Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்
#6
[Image: Trai_02393.jpg]
அதே நேரத்தில் ஏற்கெனவே இந்த புதிய விலைத்திட்டம் மூலம் டிராய் விலை நிர்ணயத்தில் அதிக அதிகாரம் எடுத்துக்கொள்வதாகவும், சலுகைகளில் கூட 15% மேல் வைக்கக்கூடாது எனப் போடப்படும் கட்டுப்பாடுகள் விதிப்பதின் மூலம் மக்களுக்குச் சரியான குறைந்த விலையில் சேவைகள் சென்று சேர வேண்டும் என்ற அவர்களின் நோக்கத்தை அவர்களே கெடுகின்றனர் என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது டாடா ஸ்கை. டாடா ஸ்கை தரப்பில் கபில் சிபில் ஜனவரி 15 அன்று உயர்நீதிமன்றத்தில் வாதாடினார். இதன்பின் இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 23-க்கு ஒத்திவைக்கப்பட்டது. எப்படி இந்த புதிய விலைதிட்டத்தை வடிவமைத்தது டிராய்? அது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க உத்தரவிடுமாறும் கோரிக்கை வைத்தார் கபில் சிபில். டிராயின் இந்த புதிய திட்டத்தில் டிவி மற்றும் டிடிஎச் சந்தையில் வர்த்தக ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் எச்சரித்தார் அவர்.
நிலைமை இப்படி இருக்க உண்மையில் குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளது மக்கள்தான். இந்த புதிய திட்டத்தைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளவும் முடியாமல், என்ன செய்யவேண்டுமென்றும் தெரியாமல் குழம்பி நிற்பவர்கள் அவர்கள்தான். இந்த விஷயத்தில் என்ன நடப்பினும் தேவையான சேனல்கள் என்னவென்று இப்போதே தெளிவாக லிஸ்ட் போட்டு வைத்துவிட்டால் பெரிய பிரச்னைகள் எதுவும் வராது
Like Reply


Messages In This Thread
RE: மாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள் - by johnypowas - 20-01-2019, 10:38 AM



Users browsing this thread: 1 Guest(s)