Romance ஆண்மை தவறேல் - by Screwdriver
#73
அத்தியாயம் 21


அடுத்த பத்து நிமிடத்தில் எல்லாம் மஞ்சு அந்த வீட்டை விட்டு கிளம்பிவிட்டாள். அவள் அங்கிருந்து கிளம்பியிருந்தாலும், அசோக்கின் உடலுக்குள் அவள் ஏற்படுத்தியிருந்த காம வேட்கை அவனை விட்டு அகலாமல் அங்கேயே தங்கியிருந்தது. உள்ளுக்குள் காமத்தீ கொழுந்துவிட்டு எரிய, அதை ஆல்கஹால் விட்டு அணைக்க நினைத்தான். சோபாவில் வந்து அமர்ந்தவன், விஸ்கி பாட்டிலை எடுத்து அதன் கழுத்தை திருகியவாறே, எதிரில் இருந்த நாயரிடம் இறுக்கமான குரலில் சொன்னான்.

"வேற யாரையாவது புடி நாயர்.."

"இப்போவா..??" நாயர் அதிர்ச்சியும், குழப்பமுமாய் கேட்டார்.

"யெஸ்.. ரைட் நவ்..!!!"

"லேட் ஆகி போச்சு அசோக்.. இனிமே கஷ்டம்..!!"

"ஜஸ்ட் ட்ரை..!!!"

அசோக் எரிச்சலுடன் குரலை உயர்த்த, நாயர் திகைத்துப் போனார். அவருடைய செல்போனை அவசரமாக தேடி எடுத்து, காண்டாக்ட் லிஸ்ட் திறந்தார். அசோக் க்ளாஸில் ஊற்றிய விஸ்கியுடன் எதையும் கலந்து கொள்ளாமலேயே அப்படியே உள்ளே ஊற்றினான். நெருப்பை விழுங்கிய மாதிரி தொண்டை எரிச்சல் எடுக்க.. அனலில் வாட்டியது போல கண்கள் சிவந்து கிடக்க.. நாயரையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான். அவர் ஒவ்வொரு எண்ணாக முயலுவதும்.. ஒவ்வொரு பெண்ணாக அணுகுவதும்.. அப்புறம் அசோக்கிடம் திரும்பி உதட்டை பிதுக்குவதுமாக இருந்தார்..!!

ஒரு பத்து நிமிடங்கள் முயன்று பார்த்தவர், பின்பு அந்த முயற்சியை கைவிட்டார். மீண்டும் விஸ்கி நிரப்பப்பட்ட க்ளாஸுடன் தன்னையே முறைத்துக் கொண்டிருந்த அசோக்கிடம் பரிதாபமாக சொன்னார்.

"ரொம்ப டைம் ஆகிடுச்சு அசோக்.. இன்னைக்கு விட்ரு.. நாளைக்கு பாத்துக்கலாம்..!!"

"ஃபக்..!!!!"

ஏமாற்றமும், சலிப்புமாய் கத்திய அசோக், க்ளாஸில் இருந்த விஸ்கியை தொண்டைக்குள் ஊற்றினான். காலியான க்ளாஸை 'டம்..' என்று பெரும் சப்தத்துடன் கீழே வைத்தான். டீப்பாயில் கிடந்த கார்ச்சாவியை எடுத்துக்கொண்டு எழுந்தான். விறுவிறுவென நடந்து சென்று வீட்டை விட்டு வெளியேறினான்.

அடுத்த பத்து நிமிடங்களுக்கு எல்லாம் அசோக்கின் கார் ஈஸ்ட் கோஸ்ட் ரோடில் பறந்து கொண்டிருந்தது. ஏக்கம், ஏமாற்றம், எரிச்சல் என ஏகப்பட்ட உணர்வுகள் அவனை போட்டு மொத்தமாய் அழுத்திக் கொண்டிருந்தன. உடலெல்லாம் ஒருவகை உஷ்ணமேறிப்போய் தகித்துக் கொண்டிருந்தது. மனதெல்லாம் எதன்மீதோ ஒரு கோவம். அந்த கோவத்தை ஆக்சிலரேட்டரில் காட்ட, கார் சீறியது. மேலும் ஒரு பத்து நிமிடங்களில் வீட்டை அடைந்தான்.

"என்னங்க.. லேட் ஆகும்னு சொன்னீங்க.. சீக்கிரமே வந்துட்டீங்க.."

உற்சாகமாக கேட்டுக்கொண்டே அசோக்கை வரவேற்ற நந்தினி, அவனுடய இருண்டுபோன முகத்தை கண்டதும் உடனே அவளும் முகம் மாறினாள். பட்டென அவளுடைய முகம் ஒருவித கவலையை அப்பிக் கொண்டது.

"என்னங்க.. என்னாச்சு..?"

நந்தினி அவளுடைய வலதுகையால் அசோக்கின் கன்னத்தை தாங்கியவாறு கனிவுடன் கேட்டாள். கொதித்துக் கொண்டிருந்த அசோக்கின் உடலுக்கு, அவளுடைய பட்டுக்கையின் ஸ்பரிசம் ஜில்லென இருந்தது. அவனுடைய உடல் லேசாக சிலிர்த்துக் கொண்டது. ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு அவளுடைய கையை விலக்கியவாறே சொன்னான்.

