அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
சார், நீங்க ஏதோ பொரட்டா மாவையோ, சப்பாத்தி மாவையோ, கட்டிப் பிடிச்சுக்கிட்டு போறேனு சொன்னிங்க"னு அவன் நடித்ததைப் போல் நடித்துக் காட்ட, “போதும்!,, விட்டுறு!,, அழுதுருவேன்!” வடிவேல் ரியாக்சன் குடுக்க, அதில் திருப்தி அடைந்தவளாக, சிரித்துக் கொண்டே காரை எடுத்தேன்.

************

பத்து நிமிடம் கழித்து


ஏய், வீட்டுக்கு போகலையா?”னு, கார் டவுன்ஹால் ரோட்டில் திரும்பவும், அவன் கேக்க, நான் இல்ல என்று தலையாட்ட

எங்க போறோம்?”னு ஆசையா, எதிரபாரப் போட, கேட்டவனிடம்

சார், இன்னைக்கு அந்த மைதா மாவ, கட்டிப் பிடிச்சுக் கிட்டு பைக்ல போனிங்க இல்லையா!, அத கொண்டாட கேக் சாப்பிட போறோம்!”னு மீண்டும் அவன் காலை வார, முகத்தை உம்மேன்று வைத்துக் கொண்டான்.

பதினைந்து நிமிடம் கழித்து கார் போத்தீஸ் முன் பார்க்கிங்கில் நின்றது. நான் இறங்கி உள்ளே சென்று லிப்ட்டில் ஏறிக் கொள்ள, இவனும் வந்தான்,

டிரஸ் எடுக்க போறோமா?”னு ஆசையாய் கேட்டவனிடம், மீண்டும் நாக்கலாக

ஹெல்ப் பண்ணப் போறோம்!”னு கூற, ஏதோ உணர்ந்தவனாய், அமைதியாக இருக்க, இவனை அப்படி விடும் மூடில் இல்லை நான், கொஞ்சம் அவன் காதருக்கே சென்று

செகண்ட் ஃபுளோர்ல பவர் கட்டாம், நீ வேற இன்னைக்கு பல்ப் மேல பல்ப் வாங்கி, பிரகாசமா இருக்கியா, அதான் உன்ன கொண்டுபோய் அங்க நிக்க வைச்சோம்னு வையி, அந்த ஃபுளோரே டாலடிக்கும்"னு சொல்லி சிரிக்க, நொந்து போனான். ஃபுளோர் வந்து அசையாமல் நின்றவனை, கைகோர்த்து இழுத்துக் கொண்டு போனேன். உம்மேன்று இருந்தவனிடம்

சரி!, சரி! என் செல்லம் இல்ல!, சும்மா லோல்லாய்!”னு சொல்ல, லேசாக சிரித்தவன்,

"என்ன திடீர்னு டிரஸ்?”னு எதிர்பார்போடு கேட்டான்.
அந்த எதிர்பார்ப்பு திட்டமிட்டே உண்டாக்கப் பட்டதுதான். அவன் பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு வாரேமே இருந்தது. எப்போதும் ஒரு மாசத்துக்கு முன்னாடியே, அவனுக்கு என்ன கிப்ட் வேணும்?, டிரஸ் எப்போ எடுக்கலாம்?, என்ன ரெஸிஸ் எடுக்கலாம்?, என்ன கேக் வாங்கலாம், எத்தனை கிலோ வாங்கலாம்னு?, அவன விட அதிக ஆர்வமா நான்தான் கேக்கபேன். ஆனால் இந்த தடவை வேண்டும் என்ற அவன் பிறந்தநாள் பற்றி பேசாமல் அவனை தவிக்க விட்டேன். அதனால் வந்த ஆர்வம் இது, எப்போது ஏதாவது ஒரு லைப்ஸ்டைல் ஷாப்ஸ்ல தான் டிரஸ் எடுப்போம், ஆனால் இந்த முறை ஒரு திட்டத்தோடு இருந்ததால், போத்தீஸ்.

