அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
#46
பாகம் - 8

அந்த ஆண்டு ஸ்கூல் தேர்வு முடிந்து என்னை அழைத்துப் போக வந்திருந்த தாத்தா, கோச்-சிடம் அடுத்த வருடத்தில் இருந்து கோயம்புத்தூரில் படிக்க வைக்கப் போவதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் நல்ல டென்னிஸ் அக்கடமியில் சேர்க்க போவதாகவும் சொல்ல, டோர்ணமென்ட் நடந்த அக்கடமிதான் கோவையில் சிறந்த அக்கடமி என்றும், சென்னையில் தான் கோவையை விட சிறந்த அக்கடமிகள் இருப்பதாகவும் கோச் தாத்தாவிடம் கூறினார். கோச் தாத்தாவிடம் என்னை சென்னையில் உள்ள அக்கடமியில் சேர்ப்பது தான் சிறந்ததாக இருக்கும் என்று சொல்ல, தாத்தா யோசிப்பதாக சொன்னார். அனைவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டு நாங்கள் பழனி வந்தடைந்தோம்

சாதாரணமா என்னுடைய விடுமுறை நாட்களில், காலையில் தாத்தாவுடன் கிளம்பி டெக்ஸ்டைல் மில்லுக்கோ, கிரானைட் பிளாண்ட்-க்கோ போய் சுத்திவிட்டு, மதிய சாப்பிட வீட்டுக்கு வந்துவிடுவேன், மதியம் டீவி, புத்தகம் வாசிப்பது (தாத்தாவிடம் இருந்து வந்த பழக்கம்) அல்லது தூங்குவதாக இருக்கும். மாலை சிறிது நேரம் டென்னிஸ், பின்பு தாத்தா வரும் வரை ஆச்சிகளுடன் அரட்டை, தாத்தா வந்தவுடன் அரட்டையில் சேர்ந்து கொள்வார், சாப்பிட்டு விட்டு ஒரு மணிநேரமாவது அன்று நடந்த, இல்லை பிசினஸ் சம்பந்தமாக ஏதாவது பேசுவார் தாத்தா என்னிடம். அவர் சொல்வது புரிக்கிறதோ இல்லையோ காது கொடுத்து கெட்க்க சொல்வார், பல நேரம் அவர் பேசுவது எனக்கு புரியவில்லை என்பது என் முகத்தில் தெரிந்தாள் "சொல்றத எல்லாம் கவனமா காதுல வாங்கிக்க, இப்போ புரியாவிட்டாலும், பின்னாளில் புரியும்" என்பார். அன்றும் அப்படித்தான் பேசிக் கொண்டிருக்கையில் தாத்தா திடீரென்று ஆரம்பித்தார்,

"தம்பி, அடுத்த வருசத்துல இருந்து கோயம்புத்தூர்ல படிக்கிறையா?"னு கேக்க, நான் உடனே மறுத்து தலைஅசைத்து 

"சென்னைல படிக்கிறேன் தாத்தா, கோயம்புத்தூர் வேண்டாம்" என்க, என் பதிலை எதிர் பார்த்திருந்த அவர், சின்ன ஆச்சி (தாத்தாவின் மனைவி) என்னைப் பார்த்து 

"இல்ல தங்கம், கோயம்புத்தூரு, இந்தா இங்குனக்குள்ள இருக்கு ரெண்டேட்ல வந்துரும், கொடைக்கானல் மாதிரி!,,,, மெட்ராஸ் எவ்வளவு தூரம், நினச்ச உடனே வர முடியுமா? சொல்லு?" னு சொல்ல, நான் சென்று தாத்தா மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டு 

"தாத்தா, நான் எங்க ஸ்கூல்லையே படிக்கிறேன், அங்க வேண்டாம், அங்க போன நான் தனியாத்தான் இருக்கனும்"னு சொல்லி மறுக, என் முதுகில் தட்டினார்,

"அவங்க ரெண்டு பேருக்கும் என் மேல பாசமே இல்ல, நான் வேணா அங்க ஏதாவது ஹாஸ்டல்ல சேந்துக்கிறேன், அந்த வீட்ல இருக்க மாட்டேன்"னு சொல்லி அழுதேன், முதுகில் தடவியவர்

"கண்ணு, நீ பெரிய டென்னிஸ் பிளேயர்யா வரணும், நல்ல படிக்கணும், பேரும் புகழும் வாங்கணும், அதுதான் உன்ன வளத்த எங்களுக்கு பெருமை!” 

