Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
வரலாற்றிலேயே மிக அதிகம்: ஐசிசி உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கான பரிசு அறிவிப்பு
[Image: world-cupjpg]படம் உதவி ஐசிசி

இங்கிலாந்தில் வரும் 30-ம் தேதி தொடங்க இருக்கும் ஐசிசி உலகக் கோப்பைப் போட்டிக்கான பரிசுத் தொகை இதுவரை உலகக் கோப்பை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைப் போட்டியின் ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக ரூ.70 கோடியே 12 லட்சத்து82 ஆயிரம்(ஒரு கோடி அமெரிக்க டாலர்) அறிவிக்கப்பட்டது. இதில் இருந்து வெற்றி பெறும் அணி, 2-வதாக வரும் அணி ஆகியவற்றுக்கு பிரித்து அளிக்கப்படும்.
இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. வரும் 30ம் தேதி தொடங்கும் இந்த போட்டி ஜூலை 14-ம் தேதிவரை நடக்கிறது.
இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. போட்டிகள் பிரிஸ்டல், கார்டிப், எட்ஜ்பாஸ்டன், டான்டன், சவுத்தாம்டன்,  லீட்ஸ், லண்டன், லண்டன் ஓவல், ஓல்ட் ட்ராபோர்ட், டின்ட் பிர்ட்ஜ், செஸ்டர் லீஸ்டீர்ட், நாட்டிங்காம் ஆகிய 11 மைதானங்களில் மொத்தம் 46 ஆட்டங்கள் நடக்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும் எனும் ரவுண்ட் ராபின் அடிப்படையில் போட்டி நடக்கிறது.  
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கிரிக்கெட் திருவிழாவைக் காண உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் எந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பரிசுத்தொகையை அதிகப்படுத்தி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று அறிவித்துள்ளது.
பரிசுத்தொகை
இதன்படி உலகக் கோப்பைப்போட்டியின் ஒட்டுமொத்த பரிசுத்தொகை ஒரு கோடி அமெரிக்க டாலராக(ரூ. 70,12,82,000)அதிகரிக்கப்பட்டுள்ளது.சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 40 லட்சம் அமெரிக்க டாலர்கள்(ரூ. 28,08,34,000.) பரிசாக வழங்கப்படும். 2-வதாக இடம் பிடிக்கும் அணிக்கு 20 லட்சம் டாலர்களும்(ரூ. 14,02,56,400) வழங்கப்படும். அரையிறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா 8 லட்சம் அமெரிக்க டாலர்கள்(ரூ. 5,61,02,560) வழங்கப்படும்.
லீக் போட்டிகளில்வெற்றி பெறும் ஒவ்வொரு போட்டிக்கும் அணிகளுக்கு ஒவ்வொன்றுக்கும் 40 ஆயிரம் டாலர்கள்(ரூ. 28,05,128) பரிசு வழங்கப்படுகிறது. லீக் சுற்றை கடந்துவிட்ட அணிகளுக்கு தலா ஒரு லட்சம் டாலர்கள்(ரூ. 70,12,820) பரிசு வழங்கப்படுகிறது.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
பத்திாிகையாளா் சந்திப்பில் பங்கேற்றதே பாதி வெற்றி - ராகுல் காந்தி கிண்டல்

பிரதமா் நரேந்திர மோடி பத்திாிகையாளா் சந்திப்பில் கலந்து கொண்டதே பாதி வெற்றி என்று காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி கிண்டலாக ட்விட்டரில் கருத்து தொிவித்துள்ளாா்.
[Image: modi-rahil-123.jpg]பத்திாிகையாளா் சந்திப்பில் பங்கேற்றதே பாதி வெற்றி - ராகுல் காந்தி கிண்டல்
பிரதமா் நரேந்திர மோடிபத்திாிகையாளா் சந்திப்பில் கலந்து கொண்டதே பாதி வெற்றி என்று காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்திகிண்டலாக ட்விட்டரில் கருத்து தொிவித்துள்ளாா். 

17வது மக்களவைத் தோ்தலின் இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், பிரசாரம் நிறைவடைவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக தேசியத் தலைவா் அமித் ஷா பத்திாிகையாளா்களை சந்தித்தாா். இந்த சந்திப்பில் யாரும் எதிா்பாா்க்காத வகையில் பிரதமா் மோடியும் பங்கேற்றாா். 

மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு கடந்த 5 ஆண்டுகளில் பத்திாிகையாளா்களை சந்திப்பது இதுவே முதல்முறை. இந்த சந்திப்பில், பிரதமா் மோடி “நான் உங்களுடைய கேள்விகள் எதைற்கு பதில் அளிக்க முடியாது. ஏனென்றால், இது பாஜக தலைவா் அமித் ஷா நடத்தும் பத்திாிகையாளா் சந்திப்பு. 

பாஜக முறைப்படி ஒழுக்கத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கட்சியின் ஒழுக்கமான தொண்டா்கள் நாங்கள். ஆதலால் எங்களுக்கு எல்லாமே கட்சியின் தலைவா் தான். எனவே கேள்விகளை அவரிடமே கேளுங்கள்” என்று பத்திாிகையாளா்களை அமித் ஷா பக்கம் திருப்பிவிட்டு மோடி ஒதுங்கிக் கொண்டாா்
பிரதமா் மோடியின் பத்திாிகையாளா் சந்திப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி அதனை சற்று கிண்டலாக தனது ட்விட்டா் பக்கத்தில் பகிா்ந்துள்ளாா். 