"ஒ..ஒண்ணுல்ல நந்தினி.."

"இல்ல.. உங்க முகமே சரியில்ல.. சொல்லுங்க.. என்னாச்சு..?"

"லே..லேசா தலைவலி.. வேற ஒண்ணுல்ல.."

"தலைவலியா.. ஏன்..? மேட்சாலயா..? சென்னை சொதப்பிடுச்சா..??"

"ம்ம்.. ஆமாம்.. எல்லாம் சொதப்பிடுச்சு.."

"என்னங்க நீங்க.. மேட்சை போய் இவ்ளோ சீரியசாவா எடுத்துக்குறது..? எங்க காட்டுங்க..!!"

சொல்லிக்கொண்டே நந்தினி அவளது புறங்கையால் அவனது நெற்றியை தொட்டு பார்த்தாள். மீண்டும் அவளுடைய ஸ்பரிசத்தை உணர்ந்ததில் அசோக் இப்போது நெளிந்தான்.

"என்னங்க.. இப்படி கொதிக்குது.."

என்று பதறிய நந்தினி, இப்போது அவளது கையை நகர்த்தி அசோக்கின் கழுத்தை தொட்டு பார்த்தாள். அப்புறம் இன்னும் சற்று கீழே இறக்கி அவனது மார்பிலும்..!! அசோக்கிற்கு அவளுடைய தொடுகை ஒருவித அவஸ்தையை உண்டாக்கியது. உடலில் ஏறியிருந்த உஷ்ணம் அவளுடைய ஸ்பரிசத்தால் அதிகரிக்கவே செய்தது. மார்பிலிருந்த அவளது கையை மெல்ல விலக்கினான்.

"எனக்கு ஒன்னும் இல்ல நந்தினி.."

"உடம்புலாம் சூடா இருக்குங்க.. ஃபீவர் மாதிரி இருக்கு.."

"ம்ம்.. சூடாத்தான் இருக்கு.. ஆனா ஃபீவர்லாம் இல்ல..!! இது வேற..!!"

"வேறன்னா..?"

"உனக்கு புரியாது விடு.." எரிச்சலாக சொல்லிவிட்டு, அசோக் நகர முயல,

"சரி வாங்க.. சாப்பிடலாம்.." என்று அவள் இப்போது அவனது புஜத்தை பற்றினாள்.

"எனக்கு சாப்பாடு வேணாம்.."

"ஏன்..?"

"பசிக்கலை.." அசோக் எரிச்சலாக சொல்ல, நந்தினிக்கு பட்டென முகம் சுருங்கிப் போனது.

"என்னங்க நீங்க.. உங்களுக்காக எல்லாம் ஆசையா சமைச்சு வச்சுட்டு.. சாப்பிடாம வெயிட் பண்ணிட்டு இருக்குறேன்.. இப்படி சொன்னீங்கன்னா எப்படி..?? கொஞ்சமாவது சாப்பிடுங்க.. ப்ளீஸ்..!!"

நந்தினி அவ்வாறு கெஞ்சலாக சொல்ல, அசோக் அவளையே தவிப்பாக பார்த்தான். அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. நந்தினியின் அப்பாவி முகத்தில் அப்பியிருந்த ஏக்கத்தை கண்டவன், மறுத்து பேச முடியவில்லை.

"சரி எடுத்து வை.. இதோ வந்துர்றேன்.."

என்றுவிட்டு உள்ளறைக்கு நடந்தான். நந்தினியோ உடனே உற்சாகமாகிப் போனாள். கிச்சனுக்கு சென்று சாம்பாரை மட்டும் சூடு பண்ணி எடுத்துக் கொண்டாள். இரண்டே நிமிடங்களில், சமைத்த உணவுப் பொருட்களை எல்லாம் டைனிங் டேபிளில் அடுக்கியிருந்தாள். அதற்குள்ளாகவே அசோக்கும் வேறு உடைக்கு மாறி, முகம் கழுவி ரெஃப்ரஷ் செய்து கொண்டு, டைனிங் டேபிளுக்கு திரும்பினான்.

நந்தினியே அருகில் இருந்து உணவு பரிமாறினாள். அவளுடைய அருகாமை அசோக்கிற்கு ஒருவித அவஸ்தையையே கொடுத்தது. திருமணமான நாளில் இருந்து எத்தனையோ நாட்கள் அவள் இந்தமாதிரி அவனுக்கு உணவு பரிமாறியிருக்கிறாள். ஆனால் இன்று ஏனோ அந்த சூழ்நிலை அவனுக்கு புதிதாக பட்டது. மஞ்சுவினால் அவனுடைய உடலில் மீட்டப்பட்ட அதிர்வுகள், இன்னும் ஓயாமல் இருந்ததே அதன் காரணம் என்று அவனுக்கு தோன்றியது.

