அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
#38
மறுநாள் கோயம்புத்தூர்ஒரு புகழ் பெற்ற கிளப்எண்ட்ரன்ஸ் பீஸ் கட்டி பதிவு செய்து விட்டுஎனக்கு அளிக்கப்பட்ட நம்பர் பொறித்த வெஸ்ட் வாங்கிக்கொண்டுநானும்கோச்சும் என் கேம் கோர்ட் தேடிப்போனோம்தாத்த சிறிது நேரத்தில் வருவதாக சொல்லிவிட்டு பார்க்கிங் சென்றார்எனது போட்டி ரெண்டாவது சுற்றில்இன்னும் நேரம் இருந்ததுநாங்கள் கோர்ட்டீன் கேலரியில் அமரமுதல் சுற்று போட்டியாளர்கள் சிலர் பயிற்சியிலும்சிலர் வாம்அப் பன்னிக்கொண்டும் இருந்தார்கள்வீட்டில் இருந்து கொண்டு வந்த ஜூஸை குடிக்க சொன்னார் கோச்சிறது நேரத்தில் தாத்தா வந்து எங்கள் பக்கத்தில் அமரந்து 

"எப்போ தம்பி உன் மேச் ஆரம்பிக்கும்னு கேக்க"

"எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு குறையாது"யென்று கோச் சொன்னார்,

"இது தெரிஞ்சிருந்தாநாம வெளிய போயே சாப்பிட்டு இருக்கலாமேபரவா இல்ல இன்னும் கொஞ்ச நேரத்துல இட்லி வந்துரும்இட்லி ஓகேவா தம்பிஇல்ல வேற சொல்லட்டுமா?"

"இடலியே போதும் சார்"னு சொன்னார் கோச்நாங்க ரெண்டு பெரும் காலையில் சாப்பிடுவதை பற்றியே யோசித்திருக்கவில்லை

"தம்பிநல்ல தூங்கினியா வண்டிலசோர்வா இல்லையே?"

"ஏறி உக்கந்த உடனே தூங்கினாவன் தான்இங்க வந்து வண்டி நின்னது கூட தெரியமா தானே தூங்கிக்கிட்டு இருந்தேன்நீங்கதான தாத்தா எழுப்பி விட்டீங்க!"

"சும்மா கேட்டேன் டா கண்ணாஇந்த சாப்பாடு வந்துருச்சுவந்த சாப்பாட்டை நாங்கள் காருக்கு சென்று சாப்பிட்டு வர

ஒரு அரைமணி நேரத்தில் எனக்கான போட்டி அழைப்பு வந்ததுஆரம்பித்து பதிணைந்தே நிமிடத்தில் ஜெய்த்தேன்நேர் செட்களில்கூட்டம் இல்லா விட்டாலும் ஓரளவு அதிகமான கரஒலிகள்பரஸ்பர கை குழுக்களுக்கு பின் கோச் வந்தது என்னைப் பாராட்டி அனைத்துக் கொண்டார்

"வெல் பிளேய்டு எங் மேன்"னு சொல்லி ரேபிரீ கைகொடுத்தார்தான் போட்டி நடக்கும் கிளப்பில் கோச் என்றும்நான் எந்த கிளப்னும் விசாரித்தார்நான் தொழில்முறை பயிற்ச்சி பெறவில்லை என்பதை நம்ம மறுத்தார்பின்பு விருப்பம் இருந்தால் தங்கள் கிளப்பில் சேர சொல்லி அவரது விசடிங்க காரட் கொடுத்தார்கோச் யோசிப்பதாக சொல்லிவிட்டு வாங்கிக்கொண்டார்அந்த கோச் சொன்னதை தாத்தாவிடம் கூறபெருமையோடு முதுகில் தட்டி பாராட்டினார்

"அடுத்த ஆட்டம் எப்போ"னு தாத்தா கேக்கதான் கேட்டு விட்டு வருவதாக கோச் சொன்னார்நானும் உடன் செல்ல எழதடுத்து என்னை ரிலாக்ஸ் பண்ணச் சொல்லிவிட்டு சென்றார்சிறிது நேரத்தில் வந்தவர்அடுத்த சுற்று மூன்று மணிக்கு மேல் தான் என்றும்மூணாவது சுற்று நாளைக்கு காலையில் இருக்கும்னு சொல்ல 


"அய்யோநாளைக்கு வரைக்கும் இருக்கணுமா பா?"னு தாத்தா கேட்க 

"உங்களுக்கு வேலை இருந்தாநீங்க கிளம்புங்கநான் மணி கூட இருந்துட்டுநாளைக்கு போட்டி முடிஞ்சதும்வீட்ல விட்டேறேன்"னு கோச் சொல்லசிரித்த தாத்தா 

