அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
#53
பானுவை பற்றி அனிஷ் தப்பா பேசியபோது போய் சண்டை போடாமல்கேட்டுக் கொண்டு இருந்ததை நினைத்தால் எனக்கே என் மீது கோபம் வந்ததுஉருண்டு உருண்டு தூங்க முயற்சிக்க எனக்கு தூக்கம் வரவில்லைமல்லாக்க படுத்தவாரே விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்

"தூங்கிட்டிகளா?" கேக்க 

"இல்லசொல்லுபதில் வந்துச்சு 

"நான் அனிஷ் சொன்னத நம்பல"னு சொல்ல 

"அந்த பேச்ச விடுதூங்கு!"

"சாரிக்கா"

"எதுக்கு?"

"அவன் உங்கள தப்பா பேசுனதுக்குஅவன் கூட சண்ட போடாம கேட்டுக் கிட்டு இருந்ததுக்கு"னு சொல்லும் போதுஅவர்கள் இவளைப் பற்றி அசிங்கமா பேசினது நினைவுக்கு வரமறுபடியும் எனக்கு கண்கலங்கியது 

"விடுடாபொருக்கி பசங்க பேசுறதுக்கெல்லாம் பீல் பண்ணக் கூடாது"னு அவள் சொல்லநான் என் கண்ணீரை துடைத்துக் கொண்டேன்கவனித்திருப்பாள் போல 

"ஆழுறியா?"னே கேக்க

"இல்லையே"னு நான் தொண்டை கம்மியவாறு சொல்லஎழுந்து வந்தவள் என் கண்களைத் தொட அது ஈரமாய் இருக்கவேதன் கால முட்டியால் என்னை இடித்துக் கொண்டு 

"கொஞ்சம் தள்ளிப் படுஎன்கஅவள் உட்காருவதற்கு வசதியாக நான் ஒட்டிப் படுக்கஎன்னைப் பார்த்து ஒரு சாய்த்து படுத்தவள்தன் கைகளை ஊன்றி தலைக்கு கொடுத்துக் கொண்டுஎன் நெஞ்சில் கை வைத்து தட்டிக் கொண்டே 

"அவங்கள அடிக்கிற அளவுக்கு பெரிய ஆள் ஆகிட்டியா"னு கேக்கநான் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருக்க 

"அக்காவுக்காக சண்டை எல்லாம் போடுவியா?" கொஞ்சுவது போல் கேக்கநான் ஆம் என்று தலையாட்டினேன்சிரித்துவிட்டு என் கன்னதில் செல்லமாக தட்டியவள்,

"அன்னைக்கு அவங்க பேசுனத கேட்டு அழுது தான் கண்ணு வீங்கி இருந்துச்சா?"னு கேக்கநான் ஆமானு தலையாட்டஎதுக்குனு தெரியல ஆன அழுகை பொத்துக்கொண்டு வந்ததுபட்டென அவளுக்கு முதுகு காட்டிகேபின் சுவரோடு ஒட்டிக் கொண்டு அழுதேன்என் கைகளைப் பற்றி திருப்ப முயல முடியாது போகவேபின்னால் இருந்து என்னை அணைத்தாள்என் உச்சந்தலையில் முத்தமிட்டவள்நாடியை என் தலையில் ஊன்றிக் கொண்டு 

"விடு,,,, அழாத,,,,, அந்த பொருக்கி பசங்க பேசுனதுக்கு நீ எதுக்கு அழனும்?"கேட்டு என்னை திருப்பநான் திரும்பி அவளை பார்த்தவாறு படுக்ககொஞ்ச நகர்ந்து எனக்கு இடம் கொடுத்தவள்என் முகமெங்கும் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள்,

"இப்படியாட எதுக்க கெடுத்தாலும் அழுவாங்க?"னு என்னை இழுத்து கழுத்தோடு அனைத்துக் கொண்டாள்அவள் அணைப்பு எனக்கு ஆறுதலாக இருக்கநானும் அவலுடன் ஒட்டிக் கொண்டேன்சிறிது நேரம் கழித்து 