நந்தினியின் உடலில் இருந்து வந்த ஒரு நறுமணம் அவனுடைய நாசியை தாக்கி சித்திரவதை செய்தது. மின்விசிறியில் இருந்து புறப்பட்ட காற்று, அவளுடைய புடவை தலைப்பை பறக்க செய்ய, அது வந்து அசோக்கின் முகத்தில் மோத, அதில் ஏதோ அவன் ஒரு சுகம் கண்டான். காலிஃப்ளவரை விழுங்கிக்கொண்டே கண்களை சுழற்றினால், அவளுடைய குழைவான இடுப்பு க்ளோசப்பில் தெரிந்தது. உடனே அவன் பார்வையை படக்கென திருப்பிக்கொள்ள வேண்டியதாயிருந்தது. 'இருங்க.. நான் ஊத்துறேன்..' என்று அவள் எட்டி நெய் பாட்டிலை எடுக்கையில், அவனுடைய நெற்றியில் ஏதோ மெத்தென்று இடித்தது. அது என்னவாயிருக்கும் என்று அவனுடைய மூளை யோசிக்கையில், அவனுடைய உடலுக்குள் ஒரு கிளர்ச்சி படருவதை அவனால் தடுக்க முடியவில்லை.

"எனக்கு போதும் நந்தினி.." அசோக் பாதியிலேயே எழுந்து கொண்டான்.

"என்னங்க அதுக்குள்ளே எந்திரிச்சுட்டீங்க.. இன்னும் கொஞ்சம் வச்சு சாப்பிடுங்க.."

"ப்ச்.. எனக்குத்தான் பசிக்கலைன்னு சொன்னேன்ல..? இவ்ளோதான் முடியும்.."

"சரி.. போதும்.. போய் கை கழுவிக்கோங்க.."

அசோக் கிச்சனுக்கே சென்று கைகழுவிக்கொண்டான். அவன் எழுந்து கொண்டதும் நந்தினி அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். கிச்சனில் இருந்தே அசோக் ஓரக்கண்ணால் பார்க்க, டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த நந்தினி பக்கவாட்டில் தெரிந்தாள். புடவை மறைக்காத அவளது இடுப்பும், ப்ளவுசுக்குள் முட்டிக்கொண்டு நின்ற அவளது ஒருபக்க மார்பும்..!! சற்று அடங்கியிருந்த அவனது இதயத்துடிப்பு இப்போது மீண்டும் வேகமெடுத்தது. உடலில் உடனே ஒரு நடுக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.

'இல்லை.. இது சரியில்லை.. எனக்கு ஏன் இன்று புத்தி இப்படி எல்லாம் போகிறது..?? இத்தனை நாட்கள் இவளுடைய அழகை ரசிப்பேனே ஒழிய.. அனுபவிக்க நினைத்ததில்லை.. ஆனால் இன்று.. என் மனம் ஏன் இப்படி அலைகிறது..?? ஏன்.. அதில் என்ன தவறு இருக்கிறது.. இவள் உன் மனைவிதானே..?? தாலி கட்டியிருக்கிறாய் இவளுடைய கழுத்தில்.. அனுபவிக்கவே உனக்கு உரிமை இருக்கிறது.. ஆசைப்பட உரிமை இல்லையா..?? ஹாஹா.. உரிமையா..?? என்ன உரிமை..?? சற்று முன் நாயரிடம் சொன்னாயே.. மறந்து விட்டதா..?? உங்களுக்கு இடையில் இருப்பது திருமண பந்தம் இல்லை.. ஒரு அக்ரீமன்ட்..!! அவளுடைய அழகை அனுபவிக்க நினைப்பது அந்த அக்ரீமன்ட்டுக்கு புறம்பான செயல்..!! அவளுக்கு அடிக்கடி சொல்வாயே.. இப்போது நீ ஞாபகம் வைத்துக்கொள்.. கல்யாணத்துக்கு முன்பாக போட்ட கண்டிஷன் எல்லாம்..!!'

குழப்பத்தில் திளைத்த அசோக், ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்தான். 'இன்று என் மனம் போகிற போக்கு சரியில்லை.. மூளையின் உத்தரவுகளை மதிக்க மறுக்கிறது.. இன்னும் ஐந்து நிமிடங்களில் இவள் சாப்பிட்டு முடித்து விடுவாள். அப்புறம் உறங்க செல்ல வேண்டும். ஒரே அறைக்குள் இவளும் நானும்..!! நிச்சயம் என்னுடைய மன உறுதியை இவள் சோதிக்க போகிறாள்.. இவளுடைய அழகு சோதிக்க போகிறது..!! வேண்டாம்.. அதை தவிர்த்து விடுவது நல்லது..!!'

"எனக்கு கொஞ்சம் ஆபீஸ் வேலை இருக்குது நந்தினி.. நான் மாடிக்கு போறேன்.. சாப்பிட்டு நீ போய் தூங்கு.." அசோக் நந்தினியை ஏறிடாமல், படிக்கட்டுக்கு நடந்து கொண்டே சொன்னான்.

"ம்ம்.. சரிங்க..!! ரொம்ப நேரம் முழிச்சிருக்காதீங்க.. சீக்கிரம் வந்து படுங்க..!!" நந்தினி வாய்க்குள் இருந்த சாதத்தை அவசரமாய் விழுங்கிவிட்டு சொன்னாள்.