"என்ன தம்பி நீங்கஇதுக்குத் தான் உங்க வொய்ஃப்-ட திட்டு வாங்குரிங்கஇன்னைக்கு நைட் வரேன் சொல்லிட்டு ஏமாத்துனாமாசமா இருக்க புள்ள ஏங்கிறாதா?"னு தாத்தா பரிவுடன் அவரின் மனைவியை பற்றி சொல்லகோச்சின் முகத்தில் சிறிது சோகம்

"பரவா இல்லசொல்லிக்கிறேன்புரிஞ்சுப்பாஎன்றார் கோச்

"ஒண்ணும் பிரச்சனை இல்ல தம்பி,, நீங்க கிளம்புங்க,, அதான் நான் இருக்கேன்ல தம்பி கூட"னு தாத்தா சொல்லமுடியவே முடியாதென்று மறுத்துவிட்டார்இந்த நிகழ்வுகளை பார்த்த எனக்கு கோச்-சின் மீது இருந்த அன்பு பல மடங்கு அதிகரித்தது

"தாங்க்ஸ் சார்"னு சொல்லி அவரை அனைத்துக் கொண்டேன்

"மணி சார்தாங்க்ஸ் சொல்லி எல்லாம் என்ன ஏமாத்த முடியாதுமெயின் டோர்னமெண்ட்ல வின் பண்ணுஅதுதான் எனக்கு நீ சொல்லற தாங்க்ஸ்இதெல்லாம் செல்லாது"னு சொல்லி அந்த சூழலை ரெம்ப இலகுவாக்கினார்.

"சரி தம்பி வாங்கஎப்படியும் நைட் தங்குறதுனு முடிவாகிருச்சுபோய் ரூம் போட்டு ஹோட்டல்ல ரிலாக்ஸ் பண்ணலாம்"னு தாத்தா சொல்ல

கோச்-சும்தாத்தாவும் முன்னால் செல்லநான் கிட் பேக் மற்றும் ராக்கெட்டை எடுத்துக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்தேன்
--------------------
சிறிது நேரத்தில் கார் தி ரெஸிடென்சி ஹோட்டலில் நின்றதுகிளப்-யில் இருந்து கிளம்பும் போதே தாத்தா ரூம் புக் பண்ண அவரது மேனேஜர்ரிடம் சொல்லி இருந்தார்ஹோட்டலை அடையும் முன் ரெண்டு ரூம் புக் செய்யப்பட்ட செய்தி வந்ததுஐந்து நிமிடத்தில் ரூமில் இருந்தோம்நான் அப்படியே பெட்டில் சாய்ந்து ரிலாக்ஸ் பண்ணதாத்தா என்னிடம் 

"ஏதாவது வேண்னுமாஆர்டர் பண்ணனுமா?” என்று கேட்கநான் வேண்டாம் என்றதும்காபி ஆர்டர் பண்ணிவிட்டுகோச்-க்கு ஃபோன் செய்துதயக்க படாமல் வேண்டியதை ஆர்டர் செய்துகொள்ளச் சொல்லிவிட்டுமதியம் சாப்பிட எங்கள் ரூமிறக்கு வரச்சொன்னார்மதியம் ரூமிறக்கு வந்து சாப்பிட்டு விட்டு சென்றவர்பத்து நிமிடத்தில் திரும்பிவந்து 3.15க்கு அடுத்த போட்டினும்மூணு மணிக்கு கோர்ட்ல ரிப்போர்ட் பண்ணனும்னு சொன்னார்

மதியம் 3.30 

என்னிடம் தோற்ற பையன்கண்கள் கலங்கிய படி கை குழுக்கினான்மறுபடியும் நேர் செட்இந்தமுறையும் அதே பதினைந்து நிமிடங்கள்கூட்டம் கொஞ்சம் அதிகம் இருந்ததுகர ஒலியும் சற்று பலமாக ஒலித்ததுபரஸ்பர கை குழுக்களுக்கு பின் நான் கோச்-சை தேடஅவர் ஏதோ பதட்டத்துடன் தாத்தாவிடம் பேசிக்கொண்டிருந்தார்என்னை தேடிக் கண்டு பிடித்த தாத்தாவின் கண்கள் உடனே வருமாறு அழைக்கஓடிச் சென்றேன்உடனே என் உடமைகளை எடுத்துக்கொண்டு கார் பார்கக்கிங்க வரச்சொன்னார்சிறது நேரத்தில் நான் எங்கள் காரின் அருகில் செல்லஇருவரும் பின்சீட்டில் இருந்தனர்நான் முன்சீட்டில் ஏறடிரைவரரை வண்டி எடுக்கச் சொன்னார் தாத்தாஃபோனில் யாரிடமோ

