Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்
#8
TRAI New DTH Rules: ஏர்டெல், டாடா ஸ்கையில் அமலுக்கு வந்தது புதிய கட்டண சேனல்கள்!

டிராய் உத்தரவிட்ட கட்டண அடிப்படையில் சேனல்களை தேர்ந்தெடுக்கும் முறையை ஏர்டெல், டாடா ஸ்கை டிடிஎச் அமல்படுத்தியுள்ளது.
[Image: Tamil-image.jpg]

Highlights
  • அடிப்படை புதிய கட்டணம் மாதம் ரூ.130 ஆகும். அதற்கான ஜி.எஸ்.டி. சேர்த்து மாதம் ரூ.154 ரூபாய்
  • இதுவரையில் 30%க்கும் அதிகமானோர் புதிய கட்டண சேவைக்கு மாறியுள்ளனர்


டிராய் உத்தரவிட்ட கட்டண அடிப்படையில் சேனல்களை தேர்ந்தெடுக்கும் முறையை ஏர்டெல்டாடா ஸ்கை டிடிஎச் அமல்படுத்தியுள்ளது. 

டிராய் எனப்படும் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேபிள் மற்றும் டி.டி.ஹெச். சேவை கட்டணம் பற்றி அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ ரூ.153.40 கட்டணத்திற்கு தேர்வு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. 

புதிய கட்டணம் மாதம் ரூ.130 ஆகும். அதற்கான ஜி.எஸ்.டி. சேர்த்து மாதம் ரூ.154 ரூபாய் ஆகிறது. புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் 100 சேனல்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். பின் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலாகும்
Like Reply


Messages In This Thread
RE: மாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள் - by johnypowas - 26-01-2019, 09:41 AM



Users browsing this thread: 1 Guest(s)