொள்ளாமல் என் தலையில் தட்டிவிட்டு, டைனிங் டேபிளில் உட்கார்ந்து, இட்லிய எடுத்து ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு, நிமிர்ந்து பார்த்தான், நான் அவனையே முறைத்துக்  கொண்டிருந்தேன் . ஒரு பெரும் மூச்சு விட்டவன்    

“பழனிக்கு போன உடனே கட்டுறேன், கோவிலுக்கு வேஷ்டியோட தான் வருவேன்"னு கெஞ்ச, தலையை இருபக்கமும் ஆட்டியவாறு முறைத்துக் கொண்டே இருந்தேன்,

“ஃபர்ஸ்ட் டைம் கட்டுறேன் மது!,,, அவுந்துருமோனு பயமா இருக்கு, அசிங்கமாயிரும்!”னு

அழுவதைப் போல சொல்ல, அதுக்கு மேலும் கோபமாக இருப்பது போல் நடிக்க முடியவில்லை, வந்த சிரிப்பை மறைக்க சாப்பிட ஆராம்பித்தேன். இருவரும் சாப்பிட்டு விட்டு, காரை நோக்கி செல்லும் போது    

“இந்த பட்டு சாரீல நீ ரெம்ப அழகாக இருக்க, என் கண்ணே பட்டுரும் போல"னு சொல்லி, அவன், அவன் அம்மாவைப் போலவே செத்தைப் போல செய்து எனக்கு நெட்டி முறிக்க, சந்தோஷம் தாளாமல் சிரித்தேன், ஆனால் அவனை திரும்பிக்கூட பார்க்கவில்லை,

“உன் சாரீயும் வயலெட், என் ஷர்ட்டும் வயலெட், சேம் பினச்", னு சொல்லி என்னைக் கிள்ளி அவன் குடுத்த அடுத்த சான்சையும் சரியா யூஸ் பணனேன், அவனைப் பார்த்து முறைத்து.  

“செம்ம கோவத்துல இருக்கேன், பேசாம மூடிக்கிட்டு கார்ல ஏறு!”னு சொல்ல,

முஞ்சை தொங்கப் போட்டுக் கொண்டு, மறு பேச்சு பேசாமல் காரில் ஏறி சீட் பெல்ட் அணிந்து கொள்ள, காரை பழனி நோக்கி விரட்டினேன். எதுவும் பேசாமல், பாவம் போல் அமைதியாக இருக்க, கொஞ்சம் அதிகமா போறோமோ? நினச்சுக்கிட்டு

“என்னடா ஒண்ணுமே பேசாம அமைதியா இருக்க?”னு, கொஞ்சம் பேச்சுக் குடுத்தேன்  

“நீ தான மூடிக்கிட்டு இருக்க சொன்ன?”னு, அவன் எகிற, ஓகே பிளான் கரெக்ட்டா போகுது, கொஞ்சம் விட்டு பிடிப்போம்னு, மனசுல நினச்சுக் கிட்டு  

“மூடிக்கிட்டு கார்ல ஏறத்தான் சொன்னேன், கார்ல மூடிக்கிட்டு இருக்க சொல்லல!”னு  காரம் குறையாமல் திருப்பி அடிக்க

“நான் அந்த ஜினாலிய ட்ரை பண்ணுறத விட்டுறலாம்னு இருக்கேன்"னு அவன் சொல்ல, என் உள்ளம் கொண்டாட்டம் போட, "கண்ட்ரோல்! கண்ட்ரோல்!னு" சொல்லி என்னை அடக்கிக் கொண்டு,

“என்ன இந்த திடீர்னு இப்படி சொல்ற, அந்த புள்ளைக்கு தெரிஞ்ச ஏங்கிர மாட்டா? “னு நாக்கலாக கேட்டேன், அவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க

“என்னடா பிறந்தநாளும், அதுவுமா அறிவு வந்துருச்சா?”னு மீண்டும் சீண்ட

“நீ அன்னைக்கு சொன்னது கரெக்ட் தான்!, வயசு அதிகமா இருந்தா ஓவர் டாமினேஷன் இருக்கும்னு!!.., உன்ன கட்டிக்கிட்டே அழமுடியால!, இதுல லவ் பண்ணுற பொண்ணும் டாமினேட் பன்னா, நான் கிறுக்கு பிடிச்சுத் தான் சுத்தனும்!”னு சொல்ல, நேத்ராவோட ஃபர்ஸ்ட் பிளான் நல்ல வொர்க்அவுட் ஆகியிருக்குனு சந்தோஷப்பட்டு

