08-05-2020, 02:50 PM
கான்பரன்ஸ் ஹாலுக்குள்... காமினிதான் சென்டர் ஆப் அட்ராக்ஷன் ஆக இருந்தாள். நிறைய பேர் அவளோடு வலிய போய் கைகுலுக்கி பேசிக்கொண்டிருந்தனர். நிறைய பேர் அவளோடு பேச ஆசைப்பட்டு... ஈகோவால் தவித்துக்கொண்டிருந்தனர். அவள் நிம்ரிந்தால், திரும்பினால், எழுந்து நடந்தால்.... அனைவரின் பார்வையும் அவள்மேல் விழுந்தது. எத்தனை பொண்ணுங்க இங்க இருந்தாலும், காமினி மேம்க்கு இருக்கற க்ரேஸ் தனிதான்... என்று பெருமிதத்தோடு சீனு நின்றுகொண்டிருந்தான்.
சீனு எதிர்பார்த்துக் காத்திருந்த presentation moment வந்தது. அவன் அவளை கண்கொட்டாமல் ரசித்துக்கொண்டிருந்தான். காமினி க்ரே கலரில் ஆபிஸ் கோட் மற்றும் ஸ்கர்ட் அணிந்திருந்தாள். செம அழகாக ஸ்டைலாக இருந்தாள். அவளுக்கு கைதட்டல் அதிகமாகவே இருந்தது.
கான்பரன்ஸ் முடிந்து நடந்து வரும்போது, அவர்களில் சிலர் அவளோடு ஒட்டிக்கொள்ள... சீனு தவிப்பதை அவள் ரசித்தாள். அதில் ஒருவன் லிப்ட் கதவை அவளுக்காக உடைத்துவிடுவதுபோல் ஷோ காட்டிக்கொண்டிருக்க... இவனுக்கு பொறாமையாக இருந்தது. லிப்டுக்குள் காமினி இவனோடு நின்றுகொள்ள... அவனுக்குப் பெருமையாக இருந்தது.
காரிடாரில் நடந்துபோகும்போதுதான் தனிமை கிடைத்தது.
ரொம்ப சூப்பரா present பண்ணீங்க மேம். - கண்கள் விரிய... சொன்னான் சீனு.
இந்த ட்ரெஸ் எப்படியிருந்ததுடா. ஒண்ணுமே சொல்லல?
அள்ளுது மேம். அந்த ஹால்ல உங்களை அடிச்சிக்க ஆளே இல்ல.
காமினி மெலிதாக சிரித்தாள். அவளுக்கு அவனோடு பேசிக்கொண்டு நடப்பது பிடித்திருந்தது. பரபரப்பு, கேள்விகள், பதில்கள், ஆர்டர்கள். லாபம், நஷ்டம் எல்லாம் மறந்து ரிலாக்ஸாக இருக்க ஆசைப்பட்டாள்.
சும்மா சொல்லாத
ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி இருந்தீங்க.
டேய் ஏதாவது நம்புற மாதிரி சொல்லு
VTV தெலுகு ரீமேக்ல கடைசில சமந்தா நடந்து வருவாங்கல்ல... அதைவிட அழகா இருந்தீங்க
காமினிக்கு சந்தோஷமாக இருந்தது. எத்தனையோபேர் க்யூட்டா இருக்கீங்க என்று சொல்லிவிட்டார்கள். இவன் சொல்வதுதான் பூரிப்படைய வைக்கிறது.
கூந்தலை ஒதுக்கிவிட்டுக்கொண்டே கேட்டாள். நேத்து ஆசைப்பட்ட மாதிரி... இன்னைக்கும் ஆசைப்பட்டிருப்பியே?
நிறைய.
சொல்லு
வேணாம் விடுங்க
இருவரும் மெதுவாக நடந்துகொண்டிருந்தார்கள். காமினி அவனை குறும்பாக ஒரு பார்வை பார்த்தாள். சொல்லு.. என்றாள். சீனு அவளை தன் இரு கைகளிலும் அலேக்காகத் தூக்கினான்.
ஏய்....
உங்களை இப்படித் தூக்கி வச்சிக்கணும்னு ஆசைப்பட்டேன்.
காமினி சட்டென்று திரும்பி யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்தாள். யாரும் இல்லை. ஒரு வயசான ஜோடி மட்டும் இவர்களை பார்த்து லேசாக சிரித்துவிட்டு போய்க்கொண்டிருந்தது. காமினி எதுவும் பேசாமல் அவன் கழுத்தில் கைகளை போட்டுப் பிடித்துக்கொண்டாள்.
பிசினஸ் பிசினஸ் என்று ஆளாய் பறந்துவிட்டு, இப்போது ரிலாக்ஸாக அவன் கையில் கிடப்பது அவளுக்குப் பிடித்திருந்தது. மனம் லேசானது.
அவளைக் கையில் தாங்கிக்கொண்டே அவன் அவள் ரூம் கதவுமுன் நிற்க, அவள் கதவை திறந்தாள். உள்ளே கொண்டு போய் பூப்போல அவளை இறக்கிவிட்டான்.
ரொம்ப டயர்டா இருக்கீங்க. ரெஸ்ட் எடுங்க...
அவள் அவனைப்பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, தமிழைப் பார்க்க வீடியோ கால் போட்டாள். சீனு அவள் கொஞ்சி கொஞ்சி பேசுவதை பார்க்க நின்றுகொண்டிருந்தான்.
போய்ட்டு அப்புறம் வா என்று கண்களால் சொன்னாள். அவனோ நீங்க கொஞ்சுங்க... நான் பார்த்துட்டுப் போறேன் என்றான்.
அடச்சீ... போ
ஓகே.. ஓகே.... என்று கிண்டலாக தலையை அசைத்துச் சொல்லிக்கொண்டே அவன் அப்படியே நிற்க..... காமினி கீழ் உதட்டை வாய்க்குள் வைத்துக்கொண்டு அவன் தலையில் ஓங்கிக் கொட்டினாள்.
ஸ்ஸ்ஸ்....ஆஆஆ....
காமினி சிரித்துக்கொண்டே மறுபடியும் அவனை கொட்ட கையை ஓங்க... அவன் தலைதெறிக்க ஓடினான்.