"எங்களுக்கோ வயசாயிருச்சு, எங்க காலத்துக் அப்புறம், நீ எப்படி இருந்தாலும் அங்க போய்தான் இருக்கனும், என்ன இருந்தாலும் அவங்க உன்ன பெத்தவங்க! நீ நினைக்கிற மாதிரி உன் மேல பாசம் இல்லமா எல்லாம் இல்ல, ஏதோ நான் செஞ்ச பாவம்!, என் பேரன், நீ இப்படி கஷ்டப் படுறே?"னு 

ஆரம்பிச்சு ஏதேதோ சொல்லி, பெரிய ஆச்சியையும் என் கூட அனுப்புவதாக சொல்லி என்னை சம்மதிக்க வச்சார், நானும் அவர்கள் கெஞ்சியதாலும், மேலும் அவர்களை கஷ்டப் படுத்த வேண்டாம்னும், பெரிய ஆச்சி கூட வருவதாலும் ஒத்துக் கொண்டேன்

அடுத்த சில நாட்களில் இரு முறை கோவை சென்று வந்தார் தாத்தா, இரண்டாவது முறை செல்லும் போவது என் ரூமில் பாதியை காலிசெய்து கொண்டு போனார். கடைசியா நான் கோவை செல்லும் நாளும் வந்தது, மொத்தமாக அனைவரும் கிளம்பிச் சென்றோம், தாத்தா என்னுடன் இரண்டு நாள் தங்குவதாக உறுதி அளித்திருந்தார். பழனியில் இருந்து கிளம்பி அஞ்சு மணி நேரம் கழித்து, நான் என் அறையில், பெட்டில் அமர்ந்திருந்தேன், எனக்கு பிடிக்காத வீட்டில் எனது அறையில்(?). சிறிது நேரத்தில் தாத்தா வந்து என்னை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார், வீட்டின் மூன்றாவது தளம், அந்த இடம் மொத்தமாக மாறியிருந்தது, அங்கே ஒரு பெரிய ஜிம் மற்றும் இன்டோர் ஸ்வீமிங்க பூல் தவிர மீதி இருந்த இடத்தில் அழுமினியும் ரூஃபிங்க் பண்ணிய மாடித் தோட்டம் இருந்தது.

ஆனால் இப்பொழுது அந்த தோட்டத்தில் முக்கால் வாசி காலி செய்யப் பட்டு, ஃபைபர் கிலாஸால், கதவுடன் கூடிய சுவர் எழுப்பி பட்டிருந்தது, கதவை திறந்து பார்த்தால் உள்ளே, ஒரு வலையடித்த டென்னிஸ் கோர்ட், ஆச்சரியமாக, அதே நேரம் சந்தோஷமாக நான் தாத்தாவை பார்க்க, சிரித்தவர்,

"எல்லாம் உனக்குத்தான், ஏர் கண்டிஷனிங் மட்டும் பண்ணனும், அதுவும் ரெண்டு நாள்ல ரெடியாயிரும்"னு சொல்ல, நான் தாத்தாவைக் காட்டிக் கொண்டேன்

டென்னிஸ் கோர்ட்டைப் பார்த்தவுடன் தான் பானுவின் நினைவு வந்தது, தாத்தாவிடம் நன்றி சொல்லிக் கொண்டு, கீழே என் ரூம்க்கு வந்து "ஹாய்"னு ஒரு மெசேஜ் பன்னினேன் பானுவிற்க்கு, பதில் வர வில்லை, ஆஃப்லைனில் இருந்ததாள். அன்று இரவு டின்னரின் போது "ரெம்ப நாள் கழித்து மொத்த குடும்பமும் ஒன்ன உக்காந்து சாப்பிடுவதாக" தாத்தா கூற அனைவரும் ஆமோதித்தனர், இடையில் "சாப்பாடு நல்ல இருக்கானு?” சுமா என்னைப் பார்த்து கேட்டாள், சமயல்காரியை அழைத்த சிவா "என்ன வேண்டும், என்ன பிடிக்கும்" என்று என்னிடம் கேட்டு வைத்துக் கொள்ள உத்தரவு இட்டார். சாப்பாடு முடிந்தவுடன், ஹாலில் அமர்ந்தது பேசிக் கொண்டிருக்க, நான் தாத்தாவிடம் குட் நைட் சொல்லிவிட்டு தூங்க கிளம்ப, சுமா எனக்கு குட் நைட் சொன்னாள், நானும் பதிலுக்கு கூறிவிட்டு ரூம்க்கு வந்தேன்

குழம்பியிருந்தேன், சிவாவும், சுமாவும் இதற்கு முன் இப்படி என்னிடம் நடந்து கொண்டதில்லை, டின்னர்க்கு முன்னாடியே, இருவரும் தனித் தனியாக என் அறைக்கு வந்து நலம் விசாரித்து விட்டு போயிருந்தார்கள், ஒரு வேலை தாத்தா சொன்னது போல் என் மீது பெத்த பாசம் இருக்குமோ என்று எண்ணுகையில், மகிழ்ச்சியாக உணர்ந்தேன்