அந்த பதிவில், “வாழ்த்துகள் மோடி ஜி. பிரமாதமான சந்திப்பு. முகத்தை காட்டுவதே பாதிப் போராட்டம். அடுத்த முறை அமித் ஷா ஓரிரு கேள்விகளுக்கு உங்களை பதில் அளிக்க அனுமதிப்பாா் என்று எதிா்பாா்க்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளாா்
Like Reply
தாய், தந்தை, தம்பி எரித்துக்கொலை :'ஏசி வெடிப்பு' நாடகமாடிய அ.தி.மு.க. பிரமுகர் மனைவியுடன் கைது
[Image: Tamil_News_large_2279080.jpg]
திண்டிவனம், சொத்துக்காக தாய் தந்தை மற்றும் சகோதரனை எரித்துக் கொலை செய்து 'ஏசி' வெடித்து இறந்ததாக நாடகமாடிய அ.தி.மு.க. பிரமுகர், அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் ராஜ் 60; இவரது மனைவி கலைச்செல்வி 55; இவர்களது மகன்கள் கோவர்த்தனன் 30; கவுதமன் 26; கோவர்த்தனன் அ.தி.மு.க. நகர மாணவர் அணி தலைவராக உள்ளார். இவரது மனைவி தீபகாயத்ரி 27.
கடந்த 15ம் தேதி ராஜ், கலைச்செல்வி, கவுதம் ஆகியோர் தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். மற்றொரு அறையில் இருந்த கோவர்த்தனன், அவரது மனைவி தீபகாயத்ரி உயிர் தப்பினர்.
'ஏசி' வெடித்து அதனால் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேரும் இறந்ததாக கூறப்பட்டது.
சந்தேகம்
ஆனால் ராஜ் உடலில் வெட்டுக் காயம், ரத்தக்கசிவு, மூன்று பேரும் இறந்து கிடந்த ஹாலில் பெட்ரோல் வாசனை ஆகியவை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
கோவர்த்தனனிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர் மூவரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
எஸ்.பி. ஜெயக்குமார் கூறியதாவது:
ராஜ் குடும்பத்திற்கு பல கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. கோவர்த்தனன் பல தொழில்கள் நடத்தி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது இரண்டு கார்களை வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். அவர் மேலும் பணம் கேட்ட போது பெற்றோர் தர மறுத்துவிட்டனர். 
7 மாதங்களுக்கு முன் இவரது திருமணம் எளிமையாக நடந்தது. 
தற்போது கவுதமிற்கு ஆடம்பரமாக திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். தம்பிக்கே வீட்டில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதால் ஆத்திரமடைந்த கோவர்த்தனன் மூன்று பேரையும் தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். 
15ம் தேதி 3 பீர்பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி பெற்றோர், தம்பி துாங்கிய அறையில் வீசியுள்ளார். வெளியே வந்துவிடாமல் இருக்க அறைக்கதவுகளையும் பூட்டிவிட்டார். 
சற்று நேரத்திற்குப்பின் திறந்தபோது ராஜ் தீக்காயத்துடன் வெளியே வந்துள்ளார். 
அவரை கத்தியால் கழுத்தில் வெட்டி கோவர்த்தனன் கொலை செய்துள்ளார். மூன்று கொலைகளையும் கணவர் செய்தது தெரிந்தும் தீபகாயத்ரி உடந்தையாக இருந்துள்ளார். அதனால் அவரையும் கைது செய்துள்ளோம், என்றார். 
தீபகாயத்ரி, 3 மாத கர்ப்பமாக உள்ளார். அவரை திண்டிவனம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நளினிதேவி முன் ஆஜர்படுத்திபடுத்தி சிறையில் அடைத்தனர்.
Like Reply
`தேர்தல் ஆணையர்கள் ஒரே கருத்துடன் இருக்கவேண்டிய அவசியமில்லை!’ - சுனில் அரோரா
இந்திய தேர்தல் ஆணையம் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர், இரண்டு தேர்தல் ஆணையர்கள் என மூன்று பேர் கொண்ட அமைப்பு. தேர்தல் ஆணையத்தின் முக்கிய முடிவுகள், தேர்தல் நடத்தை விதி மீறல் புகார்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்பாக இந்த மூன்று தேர்தல் ஆணையர்கள் கொண்ட குழுதான் இறுதி முடிவு எடுக்கும். தேர்தல் ஆணையத்தின் அனைத்து இறுதி முடிவுகளும் முடிந்தவரையில் ஒருமனதாக இருக்க வேண்டும் ஒருவேளை தேர்தல் ஆணையர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பெரும்பான்மை அடிப்படையில் முடிவுகள் தீர்மானிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய விதிமுறைகள் கூறுகின்றன.
[Image: 120_14052.jpg]
தேர்தல் ஆணையத்தின் அனைத்து முடிவுகளும் பெரும்பாலும் ஒருமனதாகவே எடுக்கப்படுகின்றன. தற்போது ஏழாவது கட்டமாக நடைபெற்று வருகிற பொதுத் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு வருவதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் முன்னாள் தேர்தல் ஆணையர்களுமே குற்றம் சாட்டி வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறும் விதத்தில் பிரசாரம் செய்ததற்காக மாயாவதி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நாள்கள் பிரசாரம் செய்ய தடைவிதித்தது. ஆனால், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர் அமித் ஷா மீதும் இருந்த அதே போன்ற புகார்களில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. 


