17-02-2020, 12:49 PM
(This post was last modified: 17-02-2020, 01:15 PM by Bigil_v_5. Edited 2 times in total. Edited 2 times in total.)
(17-02-2020, 10:29 AM)Dubai Seenu Wrote: பலவிதமான விமர்சனங்கள். பலவிதமான எதிர்பார்ப்புகள்.
வெறுப்புகள். பாராட்டுக்கள். நக்கல்கள். அறிவுரைகள்.
பாராட்டும்போது இனித்தது. வெறுப்புகளை உமிழும்போது கசக்கிறது. மோசமான வார்த்தைகள் காயப்படுத்துகின்றன.
என் பொன்னான நேரத்தை வீணாகப் பயன்படுத்திய எனக்கு இது தேவைதான் என்று மனசாட்சி சிரிக்கிறது. எனக்கு இது தேவைதான்.
நகைக்கடை காட்சி வரை, எனக்கு இந்தக் கதையில் திருப்திதான். அதற்குப் பிறகுதான் நான் நினைத்திருந்த கதையின் போக்கு மாறிவிட்டது. அதனால் கடைசி சில காட்சிகளை நீக்குகிறேன்.
நீ உன் முடிவுல ஸ்ட்ராங்கா இருந்திருக்கணும். கமெண்ட்ஸ் பாத்து, இவங்க என்ன எதிர்பார்க்குறாங்கன்னு பார்த்து கதையை கொண்டுபோயிருக்கக் கூடாதுன்னு அறிவுரைகள் வரும். இது ஜஸ்ட் ஒரு செக்ஸ் கதை என்பதாலேயே, என் விருப்பத்தோடு, படிப்பவர்கள் விருப்பத்துக்காகவும் முக்கியத்துவம் கொடுத்தேன். உங்களுக்காக பல காட்சிகள் அமைத்தேன்.
இன்னும் சில காட்சிகளே இருக்கின்றன. இன்று எழுதும் மன நிலையில் இல்லை. ஆனால் விரைவில் பதிவிடுகிறேன்.
அதுவரை -
ஒரு சிலருக்கு மட்டும் நான் சொல்லுவது.
எவ்வளவு வெறுப்புகள் இருக்கோ உமிழ்ந்துவிட்டுப் போங்கள். எவ்வளவு அறிவுரைகள் சொல்ல முடியுமோ சொல்லிவிட்டுப் போங்கள். வாய் வலிக்க சிரியுங்கள்.
உங்களிடம் என் கலைத் திறமையை நிரூபிக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
""" உங்களிடம் என் கலைத் திறமையை நிரூபிக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை"""
இந்தக்கருத்த நீங்க முதல்லயே அவங்களுக்கு சொல்லிருக்கனும், சுளீர்னு... சும்மாவா சொல்றாங்க ஒரு குழந்தைக்கு அம்மாவ விட யாரு அக்கரையா இருக்க முடியும்னு... இந்த கதையும் உங்க குழந்தை போல தான்...
ஒரு படைப்பாளிக்குத்தான் அதோட அருமை தெரியும்... நான் காம கதை எழுதினது இல்ல... ஆனா நான் எழுதுற சாதாரண கதைய விட காம கலந்த கதை எழுதுறது ரொம்ப சிரமம் நண்பா... எத்தன இடத்தையும் நோட் பண்ணி எல்லா கதாப்பாத்திரங்களையும் சரி பண்ணி எழுதனும்...
உங்க நிலைல நீங்க மாறாம இருங்க நண்பா... அதுதான் வேணும்... இவ்வளவு நாள் குடுத்த ஆதரவ நாங்க இன்னும் குடுப்போம்...
கடைசியா போட்ட பதிவ அழிச்சுட்டிங்கனு சொன்னிங்க... நான் அத படிக்க கூட இல்ல... உங்க விருப்பப்படியே தொடருங்க நண்பா... தயவுசெஞ்சு கதையோட போக்குலயே நீங்க நினைச்ச மாதிரி எழுதுங்க... உங்க மனசு அதுல இருந்து மீளும் வரை காத்திருக்கிறோம்...
Love is weird