நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#14
அதை கேட்டு நான் அதிர்ச்சியாகி"எப்படி என்று கேட்டேன்.

அதற்கு மாலதி"அந்த கூத்த ஏன் கேட்குறீங்க.அவன் என்ன மந்திரம் பண்ணானோ தெரியல.அவ எப்பொழுதும் அவன் கூடத்தான் சுத்துவா.ஒருநாள் ரெண்டும் ஆடிட்டோரியம் பக்கத்துல நின்னு கிஸ் அடிச்சிட்டு இருந்துதுங்க அதை பார்த்த மந்தாகினி டீச்சர். அவங்க ரெண்டுபேரையும் பிரேயர்ல வச்சு பனிஷ் பண்ணிட்டாங்க.மறுநாள் அந்த பொண்ணு தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை பண்ணிட்டா"என்றார்.

நான் மேலும் அதிர்ச்சியாகி "அப்புறம் என்னாச்சு "என்றேன்.

"அப்புறம் என்ன போலீஸ் வந்தாங்க.ரெண்டுநாள் விசாரிச்சாங்க.அவன் நான் அந்த பொண்ண லவ் பண்ணவே இல்லனு.அவ கண்ணுல தூசி விழுந்திடுச்சு அத ஊதிவிட்டுட்டு இருந்தேன் என்று சொல்லி சமாளிச்சுட்டான். கடைசியா அவ வயித்து வலியால தற்கொலை பண்ணிக்கிட்டா னு கேஸ குளோஸ் பண்ணிட்டாங்க"என்றார் சுதா டீச்சர்.

அதற்கு மாலதி" அவங்க எங்க சொன்னாங் அந்த பையனோட அப்பாதானே காசு கொடுத்து அவனே அப்படி சொல்ல சொன்னார்.பாவம் அந்த பொண்ணு குடும்பமும் ஏழை குடும்பம் பணம் படைத்தவங்க முன்னாடி அவங்களால நிக்க முடியல"என்றார்.

"சே!ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்தவனா நீ உன்னையா என் மனதில் இவ்வளவு நேரம் என்னவெல்லாமோ கற்பனை செய்து கொண்டிருந்தேன்.இல்லை இனி உன் முகத்தில் விழிப்பது கூட பாவம் "என்று முடிவு செய்தேன்.

என்னவோ தெரியவில்லை என் கண்களில் கண்ணீர் வந்தது அது அவனுக்காக இல்லை அவனால் மரணம் அடைந்த அந்த பெண்ணிற்காக.

அதன் பிறகு அவனை சாப்பிடும் போது கேண்டீனில் பார்த்தேன்.நானும் மந்தாகினியும் சாப்பிட போனோம்.அவன் கேண்டீனின் மையத்தில் அமர்ந்திருந்தான் அவனை பார்க்கவே பிடிக்கவில்லை நான் அவனுக்கு பின்னால் அவன் முகத்தை பார்க்காதவாறு அமர்ந்துகொண்டேன் ஆனாலும் அவன் இடம்மாறி என்னை பார்ப்பதற்கு வசதியாக அமர்ந்து கொண்டான் .அதன் பிறகு அவன் என்னையே பார்த்து கொண்டிருந்தான் நான் அவனை பார்க்கவே இல்லை.அவசர அவசரமாக சாப்பிட்டு வெளியேறினோம் அப்பொழுதும் என் பின்னாலே வந்தான்.நான் கைகழுவிகொண்டிருக்கும் போது என் கைகளுக்கு இடையே தெரிந்த இடைவெளி வழியாக என் மார்பையே பார்த்துகொண்டிருந்தான். எனக்கு குமட்டிகொண்டுவந்தது அப்படீயே செருப்பை கழட்டி அவனை "பளார் பளாரென" அடிக்க வேண்டும் போல் இருந்தது.ஆனால் அடக்கிகொண்டேன்.பின் அவசர அவசரமாக மந்தாகினியை கூட்டிகொண்டு ஸ்டாப் ரூமிற்கு சென்றேன்.அவன் பின்னாலே நின்று வெறித்து பார்ப்பது தெரிந்தது நான் கண்டுகொள்ளவே இல்லை.

அதன் பின் நான் அவனை பார்க்கவே இல்லை.மாலை பள்ளிவிட்டதும் பஸ் ஸ்டாப்பிற்கு சென்றேன் அங்கே அவன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.நான் உடனே மீண்டும் பள்ளிக்கு சென்று மந்தாகினியுடம் என்னையும் போகும் போது கூட்டிபோக சொன்னேன்.அவள் ஸ்கூட்டி வைத்திருந்தாள்.

நானும் அவளோடு சேர்ந்து விளையாடிவிட்டு செல்ல ஆறரை மணி ஆகிவிட்டது.நாங்கள் புறப்படும் போது பார்த்தேன் அவன் இன்னும் பஸ் ஸ்டாப்பிலே நின்றிருந்தான்.ஆனால் அவன் என்னை பார்க்கவில்லை.

வீட்டிற்கு வந்து முகம் கழுவி சமைத்து நானும் அம்மாவும் சாப்பிட்டோம்.சிறிது நேரம் நாளை நடத்த வேண்டிய பாடங்களை பற்றிகுறிப்பெடுத்து விட்டு தூங்க போய்விட்டேன்.மழை இன்னும் பெய்துகொண்டிருந்தது.ஆனால் அவன் ஞாபகம் சற்றும் இல்லை.
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 27-02-2019, 05:06 PM



Users browsing this thread: 1 Guest(s)