[Image: 1238_14179.jpg]
தேர்தல் பிரசாரத்தில் மதத்தைப் பயன்படுத்தியது பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்தி தேர்தலில் வாக்குகள் கேட்டது எனப் பிரதமர் நரேந்திர மோடி மீது பல புகார்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்தப் புகார்களின் மீது நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியும் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும் எந்தவொரு தேர்தல் நடத்தை விதிகளையும் மீறவில்லை என அனைத்துப் புகார்களையும் தள்ளுபடி செய்து சான்றளித்தது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்படவில்லை என்றும் பெரும்பான்மை அடிப்படையிலே எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா பிரதமருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிக்க மற்றுமொரு தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா அந்தக் கருத்தில் முரண்பட்டு பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தேர்தல் ஆணையத்தின் இறுதி உத்தரவில் அசோக் லாவாசாவின் மாற்றுக் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை.
[Image: 1237_14471.jpg]
தேர்தல் ஆணையத்தின் இறுதி உத்தரவில் தன்னுடைய மாற்றுக் கருத்தைப் பதிவு செய்வது விதி என்றும் அதைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனக்கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அசோக் லாவாசா பலமுறை கடிதம் எழுதியுள்ளார். இதில் எந்தக் கடிதத்துக்கும் சரியான பதில் கிடைக்காததால் தேர்தல் ஆணையர்களின் கூட்டத்தில் கலந்துகொள்ள அசோக் லாவாசா மறுத்துவிட்டதாகச் செய்திகள் வரத்தொடங்கின.
[Image: 1236_14056.jpg]
தற்போது அதற்கு விளக்கம் தெரிவித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தேர்தல் ஆணையர்கள் அனைவரும் ஒரே கருத்துடன் இருக்க வேண்டியது அவசியமில்லை. கடந்த காலங்களிலுமே பலமுறை தேர்தல் ஆணையர்கள் கருத்து முரண்பட்டுள்ளனர். ஆனால், இவை பெரும்பாலும் தேர்தல் ஆணையத்தின் உள் விவகாரங்களாகவே இருந்து வந்துள்ளன. தேர்தல் சமயம் முடிந்த பிறகு அல்லது தேர்தல் ஆணையர்களின் ஓய்வுக்குப் பிறகுதான் இதுபோன்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், தற்போது தேர்தல் சமயத்தில் தேவையற்ற சர்ச்சை உருவாக்கப்படுகிறது. இது இயல்பானதே. 14-ம் தேதி நடைபெற்ற தேர்தல் ஆணையக் கூட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 13 என ஒருமனதாகக் கண்டறியப்பட்டுள்ளன. அதில் தேர்தல் நடத்தை விதிகளும் ஒன்று என்றார்.”
Like Reply
Petrol Price: இன்னைக்கு தான் கடைசி - இனி தாறுமாறாக உயரப் போகும் பெட்ரோல், டீசல் விலை!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் ஏற்படவில்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.72, டீசல் லிட்டருக்கு ரூ.69.72ஆக விற்கப்படுகிறது.
[Image: petrol-price.jpg]Petrol Price: இன்னைக்கு தான் கடைசி - இனி தாறுமாறாக உயரப் போகும் பெட்ரோல், டீசல்...
ஹைலைட்ஸ்
  • இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
  • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.72, டீசல் லிட்டருக்கு ரூ.69.72ஆக விற்பனை


எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டது. 

இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது. 

தொடர்ந்து மாற்றம் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். 

இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி, லிட்டருக்கு ரூ.73.72 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி, லிட்டருக்கு ரூ.69.72ஆகவும் தொடர்கின்றன
Like Reply
பயணிகள் கவனத்திற்கு... சென்னை மின்சார ரயில், பறக்கும் ரயில் சேவை நிறுத்தம்!
சென்டரல், கடற்கரையில் இருந்து ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம், திருத்தணி, கடம்புத்தூர், அரக்கோணம் செல்ல வேண்டிய 46 மின்சார ரயில்களின் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
Like Reply
ஆன்ட்டி ரொம்ப தேங்க்ஸ்!' - ஆதரவற்ற குழந்தைகளால் நெகிழ்ந்த சென்னை போலீஸ் அதிகாரி  
[Image: polica_jc_maheshwari_1_15267.jpg]
சென்னை தாம்பரத்தில் உள்ள காப்பகத்துக்குச் சென்ற போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரியைப் பார்த்த மாணவிகள், `ஆன்ட்டி உங்களால் நாங்கள் ஹேப்பியாக இருக்கோம்' என்று கூறினர். அதைக்கேட்ட இணை கமிஷனர் மகேஸ்வரி சந்தோஷமடைந்தார். 
சென்னை தாம்பரம் லோகநாதன் தெருவில் செயல்படும் காப்பகத்தில் 100 மாணவ, மாணவிகள் உள்ளனர். ஸ்கூல் திறப்பதையொட்டி காப்பகத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்ய தாம்பரம் சரக காவல்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து தாம்பரம், குரோம்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தங்களால் முடிந்த பணத்தைக் கொடுத்தனர். அதன்மூலம் 100 மாணவ, மாணவிகளுக்குத் தேவையான ஸ்கூல் பேக், வாட்டர் பாட்டில், நோட்டு புத்தகம், பேனா, பென்சில் ஆகியவற்றை வாங்கினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கும் விழா இன்று நடந்தது. 
[Image: security%20officer_tam_15148.jpg]



இணை கமிஷனர் மகேஸ்வரி மாணவ, மாணவிகளுக்குக் கல்வி உபகரணங்களை வழங்கினார். அப்போது அதை வாங்கிய மாணவி ஒருவர், ஆன்ட்டி உங்களால் நாங்கள் ஹேப்பியாக இருக்கிறோம்,தேங்க்ஸ் என்று கூறினார். மேலும், நீங்கள் இங்கு அடிக்கடி வர வேண்டும். நீங்கள்தான் எங்களுக்கு ஒரு ரோல்மாடல் என்று மாணவ, மாணவிகள் கூறினர். அதைக்கேட்ட இணை கமிஷனர் மகிழ்ச்சியடைந்தார். கண்டிப்பாக நான் இந்தக் காப்பகத்துக்கு அடிக்கடி வருவேன். எங்களால் முடிந்த உதவிகளை உங்களுக்கு செய்வோம் என்று இணை கமிஷனர் மகேஸ்வரி தெரிவித்தார். இந்த விழாவில் துணை கமிஷனர் முத்துசாமி, உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, மோகன்ராஜ் உட்பட காவலர்கள் கலந்துகொண்டனர். 
காப்பகத்தின் நிர்வாகி பாஸ்கர் கூறுகையில், ``சென்னை காவல்துறை, மனிதநேயத்தோடு செயல்பட்டுவருகிறது. கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி காப்பகத்தில் உள்ளவர்களுக்கு பட்டாசு, ஸ்வீட், டிரஸ் ஆகியவற்றைக் கொடுத்தனர். தற்போது, ஸ்கூல் திறப்பதையொட்டி கல்வி உபகரணங்களை வாங்கிக் கொடுத்துள்ளனர். காப்பகத்தில் உள்ளவர்களில் பலருக்கு தங்களின் பெற்றோர் யாரென்றே தெரியாது. ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பதற்கு ஏற்ப இங்குள்ளவர்களின் மகிழ்ச்சியில் காவலர்களின் அன்பைப் பார்க்கிறேன்" என்றார். 
 [Image: security%20officer_ac_asohkan_15590.jpg]
காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``காப்பகத்தில் தங்கியிருந்து படிக்கும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான உதவிகளை செய்ய திட்டமிட்டோம். அதுதொடர்பாக தாம்பரம், குரோம்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றுபவர்களுடன் ஆலோசித்தோம். உடனடியாகக் காவலர்கள் தங்களால் முடிந்த பணத்தைக் கொடுத்தனர். அதைக்கொண்டு ஸ்கூல் பேக், நோட்டு புத்தகம் உள்ளிட்ட பொருள்களை வாங்கினோம். வெளியில் யாரிடமும் உதவி கேட்கவில்லை. இங்கு தங்கியிருக்கும் 4 பேர் நர்ஸிங் படிக்கின்றனர். ஒரு மாணவன், கல்லூரிக்குச் செல்ல உள்ளார். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்வது தொடர்பாக ஆலோசித்துவருகிறோம். காவல்துறையின் பணி, குற்றங்களைத் தடுப்பதும் குற்றவாளிகளைப் பிடிப்பதும் மட்டுமல்ல. சமூகசேவைகளில் ஈடுபடுவதும் காவல்துறையின் கடமைதான். மனிதநேயத்தோடு நாங்கள் இந்த உதவிகளைச் செய்துள்ளோம்" என்றார். 