-----------------------------

டேய் இது நல்ல இருக்கா?” ஒரு இருபதாவது புடவையை, என்மேலே போட்டு, காட்டி கேட்டேன், இல்லை என்றவன், நேராக முதன்முதலில் எடுத்த புடவையை, கையில் எடுத்து

இது சூப்பரா இருக்கு!, இதையே எடுப்போம்!”னு அவன் சொல்ல, சரினு தலையாட்டியாதும், ஒரு பெரு மூச்சு விட்டவன்

இத நான் முதல்ல சொன்னப்பவே செலக்ட் பண்ணி இருந்த ரெண்டு மணிநேரம் வேஸ்ட் பன்னிருக்க வேண்டாம்"னு அவன் சலித்துக் கொள்ள

போட லூசு!, பொண்டாட்டி, புருஷன் கிட்ட ஒவ்வொரு சாரீயா காட்டி, செலக்ட் பண்ண சொல்லுறதுல இருக்க சந்தோஷம் உனக்கு என்ன தெரியும்”னு அவன கட்டிப் பிடுச்சு கத்தனும் போல இருக்க, முடியாததால் மானசுக்குள்ள சொல்லிக் கொண்டேன். "உன்ன புருஷனா நினச்சுக்கிட்டுதான் இவ்வளவு நேரம் உன்ன படுத்தி எடுத்தேன்!” கற்பனையில் அவனிடம் கொஞ்சிக்கொண்டேன்.

மேடம் பில்லை பே பண்ணுங்க டைம் ஆச்சு!, போலாம்"னு அவன் சொல்ல

இன்னும் பர்சேஸ் முடியல!”னு அவனை கடுப்படித்து விட்டு, மென்ஸ் செக்ஷன் நோக்கி போக

என்ன திடீர்னு பட்டு சாரீ"னு அவன் கேக்க

எங்க காலேஜ்ல கல்சுரல் டேக்கு, எல்லாரும் பட்டு சாரீ கட்டுறோம்"னு சொல்லி

அண்ணா, இவன் சைஸ்க்கு, இதே கலர்ல ஒரு ப்ளெயின் ஷர்ட் பாருங்க!” இவனைக் காட்டி சேல்ஸ்மேனிடம் சொல்ல, சந்தோஷமாக என்னைப் பார்த்தவனிடம், திரும்பி

எங்க gang-ல அரவிந்த் இல்ல, ஃபீவர்ல இருக்கான அதான் என்னைய எடுக்க சொன்னான், அவனுக்கு உன் சைஸ் கரெக்ட்டா இருக்குமா?”னு கேக்க, சந்தோஷமா இருந்த முகம், இருண்டுவிட்டது, நான் பார்க்காதது போல் திரும்பி ஷர்ட் செலக்ட் செய்ய ஆரம்பித்தேன். ஷர்ட் எடுத்து முடித்து விட்டு, வேஷ்டி செக்ஷனில் நுழைந்ததும்

டேய், உனக்கு வேஷ்டி எப்படி, காட்டுற மாதிரி வேணுமா, இல்ல ஒட்டிக்கிரியா?”னு கேட்டு இவனைப் பார்க்க

உண்மையா சொல்லி, இந்த டிரஸ் என் பர்த்டேக்கு தான எடுக்க"னு

தழுதழுத்த குரலில், சிறிதாக கலங்கிய கண்களுடன் அவன் கெட்க, அதற்கு மேலும் அவனை சீண்ட மனமில்லாமல், "ஆமானு" நான் தலையாட்ட, பட்டென என்னைக் கட்டிப் பிடுத்துக் கொண்டான். கடையில் இருக்கிறோம், நிறைய பேர் பார்ப்பார்கள் என்பதெல்லாம் எனக்கு சுத்தமாக மறந்து விட, நான்னும் அவனை இருக்கிக் கொண்டேன். சில நொடிகளில் அவன் சுதாகரித்து விலக, சுற்றிப்பார்த்தல் ஒரு சிலரைத் தவிர பெரிதாக யாரும் பார்த்ததாக தெரியவில்லை, பார்த்தாலும் கவலையில்லை.

ஒரு மணிநேரம் கழித்து

கண்டிப்பா, வேஷ்டிதான் கட்டனுமா?”னு மறுபடியும் கெஞ்சியவனை, முறைத்துக் கொண்டிருந்தேன். அவன் வீட்டின், போரடிக்கோவில், காரை நிற்க, இறங்காமல் கெஞ்சிக்கொண்டிருந்தான். நான் மனம் மாறுவதாய் இல்லை என்று தெரிந்தவுடன்

கண்டிப்பா, இதே மாதிரி சான்ஸ் கிடச்சா, நானும் உன்ன பழிவாங்குவேன்!”னு மிரட்டியவாறு, காரில் இருந்து இறங்கி சென்றவனை காதலோடு பார்த்து, உதடு குவித்து முத்தமிட்டேன், காற்றில்.

---------------------------------------------------
[+] 5 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 18-07-2020, 07:15 PM



Users browsing this thread: 9 Guest(s)