"அக்காவ உனக்கு அவ்வளவு பிடிக்குமா?"னு கேக்க 

நான் அவள் நெஞ்சில் முகம் புதைத்து,, இருக்கமாக கட்டிக்கொண்டு மெதுவாக தலை அசைக்கஎன் நெற்றியில் முத்தமிட்டுஇன்னும் இருக்கிக் கொண்டாள்என் மனமும்உடலும் அவள் அணைப்பில் கதகதப்பாக இருக்கஅப்படி ஒரு நிம்மதி என் உள்ளத்தில் பரவ தூங்கிப் போனேன்தூக்கம் கலைந்தது பார்த்தால்அவள் வயிற்றில் கால் போட்டுகூந்தலில் முகம் புதைத்துஅவளை காட்டிக் கொண்டு படுத்திருந்திருக்கிறேன்ஒரே போர்வைக்குள்அவள் மீது போட்டிருந்த காலை விளக்கிக் கொண்டுவிலகி படுக்க முயலஎன் கழுத்துக் கீழாக கொடுத்து என் முதுகில் இருந்த கையால் என்னை விலக விடாமல் தடுத்தவள் 

"இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே இருகுளிருக்கு நல்ல இருக்கு"னு சொல்லநான் மறுபடியும் அவள் காட்டிக் கொண்டு அவள் கழுத்தில் முகம் புதைத்தேன்என் முதுகில் இருந்த அவள் கைகள் வட்டமிட்டது

"அக்கா"னு கொஞ்ச 

"ம்ம்"

"பேசமா அடுத்த ஜென்மத்துல எனக்கு நீ அம்மா பிறந்திரு!"னு சொல்லபோர்வை விலகாமல் என்னைப் பார்த்து ஒருக்களித்து படுத்தவள் புன்முறுவலோடு 

"சார்அம்மாவா எல்லாம் யாரும் பிறக்க முடியாதுஎல்லாருமே பாப்பாவாத் தான் பொறப்பாங்க"னு சொல்லி,, என் கன்னத்தை கிள்ளநான் சிணுங்கிக் கொண்டே மறுபடியும் அவள் கழுத்துக்குள் ஒளிந்து கொண்டேன்என் தலையில் முத்தமிட்டவள் 

"வேணும்னா ஒண்ணு பண்ணுநீ எனக்கு பாப்பாவா பொறந்துரு!"னு சொல்லிஒரு காலை என்னை சுற்றிப் போட்டு என்னை அவள் நெஞ்சோடு அனைத்துக் கொண்டாள்பூரித்துப் போன நான்அவளை இன்னும் இறுக பற்றிக்கொண்டேன் ஒரு குரங்கு குட்டி தன் தாயை பற்றிக்கொள்வது போல

"அப்போ நீ எனக்கு பாப்பாவா?"

"ம்ம்"

"பாப்பானா குட்டியாஅழகா இருக்கும்!, ஆனா நீ எரும மாரி இருக்க?"னு அவள் கிண்டலா சொல்லநான் சிணுங்கிக் கொண்டே 

"இது பதினாலு வயசு குட்டி பாப்பா"னு சொல்லவாய்விட்டு சிரித்தவள் என உச்சந்தலையில் முத்தமிட்டு வருடிக் கொண்டே 

"டேய் ரெட்ட சுழி டா உனக்குஉச்சந்தலை சுழியை தடவியவள் 

"ஆன நீ சேட்டையே பண்ண மாட்றே"னு கேக்க 

"இது பானுவோட சமத்து பாப்பாசேட்டையே பண்ணாது"னு சொல்லமறுபடியும் முத்தமிட்டால்அந்த அரவணைப்பில் இருந்தது விலக மனம் இல்லாவிட்டாலும் ஒண்ணுக்கு முட்டிக் கொண்டு வந்ததால் 

"அக்கா!"னு முனங்க 

"ம்ம்"

"உச்சா வருது!"னு சொல்ல

என்னை விளைக்கிகன்னத்தை கிள்ளி போனு ஜாடை காட்டினாள்அன்று முழுவதும் ஒரே அரட்டைஇரவு சாப்பிட்டு விட்டு படுக்ககொஞ்ச நேரத்தில் "டிங்"னு அவள் மொபைல் மெசேஜ் டோன்எடுத்துப் பார்த்தவள்ஃபோனை நீட்டி என்னிடம் காட்டினாள்பார்த்தால் அனிஷிடம் இருந்து "சாரி"னு மெசேஜ்நான் அவளைப் பார்க்க 

"என்னபோனபோவுதுனு மன்னிச்சு விட்டுருவோமா?"னு கேக்கநான் அவளை எரிப்பது போல் பார்த்துவிட்டுகுப்புற படுத்து போர்வையை மூடிக் கொண்டேன்

"சும்மா சொன்னேன் டா"

"டேய் "

"பாப்பா!" அவ கொஞ்ச 

"எனக்கு தூக்கம் வருதுநான் போர்வைக்குள் இருந்து சொல்ல

அவள் பெர்த்தில் இருந்து எழுந்து வந்தவள்போர்வையை இழுத்து என் மேல போட்டாள்நான் திரும்பி மல்லாந்து படுக்க 