காக்கிக்குள்ளும் ஈரம் இருப்பதைக் காவல்துறையில் பணியாற்றும் பலர் நிரூபித்து வருகின்றனர். கோட்டூர்புரத்தில் உள்ள தலைமைக் காவலர், சம்பள பணத்தில் கல்வி உதவிகளைச் செய்துவருகிறார். அதுபோல இன்ஸ்பெக்டர் சரவணபிரபு ஆண்டுதோறும் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உதவிகளைச் செய்துவருகிறார். தற்போது, தாம்பரம் காவல் சரகத்தில் உள்ளவர்கள் ஆதரவற்ற 100 மாணவ, மாணவிகளுக்கு உதவிகளைச் செய்துள்ளனர்.  
Like Reply
அது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்
பிரதமர் நரேந்திர மோடி விடிய விடிய தியானம் செய்ததாக கூறப்படும் குகை ஒரு கெஸ்ட் அவுஸ்தானாம்.
இதற்காக ஒரு நாள் இரவு வாடகை ரூ990.உத்தரகாண்ட் மாநில அரசு சுற்றுலாத்துறையில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது.
[Image: narendra-modi-1558262422.jpg]
அந்த வகையில் கேதார்நாத் கோவிலில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் கேதார்நாத்- ருத்ரா மெடிடேசன் குகையை உருவாக்கி உள்ளது.
கேதர்நாத் மற்றும் பத்திரிநாத் ஆலயங்களை நோக்கியதாக இந்த குகை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குகையில் தங்க இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.
[Image: cave2-1558262453.jpg]
இந்த குகையில் மின்சார வசதி, குடிநீர் வசதி கிடைக்கும். காலையில் டீ, டிபன், மதிய உணவு, மாலை டீ, இரவு உணவு ஆர்டர் செய்து சாப்பிடலாம்.
அவசர காலத்துக்கு அழைக்க தொலைபேசி வசதியும் உண்டு. உதவி செய்வதற்கு 24 மணிநேரமும் பணியாளர்கள் உண்டு.
அவர்களை அழைக்க காலிங் பெல் வசதியும் இருக்கிறது. ஒருநபர் அதிகபட்சம் 3 நாட்கள் தங்கிக் கொள்ளலாம். 2 நாட்களுக்கு முன்னரே இந்த குகைக்கு புக் செய்துவிட வேண்டும்.
[Image: cave3-1558262460.jpg]
குப்தகாசி, கேதார்நாத்தில் உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்த பின்னரே இக்குகையில் தங்க அனுமதிக்கப்படுவர். ஆன்லைனில் மட்டுமே புக்கிங் செய்ய முடியும்.
[Image: cave1-1558262445.jpg]
இந்த சொகுசு குகை ஹோட்டலில்தான் பிரதமர் மோடி விடிய விடிய தியானம் செய்தார் என புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Like Reply
சென்னை வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்முன்பதிவு பெட்டியில் சாதாரண டிக்கெட் பயணிகள் ஏறியதால் குழப்பம்
[Image: 201905200436447534_Came-to-Chennai-Senth...SECVPF.gif]
சென்னை,

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், குழந்தைகளுடன் சுற்றுலா மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு பொதுமக்கள் சென்று வருகிறார்கள். இதனால், பஸ் - ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தலைநகர் சென்னைக்கு வரும் ரெயில்களில் கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் அலைமோதுகிறது.

கூட்டத்தை கண்டு அச்சப்படும் பலர் டிக்கெட்டை முன்கூட்டியே பதிவு செய்து ரெயில்களில் பயணிக்கின்றனர். அவ்வாறு பயணம் செய்யும்போது ஏதாவது இடையூறுகள் ஏற்பட்டாலும் டிக்கெட் பரிசோதகரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரும் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் செல்கின்றனர்.

ஆனால், பாதுகாப்பான ரெயில் பயணம் என்பது தற்போது மோசமாகி வருகிறது. நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அந்த ரெயிலில் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு பெட்டிகளிலும் பெரியவர்கள், குழந்தைகள் என இருக்கை முழுவதும் கூட்டம் இருந்தது.

டிக்கெட் பரிசோதகரும் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்த பயணிகளிடம் டிக்கெட்டை சரிபார்த்துவிட்டு சென்றுவிட்டார். ஆனால், ரெயில் திருச்சி வந்தபோது, முன்பதிவு பெட்டிகளில் சாதாரண டிக்கெட் வைத்திருந்த பயணிகள் ஏறத் தொடங்கினார்கள். அப்போது, ரெயிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் பலர், தங்கள் அருகே யாரோ வந்து நிற்பதை உணர்ந்து, கண்விழித்து அதிர்ச்சி அடைந்தனர்.