சில நேரங்களில் அசோக் இந்த மாதிரி மாடியில் இருக்கும் அறைக்கு சென்று அலுவலக வேலைகளை கவனிப்பது இயல்புதான். ஆனால் இன்று நந்தினியின் அழகு அளித்த இம்சையில் இருந்து தப்பிக்கவே அவ்வாறு பொய் சொல்லிவிட்டு வந்தான். பார்ப்பதற்கு அலுவலக வேலைகள் என்று எதுவும் இல்லை. அப்படியே இருந்தாலும் அதில் கவனம் செலுத்தக் கூடிய அளவுக்கு அவனுடைய மனதிலும் அமைதியில்லை. அதனால் அந்த அறைக்கு செல்லாமல் மேலும் ஒரு மாடி ஏறி, மொட்டை மாடிக்கு சென்றான்.

மொட்டை மாடியில் பிரவேசித்ததுமே குளிர் காற்று வந்து அவனை அப்படியே அள்ளிக் கொண்டது. ஜிலுஜிலுவென வீசிய தென்றல் அமைதியில்லாத அவனுடைய மனதுக்கு ஆறுதலாக இருந்தது. ஆங்காகாங்கே நின்றிருந்த போஸ்டுகளின் உச்சியில், கவிழ்ந்திருந்த மஞ்சள் நிற விளக்குகள், மொட்டை மாடியை தாராளமாகவே வெளிச்சத்தில் நிறைத்திருந்தன. ஒரு நான்கு போஸ்டுகளில் நான்கு முனைகளும் கட்டப்பட்ட, கயிறாலான அந்த வலை ஊஞ்சல் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.

அந்த ஊஞ்சலை கடந்து, அசோக் மொட்டை மாடியின் ஒரு மூலைக்கு நடந்து சென்றான். கைப்பிடி சுவரை பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வெளிப்புறம் இந்த உலகத்தின் மீது பார்வையை வீசினான். எரிவதும், திடீரென அணைவதுமாய் இருந்த தெருவிளக்குகள்.. இருளான சாலையில் அவ்வப்போது வெளிச்சத்துடன் பறக்கும் வாகனங்கள்.. அந்த வாகனங்களை குரைத்தபடியே விரட்டிப் பார்க்கும் நாலைந்து நாய்கள்.. அந்த நாய்களை கல்லெறிந்து விரட்டும் பக்கத்து வீட்டு வாட்ச்மேன்..!!

எத்தனையோ முறை இந்தமாதிரி அவன் வந்து மொட்டை மாடியில் நின்றிருக்கிறான். ஆனால் இன்று இந்த சூழ்நிலை மிகவும் இதமாக தோன்றியது அவனுக்கு..!! உலகத்துக்கு கருப்பு கவசம் போட்ட மாதிரி இருண்ட வானம்.. அங்கங்கே பொத்தல் விழுந்தாற்போல மினுக்கும் நட்சத்திரங்கள்.. அந்த அழகுக்கு சிகரம் வைத்த மாதிரி பால்நிறத்தில் வட்ட நிலா.. அந்த நிலாவை அவ்வப்போது திரள்திரளாய் கடந்து செல்லும் வெண்மேகங்கள்.. கருப்பு வானத்தை கிழித்தவாறு மேலேறும் விமானம் ஒன்று.. காற்றில் மிதந்து வரும் தூரத்து கடலோசை.. ரம்யமாக இருந்தது அந்த சூழ்நிலை..!! அசோக்கின் மனதில் இருந்த படபடப்பை கொஞ்சம் கொஞ்சமாய் அடக்கி, அமைதியாக்கியது அந்த சூழ்நிலை..!!

ஆனால் அந்த அமைதியை குழைக்க, நந்தினி அங்கு வந்து சேர்வாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒரு ஐந்து நிமிடங்களில் எல்லாம் நந்தினி படியேறி மொட்டை மாடிக்கு வந்தாள். படிக்கட்டில் இருந்து அவள் வெளிப்பட்டதுமே, சப்தம் கேட்டு திரும்பிய அசோக் அவளை கவனித்துவிட்டான். வந்ததில் இருந்தே அவளை நேருக்கு நேர் பார்க்க தயங்கியவன், இப்போது மனம் அமைதியான பிறகுதான் அவளை தயக்கமில்லாமல் கவனமாக பார்த்தான்.

கையில் ஒரு கண்ணாடி கிண்ணத்துடன் நந்தினி நடந்து வந்து கொண்டிருந்தாள். அணிந்திருந்த கருநீல நிற புடவை அவளுடைய வெளுத்த மேனிக்கு எடுப்பாக இருந்தது. அந்த புடவையை லோ ஹிப்பாக அவள் சுற்றியிருக்க, அவளது செழுமையான இடுப்பு நெளிவு, செக்ஸியாக காட்சியளித்தது. கூந்தலை பின்னாமல் காற்றுடன் கதைபேச விட்டிருந்தாள். மஞ்சள் விளக்கின் வெளிச்சத்தில் அவளுடைய பால்நிலா முகம் தூரத்திலேயே பிரகாசித்தது. அவளுடைய ஈர உதடுகள் இப்போது புன்னகையையும் சேர்த்து பூசியிருந்தன. அழகே வடிவெடுத்து அசைந்து வருவது போல.. நந்தினி அன்னநடை நடந்து அசோக்கை நெருங்கினாள். அவள் நெருங்க நெருங்கவே.. அசோக்கிற்கு அவனுடைய இதயம் படபடப்பது மாதிரி ஒரு உணர்வு..!!



