Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
'' எனக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டாங்க'' என்று மெல்லிய குரலில் சொன்னாள் திவ்யா. அவள் பார்வை நவநீதன் முகத்தை ஆவலாக ஊடுருவிக் கொண்டிருந்தது.
 '' அதுக்கு ?'' மெலிதான பதட்டத்தை தணிக்க முயன்று கொண்டிருந்த நவநீதன் அவளைப் பார்த்து சிரிக்க முடியாமல் அவஸ்தையாக சிரித்துக் கொண்டிருந்தான்.
 ''எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. உங்க கூட சேர்ந்து வாழ ஆசைப் படறேன்.. '' உள் மனதில் இருந்து உண்மையாகச் சொன்னாள் திவ்யா.
 மேலும் பதறினான். 
''ஐய்யோ ஏன் திவ்யா புரிஞ்சுக்காம பேசற.?'' 
'' என் அண்ணனுக்கு பயப்படறீங்களா ?'' 
'' பயப்படாம எப்படி இருக்க முடியும் ?''
 '' அவன்லாம் ஒரு ஆளே இல்லை. அவன் என்ன பண்ணான் பிரெண்டோட அக்காவயே கரெக்ட் பண்ணவன்.. அவனுக்கு போயி பயப்படலாமா.?'' 
'' அதுதான் திவ்யா என் பயமே ? அதனால எவ்வளவு பிரச்சினை ஆச்சு தெரியும் இல்ல.? இவன் பண்ண அதே தப்பை நானும் பண்ண தயாரில்லை. தயவு  செய்து என்னை மன்னிச்சிரு. உன்னை எனக்கு புடிக்கும். ஆனா லவ் பண்ண முடியாது. ! உன் அப்பாம்மா உனக்கு நல்ல மாப்பிள்ளையாதான் பாப்பாங்க. அவங்களை கல்யாணம் பண்ணிட்டு நல்லா வாழற வழியை பாரு. !!!'' 
திவ்யா சில நொடிகள் அவனை ஆழமாக வெறித்தாள். அவள் முகம் இறுகி.. கலையிழந்தது. சட்டென அவள் மூக்கு விகசிக்க.. முணுக்கென அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. 
'' ஸாரி ஸாரி '' என முனகி விட்டு மேலே அங்கு நிற்காமல் சட்டென நகர்ந்து போய் தெருவோரமாக நின்றான். அவனது அடி மனசெல்லாம் கலங்கிப் போயிருந்தது..!!! 
'கிருத்திகா என்னை புறக்கணித்த போதும் இப்படித்தான்.. இதே போலத்தான் தவித்திருப்பாளோ..??? நானாவது எவளையும் விரும்பவில்லை. எவளுக்காகவும் இவளை வேண்டாம் என்று சொல்லுமளவு காதலிக்கவும் இல்லை. ஆனால் அவள்.. இன்னொருவனை மிக தீவிரமாக காதலித்துக் கொண்டிருந்தாளே..??? அப்படியனில் அவள் செய்தது சரிதானே..???'
 'வெரி ஸாரி திவ்யா !' என்று மனதுக்குள் மன்னிப்புக் கேட்ட அதே நேரம் இன்னொரு ஸாரியும் கேட்டுக் கொண்டான். 'ஸாரி கிருத்தி.. உன் வலி தவிப்பு.. எல்லாம் இப்பதான் எனக்கு புரியுது. !!!'
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 03-01-2020, 06:30 PM



Users browsing this thread: 2 Guest(s)