குறிப்பாக, எஸ்-6, எஸ்-7, எஸ்-8, எஸ்-9 ஆகிய 4 முன்பதிவு பெட்டிகளில் அதிகம் பேர் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். சிலர், படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அருகே அமர்ந்துகொண்டனர். இந்த சம்பவத்தால் ரெயிலில் குழப்பம் ஏற்பட தொடங்கியது. ஒரு சில முன்பதிவு பயணிகள், சாதாரண டிக்கெட்டுடன் ஏறிய பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வந்த ரெயில் நிலையங்களிலும் இதேபோல், பயணிகள் பலர் முன்பதிவு பெட்டிகளில் ஏறியதால் பிரச்சினை மேலும் விஸ்வரூபம் எடுத்தது. முன்பதிவு பயணிகளுக்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்ட போதிலும் டிக்கெட் பரிசோதகரும், ரெயில்வே போலீசாரும் அங்கு வரவில்லை. இதனால், ரெயிலில் தொடர்ந்து பரபரப்பான நிலையே நீடித்தது.

இதற்கிடையே, எஸ்-8 பெட்டியில் உள்ள கழிவறையில் ஒருவர் சென்று படுத்து தூங்கிவிட்டார். இதனால், இரவு நேரத்தில் கழிவறையை பயன்படுத்த சென்ற பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். கழிவறையில் தூங்கியவரை எழுப்ப முயன்றும் பயனில்லை. அவர் மது போதையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உறங்கிக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து, ரெயிலில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கூறியதாவது:-
ரெயிலில் நிம்மதியாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் முன்பதிவு செய்து பயணம் செய்கிறோம். ஆனால், பயணிகளுக்கு போதிய பாதுகாப்பை ரெயில்வே நிர்வாகம் வழங்குவதில்லை. பொதுவாக, வடமாநிலங்களில் தான் இதுபோன்று முன்பதிவு பெட்டிகளில் சாதாரண டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் ஏறி சிரமத்தை கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், தமிழ்நாட்டிலும் ரெயில் பயணிகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.

நாங்கள் வந்த முன்பதிவு பெட்டியில் திருச்சியில் இருந்தே முன்பதிவில்லாத டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் ஏறினார்கள். எங்களுடன் பயணித்த சிலர் தடுத்தும் அவர்களுடன் வாக்குவாதம் செய்து, ரெயில் பயணத்தை அவர்கள் தொடர்ந்தனர். இதனால், எங்களுடைய தூக்கமே போய்விட்டது. டிக்கெட் பரிசோதகரும், ரெயில்வே போலீசாரும் அங்கு வரவே இல்லை. இனியாவது, ரெயில்வே நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மட்டுமல்லாமல், பல ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் இதுபோன்று முன்பதிவில்லாத டிக்கெட்டை வைத்துக் கொண்டு பயணிகள் பலர் ஏறுவதால், குழப்பம் நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.
Like Reply
''பும்ராவின் பந்துவீச்சில் ராக்கெட் சைன்ஸ் இருக்கிறது'' - ஐஐடி பேராசிரியரின் அறிவியல் விளக்கம்
[Image: 64006.jpg]
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பந்துவீச்சுக்கு பின்னால் ஒரு ராக்கெட் சைன்ஸ் இருப்பதாக ஐஐடி கான்பூர் பேராசியர் சஞ்சய் மிட்டல் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணி வெற்றி வாகை சூடியது. மும்பை அணியில் அதிகம் கவனம் பெற்ற வீரராக இருந்தவர் பந்துவீச்சாளர் பும்ரா. பல போட்டிகளில் இவரின் பங்களிப்பு மும்பைக்கு வெற்றியை தேடித்தந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் பும்ராவின் பந்துவீச்சு என்றால் மறுப்பதற்கு இல்லை. 

[Image: 084355_Jasprit-Bumrah-bowling-action.jpg]
சென்னை அணிக்கு எதிரான இறுதி போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் பும்ரா. மும்பை அணியின் கேப்டன் ரோஹித்தும் பும்ரா எங்கள் சொத்து என பாராட்டு தெரிவித்திருந்தார். ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளன் மெக்ராத் , தான் இந்திய பந்துவீச்சாளர் பும்ராவின் தீவிர ரசிகன் என்று தெரிவித்தார். உலக கிரிக்கெட் ரசிகர்களையும், வீரர்களையும் கூட பும்ராவின் பந்துவீச்சு கவனம் கொள்ளவைக்கிறது.
[Image: 081256_bumrah-action.jpg]
ஐபிஎல் மட்டுமில்லை, எதிர்வரும் உலகக்கோப்பையிலும் இந்திய அணியின் முக்கிய நட்சத்திரமாக பும்ரா பார்க்கப்படுகிறார். டெத் பவுலரான பும்ரா உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்படுவார் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் பும்ராவின் பந்துவீச்சுக்கு பின்னால் ஒரு ராக்கெட் சைன்ஸ் இருப்பதாக ஐஐடி கான்பூர் பேராசியர் சஞ்சய் மிட்டல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமன்பாடுகளை கூறியும் விளக்கம் அளித்துள்ளார்.
[Image: 085757_1530373007-4566.jpg]
பும்ரா வீசும் பந்தின் வேகம், அப்போது அவரின் உடல் வடிவ நிலை, பந்து சுழலும் விதம் எல்லாம் சேர்ந்து மேக்னஸ் விளைவு ஏற்படுகிறது. இதன் மூலம் பும்ரா வீசும் பந்தின் கீழ்நோக்கிய விசை துல்லியமாக முடுக்கிவிடப்பட்டு பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துகிறது. திடீர் பவுன்ஸ் ஏற்படவும் இதுவே காரணம் என விளக்கம் தெரிவித்துள்ளார்
Like Reply
70 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம் - படுமோசமான சென்னையின் நிலை!

கடந்த 74 ஆண்டுகளில் 5வது முறையாக தண்ணீர் இருப்பில் படுமோசமான நிலைக்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது.
[Image: chennai-drought.jpg]70 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம் - படுமோசமான சென்னையின் நிலை!
கோடைக்காலம் வந்துவிட்டாலே சென்னையில் தண்ணீர் பிரச்னை தலைகாட்டத் தொடங்கிவிடும். நடப்பாண்டும் இதே நிலை தான் தொடர்கிறது. சென்னையின் முக்கிய நீர் நிலைகளில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. 