"அஞ்சு நிமிசத்துல என்னணு பாத்துட்டு எனக்கு கால் பண்ணனும்உடனே கிளம்புகட்டளையிட்டார்கோச்-சின்தோள்களில் கைவைத்து 

"பயப்படாதீங்க தம்பிஒன்னும் ஆகாதுநம்ம காபி எஸ்டேட் உங்க வீட்ல இருந்து ரெண்டு கிலோ மீட்டர் தான்அஞ்சு நிமிஷத்துல கார் வந்துரும்னு சொல்லுங்க", 

கோச் யாருக்கோ ஃபோன் பண்ணதாத்தா மறுபடியும் அவர் தோளில் தட்டி,

"நீங்க மொதல்ல தைரியமா பேசுங்கநீங்களே பயந்த வீட்ல இன்னும் பயப்படுவாங்க"னு சொல்ல

அவரும் வண்டி வந்துகொண்டிருப்பதாகவும்தானும் ஒரு நாலு மணிநேரத்தில் வந்து விடுவதாகவும் ஃபோனில் கூறினார்பத்து நிமிடத்தில் தாத்தாவுக்கு ஃபோன் வந்ததுஎடுத்து பேசியவர் 

"சரி"

"நல்லதுஹாஸ்பிடல்ல சேத்துட்டுகூடவே இருந்து பாத்துக்கணும்பில் என்ன வந்தாலும் கட்டிருநமக்கு ரெம்ப வேண்டப் பட்டவங்கடாக்டர்ட பேசிட்டு உடனே எனக்கு தகவல் சொல்லணும்கூடவே இருக்கணும்"னு அறிவுறுத்திட்டுகோச்-யைப் பார்த்து 

"ஒண்ணும் பிரச்சனை இல்ல தம்பிஏழு மசம்தான ஆகுதுசூட்டு வலியாத்தான் இருக்கும்பத்து நிமிஷத்துல ஹாஸ்பிடல் போய்ருவாங்ககவலைப் படாதீங்கஇந்த நேரத்துல தான் ஒரு மனுஷன் ரெம்ப தைரியமா இருக்கணும்ரவி கொஞ்சம் மிதிச்சு போ"னு டிரைவர்க்கு அறிவுறுத்தினார்

"ஏற்கனவே உங்க திங்க்ஸ் பேக் பண்ணி கீழ கொண்டுவரச் சொல்லி ஹோட்டல்ல சொல்லியச்சுஅப்படியே இந்த வண்டில நீங்க கொடைக்கானல் கிளம்புங்கநீங்க அங்க போய் சேர்க்கிற வரைக்கும்நம்ம ஆளுங்க கூட இருப்பாங்கதெம்பா இருங்க"னு தாத்தா சொல்லிக் கொண்டிருக்கையில் 

கோச்-க்கு ஃபோன் வந்ததுதாத்தா சொல்லிய அதே தகவல்நாங்கள் ஹோட்டல்லை அடைய அங்கே தாத்தா சொன்னதுபோல்ஹோட்டல்லை சேர்ந்த ஒருவர் கோச்-சின் பையுடன் நின்றார்கோச் வண்டியை விட்டு இறங்கவே இல்லைநான் திரும்பி கோச்-யிடம் "சாரிஎன்று சொல்லஎன் தலைமுடிகளை கோதியவர்ஒன்றும் சொல்லவில்லைநாங்கள் இறங்கிக்கொள்ளதாத்தா கோச்-யைப் பார்த்து 

"உங்க நல்ல மனசுக்கு எல்லாம நல்லதுதான் தம்பி நடக்கும்பயப்படமா தைரியமா இருங்கசீட் பெல்ட்ட போடுங்கஉதவினு நினைக்கமா என்ன வேணும்னாலும் தயங்காம கேளுங்க, - டிரைவரிடம் திரும்பி இருட்டுறதுக்குள்ள முடிஞ்ச அளவு வேராட்டிப் போமலையேறும் பொது கவனமா போகணும்சொல்லுற வரைக்கும் தம்பி கூட இருக்கணும்"னு அறிவுரை சொல்லி வழியனுப்பினார்நாங்கள் எங்கள் அறைக்கு வந்தோம்காபி ஆர்டர் செய்துவிட்டு நான் குளிக்கச் சென்றேன்

தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கூடஎன் திறமையில்வளர்ச்சியில் அக்கறையும் அன்பும் காட்டும் கோச்தான் நினைத்ததை இருந்த இடத்தில் இருந்தே சாதித்துக் கொள்கிற பலமும்தன்னால் முடிந்த அனைவருக்கும் உதவும் தாத்தாவின் பேரன்புஎன்னையே உயிராகவாழ்க்கையாக நினைக்கும் ஆச்சிகள்நினைத்து பாரத்தால் என்னை சுற்றியுள்ள அனைவரது அன்பிறக்கும்பாசத்திற்க்கும் உரியவனாக இருக்கிறேன் என்ற எண்ணம் தந்த நெகிழ்ச்சியில்நெடுநேரம் நின்றிருந்தேன் ஷவரின் வெதுவெதுப்பில்

