நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#5
நான் இறங்கி நடந்தேன் காம்பௌண்ட் கேட் வெறுமனே சாத்தியிருந்தது நான் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றேன். கேட்டை ஒட்டியபடி சென்ற காம்பௌண்ட் சுவர் முடிந்ததும் நான்கு பிளாக்குகளாக பிரித்து கட்டபட்ட பள்ளிக்கூடம் பார்வைக்கு தெரிந்தது.

இரண்டிரண்டு பிளாக்குகளாக பிரித்து கட்ட பட்டிருந்தது முதல் இரண்டு பிளாக் இடது புறமும் மற்ற இரண்டு பிளாக் வலது புறமும் இருந்தது நடுவில் ஒரு சிறிய பிள்ளையார் கோவில் இருந்தது. வலது புறம் இருந்த பிளாக்குக்கு பின்பக்கம் ஒரு பிரம்மாண்டமான மைதானம் வெறிச்சோடி போய் பார்வைக்கு கிடைத்தது.

மைதானத்தின் முடிவில் ஆடிட்டோரியம் அதற்கு பக்கத்தில் பிரேயர் ஹால் பார்வைக்கு கிடைத்தது. அங்கு ஒரு டீச்சர் மாணவர்களுக்கு பிரம்படி கொடுத்துக்கொண்டிருந்தார்.நான் அங்கு இருந்த பிள்ளையார் கோவிலுக்கு அருகிலிருந்த அரசமரத்திற்கு அடியில் நின்றுகொண்டிருந்தேன்

தூரத்தில் ஃபியூன் ஒடிவருவது தெரிந்தது "யாரும்மா வேணும்"என கேட்டான்.
நான்"மந்தாகினி இருக்காளா.நான் அவள் பிரண்ட் பேரு பூம்பொழில் "என்றேன்
அவன் "அந்த விசிட்டர்ஸ் ரூம்ல உட்காருங்கம்மா "என்று சொல்லிவிட்டு ஓடினான்

அவன் சென்ற ஐந்து நிமிடம் கழித்து "ஹாய்!பொழில் ஏன்டி இவ்வளவு லேட்?"என்று கூறியபடி மந்தாகினி வந்தாள்

"அதை ஏன்டி கேக்குற"என ஆரம்பித்து நடந்த கதையெல்லாம் கூறினேன். அவள் "நீ எனக்கு போன் பண்ணிருக்கலாம்ல டீ" என்றாள்

"என்கிட்ட போன் இல்லடி "என்றேன் இதை சொல்லும் போது எனக்கே வெட்கமாக இருந்தது." இந்த காலத்தில் சிறு பிள்ளை கூட கையில் போன் வைத்து கொண்டு சுற்றுகிறது நம்மிடம் ஒன்று இல்லையே..."என்று

உடனே அவள்"சரி சரி நீ உடனே வா பிரின்ஸ்பால் கிட்ட உன்னை கூட்டிட்டு போறேன் "என்றாள்

நான் அவளுடன் நடந்தேன்.என்னுடன் கல்லூரில் படித்த மந்தாகினியா இவள்.ஆளே மாறிபோயிருந்தாள்.கருகருவென எப்பொழுதும் எண்னை வடியும் கூந்தலுடன் இருந்தவள் இன்று தலையை லூஸ் ஹேர் விட்டு அழகாக இருந்தாள்.முன்பு ஒல்லியாக ஒட்டடைக்குச்சி மாதிரி இருந்தவளா இவள் இப்பொழுது ஆளே மாறி இருந்தாள்.நன்றாக சதை போட்டு மப்பும்மந்தாரமுமாக இருந்தாள். அவள் பின்புறம் அளவுக்கு மீறி பெருத்து இருத்தது.கையில் ஒரு காஸ்ட்லி போன் எனக்கு பொறாமையாக இருந்தது.அவள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் அவளுக்கு நல்ல டிரஸ் கூட இருக்காது.பெரும்பாலும் என் உடையைதான் உடுத்துவாள்.இன்று அவள் கட்டியிருக்கும் சேலை நான் கனவிலும் நினைத்து பார்த்ததில்லை.