அவற்றின் மொத்த கொள்ளளவில் வெறும் 1.3% அளவிற்கு மட்டும் தற்போது தண்ணீர் இருப்பு உள்ளது. இது கடந்த 74 ஆண்டுகளில் 5வது முறையாக மிக மோசமான தண்ணீர் இருப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 

சென்னை சந்தித்த வறட்சிகளில் மிக மோசமான வறட்சி தற்போது நிலவி வருகிறது. சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் குழாய் வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
செம்பரம்பாக்கம் ஏரி:

மொத்த கொள்ளளவு - 3,645 மி.க.அடி 
தற்போதைய தண்ணீர் இருப்பு - 1 மி.க.அடி 

செங்குன்றம்: 

மொத்த கொள்ளளவு - 3,300 மி.க.அடி 
தற்போதைய தண்ணீர் இருப்பு - 28 மி.க.அடி 

பூண்டி ஏரி: 

மொத்த கொள்ளளவு - 3,231 மி.க.அடி 
தற்போதைய தண்ணீர் இருப்பு - 118 மி.க.அடி 

சோழவரம் ஏரி: 

மொத்த கொள்ளளவு - 1,081 மி.க.அடி 
தற்போதைய தண்ணீர் இருப்பு - 4 மி.க.அடி 

மேற்கூறிய தகவலின்படி, சென்னைக்கு நீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருவது தெரிகிறது. தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான், சென்னை நீர் இருப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, 

சென்னைக்கு ஆதாரமாக விளங்கும் ஒட்டுமொத்த நீர் நிலைகளில், 

ஜூலை 2017, மொத்த தண்ணீர் இருப்பு - 0.6% 

செப்டம்பர் 2004, மொத்த தண்ணீர் இருப்பு - 0.0% 

சென்னையில் நீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் உருவாவதற்கு முன்பு, அக்டோபர் 1987ல் மொத்த தண்ணீர் இருப்பு - 0.0% 

ஜூலை 1975, மொத்த தண்ணீர் இருப்பு - 0.4% 

தற்போது, மொத்த தண்ணீர் இருப்பு - 1.3% 

அதாவது, செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகள் முற்றிலும் வறண்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக வீராணம் ஏரியில் கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது. எப்போதெல்லாம் பருவமழை பொய்த்து விடுகிறதோ, அதற்கடுத்த ஆண்டு சென்னை வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்கிறது. 

சென்னையில் கடந்த ஆண்டு 390 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது. ஆனால் வடகிழக்கு பருவமழையின் படி, சராசரியாக 850 மிமீ மழை பெய்திருக்க வேண்டும். இதனால் மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்திற்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது. 

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள், வரும் ஜூலை மாதம் முழுவதுமாக வறண்டு போய்விடும் என்று கூறப்படுகிறது. எனவே தற்போதைய ஒரே நம்பிக்கை தென்மேற்கு பருமழை மட்டுமே. 
Like Reply
சென்னையில் சிக்கிய வினோத மோட்டார் பைக் திருடன்: ஒரு ஸ்பேர் பார்ட்டுக்காக திருடியது வினையானது
[Image: download-4jpg]மெக்கானிக் ப்ரித்விராஜ், சந்தோஷ்குமார்

சென்னையில் மோட்டார் சைக்கிள் திருடும் கும்பல் ஒன்று சிக்கியது. போலீஸார் விசாரணையில் சுவாரஸ்ய தகவல்கள் வெளியானது. மோட்டார் சைக்கிளை ரிப்பேர் செய்ய ஸ்பேர்பார்ட்ஸுக்காக திருடியது அம்பலமானது.
சென்னை வேப்பேரி, பெருமாள் பேட், முத்து கிராமணி தெருவைச்சேர்ந்தவர் நிர்மல்குமார் (19). இவர் வீட்டும்முன் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து வேப்பேரி போலீஸில் புகார் அளித்திருந்தார்.
புகாரைப்பெற்ற போலீஸார் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடிவந்தனர். இந்நிலையில் கொடுங்கையூரில் வாகனச்சோதனையில் சந்தோஷ்குமார் (20) என்பவர் சிக்கினார். அவரது புகைப்படம், வாகனத்தின் புகைப்படத்தை கொடுங்கையூர் போலீஸார் வேப்பேரி போலீஸாரிடம் அளித்து விபரம் கேட்க வாகனச்சோதனையில் சிக்கிய இளைஞர்தான் வேப்பேரியில் பைக் திருடிய இளைஞர் என தெரியவந்தது.
இதையடுத்து அந்த இளைஞரை கைது செய்த போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல சுவாரஸ்யமான, திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. எம்.கே.பி நகரைச் சேர்ந்த சந்தோஷ்குமாருக்கு வேலை எதுவும் இல்லை. சொந்தமாக கேடிபி பைக் உள்ளது.( 200 சிசி திறன், ரூ.2 லட்சம் மதிப்புள்ளது) அதை வைத்துக்கொண்டு ரேஸ் ஓட்டுவதுதான் இவரது வாடிக்கை.
கொடுங்கையூரிலிருந்து கடற்கரை காமராஜர் சாலை வரை நடக்கும் பைக் ரேஸில் கிடைக்கும் பணத்தை வைத்து செலவழிப்பது வாடிக்கை. கஞ்சா போதைப்பொருளுக்கு அடிமையான சந்தோஷ்குமார் மீது ஆண்டுக்கு ஒருமுறை பட்டினப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, மாதாவரம் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது.
[Image: download-3jpg]
 
ஒரு நாள் பைக்ரேஸ் போகும்போது அவரது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியுள்ளது. இதையடுத்து அவர் கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்த பிரிதிவிராஜ் (24) என்பவர் நடத்திவரும் மெக்கானிக் ஷெட்டில் வாகனத்தை சரிப்படுத்த எடுத்துச் சென்றுள்ளார்.
பைக் காஸ்ட்லியான பைக் அதற்கு செலவு செய்ய ஆகும் தொகை குறித்து மெக்கானிக் சொன்ன தொகையைக்கேட்ட சந்தோஷ்குமார் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என கூறியுள்ளார். அப்படியானால் ஒன்று செய் என மெக்கானிக் பிரிதிவிராஜ் யோசனை கூறியுள்ளார்.
எங்காவது கே.டி.எம் பைக் இருந்தால் திருடி எடுத்துவா, அதில் உள்ள ஸ்பேர் பார்ட்ஸை உன் வண்டிக்கு போட்டுவிடலாம் என்று கூறியுள்ளார். அது நல்ல யோசனையாக படவே அதன்படி தனது நண்பன் அஜீத் குமாரை(18) அழைத்துக்கொண்டு தனது வாகனத்தில் வந்து வேப்பேரியில் நிர்மல்குமாரின் பைக்கை திருடியுள்ளார்.
[Image: c3068edb-9114-4b9f-b369-8b952e90d1f9jpg]
 