"டிங்" என்ற ஃபோனின் சத்தம் என் எண்ண ஓட்டத்தை கலைக்க, மெசேஜ்யை பார்க்க "ஹாய்" என்று பானுக்கா அனுப்பி இருந்தாள்,

அவளிடம் டெக்ஸ்ட் செய்ததின் சுருக்கம் - அவள் இத்தாலிக்கு வேக்கேஷன் போயிருப்பதாகவும், வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகும் என்று சொன்னாள். வந்தவுடன் மெசேஜ் பண்ண சொல்லியிருந்தேன். நான் கோவைக்கு ஷிப்ட் ஆனதை அவளிடம் சொல்லவில்லை, சர்ப்ரைஸ் பண்ணலாம் என்று நினைத்துக் கொண்டேன். கோவை வந்த இந்த பத்து நாள்களில் சிவாவும், சுமாவும்-ஆக என் எண்ணத்தில் இருந்தவர்கள், அப்பவும், அம்மாவுமாக மாறியிருந்ததார்கள், பாசத்தை பொழிய விட்டாலும் அப்பா இல்லாத சமையங்களில் அம்மா கொஞ்சம் பேசுவாள், அப்பா "எண்ண? எது? “ என்று தேவைகளின் பொருட்டே பேசுவார், ஆனால் பேச்சில் முன்பிருந்த வெறுப்பு இருக்காது, ஆனால் அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது

நான் தினமும் மதியம் ஆச்சி தூங்கியவுடன் சைக்கிள் எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் கிரவுண்ட்க்கு வந்துவிடுவேன், சில பசங்களை பிரெண்ட்ஸ் பிடித்திருந்தேன், அவர்களுடன் கொஞ்ச நேரம் கிரிக்கெட், பின்பு வீட்டுக்கு சென்று டென்னிஸ், சாப்பிட்டு விட்டு தூக்கம் இப்படியாக கழிந்தது என் கோவை வாழ்க்கை. எப்பொழுதும் போவள் கிரிக்கெட் விளையாடி விட்டு வீட்டுக்கு திரும்புகையில் என் ஃபோன் அடித்தது. சைக்கிள் நிறுத்திட்டு ஃபோன பார்கக, பானு தான் அழைத்தாள், சந்தோஷத்தில் 

"ஹலோ அக்கா, வீட்டுக்கு வந்துட்டீங்களா?"

"யாராவது ஃபோன் பன்னா, முதல்ல நல்ல இருக்கீங்களானு கேக்கணும், எடுத்த உடனே வந்துட்டீங்களா? போட்டீங்களா?"னு அவள் போய்க் கோபம் கொள்ள 

"ஓகே, நல்ல இருக்கீங்களா?"

"எஸ்"

"இப்போ சொல்லுங்க, வீட்டுக்கு வந்துட்டீங்களா?"

"இல்ல, இப்போதான் சென்னை வந்தோம், ஒரு மணி நேரம் ஆச்சு, கோயம்புத்தூர் ஃப்ளைட்-காக வெயிட்டிங்

"நைட் வந்துருவிங்களா?"

"எஸ்"

"நீங்க கோயம்புத்தூர் வாங்க உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு"

"அப்படியா?..நானும் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சுறுக்கேன்!" அவள் சொல்ல, நான் ஆர்வ மிகுதியில் 

"என்ன சர்ப்ரைஸ்?"

"நீ ஒரு புளூ கலர் சைக்கிள் வச்சுருக்கியா?"

"ஆமா, உங்களுக்கு எப்படி தெரியும்" என்று ஆச்சரியமாக கேக்க 

"சொன்னேல சர்ப்ரைஸ்னு, இத்தாலில ஜோசியம் காத்துக்கிட்டேன்" நான் சிரித்துக்கொண்டே 

"சும்மா, விளையாடாதீங்க"னு சொல்ல

"ஓகே இப்போ உன் எதிர் காலத்துல நடக்க போற ஒண்ணே சொல்லுறேன் கேக்குரியா?"

"ம்ம்"

"உன் எதிர்கால மாமியாரை பக்க போறே இன்னும் கொஞ்ச நேரத்துல"னு சொல்ல

அப்போ உண்மையிலேயே ஒரு அழகான ஆண்ட்டி என்ன கடந்தது போச்சு, நான் பேச்சு மூச்சு இல்ல இருக்க

"என் உன் மாமியார் அழகா இருக்கங்களா?" கேக்க, இந்த முறை ஆச்சரியத்துடன் 

"அக்கா, உண்மையெலே நீங்க ஜோசியம் கத்துக்கிட்டீங்களா?" கேக்க 
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 11-07-2020, 11:10 PM



Users browsing this thread: 9 Guest(s)