“நீ நல்ல இருக்கணும்னு அட்வைஸ் பன்னினா? டாமினேஷன்னா?”னு சும்மா கிண்ட

“நீ அட்வைஸ் பண்ணி, அட்வைஸ் பண்ணி, என்ணையே லவ்வே பண்ணவிட மாட்டே போல!”னு அலுத்துக்கொண்டான்,

இன்னைக்கு மட்டும் பொறுத்துக்கோ பாப்பா!, நைட் உன்ன கண்டிப்பா மடக்கிருவேன், நாளைல இருந்து நம்ம ரெண்டு பெரும், ஒரே லவ் தான்,  கொஞ்சல் தான்! மனசுக்குள்ளே அவனை கொஞ்சிக் கொள்ள, அவனை அனைத்துக்கொள்ள வேண்டும் போல இருக்க, அடக்கிக் கொண்டு ஒரு கையை அவன் தோள்களில் வைத்துக் கொண்டு, வண்டியை ஒட்டினேன்.  
 
அதுக்கப்புறமும், அவனை சீண்டி வெறுப்பேத்த, ஒரு கட்டத்தில், நான் என்னா சொன்னாலும், பதிலே பேசமா இருக்க,    

“ஓய்"னு ஆசையா கூப்பிட, என்னைப் பார்த்து முறைத்தான், அவன் முறைப்பை பார்த்ததும்,  இன்னும் இவன் அடங்கல, கொஞ்சம் அடிக்கலாம்னு தோண  

“என்னதான் உன் பிரச்சனை?, சும்மா சும்மா முறைக்க?”னு நானும் முறைத்தேன், அவ்வளவுதான், படுத்தே விட்டான்.          

“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லமா, பிறந்தநாளும் அதுவுமா உன்கிட்ட எதுக்கு மூக்குடைபட்டுக் கிட்டே இருக்கனும்னு, அமைதியா இருக்கேன், போதுமா! நீங்க ரோட்ட பாத்து ஓட்டுங்க!”னு சொல்லி, கை எடுத்து கும்பிட, அப்பவே காரை நிறுத்தி விட்டு, அவனை அனைத்துக் கொள்ள வேண்டும் போல் இருக்க, மனசு முழுக்க காதலுடன்  

“அய்யோ,,,,,,,பாவம்,,,,,,,இன்னைக்கு ரெம்ப ஓவரா போறேனோ!”னு அவனை கொஞ்ச  

“தெரிஞ்ச சரி!”னு முனங்கினான். முத்தமிட வந்த ஆசையை அடக்கிக் கொண்டு, அவன் கன்னத்தை கிள்ளி  

“சரி, சரி,,,,,,பிறந்தநாளும் அதுவுமா முஞ்ச தூக்கி வச்சுக்காத!,,, என் செல்லம்ல!", கொஞ்ச, அவன் வழிந்து கொண்டே

“உண்மையிலேயே ஒரு பொண்ணு என்கிட்ட இன்ட்ரோ குடுக்க சொல்லி கேட்டுச்சா?”னு  கொஞ்ச நேரம் முன்னாடி எங்களுக்குள் நடந்த உரையாடலில், நான் சொன்னதை பிடித்து கொண்டு, அவன் கேக்க, கடுப்பானேன்,

"ஏண்டா, இங்க ஒருத்தி உன்னையவே நினச்சு சுத்தி சுத்தி வந்தா, அதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியாதா?”னு மனசுக்குள்ள நினச்சுக்கிட்டு,      

“இன்னைக்கு நைட் அவள கூப்புடுவோம்,,, வந்தா இத நீ அவள்டா கேட்டுக்கோ!”னு  சிரித்தவாரே கூற, அமைதியானான்
   
"அவளுக்கு உன்ன பிடிச்சிருக்குனு நினைக்கேன்,,,யாருக்கு தெரியும் லவ் கூட பண்ணுறாளோ? என்னவோ?”னு நான் மறுபடியும் அவனை சீண்ட (அந்த அவளும்  நான்தான்!, மனசுக்குள்ள சொல்லி கொண்டு)