அந்த பைக்கை மெக்கானிக் ஷெட்டில் விட்டு அதன் ஸ்பேர் பார்ட்ஸை தனது மோட்டார் சைக்கிளுக்கு மாற்றியுள்ளார். பின்னர் மீண்டும் ரேஸுக்கு போக அப்போது வண்டி அடிபட்டுள்ளது. அதை சரிகட்ட மீண்டும் ஒரு கே.டி.எம் பைக்கை திருடி எடுத்துக்கொண்டு மெக்கானிக் ஷெட்டுக்கு வந்துள்ளார்.
அதைப்பார்த்த மெக்கானிக் பிரிதிவிராஜ், தப்பு பண்ணிட்டியே சந்தோஷ் உன் வண்டி 200 சிசி பைக், இது 390 சிசி பைக் (அதன் விலை 3.5 லட்சம்) இதன் ஸ்பேர் பார்ட்ஸ் அதற்கு ஒத்துவராது என்று கூறியுள்ளார். அப்படியானால் என்ன செய்வது என சந்தோஷ்குமார் கேட்க இந்த பைக்கை விற்றுவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டுவா அதில் ரெடிபண்ணலாம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து பாலாஜி (25) என்பவர் உதவியுடன் எம்.கே.பி நகர் திருவள்ளூர் நகரைச்சேர்ந்த ஜான் சாமுவேல் (21) என்பவரிடம் 3.5 லட்ச ரூபாய் மோட்டார் சைக்கிளை வெறும் 8000 ரூபாய்க்கு விற்றுள்ளார். திருட்டு பைக் என்பதால் ஜான் சாமுவேல் குறைவான பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.
[Image: download-5jpg]
8000 ரூபாயுடன் மெக்கானிக்கிடம் சென்ற சந்தோஷ்குமாரைப்பார்த்து ஏளனமாக சிரித்த மெக்கானிக் பிரிதிவிராஜன் 8000 ரூபாயில் என்னத்த வண்டியை ரெடி பண்ண முடியும் நீ இன்னொரு 200 சிசி மோட்டார் பைக்கை எடுத்துட்டு வா நான் ரெடிப்பண்ணி தருகிறேன் என்றுச் சொல்ல அதன்படி வேறு ஒரு மோட்டார் சைக்கிளைத்தேடி சந்தோஷ்குமார் அலைந்துள்ளார்.
அதற்குள் போலீஸில் சிக்கிக் கொண்டார். வேப்பேரியில் கேடிஎம் பைக் திருடும்போது அங்குள்ள சிசிடிவி காட்சியில் இவரது வாகனம் மற்றும் இவரது நண்பருடன் சிக்கிவிட்டார். அதுவே போலீஸார் துப்புத்துலக்க காரணமாக அமைந்தது. அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
சந்தோஷ்குமாரின் கேடிம் வாகனம், வேப்பேரியில் திருடப்பட்டு ஸ்பேர் பார்ட்ஸ் கழற்றப்பட்டு எலும்புக்கூடாய் நின்ற நிர்மல் குமாரின் கேடிஎம் பைக், 8000 ரூபாய்க்கு விற்ற 3.5 லட்ச ரூபாய் 390 சிசி கேடிஎம் பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா, ஸ்டாம்ப் போதை, பைக் ரேஸ் பைத்தியம் திருடவும், செல்போன் பறிக்கவும் இளைஞர்களை தூண்டுவது தற்போது வாடிக்கையாக உள்ளது.  
Like Reply
முதல்முறையாக ஏசி மின் ரயில் : சென்னை-செங்கல்பட்டு இடையே தொடங்க திட்டம்
[Image: 64071.jpg]
தமிழகத்தில் முதல்முறையாக ஏசியுடன் கூடிய மின்சார ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வரை பயணிக்கின்றனர். பணிக்கு செல்வோர் மற்றும் பல்வேறு தரப்பினரும் பயணிப்பதால் தினமும் இந்த ரயில் தடம் கூட்டமாகவே காணப்படுகிறது. இதனால் இந்த வழித்தடை மேம்படுத்த தெற்கு ரயில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மும்பையை போன்று சென்னை முதல் செங்கல்பட்டு வரை ஏசி மின்சார ரயிலை இயக்க திட்டமிட்டு ரயில்வேதுறை, அதற்கான பணிகளை செய்து வருகிறது.

[Image: 091904_AC%20Train%201.JPG]
தமிழகத்தில் மின்சார ரயிலில் ஏசி வசதியுடன் கூடிய சேவை அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். தற்போது இருக்கும் ரயில்களில் ஏசி வசதி கொண்ட வகுப்புகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட சற்று அதிகமாக ஏசி மின்சார ரயிலில் வசூலிக்கப்படலாம் என கூறப்படுகிறது. சென்னையில் மக்கள் தொகை பெருக்கத்தால் மக்களிடம் இந்த ரயில் சேவை வரவேற்பை பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்பட்ட போது, ஆரம்பத்தில் பெரும் வரவேற்பு இல்லையென்றாலும் தற்போது அதிக பயணிகள் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்க
Like Reply
உயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா?
[Image: _107040275_08cb1526-f1fc-402a-8896-43ea4d73ee29.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGES
உயரும் கடல் மட்டம்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா?
முன்பு கணித்ததைவிட சர்வதேச அளவில் கடல்மட்டம் விரைவாக உயர்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
[Image: _107040278_665e0fef-26bb-47bd-b4cc-2c8ae05dd6e8.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இதற்கு க்ரீன்லாண்ட் மற்றும் அண்டார்டிகா விரைவாக உயர்வதுதான் காரணம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 2100ம் ஆண்டு கடல் மட்டம் ஒரு மீட்டருக்கும் குறைவான அளவே உயரும் என கூறப்பட்டது. ஆனால், இதனைவிட இரண்டு மடங்கு உயருமென இப்போது ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடல் மட்டம் உயர்வதன் காரணமாக 1.79 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலம் பறிபோகும். அதாவது லிபியா தேசத்தின் நிலப்பரப்பு அளவிலான நிலம் மூழ்கும்.
[Image: _107040277_77815680-75e8-4374-9538-5fad87cea6a8.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இதன் விளைவாக லட்சகணக்கானோர் தங்கள் வாழ்விடங்களை இழப்பார்கள். லண்டன், நியூயார்க், ஷாங்காய் போன்ற முக்கிய நகரங்களும் பாதிப்புக்குள்ளாகும். மக்கள் வசிப்பதற்கு லாயக்கற்ற நாடாக வங்கதேசம் மாறும்.
Like Reply
கோட்சேவுக்கு புகழாரம் - பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு கேட்டார்
எனது வார்த்தைகளால் எந்த தேசியவாதியாவது பாதிக்கப்பட்டு இருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளார்.



