அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
#84
பாகம் - 16

மதுவின் பார்வையில் இருந்து.

நான் பானுமதி. என்னைப் பற்றி சொல்லணும்னா,, எங்க அம்மாட்ட இருந்துதான் ஆரம்பிக்கணும்.

அம்மா சிவகாமி, சமூகத்தில் பெரிதும் மதிக்கபடும் பெண், டாக்டர், ஓரளவு பெரிய பிரபல மருத்துவமனையின் உரிமையாளர். டாக்டர் என்பதால் மட்டும் அல்ல, சிறு வயதிலேயே கணவனையும், தன் மூத்த மகனையும் இழந்தவள். கணவன் விட்டு சென்ற சொத்துக்கள் போதும் என்று இருக்காமல், அதை வைத்து சின்ன வயதிலேயே ஒரு தனி மருத்துவமனையைக் கட்டி, அதில் நடந்த ஒரு பெரும் விபத்தில், இழப்பீடின் பொருட்டு மொத்த சொத்தையும் இழக்கும் நிலைக்கு சென்றிருந்தாலும், அதையும் சமாளித்து, இன்று அதே மருத்துவமனையை, கோயம்புத்தூர்லயே பிரபலாமான மறுத்துவமனையாக மாற்றியவள். அது மட்டுமில்லாமல் பல் தொழில்களில் முதுலீடுகளும் செய்திருக்கிறாள். சிறு வயதில் கணவனை இழந்திருந்தாலும், யாராலும் சின்ன சபாலத்துடன் நெருங்க முடியாத நெருப்பை போன்றவள் சிவகாமி

சொந்தங்கள், தொழில்முறை உறவுகள் சிலர் இருந்தாலும், சுமா ஆண்ட்டியையும், அவர்களது கணவரையும் தவிர யாரையும் அருகில் சேர்க்காதவள். சுமா ஆண்ட்டி அம்மாவின் ஜூனியர் மெடிக்கல் காலேஜ்ல் நாட்களில் இருந்தே, இருவருக்குள்ளும் அப்படி ஒரு நெருக்கம். ஹாஸ்பிடல்ல நடந்த விபத்தின் போது பெரிதும் உதவியது அவர்கள் தான். முதலீடுகளில் ஆலோசனை தேவைப்படும் போது அம்மா அணுகுவது சுமா ஆண்ட்டியின் கணவரைத்தான். மிகப்பெரும் தொழில் அதிபரான அவர், எங்களிடம் மிகவும் கரிசனமாக நடந்து கொள்வார்

என் அம்மாவின் தாக்கத்தால், அவளப் போலவே ஒரு தன்னம்பிக்கையான பெண்ணாகவே வளர்ந்தேன். படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டி நான். டென்னிஸ், எனக்கு பிடிச்ச விளையாட்டு, ஸ்கூல் படிக்கும் சமயம் கேம் மேல, கிறுக்க இருந்தேன். டென்னிஸ் தான் மணியை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது.

---------------------------------

முதன் முதலாக இவன் டென்னிஸ்ல, தருண ஜெய்ச்சப்போ, இவன் நாக்கல் சிரிப்பால்
முறிக்கிட்டு போனேன். அப்போ தெரியாது இவனுடன் பிரிக்கவே முடியாத ஒரு உறவு உண்டாகும் என்று. அப்போ எனக்கு தருண் மேல ஒரு க்ரஷ் ஈர்ப்பு கூட இருந்துச்சு, அதுக்கு காரணம் டென்னிஸ், தருண் சூப்பரா ஆடுவான், எங்க அக்கடமியிலேயே பெஸ்ட். என்னைக்கு இவன்ட தோத்தானோ, அத்தோட அவன் மேல இருந்த க்ரஷ்-ஷூம் போச்சு.

அந்த கோலிபையர்ஸ் முடிஞ்சதுல இருந்து, எங்க அக்கடமில கோச்சஸ் இவன பத்தி பேசாத நாளே இல்லங்குற அளவுக்கு பிரபலம் ஆயிட்டான். அந்த டோர்ணமெண்ட் ஆரம்பிச்சதும், எல்லோரும் இவன் ஆடுற மேட்ச் பாக்க சொல்லி உத்தரவு, எங்க அக்கடமில இருந்து. சும்மா சொல்லக்கூடாது செம்மையா ஆடுனான், நாங்க எல்லாம் வாய பிளந்து பாத்துக்கிட்டு இருந்தோம். எல்லாரும் இவன் பாராட்டும் போது, நான் மட்டும் விலகி நின்றேன். தருண ஜெய்ச்சிட்டு இவன் என்ன நக்கலாபாத்து சிரிச்சாங்குற ஈகோ.