“அவ பேரு என்ன?”னு ஆர்வத்தில் அவன் கேக்க, (பானுமதி,, இல்ல இல்ல உன் பாப்பா!னு, மனசுக்குள்ள சொல்லி கொண்டு)

“இன்னைக்கு நைட், நீயே கேட்டு தெருஞ்சுக்கோ, இப்போ என்ன வண்டி ஓட்ட விடு"னு பொய் கோபத்தில் சொல்ல, அவன் வாயிக்குள் ஏதோ முணுமுணுத்தான்  

“என்ன?” நான் அதட்டும் தொனியில் கேக்க

“நீ கார் சூப்பரா ஓட்டுறேனு சொன்னேன், வேற ஒண்ணும் இல்ல!”னு பதில் வர, சிரித்துக் கொண்டேன்.

------------------------------------

வேஷ்டி கட்டிக்கொண்டு வந்தவனை, நான் ஜொள்ளு விட்டவாறு பார்க்க, அதை கூட கவனிக்காம

ஓகே வா"னு என்னைப் பார்த்து கேட்டான், அவன் அருகில் சென்ற நான்

பெரிய மனுஷன் ஆயிட்ட"னு கொஞ்சி, அவன் இரு கன்னங்களையும் கிள்ள

பெரிய மனுஷன் கன்னத்த, இப்படி தான் கிள்ளுவாங்களா"னு கேட்டவனை

ஹாப்பி பர்த்டே செல்லம்"னு சொல்லி, கட்டிப் பிடித்து, முத்தமிடும் ஆசையை அடக்க முடியாமல் கன்னத்தில் முத்தமிட

ச்சீ, எச்சி!”னு கன்னத்தை துடைத்துக்கொண்டு 

தாத்தா, வேஷ்டி காட்டிட்டேன்", அவன் ஹாலைப் பார்த்து போக, தலையில் அடித்துக் கொண்டு, பின் நினைவு வந்தவளாக சுத்தி பார்தேன், நல்ல வேலையாக யாரும் இல்லை

கோவிலுக்கு சென்றோம், தாத்தா அர்ச்சனையின் போது என் பெயருக்கும் சேர்த்து அர்ச்சனை செய்ய சொல்ல, எனக்கு கொண்டாட்டம் தாங்கல, இருவர் பெயரிலும் அர்ச்சனை செய்து விட்டு, அவனுக்கு கழுத்திலும், எனக்கு கையிலும் அர்ச்சகர், சாமி மாலையை குடுக்க, பித்து பிடித்து போனேன். கோவிலை ஒரு சுற்று சுற்றலாம் நான் சொல்ல, எங்களை இருவரையும் சுற்றி வர சொல்லி விட்டார் தாத்தா

பழனி மலையில் இருக்கும் போதே, கொடைக்கானல் கிளைமேட்டில் மனசு இருக்க, இவன் கைகோர்த்துக் கொண்டு கோவிலை சுத்தினோம். தாத்தா, ஆச்சிகள் கண்ணை விட்டு 
மறைந்ததும்,

"வா ஒரு செல்ஃபி எடுப்போம்"னு நான் கேக்க, அவன் வாயை சுளித்துக் கொண்டு போஸ் குடுத்தான், அவன் தலையில் தட்டி 

ஒழுங்கா, நார்மல முஞ்ச வையி"னு சொல்லி, போட்டோ எடுக்க, இரு, இரு, என்று என்னை தடுத்தவன் 

மாலை, மரியாதையோடு, செல்ஃபி எடுப்போம்"னு சொன்னவன், அவன் கையில் இருந்த மாலையை கழுத்தில் போட்டுக் கொண்டு

உனக்கு, மாலை, மரியாதை, வேண்டாமா?”னு என்னைப் பார்த்து கேட்டவன், என் கையில் இருந்த மாலையை எடுத்து, என் கழுத்தில் போட்டு

ஃபோன குடு, செல்ஃபிலாம், எப்பவவுமே ஹெட்டா இருக்கவங்க தான் எடுக்கணும்"னு சொல்லி என கையில் இருந்து ஃபோனை பிடுங்கி, என் தோளில் ஒரு கை போட்டு, அவன் செல்ஃபி எடுக்க, நான் அவன் முகத்தைப் பார்த்தவாரு உறைந்து நின்றேன். என் தோளில் இருந்த கையால் வன என்னை கிள்ள, இயல்பு நிலைக்கு வந்த நான் ""னு கத்த