"என்னங்க.. இங்க நின்னுட்டு இருக்கீங்க..? ஆபீஸ் வேலை இருக்குன்னு சொன்னீங்க.. நான் உங்களை அந்த ரூம்ல போய் தேடிட்டு வர்றேன்..!!"



"சு..சும்மாதான்.. வேலை பாக்க மூடு இல்ல..!! ஆமா.. என்ன இது கைல..??"



"குலோப் ஜாமூன்..!! இன்னைக்கு நானே பண்ணினேன்.. இதை உங்களுக்கு சாப்பிட கொடுக்கலாம்னுதான் வந்தேன்..!!"



"என்ன.. திடீர்னு க்ளோப் ஜாமூன்லாம்..??"



"ஒண்ணுல்ல.. உங்களுக்கு க்ளோப் ஜாமூன் புடிக்கும்னு கௌரம்மா நேத்து சொல்லிட்டு இருந்தாங்க.. உங்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தலாம்னு தோணுச்சு..!! அதான் அம்மாகிட்ட ரெஸிப்பி கேட்டு பண்ணி பார்த்தேன்.. நல்லா வந்திருக்கு.. சாப்பிட்டு பாருங்க..!!" நந்தினி கிண்ணத்தை அவனிடம் நீட்டினாள்.



"இல்ல நந்தினி.. எனக்கு வேணாம்.. நீ சாப்பிடு.." அசோக் அவ்வாறு வெறுமையாக சொன்னதும் நந்தினியின் முகம் லேசாக வாடிப்போனது.



"ஏங்க.. உங்களுக்கு பிடிக்கும்னு ஆசையா பண்ணினேன்.."



"பிடிக்கும் நந்தினி.. இப்போ வேணாம்..!!"



"ஏன்..??"



"இப்போத்தான வயிறு ஃபுல்லா சாப்பிட்டேன்.."



"ஓ.. அவ்ளோதானா..?? சரி.. கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுங்க..!!"



என்றவள் அந்த கிண்ணத்தை கைப்பிடி சுவர் மீதே வைத்தாள். கைகள் ரெண்டையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, அந்த சுவற்றிலேயே சாய்ந்து நின்றுகொண்டாள். அசோக்கும் இப்போது திரும்பி சுவற்றில் சாய்ந்து கொண்டான். கைகளை கட்டிக்கொண்டான். ஓரக்கண்ணால் தன் மனைவியை பார்த்தான். அவளோ தூரமாக வளர்ந்திருந்த ஒரு உயரமான கட்டிடத்தில் பார்வையை வீசியிருந்தாள்.



அவர்களுக்குள் நிலவிய சிறு நேர அமைதியை, திடீரென சிலுசிலுவென்று வீசிய காற்று வந்து குலைத்தது. காற்றுக்கு சிலிர்த்துக் கொண்டே நந்தினி சொன்னாள்.



"ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆ.. காத்து செமையா அடிக்குதுல..? உள்ள அப்படி வேகுது.. இங்க என்னடான்னா.. ஜில்லுனு காத்து.. சூப்பரா இருக்கு.."



"ம்ம்.. ஆமாம்.."



"இப்படியே இங்கயே நின்னுட்டு இருக்கலாம் போல இருக்கு..!! இருட்டான இந்த இயற்கையை ரசிச்சுக்கிட்டு.. அந்த ஊஞ்சல்ல சொகமா ஆடிக்கிட்டு.. மேல இருக்குற நிலா வெளிச்சத்தை ரசிச்சுக்கிட்டு..!!"



"ம்ம்ம்.." அசோக் அமைதியாக புன்னகைத்தான்.



"ஆங்.. உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன்..!! வெளிச்சம்னதும்தான் ஞாபகத்துக்கு வருது.." நந்தினி திடீரென ஞாபகம் வந்தவளாய் சொன்னாள்.



"என்ன..?"



"உங்க செல்ஃப்ல ஒரு பெயிண்டிங் பார்த்தேன்.. ஏது அது..?"



"ஓ.. அதுவா..?? அது ஒரு கிஃப்டா வந்தது..!!"



"ஓஹோ..?? அதை ஏன் அங்க போட்டு வச்சிருக்கீங்க..?"



"ஏன்..?"



"இல்ல.. பெயிண்டிங் ரொம்ப அழகா இருந்தது.. வீட்டுல எங்கயாவது மாட்டி வைக்கலாம்ல..? நல்லா இருக்கும்ல..?"



"ஓ.. அவ்வளவு புடிச்சிருக்கா அந்த பெயிண்டிங்கை..?"



"ரொம்ப பிடிச்சிருந்தது..!! கௌரம்மாகிட்ட சொல்லி வச்சுட்டேன்.. நாளைக்கு எங்கயாவது ஆணியடிச்சு அந்த பெயிண்டிங்கை மாட்டிட்டுத்தான் மறுவேலை..!!"



"ம்ம்ம்ம்.. அந்த பெயிண்டிங்கை வரைஞ்சது யார் தெரியுமா..?"



"யாரு..?"



"நம்ம காலேஜ்ல புருஷோத்தமன்னு ஒருத்தன் படிச்சான்.. ஞாபகம் இருக்கா..?"



