நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#7
அத்தியாயம் 3:

அவளை பார்த்தும் என் இதயத்தில் ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது .அவளும் என்னை பார்த்து அதிர்ந்தாள் அது அவள் கண்களில் தெரிந்தது.

அனைவரும் தங்கள் பெயரை சொல்லி அறிமுகபடுத்தி கொண்டிருந்தனர்.

ஆனால் எனக்கு அவள் பெயர் மட்டுமே ஒலித்து கொண்டிருந்தது.

"ஹாய் ஸ்டுடண்ட்ஸ் மை நேம் இஸ் பூம்பொழில் உங்கள் ENGLISH டீச்சர்"என அவள் கூறியது என் காதுகளில் ஒலித்து கொண்டே இருந்தது.அவள் அழகாக மேஜை மீது சாய்ந்து கொண்டு ஒவ்வொருவரின் பெயரையும் விசாரித்து கொண்டிருந்தாள்.

இப்பொழுது என்முறை வந்தது நான் எ ழுந்து "ஹாய் அயாம் பூம்பொழில் இன்னிலேர்ந்து உங்க இங்கிலீஷ் டீச்சர்"என கூறிவிட்டேன் .

உடனே வகுப்பில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர் அவள் உட்பட. நான் அப்பொழுதுதான் உணர்ந்தேன்.என் பெயரை கூறுவதாக நினைத்து அவள் பெயரை கூறிவிட்டேன்

"ஓ!சாரி மேடம் மை நேம் ஜெய்.அப்பா பேங்க்கில் வேலை செய்கிறார். அம்மா ஹவுஸ் ஒய்ப்.ஓரு சிஸ்டர் 8TH படிக்கிறா அப்புறம் எங்க வீட்ல ஒரு நாய் கூட இருக்கு அது பேரு டாமி டாமி ஒய்ப் பேரு நிம்மி.நிம்மி பக்கத்து வீட்டு நாய் அது இப்ப கர்ப்பமா இருக்கு"

வகுப்பறையில் மீண்டும் சிரிப்பொலி அவளும் சிரித்து கொண்டே "போதும் உட்கார்" என்றாள்
அப்பொழுதுதான் அவளிடம் பேச வேண்டும் என்பதற்காக ஏதேதொ உளறுகிறேன் என்று அவள் கூறியதும்,இதற்கு மேல் காமெடி பீஸ் ஆக கூடாது என முடிவு செய்து அமர்ந்தேன்.

அதன் பிறகு அனைவரின் பெயரையும் கேட்டு தெரிந்து கொண்டாள். பின்பு புத்தகத்தை வைத்து கொண்டு ஏதோ பாடம் நடத்தினாள்.

எனக்கு எதுவும் விளங்கவில்லை நான் அவள் முகத்தையே பார்த்து கொண்டிருத்தேன். அவ்வப்போது என்னை ஒரக்கண்ணில் பார்த்து உதட்டோரமாய் சின்னதாக சிரித்தாள். அந்த சிரிப்புக்கு அந்த பார்வைக்கு அர்த்தம் என்ன யோசித்தேன் இன்று வரை யோசிக்கிறேன் விடைகிடைக்கவில்லை ஆனால் அவள் சிரித்த அந்த சிரிப்பிற்கு இந்த உலகையே விலையாக கொடுக்கலாம
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 17-02-2019, 10:55 AM



Users browsing this thread: 1 Guest(s)