Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்
#4
[Image: dish_02054.jpg]
MRP விலைப்பட்டியல்:
https://main.trai.gov.in/sites/default/files/PayChannels18122018_0.pdf
இலவச சேனல்கள் பட்டியல்:
https://main.trai.gov.in/sites/default/files/List_FTA_channel.pdf
மேலும் காம்போ (Bouquet plans) பேக்குகளையும் ஸ்டார், சன் போன்ற அனைத்து பிரபல டிவி நிறுவனங்கள் தருகின்றன. இதன் உத்தேச பட்டியலையும் டிராய் தளத்தில் காணலாம்.  
சிக்கல்கள் என்ன?
இந்த மாதம் தொடங்கியே வாடிக்கையாளர்களுக்கு உதவ ஒவ்வொரு சேனலின் விலையையும் 'Electronic Program guide' மூலம் தங்கள் சேவைகளில் ஒளிபரப்ப வேண்டும் கேபிள் மற்றும் டிடிஹெச் சேவைகள். மேலும், இந்த முறையை அமல்படுத்த அனைத்து கேபிள் ஆபரேட்டர்களும் மக்கள் தங்களது சேனல்களைத் தேர்வு செய்யத் தனியாக இணையதளம் போன்ற ஏதேனும் ஒன்றை ஆரம்பிக்க வேண்டியது வரும். வாடிக்கையாளர் தொடர்பு மையங்களும் ஏற்படுத்தித்தரவேண்டியது இருக்கும். இது டிஜிட்டல் செட்-அப் பாக்ஸ் சேவைகளுக்குச் சரி, சாதாரண கேபிள் மூலம் ஒவ்வொருவருக்கும் இப்படி வேறு வேறு சேனல்கள் கொடுப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. எனவே அவர்கள் இந்தப் புதிய வரைமுறைகளுக்குள் உட்பட்டு அவர்களே என்ன என்ன சேனல்களைத் தரலாம் என்று சில திட்டங்களை வகுத்து அதைத்தான் மக்களுக்குக் கொடுக்க முடியும். இதைப் போன்ற 3, 4 திட்டங்கள்தான் அவர்களால் இப்படிக் கொடுக்க முடியும். எனவே டிராய் சொல்லுவதுபோல ஒருவர் தனக்கு விருப்பமான சேனல்களை மட்டும் தேர்வு செய்வதென்பது கேபிளை பொறுத்தவரை வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர். இதைச் சில நிறுவனங்கள் ஆதரித்தாலும் பல எதிர்ப்புகளும் இருக்கவே செய்கின்றன. அதில் முக்கியமானது டாடா ஸ்கை நிறுவனத்தை உடையது
Like Reply


Messages In This Thread
RE: மாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள் - by johnypowas - 20-01-2019, 10:24 AM



Users browsing this thread: 1 Guest(s)