"புருஷோத்தமனா..??" ஒரு சில வினாடிகள் நெற்றியை சொறிந்த நந்தினி, அப்புறம் ஞாபகம் வந்தவளாய்,



"ஆங்.. காலேஜ் ஸ்ட்ரைக் அப்போ.. மெக்கானிக்கல் எச்.ஓ.டி மண்டையை உடைச்சானே.. அவந்தான..??"



"ஹாஹா.. அவனேதான்.. ஹாஸ்டல்ல அவன்தான் என் ரூம் மேட்.. உனக்கு தெரியுமா..?"



"ம்ஹூம்.. தெரியாது..!!"



"ம்ம்.. ரொம்ப நாளுக்கப்புறம் அவனை இப்போ ரீசண்டா மீட் பண்ணினேன்.. அவன் வரைஞ்ச ஒரு பெயிண்டிங்கை எனக்கு கிஃப்டா கொடுத்தான்..!!"



"நெஜமாவா..?? என்னால நம்பவே முடியலை அசோக்..!! எந்த நேரமும் கஞ்சா அடிச்ச மாதிரியே உர்ருன்னு சுத்திட்டு இருப்பான்.. அவனா இவ்வளவு கலாரசனையோட ஓவியம்லாம் வரையுறான்..? அவனுக்கு அப்போவே பொண்ணுக பழக்கம்லாம் கூட இருக்குன்னு கேள்விப் பட்டேன்..!!"



"ம்ம்.. அதெல்லாம் அப்போ நந்தினி.. இப்போ அவன் ரொம்ப மாறிட்டான்..!!"



சற்றே ஏக்கமான குரலில் அப்படி சொன்ன அசோக், 'ஒரு பொண்ணு அவனை மாத்திட்டா..' என்பதை மட்டும் மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.



"இப்போ அவன் ரொம்ப பாப்புலரான ஓவியன்.. வாராவாரம் ஆனந்த விகடன், குமுதத்துல அவனோட ஓவியம் வருது.. பாத்திருக்கியா..?? புனிதான்ற பேர்ல வரும்..!!"



"இல்ல.. கவனிச்சது இல்ல..!!"



"ம்ம்.. அடுத்த தடவை கவனிச்சு பாரு..!!"



"பாக்குறேன்..!! நீங்க சொல்றது எல்லாம் எனக்கு ஆச்சரியமாத்தான்பா இருக்குது.. அப்படி இருந்தவன் இப்படி மாறிருக்கான்னா.. இட்ஸ் ரியல்லி கிரேட்..!!"



"அதுசரி.. நீ எதுக்கு என் செல்ஃப்லாம் நோண்டிட்டு இருக்குற..?" அசோக் அந்த பேச்சை மாற்றும் எண்ணத்துடன், ஒரு போலிக் கோபத்துடன் கேட்டான்.



"ம்க்கும்.. நான்லாம் ஒன்னும் உங்க செல்ஃபை நோண்டலை சாமி..!! நீங்க கண்ட கருமமும் வச்சிருப்பீங்க.. அதெல்லாம் பார்க்கனும்னு எனக்கு என்ன தலையெழுத்தா..?"



"அப்புறம்..?"



"எல்லாம் அந்த தமிழரசிதான்..!!"



"ஓ.. அவளா..?? வந்திருந்தாளா அந்த வாண்டு..??"



"ஆமாம்.. வந்திருந்தா.. உங்களை பாத்துட்டு போறேன்னு சொன்னா.. நான்தான் 'நீங்க வர லேட் ஆகும்'னு சொல்லி ஹாஸ்டலுக்கு விரட்டி விட்டுட்டேன்..!! அவதான் சொல்ல சொல்ல கேட்காம.. உங்க காலேஜ் ஆல்பத்தை பாக்கனும்னு அடம் புடிச்சு.. செல்ஃபை நோண்டிட்டு இருந்தா.. அவதான் அந்த பெயிண்டிங்கையும் கண்டுபுடிச்சு எடுத்துட்டு வந்தா..!!"



"ம்ம்.. என்ன சொன்னா.. என் செல்ல தமிழ்க்குட்டி..??"



"அவளா.. அவ ஏதேதோ சொன்னா.. ஆனா அதெல்லாம் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க..!!"



"ஹாஹா.. அப்படி என்ன சொன்னா..??"



"வேணாம்.. விடுங்க.. எப்படியும் நீங்க நம்ப போறது இல்ல.. நான் பொய் சொல்றேன்னு சொல்வீங்க.."



"ஹேய்.. சொல்லு நந்தினி.. நான் அப்படிலாம் சொல்ல மாட்டேன்.."



"ம்ம்ம்ம்.. அந்த பெயிண்டிங்கை பாத்துட்டு இருந்தோமா..?? அப்போ.."



"ம்ம்.."



"நான் 'பெயிண்டிங் ரொம்ப அழகா இருக்குல தமிழ்..'ன்னு சொன்னேன்.. அதுக்கு அவ.."



"என்ன சொன்னா..?"



"நீங்களே ஒரு அழகான பெயிண்டிங் மாதிரிதான் இருக்கீங்க ஆன்ட்டி'ன்னு ஒரு வார்த்தை என்னை பாத்து சொல்லிப்புட்டா..!! எனக்கு அப்படியே ஆகாசத்துல பறக்குற மாதிரி ஜிவ்வுன்னு ஆயிடுச்சு.. ஹாஹாஹாஹா..!!"