அந்த ஈகோல தான் இவன், என்ன தேடி வந்து பாராட்டினப்ப, நாங்களும் பிளேயர் தானு இவன் கிட்ட ஸீன் போட்டேன். அந்த ஈகோ, இவன், நான் ஆடுற, ஒவ்வொரு கேம் பாக்க வரும் போதும் கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சுகிட்டே வந்தது. அப்படி இருக்கும் போது தான் ஒருநாள் இவன் மரத்தடில உட்கார்ந்திருந்தப்போ, congragulations, சொல்ல, இவனது அழுகையும், ஏக்கமும், இவன் மீது எனக்கு இரக்கத்தையும், இவனப் போய் ஈகோவால், உதாசீனப் படுத்திட்டோமேனு குற்ற உணர்வையும் கொடுக்க, இவன் மீது கொஞ்சம் பாசம் பிறந்தது

இவன் என்ன அக்கானு கூப்பிட்ட அப்ப, அந்த பாசம் பல மடங்கு பெருகியது, வீட்டில் ஒத்தப் பிள்ளை, கூடப் பிறந்தவங்க இல்லங்குற ஏக்கம் எனக்கு இருந்தது கூட காரணமா இருக்கலாம். இவன் சுமா ஆண்ட்டி பையன் தெரிஞ்சதுக் அப்புறம்,, இருந்த கொஞ்ச நஞ்ச தயக்கமும் பறந்து போக, உடன் பிறந்த தம்பியாகவே ஆகிப்போனான். சுமா ஆண்ட்டிக்கு ஒரு மகன் இருப்பதும், அவன் போர்டிங் ஸ்கூல்ல படிப்பது தெரியும், இருந்தாலும் அவனைப் பற்றி பெரிதாக நினைத்ததில்லை. அக்கடமியும், ஸ்கூல்லும், இவன் டென்னிஸ் ஆடுறதா பெருமையா பேசுனா, இவன் என்னையே குட்டி போட்ட பூண மாதிரி சுத்தி வந்தது, எனக்கு இவன் மேல் எல்லையில்லா பாசத்தை கொடுத்து.

இவன் கூட பிராக்டிஸ் செய்ய ஆரம்பிச்சதுல இருந்து, என்னோட கேம் அடுத்த கட்டத்துக்கு போக, அந்த புண்ணியத்துல ரெண்டு டோர்ணமென்ட், ஒரு ஜூனியர் சாம்பியன்ஷிப் ஜெய்த்தேன். ஜூனியர் சாம்பியன்ஷிப் ஜெய்த்த பூரிப்புல இருக்கும் போதுதான், அந்த டிரைன் நிகழ்வு, என்னை அவன் ஒரு தாய்ன்ற ஸ்தானத்தில் வைக்க, நெக்குறுக்கிப் போனேன். பதினேழு வயசுலேயே எனக்கு தாய்மையின் உணர்வைக் கொடுத்தான். அதனால தான் சென்னை MMCல சீட் கிடைத்தும், இவனுக்காக கோயம்புத்தூர்ல சேர்ந்தேன். அந்த முடிவு என் வாழ்க்கையையே திருப்பி போட போகுது, பல விதத்துல என்ரறு அப்பொழுது எனக்கு தெரியாது

---------------------------------------

ஒரு நாள் எப்போதும் போல், மாலை டென்னிஸ் ஆடிவிட்டு, இவனைத் தேடினால், இவன் ஒரு மரத்தடியில் இருந்த பெஞ்சில அமர்ந்திருந்தான். அவன் தோகளில் கை போட்டு, அவனை ஒட்டி அமர்ந்தேன். அவன் சற்று அவனது உடலை உள்ளிலுத்து,, அவன் உடலுக்கும், என் மார்புக்கும் இடையில், ஒரு சின்ன இடைவெளி ஏற்படுத்தினான். இது புதுசு, இந்த ரெண்டு வருஷத்துல, முதல்முறை