"எனக்கு தூக்கம் வரலையே!, நீ தான் லோட லோட பேசுவியேபேசிட்டிருப்போம் எனக்கு தூக்கம் வர்ற வரைக்கும்"னு அவ சொல்லகோபாபக இருப்பது போல் முஞ்ச வச்சுக்கிட்டுபோர்வையை எடுத்து முகத்தில் போட்டுக்கொண்டு

"அதான் அந்த பன்னி மெசேஜ் பன்னிருக்கே!, மன்னிக்கப் போறேன் கூட சொன்னிங்களேஅவன் கூட பேசுங்க"னு சொல்ல 

"இப்போ நீ ஒழுங்கா போர்வைய முஞ்சவிட்டு எடுக்கலனா, "ஐ லவ் யு"னு மெசேஜ் அனுப்ப போறேன் அவனுக்கு"னு சொல்ல

நான் பதறிப்போய் போர்வையை விளக்ககாலவரமான என் முகத்தைப் பார்த்து அடி வயிற்றில் கையை வைத்துக் கொண்டு சிரித்தவள்இருந்த கொஞ்ச இடத்தில் அமர்ந்தவள்

"தள்ளிப் படு"னு சொல்ல 

"முடியாதுஇது என் பெர்த்நீங்க உங்க பெர்த்ல போய் உக்கந்துகிட்ட சிரிங்க"னு சொல்லி காலை வைத்து அவளை என் பெர்த்தில் இருந்து தள்ளப் பார்க்கஎழுந்து பட்டென தாவிஅந்தப் பக்கம் இருந்த கேப்பில் படுத்துக் கொண்டுஎன்னைத் தள்ளி விட்டாள்

"இப்போ இது என் பெர்த்நீ வேணும்னா அங்க போய் தூங்கு"னு சொல்லி அவள் பெர்த்தைப் காட்டினாள்,

"இதுதான் என் பெர்த் நான் இங்கதான் படுப்பேன்"னு சொல்லி அவளை இடித்துக் கொண்டுஅவளுக்கு முதுகு காட்டி படுத்துபோர்வையை முடிக்கொண்டேன்சிறிது நேரத்தில் பார்வையை இழுத்து அவளையும் மூடிக் கொண்டவாள்என் கழுத்துக்கீழே ஒரு கையை நுழைக்கநான் தலையை தூக்கிஅவள் கை நீட்டுவதற்கு இடம் கொடுத்து அவள் கையில் தலை வைத்துப் படுக்கஇன்னொரு கையை என் மீது போட்டுக்கொண்டு 

"இங்க பாருஅவன பிளாக் பண்ணுறேன்"னு சொல்லி 

எனக்கு காட்டிக் கொண்டே அவனை பிளாக் செய்துஅவன் நம்பரை டெலீட் செய்ததாள்நான் சந்தோஷமாகி இன்னும் கொஞ்சம் பின்னால் நகர்ந்து அவளை நெருக்கஅவளும் என்னை கைகளால் இருக்கிக் கொண்டாள்பின் ஏதேதோ பேசிக் கொண்டே தூங்கி விட்டோம்

மறுநாள் அதிகாலை எழுப்பி விட்டவள்எங்கள் உடமைகளை பேக் செய்தாள்கொஞ்ச நேரத்துல இறங்கணும் என்று சொல்லஇவளைப் பிரிந்து(?) வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்ற சோகமானேன்அவள் வீட்டில் இருந்துதான் கார் வந்ததிருந்ததுஎன்னை வீட்டில் இறங்கி உள்ளே செல்லவானு சொல்ல வேலைக்காரியத் தவிர யாரும் இல்லைநானும் எதிர்பார்க்க வில்லைஇதற்கு பழக்கியிருந்தேன்

சில நாட்களில் கிளப்பில் எங்களுக்கு பாராட்டு விழ நடத்தினார்கள்கிளப்பில் இருந்து வீட்டுக்கே வந்து அழைத்ததால் அப்பாவும் அம்மாவும் கூட வந்திருந்தார்கள்பெருமைக்காகவா?, இல்ல பேருக்காகவா?னு தெரியவில்லைஅம்மா ஏதோ அவள் கண்ணும் கருத்துமாய் என்னை வளர்த்தது போல் அந்த விழாவில் காட்டிக் கொண்டாள்பின்பு சில தினங்களுக்கு பின்வேற வழியில்லாமல்சமூக அழுத்தத்தின் காரணமாக அப்பா என் வெற்றியை கொண்டாட ஒரு பார்ட்டி கொடுத்தார்.
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 12-07-2020, 01:48 AM



Users browsing this thread: 4 Guest(s)