சொல்லிவிட்டு நந்தினி எளிறுகள் தெரிய கலகலவென சிரித்தாள். அசோக்கோ இப்போது பட்டென அமைதியாகிப் போனான். அழகாக சிரித்துக் கொண்டிருந்த நந்தினியையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான். தமிழரசி சொன்ன அந்த வார்த்தைகள் இப்போது அசோக்கின் செவிப்பறையில் ரீங்காரமிட்டன. 'உண்மைதான் அல்லவா..?? தமிழரசி சொன்னதில் தவறேதும் இல்லை அல்லவா..?? தேர்ந்த ஓவியன் ஒருவன் உச்சபட்ச ரசனையுடன் உருவாக்கிய ஓவியம் போலத்தானே இவள் இருக்கிறாள்..?? ஆமாம்.. ஓவியமேதான்.. உயிருள்ள ஓவியம்.. பேசும் திறன் படைத்த ஓவியம்.. இப்போது உள்ளத்தை கொள்ளை கொள்ளுமாறு நகைத்துக் கொண்டிருக்கிற ஓவியம்..!!'



"என்ன அப்படி பாக்குறீங்க..?" நந்தினியின் குரல் அசோக்கின் கவனத்தை கலைத்தது.



"ஒ..ஒண்ணுல்ல.. சும்மா.." அசோக் தடுமாற்றமாய் சொன்னான்.



"நான்தான் சொன்னேன்ல.. நீங்க நம்ப மாட்டீங்கன்னு.. ஹாஹா..!!"



"இல்ல.. நம்புறேன்.. அவ சொல்லிருப்பா.. அவ சொன்னது நூத்துக்கு நூறு உண்மைன்னுதான் எனக்கும் தோணுது..!!"



அசோக் அந்த மாதிரி சொல்லிவிட்டு நந்தினியின் முகத்தையே ஆசையாக பார்க்க, இப்போது நந்தினியின் சிரிப்பும் பட்டென நின்றது. தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கும் கணவனையே மருட்சியாக பார்த்தாள். அவனுடைய பார்வையில் இருந்த கூர்மையும், வசீகரமும் அவளை ஏதோ செய்தது. அவளுடைய மார்புகள் படபடக்க ஆரம்பித்தன. அந்த மாதிரி பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல உள்ளுக்குள் எழுந்த ஒரு ஆசையை உடனே அடக்கிக்கொண்டு, வேறுபக்கமாக திரும்பிக் கொண்டாள். ஒரு சில வினாடிகள் தடுமாறியவள், அப்புறம் பேச்சை மாற்றும் எண்ணத்துடன்,



"சரி.. க்ளோப் ஜாமூன் சாப்பிடுங்க.." என்றாள்.



"இல்ல.. எனக்கு வேணாம்.." அசோக் மீண்டும் மறுத்தான்.



"ப்ச்.. கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேன்னு சொன்னீங்கள்ல..??"



"நான் எப்போ அப்படி சொன்னேன்.. நீயா அப்படி சொல்லிக்கிட்ட.."



"ஐயோ.. அப்பா.. ரொம்பத்தான்பா பிகு பண்றீங்க..!! போங்க.. நீங்க ஒன்னும் சாப்பிட வேணாம்.. நானே சாப்பிட்டுக்குறேன்.. அப்போ ஒரே ஒரு பீஸ் மட்டும் டேஸ்ட் பண்ணுனதொட சரி.. வெறில இருக்கேன் நான்..!!"



சொன்ன நந்தினி கிண்ணத்தை எடுத்து கொண்டு வந்திருந்த குலோப் ஜாமூனை சாப்பிட ஆரம்பித்தாள். அசோக் அவள் சாப்பிடும் அழகை அருகில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தான். ஒரு குழந்தையின் சந்தோஷத்துடன் நந்தினி ஜாமூன் சாப்பிட்டாள். சிறியதாக உருட்டப்பட்டிருந்த ஜாமூனை ஒவ்வான்றாக ஸ்பூனில் எடுத்து அப்படியே வாயில் போட்டு சுவைத்தாள். அவ்வாறு சுவைக்கையில் நாக்கில் எழுந்த தித்திப்பை, லேசாக இமைகள் மூடி ரசித்தாள். அவளுடைய தாடை அசைவுக்கு ஏற்ப, அவளது காதில் கிடந்த ஜிமிக்கிகள் குலுங்கின.



ஜாங்கிரியை பிட்டு வைத்த மாதிரியான அவளுடைய உதடுகள் ஜாமூன் சுவைக்கின்றன. ஏற்கனவே தேனில் நனைந்த மாதிரி இருக்கும் அவளது ஈர உதடுகளில் இப்போது ஜீரா வடிகிறது. வடிகிற ஜீராவை அவளது நாக்கு வெளிப்பட்டு, ஒரு சுழற்சி சுழன்று உள்ளிழுத்துக் கொள்கிறது..!! நந்தினியின் உதட்டசைவை பார்க்க பார்க்க.. அசோக்கிற்கோ ஒரு இனம்புரியாத ஆசை ஊற்று மனதுக்குள் பீறிட்டு கிளம்புகிறது..!! சற்றுமுன் மூட்டப்பட்டு.. பின் அணைக்காமல் விடப்பட்டு.. உள்ளுக்குள்ளே கனன்று கொண்டிருந்த அந்த மோகத்தீ.. இப்போது கண்விழிக்கிறது..!! அவனுடைய உடலெல்லாம் பரபரவென பரவி பற்றி எரிகிறது அந்த தீ.!!