செல்ஃபி, எடுக்கும் பொது காமிராவைப் பார்க்கணும், வாய் பார்க்க கூடாது"னு சொல்லி திரும்பவும், என் தோளில் கைபோட்டு செல்ஃபி எடுக்க, நான் அவன் இடுப்பில் கை போட்ட அவனுடன் சேர்ந்து போஸ் குடுத்தேன். ஒரு பத்து பதினைந்து போட்டோ எடுத்துவிட்டு, போதும் போலாம்னு சொல்லி, அவன் முன்னால் நடந்தான். ஏதோ இவனுடன் கல்யாணம் ஆகிவிட்டதைப் போல, உள்ளம் மகிழ்ந்தேன், அண்ணாந்து கோபுரத்தை பார்த்து முருகானு! நெக்குருகி நன்றி சொன்னேன். எனக்கு எங்கேயே டான்ஸ் ஆடனும் போல் தோன்ற, இவனைப் தேடினால், இவன் பாட்டுக்கு, முன்னால போறான்

எனக்கு கத்தி "டேய் புருஷா!” கூப்பிடனும் போல் இருக்க!, என்னை நினைத்து நானே வெக்கப்பட்டுக் கொண்டு, ஓடி அவனுடன் சேர்ந்து மாலையோடு நடக்க, அடக்க முடியாத வெக்கம், அவன் பார்த்து விடப் போகிறான் என்று குனிந்து கொண்டேன். மனம் பட படனு அடித்துக் கொள்ள, எனக்கு மயக்கம் வரும் போல் இருந்தது. அப்போதான், இவன் 

மது, ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?”னு திடீர்னு கேட்டான், என்னனு கண்ணலையே திருப்பி கேக்க 

நீ யாரையாவது லவ் பண்ணுரியா?”னு பட்டுனு கேக்க, ஒரு நிமிஷம், "ஆமா, உண்ணாத்தான் லவ் பண்ணுறேன், இங்க பாரு கல்யாணம் கூட ஆக்கிடுச்சு!”னு சொல்லு! சொல்லுனு! என் மனசு கிடந்து அடிக்க" இவன பார்த்தால், இவனிடம் நான் ஏற்கனவே பார்த்த, நான் என்ன சொல்லப் போகிறேனோ என்ற "பரிதவிப்பு!,, பதட்டம்!", அது என்னை பட்டென்று இயல்பு நிலைக்கு கொண்டு வர 

என்ன திடீர்னு, இந்த கேள்வி?”னு முகத்த சாதரணமாக வைத்துக் கொண்டு திருப்பிக் கேட்க

இல்ல, இன்னைக்கு திடீர்னு சாரீலாம் கட்டிருக்க, அதுதான், சும்மா கேட்டேன்!”னு ஏதோ சொல்லி மழுப்பினான், எனக்கு புரிந்தது, இவன் மனதில் ஏதோ இருக்குனு, மின்னல் போல ஒரு எண்ணம் பளிச்சிட, ஒரு வேல இவனும் நம்மள லவ் பண்ணுறானோனு, தோண, ஆசையோடு

நீ கூடத்தான் வேஷ்டி கட்டிருக்க, நீ யாரவாவது லவ் பண்ணுரியா?”னு கேட்க 

ஆமா"னு அவன் சொல்ல, எனக்கு பறப்பது போல் இருக்க 

உண்மையாவா?, யாரு?”னு அடக்க முடியாத ஆவலோடு கேட்டு, "நான்தான் சொல்லுடா" மனுசுக்குள்ள அவனை கெஞ்சினேன்

ஜினாலி ஜெய்ன், என் மைதா மாவு"னு சொல்லி, என் தலைல இடிய இறக்கிட்டு, என்னைப் பார்த்து கண்ணடித்து, அவன் ஓட 

பண்ணி! திருந்தவே மாட்டியா?”னு கேட்டவாறே கொலைவெறியில் அவனை தூரத்தி, கண்ணில் தெரிந்த கோபுரத்தை பார்த்து, "முருகா, நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டேனு" சாபமிட்டேன்

**********************
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 19-07-2020, 12:34 AM



Users browsing this thread: 1 Guest(s)