ஒரு சின்ன சிரிப்புடன்

என்னடா?,, வயசுக்கு வந்துட்டே போல?”னு, அவன் கொஞ்சம் இருக்கிக் கொள்ள

இந்த முறை அவன் ஏற்படுத்திய இடைவெளியை தக்கவைத்துக் கொண்டு, கேட்க, வழிந்தான், எங்கோ பார்த்தவாறே. அவன் பார்வை போன இடத்தை பார்த்தால், அங்கு அக்கடமில, புதுசா சேர்ந்த ஒரு பொண்ணு, டென்னிஸ் ஆடிக் கொண்டிருந்தாள். இவன் சைட் அடித்துக் கொண்டிருக்கிறான் என்பது ஆச்சிரியத்தை கொடுக்க 

"பாக்க கும்முணு இருக்கா? இல்ல?”னு இவனைச் சீண்ட,, "ச்சீ"னு, வெக்கப்பட்டான். அவன் என்கிட்ட ஒட்டிக்கிட்டு இருந்த சிறுவன் இல்லை என்று உணர்ந்த தருணம் அது.

-------------------------------

அதுக்கப்புறம் அவன் அப்பப்போ பொண்ணுங்க கூட பேசுரத பார்த்தால், எனக்குள் ஏதோ ஒரு பயம், ஏதாவது பேசி அவன என்கூட இழுத்துக்கிட்டு போயிடுவேன். சில நேரம் எனக்கே கொஞ்சம் குற்ற உணர்வு எட்டிப்பார்க்கும், அப்பொழுதெல்லாம், ஒரு அக்காவாக,, இவனைப் பாதுக்காகத்தான் அப்படி செய்கிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். ஆனால் அது உண்மை இல்லணு சொல்லி, என் மனசாட்சி தலை தூக்கும், என் நெஞ்சம் படபடக்கும். ஏன் என்று தெரிந்திருந்தாலும், அதைபற்றி சிந்திக்க நான் தயாராக இல்லை

சில மாதங்களிலேயே என் பாசாங்கெல்லாம் விட்டுட்டு, அவனை லவ் பண்ணுறத, எனக்கு நானே ஒத்துக்கிட்டேன். அக்கவா நினச்சு பழகுற பையணையா?னு கேட்ட மனசாட்சிய, திரும்ப கேள்வியே கேட்க முடியாத மாதிரி,, கொன்னு,,,, ஆழமா பொதச்சுட்டேன்.

ஆனால் காலம் விடுவதாக இல்லை.

அப்படி நான் எதிர் கொண்ட நிகழ்வுகள் சில

---------------------------

என்னாச்சு?”னு கேள்வி கேட்டு, பின்னால் திரும்பிப் பார்த்தவனை, வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

மணி, பதினொன்றாம் வகுப்பு சம்மர் ஹாலிடேஸ் முடிஞ்சு, நேர எங்க வீட்டுக்கு வந்திருந்தவனை, வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன். மறுபடியும் என்னிடம் திரும்பி, என் தோள்களைப் பற்றி உலுக்கியவன்

என்ன ஆச்சு?”னு கேட்டவனுக்கு பதில் சொல்லாமல், அவனுக்கு பக்கத்தில் நின்று, தோளோடு தோள் வைத்துப் பார்த்தால், என்னை விட கொஞ்சம் உயரமாகி இருந்ததான், எனக்கு சந்தோஷம் தாங்கல

பாவி,, எண்ண விட ஹெட்டா வளந்துட்டே"னு சொல்லி அவனை செல்லமா அடித்தேன்

ஒரு நல்ல அக்காவா,, தம்பியோட வளர்ச்சிய பாத்து சந்தோஷப் படு, இப்படி பொறாம படாத!”னு 

அவன் சிரிச்சுக் கிட்டே சொல்ல, அவளோதான் என் சந்தோஷம் எல்லாம் புஸ். இப்போ எல்லாம் இவன் அக்கானு சொன்னாலே,,, நான் காற்றி இறங்கிய பலூன் மாதிரி சோர்வடைந்து விடுகிறேன். நான் பாவமாக அவனைப் பார்க்க, என் கன்னத்தை கிள்ளியவன் 

அய்யயோ,,,, பாவம்"னு சொல்ல, அவனது கொஞ்சலில் கரைந்து போனேன்.