"எ..எனக்கும் தா நந்தினி..!!" ஏக்கமாக கேட்ட அசோக்கின் பார்வை நந்தினியின் உதடுகளையே வெறித்தது.



"போங்க.. வேணான்னு சொன்னீங்கள்ல.. உங்களுக்கு கெடயாது..!!" அவனுடைய மனநிலை புரியாது நந்தினியும் விளையாடினாள்.



"வெளயாடாத நந்தினி.. ப்ளீஸ்..!!"



"நோ நோ.. இல்லைன்னா இல்லைதான்..!!"



"ப்ளீஸ் நந்தினி..!!"



"சரி.. இந்தாங்க.. ஒன்னே ஒண்ணுதான்..!!"



நந்தினி ஒரு ஜாமூனை ஸ்பூனில் எடுத்து அசோக்கின் வாய்க்கருகே நீட்டினாள். அவன் நந்தினியின் முகத்தை ஆசையாக வெறித்துக் கொண்டே வாயை திறக்க, நந்தினி அவனுக்கு தராமல் ஏமாற்றி தன் வாய்க்குள் போட்டுக் கொண்டாள். ஆட்காட்டி விரலை மடக்கி அசோக்கிற்கு அழகு காட்டினாள். 'ஹாஹாஹாஹா..' என சிரித்தவாறே ஜாமூனை அவள் பற்களால் கடிக்க, ஜீரா வெளிப்பட்டு அவளுடைய உதட்டு ஓரமாய் வடிகிறது. அதை பார்த்த அசோக்கிற்கு காமப்பித்து தலைக்கேறுகிறது.



"ப்ளீஸ் நந்தினி.." என்றான் ஏக்கமாக.



"அச்சச்சோ.. ஏமாந்துட்டீங்களா.. ஸாரி ஸாரி..!! ம்ம்.. இந்தாங்க..!!"



அடுத்து ஒரு ஜாமூனை எடுத்து நந்தினி அசோக்கிடம் நீட்டினாள். அசோக்கும் வாய் திறந்தான். நந்தினி மீண்டும் அவனை ஏமாற்றி ஸ்பூனை அவளுடைய வாய்க்கு எடுத்து சென்றாள். ஆனால் இந்த முறை அசோக் விடவில்லை. அவனுடைய உதடுகள் ஸ்பூனோடு சேர்ந்தே நகர்ந்தன. அவள் ஜாமூனை வாய்க்குள் போட்டதுதான் தாமதம். ஸ்பூனோடு பயணித்த அசோக்கின் உதடுகள், 'பச்ச்சக்க்..' என நந்தினியின் உதடுகளை கவ்விக் கொண்டன..!!



அவ்வளவுதான்..!! நந்தினி பக்கென அதிர்ந்து போனாள். அவளது இமைகள் படாரென அகலமாய் விரிந்து கொண்டன. கையிலிருந்த கிண்ணமும் ஸ்பூனும் தரையில் விழுந்து 'ச்சிலீர்ர்ர்..' என சப்தம் எழுப்பி சிதறின. அவளது உதடுகள் அசோக்கிடம் அகப்பட்டிருக்க.. அவளுடைய கன்னங்களை அவனது கைகள் தாங்கியிருக்க.. அவளுடைய கைகள் ரெண்டும் அந்தரந்தில் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தன.



அகப்பட்ட நந்தினியின் உதடுகளை அசோக் ஆவேசமாக சுவைத்தான். அவளுடைய வாய்க்குள் முழுதாக போடப்பட்ட ஜாமூன், இப்போது பாதி வெளிப்பட்டு அசோக்கின் வாய்க்குள் தஞ்சம் கொண்டது. அந்த ஜாமூனை கூட சுவைக்க மனமின்றி, அதனினும் இனிப்பான நந்தினியின் அதரங்களை ஆசையாக சுவைத்தான். அவளுடைய உதட்டின் ஓரமாய் வழிந்த ஈரத்தை தன் நாவால் தடவி தனக்குள் இழுத்துக் கொண்டான்.



அவனுடைய ஆவேச முத்தத்தில் நந்தினி மிரண்டு போனாள் என்றுதான் சொல்லவேண்டும். இப்படி ஒரு திடீர் முத்தத்தை அவள் எதிர்பார்த்திரவேயில்லை. அவளுடய இதயம் உச்சபட்ச வேகத்தில் படபடத்தது. உடலெல்லாம் வெடவெடத்தது. ஜிவ்வென்று ஒரு சுக மின்சாரம் அவளுடைய நாடி நரம்புகள் அத்தனையிலும் பாய்ந்தோடியது.
[+] 2 users Like Its me's post
Like Reply


Messages In This Thread
RE: ஆண்மை தவறேல் - by Screwdriver - by Its me - 28-05-2020, 01:15 PM



Users browsing this thread: 4 Guest(s)