அவளை பற்றி யோசித்து கொண்டே பிரின்ஸ்பால் அறை வந்தது. பிரின்ஸ்பால் ரிவியுவ் சேரில் அமர்ந்திருந்தார்.அடுத்த வருடம் ஒய்வு பெறுவது போல் இருந்தார்.வெளிர் பச்சை நிறசட்டையில் காட்சியளித்தார்.கோல்ட் பிரேமிட்ட கண்ணாடிக்குள் கண்கள் அபார கூர்மையோடு காட்சியளித்தது.

எங்களை பார்த்து கனிவுடன் புன்னகைத்தார்.

"வாங்கம்மா"

"குட்மார்னிங் சார், இவதான் சார் என் ஃப்ரண்ட் பூம் பொழில்"

"ஆஆங்.. சொன்னில்ல கரஸ்பான்டண்ட் ஜாயின் பண்ண சொல்லிட்டாருல்ல"

"ஆமா,சார்"

"குட் ஸ்குல் உனக்கு பிடிச்சிருக்காமா"

"ரொம்ப பிடிச்சிருக்கு சார்"என்றேன்


"நீ என்ன படிச்சென்னு சொன்னமா"

நான் எனது சர்டிபிகேட்டுகளை அவர் கையில் கொடுத்த படி"எம்.ஏ இங்கிலீஷ் சார்"

"ஓ! குட்,நீ ஹைகிளாஸ் ஸ்டுடண்ட்ஸ்க்கு கிளாஸ் எடுக்க போறம்மா பார்த்து பக்குவமா நடந்துக்க பசங்க தெளிவான நீர் மாதிரி நீ அதில் சந்தனம் போட்டா மணக்கும் சாக்கடைய போட்டா நாறும்.அவங்க வாழ்க்கை யில் குருவான நமக்கெல்லாம் ஒரு முக்கிய பங்கு இருக்கம்மா"என சொற்பொழிவாற்றினார்.

பின் "இந்தாம்மா இதுதான் உன் டைம் டேபிள் வாங்கிக்கோமா"
என ஒரு துண்டு சீட்டை கொடுத்தார்.

நான் அதை வாங்கிகொண்டேன் "தேங்க்யூ சார்"

"சரிமா நீ கிளம்பு அடுத்த கிளாஸ் நீ 11 D2 க்கு போகனும் லேசன்ஸ் ரொம்ப ஃபாஸ்ட்டா நடத்தாத ஸ்லோவாகவே போ "என கூறினார்

நான் புன்னகையோடு "ஓகே சார் "என்றேன்

"சரி நீங்க கிளம்புங்கமா"என்றார்.

"நாங்க வரோம் சார்"என கூறி விடைபெற்றுகொண்டு வெளியேறினோம்.
நான் கூறினேன் "பிரின்ஸிபால் ரொம்ப நல்லவர்டீ"

"ஆமா டீ சரி நீ போ அதோ அதுதான் 11d2 என பிரின்ஸ்பால் அறைக்கு வலது பக்கம் நேராக இருந்த அறையை காட்டினாள்.

"சரி டீ ரொம்ப தேங்க்ஸ்டீ "என அவள் கையை பிடித்து கொண்டு கூறினேன்.
அவள் புன்னகைத்துக்கொண்டு "சரி" என்பது போல் தலையசைத்தாள்

நான் அந்த நீளமான காரிடரில் 11D2யை நோக்கி
நடந்துசென்றேன்.

நான் நேராக கிளாஸ் ரூமுக்கு சென்று போர்டில் " ENGLISH " என்று எழுதி விட்டு திரும்பிபார்த்து "ஸ்டுடண்ட்ஸ் அயாம் பூம்பொழில் உங்க ENGLISH டீச்சர்"என கூறியதும் மாணவர்கள் எழுந்து நின்று "குட்மார்னிங் மேடம்" என்று கோரஸாக சொன்னனர்
.
அப்பொழுது எதோச்சையாக இடது பக்க கடைசி டேபிளை பார்த்த போது அதிர்ந்தேன்.என்னை பேருந்தில் கிறங்கடித்த அதே பையன்.இவன் எனக்கு ஸ்டுடண்டா "ஐயோ கடவுளே என்ன கொடுமை இது"
எனக்கு தலை கிர்ரென்று இருந்தது.
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 14-02-2019, 12:45 PM



Users browsing this thread: 1 Guest(s)