இப்பொழுதெல்லாம் அவன் அக்கானு கூப்பிடுவது கேக்க, சகிக்காம, அதை தவிர்க்க, டென்னிஸ் அக்கடமி பக்கம் போறத கொறச்சுக்கிட்டேன். ஆனாலும் இவன்,, எப்பொதும் போல் அவன் என்னையே சுற்றி, சுற்றி வந்தான். மனசு முழுவதும் காதலோட நான் பழக, இது எதுவும் புரியாம, எப்பொழுதும் போல் என்னிடம் நடந்து கொள்ள, காலம் கபடி ஆடியது

என் காதலை சொன்னால் புரிந்துகொள்ளும் வயதில் அவன் இல்லை, கொண்ட காதலை ஃப்ரெண்ட்ஸ்ட கூட பகிர்ந்து கொள்ள முடியாத, இருதலைக் கொள்ளியில் மாட்டிய எரும்பானது,, என் வாழ்க்கை

-----------------------------

அக்கானு சொன்னவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தேன், அருகில் என் தோழி நேத்ரா. என் முறைப்பை சட்டை செய்யாமல், நேத்ராவைப் பார்த்து

அக்காவ!, அக்கானு சொல்லாம? கக்கானா? சொல்ல முடியும்?”னு இவன் சொல்ல,

ஏதோ சூப்பர் ஜோக் சொன்ன மாதிரி இருவரும் சிரிக்க, எனக்கு பற்றிக் கொண்டு வந்தது. இவனிடம் பல முறை கெஞ்சி சலித்துவிட்டேன்!, அக்கானு கூப்பிடாதனு சொல்லி, நான் கெஞ்ச ஆரம்பிச்சதுல இருந்து என்னய்யா வெறுப்பேத்தனும்னே, "அக்கா,அக்கானு" கூப்பிட்டு சாவாடிக்கிறான், பாவி!. 

இதுக்க கெல்லாம் பீல் பண்ணலாமா! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!”னு சொல்லி என் முறைப்புக்கு கொஞ்சமும் மரியாதை கொடுக்காமல், என் கன்னத்தை கிள்ளியவன்

ஓகே,, எனக்கு டைம் ஆச்சு, பாய் அக்கா!, பாய் நேத்ரா!”னு சொல்லி, நேத்ராவின் கன்னத்தில் லேசா தட்டி விட்டு செல்ல, இவள் ஏதோ சொக்கி விழுவதைப் போல், என் காரில் சாய்ந்து என்னை மேலும் கடுப்பேத்தினாள். நான் இவளைப் பார்த்து முறைக்க

என்ன எதுக்கு மச்சி,, முறைக்கிறே?”னு இவள் சிறு சிரிப்புடன் கேக்க, நான் கொஞ்சம் குழம்பி

[Image: gIy3jR2.jpg?1]

என்ன புதுசா மச்சி?, பசங்க மாதிரி?”னு கேக்க, இவள் போய்க் கொண்டிருந்த மணியை ஏக்கமாகப் பார்த்து, பெரு மூச்சு விட்டவள்

என் ஆளோட, அக்காவ, மச்சினு, கூப்பிடமா!, பஜ்ஜினா? கூப்பிட முடியும்"னு சொல்லி 

என்னைப் பார்த்துக் கண்ணடிக்க, கொலைவெறி ஏறியது எனக்கு, இவளை ஒரு முறைப்பு முறைத்து விட்டு, காரில் ஏறி ஸ்டார்ட் பண்ண, நேத்ராவும் ஏறி அமர்ந்து கொண்டாள். மொத்த கோபத்தையும், என் காலில் இறக்க, கார் சீறியது, கொஞ்சம் மிரண்ட நேத்ரா, சுதாகரித்துக் கொண்டு,

ஏய், பாத்துடி, கொஞ்சம் மெதுவா போ!,, எனக்கு ஏதாவது ஆச்சுனா, உன் தம்பி உன்ன சும்மா விட மாட்டானு”னு அவள் நக்கலா சொல்ல

கொலவெறில இருக்கேன், கடுப்ப கிளப்பாத, சாவடிச்சுருவேன்"னு சொல்ல, அமைதியானாள். சிறிது நேரம் கழித்து அவள் என்னையே பார்ப்பது போல் இருக்க, அவளப் பார்த்தால், அவளின் பார்வை என்னைத் துளைப்பதுப் போல் இருக்க, நான் திரும்பி ரோட்டைப் பார்த்தேன். அவள் தொடர்ந்து பார்க்க, சரி சமாளிப்போம்னு சொல்லி

