Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்
#3
[Image: 2_02232.jpg]
தமிழ் மக்களை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்கு மொத்தம் 294 ரூபாய் செலுத்த வேண்டும். இதில் உங்களுக்கு மொத்தம் 52 இலவச சேனல்கள், 23 கட்டணமுள்ள சேனல்கள், 25 தூர்தர்ஷன் சேனல்கள் கிடைக்கும். இந்த 294 ரூபாய் எப்படி வந்தது?
100 சேனல்களுக்கு வேண்டிய network capacity fee = 130 ரூபாய்
52 இலவச சேனல்களின் விலை = 0 ரூபாய்
23 கட்டணமுள்ள சேனல்கள் = 119 ரூபாய்
மொத்த GST = 45 ரூபாய்
மொத்தம் = 294 ரூபாய்
இந்த 100 சேனல்கள் கணக்கில் HD சேனல்கள் இரண்டு சேனல்களாக எடுத்துக்கொள்ளப்படும். இந்தப் புதிய விலைத்திட்டத்தால் இதனால் விலை ஏறுவது ஒருவகையில் உண்மைதான். ஆனால், தற்போது நம் கேபிள் மற்றும் டிடிஹெச்களில் பெறும் 300 சேனல்களில் பாதிக்கும் மேலான சேனல்களை நாம் என்னவென்றுகூட பார்த்திருக்க மாட்டோம். எனவே, வேண்டிய சேனல்களை மட்டும் சரியாகத் தேர்ந்தெடுத்தால் முன்பிருந்த கேபிள் தொகையிலோ சற்று கூடுதல் விலையிலோ உங்கள் மாத சந்தாவை முடித்துக்கொள்ள வாய்ப்புகளுண்டு. எது வேண்டும் எது வேண்டாம் என்பதில் தெளிவாக இருப்பது இதில் மிகமுக்கியம். விளையாட்டுச் சேனல்களைத் தேவைப்படும் மாதம் மட்டும் அவற்றை உங்கள் திட்டத்தில் சேர்த்துக்கொள்ள முடியும். இருப்பினும் விலைகளை மேலும் குறைக்கலாம் என்பதுதான் லோக்கல் கேபிள் ஆபரேட்டர்களின் வேண்டுகோள். ஆனால், எப்படியும் விலை அதிகமாக இருந்தால் பார்வையாளர்கள் குறைந்துவிடுவர். சேனல்களுக்கு விளம்பரங்களில் வரும் வருமானம் குறைந்துவிடும். எனவே எப்படியும் சேனல்களின் விலை நாள் போக்கில் குறைந்து சரியான விலைக்கு வந்துவிடும் என்கிறது ஒரு தரப்பு. அதனால் இது வாடிக்கையாளர்களுக்கு நல்லதுதான் என்கின்றனர். இதனால் சாதாரண கேபிள் விலை கூடும் என்றாலும் அதே நேரத்தில் தனியார் டிடிஹெச் சேவைகளின் விலை குறையும். புதிய விலைத்திட்டத்தின்படி ஒவ்வொரு சேனலின் MRP விலையையும், இலவச சேனல்களின் பட்டியலையும் டிராய் தளத்தில் காணலாம்
Like Reply


Messages In This Thread
RE: மாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள் - by johnypowas - 20-01-2019, 10:24 AM



Users browsing this thread: 1 Guest(s)