என் வாழ்வின் உன்னதமான தருணங்களில் ஒன்று அதுஆனால் இந்த மகிழ்ச்சி இன்னும் சில நிமிடங்களில் காணாமல் போகுமென்றும்என் வாழ்க்கையின் கோர உண்மை என்னை சந்ததிக்க ஜெட் வேகத்தில் வருகிறது தென்றும் அப்போது எனக்கு தெரியாதுநான் துண்டை கட்டிக்கொண்டு அறையினில் நுழையபோனை வைத்த தாத்தாஎன்னை பார்த்து முகமெல்லாம் சந்தோஷமாக 

"டேய் தம்பிஉங்க கோச்-க்கு பெண் குழந்தை பிறந்திருக்காம்குறைப்பிரசாவம்ஆன ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையாம்"னு சொல்லநானும் மகிழ்ச்சியோடு அவருக்கு ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்துவிட்டுடிரஸ் செய்தேன்நான் டிரஸ் செய்து முடித்தவுடன் என்னை அருகில் உக்கார சொல்லி தோள்களை அனைத்துக் கொண்டுதாத்தா கேட்டார் 

"நைட் வீட்ல தங்கலாமா?", னு கேட்ககுழப்பத்துடன் நான் 

"வேணாம் தாத்தாமறுபடியும் காலைல சீக்கிரம் எழனும்வேண்டாமேஇங்கையே இருக்கலாம்"னு சொல்லஒரு பெரும் மூச்சு விட்டுட்டு

"டேய் நமக்கு இங்கையும் வீடு இருக்குபோலாமா?"னு சொல்லநான் முகம் சுருங்கி பாவமாக தாத்தாவைப் பார்த்தேன்

"கொஞ்சம் நான் சொல்லுறத கேளுஅப்புறம் உன் முடிவுக்கே விட்டுறேன்நீ என்ன சொன்னாலும் சரி"

நான் மொனமாக இருக்கதாத்தா தொடர்ந்தார்

"நேரா வீட்டுக்கு போறோம்நீ அங்க வந்து யாரட்டையும் பேசவேணாம்நேரா உன் ரூம்க்கு போகொஞ்ச நேரம் டீவி பாருஅப்புறம் நைட் டின்னர்க்கு நீயும் நானும் வெளிய ஹோட்டல் போறோம்திரும்பி ரூமுக்கு போய் தூங்குரோம்காலைல எழுந்து கிளம்பி சாப்டுஉன் மேட்ச் முடிஞ்சதும் ஊருக்குப் போறோம்ஓகே"னு கேக்க

வழி இல்லநான் என்ன சொன்னாலும் பதில் வச்சிருப்பாரனு எனக்கு தெரியும்அதனால ஓகேனு மண்டையாட்ட, "குட் பாய்"னு சொல்லி என்னை பேக் பண்ண சொல்லிட்டுஎன் அப்பாவுக்கு ஃபோன் செய்து வண்டி அனுப்பச் சொன்னார்என் வாழ்க்கையின் முதல் முறையா அடி வாங்கியது அந்த வீட்டில்தான்கடந்தமுறை அந்த வீட்டில் இருக்கும் பொதுஎதுக்காகவோ என் தாத்தாவை தேடி படிகளில் இறங்கி ஓடிவரகுறுக்கே வந்த என் அம்மாவை கவனிக்காமல் இடித்துவிட்டேன்கொஞ்சம் வேகமா இடித்திருப்பேன் போலஅவளுக்கு வழித்திருக்கும் போலகோபத்தில் என் தோள்களைப் பற்றி இழுத்தவள்நான் சாரி சொல்லம் முன்பளார் என்று கன்னத்தில் அடித்துவிட்டாள்மொத்தக் கையும் என் முகத்தில் விழஅவள் அடித்த அடியில் என் பல் கீறி உதட்டில் ரத்தம் வழிந்ததுஅப்புறம் தாத்தா ஒரு காலவரமே செய்து விட்டார்ஆனாலும் அந்த அடி எனக்குள் சொல்ல முடியாத ஒரு பெரும் பயத்தை உண்டாக்கி இருந்ததுசின்ன பையன் நான்ஒரு பதினொரு வயசு இருக்கும் இச்சம்பவத்தின் பொதுஅந்த வீட்டிறக்கு இனிமேல் செல்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன் நான்சிறுவர்களின் முடிவு எப்பொழுது நிலைப்பதில்லை
[+] 6 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 11-07-2020, 08:44 PM



Users browsing this thread: 11 Guest(s)