சின்னப் பையண்டி, அவன், இன்னும் ஸ்கூலே முடிக்கல!”னு சொல்ல

சின்னப் பசங்க தாண்டி வசதி, நம்ம இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம்!” அவள் சொல்ல, மறுபடியும் முறைத்தேன், இவளும் என் முறைப்பை உதாசீனப் படுத்தியவள்

வயசு எல்லாம் ஒரு ப்ராப்ளம்-!, எந்த காலத்துல இருக்க நீ!, இப்போவே பையன் ஹெக்டா இருக்கான், எப்படி பாத்தாலும்,, இன்னும் குரஞ்சது அஞ்சு வருஷம் க்ரோத் மிச்சம் இருக்கு!, கண்டிப்பா சிக்ஸ் ஃபீட் தாண்டுவான்!, எனக்கு ஓகே!”னு சொல்ல, நான் எதுவும் சொல்லாமல் காரை காலேஜ் நோக்கி விரட்டினேன். இவள சீக்கிரம் இறக்கி விடணும்.

டென்னிஸ் பிளேயர், பிரைட் ஃப்யூச்சர் இருக்குனு வேற சொல்லுற, சச்சின், அஞ்சலி, மாதிரி!, மணி, நேத்ரா! நல்லா இருக்கு இல்ல?...... ஏய் இன்னொரு ஒற்றுமை, அஞ்சலியும் டாக்டர், நானும் டாக்டர், பெர்பெக்ட், மேட்ச்! இல்ல?" னு அவள் சொல்லிக்கொண்டே போக, நான் கொஞ்சம் கொஞ்சமாக நிதானம் இழந்தேன். என் கோபத்தைக் கண்டவள்

சரிடி ரொம்ப கோவப்படாத, எங்களுக்கு பொம்பளக் குழந்தை பிறந்தால், உம்பேர வைக்குரோம்"னு நாக்கலாக சொல்ல

அவ்வளவு தான், மொத்த கோபத்தையும் ப்ரேக்கில் காட்ட, சில நொடிகளில் வண்டி நின்றது, இவளை கொன்று விடுவதுணு, திரும்புனா, சீட் பெல்ட் போடாததாள், டாஷ் போர்டில் இடித்து, கீழே சரிந்து கிடந்தாள், வலியில் "ஆஆ" கத்தியவாறு. கோபத்தோடு, குற்ற உணர்ச்சியும் சேர்ந்து கொள்ள, அப்படியே ஸ்டேயாரிங்கில் சரிந்து, உடைந்து அழ ஆரம்பித்தேன். நேத்ரா பதறி இருப்பாள் போல, எழுந்தவள்

சாரி டி, சாரி டி, சாரி டி,” திரும்ப, திரும்ப, சொல்ல, என் கண்ணீரும், அழுகையும் கூடியது

அவளின் கருணையில்,, வெடித்து அழுதேன். கொஞ்சம் நகர்ந்து, என்னை பற்றி தூக்கியவளின், தோளில் புதைந்து அழுதேன். என் அழுகை குறைந்ததும் "என்னடி!, மணிய லவ் பண்ணுரியா?”னு கேக்க, மீண்டும் அழ ஆரம்பித்தேன். என் முதுகில் தட்டியவள், தட்டிய கையால், தடவிக் கொடுத்தாள், கொஞ்சம் ஆசுவாசம் அடைந்த பிறகு, மொத்தத்தையும் கொட்டிவிட்டேன், விம்மலுடன். எதுவும் பேசாமல், என்னை இடை மறிக்காமல் கேட்டாள். இத்தனை நாள் அடக்கி வைத்த அத்தனையையும் இறக்கி வைத்ததில், ஒரு நிம்மதி, மனசு இலகுவாக இருக்க, நன்றியோடு அவளப் பார்த்தேன். சின்ன சிரிப்போடு, கொஞ்சம் நக்கலோடு, என்னைப் பார்த்தவள் 

"இப்போ கொஞ்ச நாளாவே எனக்கு இந்த டவுட் இருந்துச்சு இன்னைக்கு கிளியர் பண்ணியாச்சு!”னு சொல்லி, தொடர்ந்தாள் 

தம்பி, தம்பினு சொல்லி இதுவரைக்கு எனக்கே கம்பி நீட்டிருக்க?”னு கேக்க, வெக்கத்தில் 

"போடி"னு சொல்ல 

என்ன? வெக்கமா?”னு விடுவதா இல்ல, பாவி

---------------------------------
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 16-07-2020, 01:10 AM



Users browsing this thread: 7 Guest(s)