[Image: 201905210359241103_Pragya-Thakur-apologi...SECVPF.gif]

போபால்:

மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவை ‘தேச பக்தர்’ என்று கூறியதன் மூலம் போபால் தொகுதி பா.ஜனதா வேட்பாளரும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர் சர்ச்சையில் சிக்கினார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்டா இந்நிலையில், அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-


எனது வார்த்தைகளால் எந்த தேசியவாதியாவது பாதிக்கப்பட்டு இருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் பணிகள் முடிந்தநிலையில், இது சிந்திக்க வேண்டிய நேரம். பிராயச்சித்தம் தேடும் செயலாக நான் மவுனம் அனுசரிக்கப்போகிறேன். கடுமையான விரதத்தை தொடங்கி விட்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Like Reply
[color=var(--title-color)]ஒரே மேடையில் இளையராஜா-வைரமுத்து! - பி.சுசீலா நிகழ்ச்சியில் சுவாரஸ்யம்[/color]
[color=var(--title-color)]இளையராஜா வருகைதந்தபோது, அரங்கில் அமர்ந்திருந்தார் வைரமுத்து.[/color]
[Image: vikatan%2F2019-05%2F34b48dcd-6930-4658-8...2Ccompress][color=var(--meta-color)]சுசீலாவை வாழ்த்தும் இளையராஜா[/color]
[color=var(--content-color)]பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா, திரையிசைக்கு வந்து 65 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எனவே, `லயா மீடியா' நிறுவனம் சார்பில் பி.சுசீலாவுக்குப் பாராட்டுவிழா சென்னையில் நேற்று நடந்தது. தமிழ் சினிமா உலகின் இரு துருவங்களான இளையராஜா-வைரமுத்து இருவரும், நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுதான் இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பு. நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள்....[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-05%2F85aaa785-5d47-4e0c-a...2Ccompress]வைரமுத்துவை வரவேற்ற சுசீலா[/color]
[color=var(--content-color)]* இசைக்கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் என ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். ஆனால், இளையராஜா, கே.ஜே.யேசுதாஸ், வைரமுத்து ஆகியோர் கலந்துகொண்டது நிகழ்ச்சிக்குக் கூடுதல் முக்கியத்துவத்தைக் கூட்டியது. இளையராஜா - வைரமுத்து இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், அரங்கில் கூடியிருந்த பிரபலங்கள் பலரும் ஆச்சர்யத்தில் மகிழ்ச்சியடைந்தனர்.[/color]
[color=var(--title-color)]* இளையராஜா வருகைதந்தபோது, அரங்கில் அமர்ந்திருந்தார் வைரமுத்து. எனவே, விருந்தினர்கள் அறையில் சிறிதுநேரம் காத்திருந்தார் இளையராஜா. பிறகு மேடையேறியவர், சுசீலாவைப் பற்றி 15 நிமிடங்களுக்கும் மேல் பேசினார். `நானா பாடலையே. நீதான் பாடவெச்சே' என இளையராஜாவைப் பார்த்து சுசீலா பாட, அரங்கத்தில் கைதட்டல் அதிகரித்தது. தான் இசைத்துறைக்கு வரக்காரணமான, `மாலைப் பொழுதின் மயக்கத்திலே' பாடல் பற்றி நெகிழ்ச்சியாகக் கூறினார், இளையராஜா. மேலும், ``இப்பாடலில் வரும் `மயங்குது எதிர்காலம்' என்ற வரியில்தான் நான் அதிகம் மயங்கினேன். சுசீலாவின் குரல், இந்த நூற்றாண்டில் இணையற்ற குரல்" என்றார். பி.சுசீலாவுக்கு சால்வையைப் போர்த்தி, வைர மோதிரத்தை அணிவித்தார் இளையராஜா [/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-05%2Fd61c9142-4da2-4b41-9...2Ccompress]சுசீலாவுடன் யேசுதாஸ்[/color]
[color=var(--content-color)]* `` `ழ' உச்சரிப்பை மிகச் சிறப்பாகத் தன் குரலில் வெளிப்படுத்துவார், பி.சுசீலா. அவரைப் பாடவைக்கவே, `கண்ணுக்கு மை அழகு' பாடலைத் தயார் செய்தோம். அந்தப் பாடலை நான் எழுதி முடித்துப் பல மாதங்களுக்குப் பிறகே அப்பாடல் ஒலிப்பதிவு நடைபெற்றது" என மேடையில் நீண்டநேரம் உரையாடினார் வைரமுத்து.
* ``சரஸ்வதியை நான் பார்த்ததில்லை. கலைவாணியின் பரிபூரண அம்சங்கள் பெற்ற, பி.சுசீலாவையே நான் சரஸ்வதியாக நினைக்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டார் யேசுதாஸ். மேலும், `விழியே கதை எழுது' பாடலை முழுமையாகப் பாடினார் யேசுதாஸ்.
* நிகழ்ச்சியில் தான் பாடிய பாடல்களில், சில வரிகளை பின்னணிப் பாடகர் மனோவுடன் இணைந்து பாடினார் பி.சுசீலா.
[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-05%2F2f868255-b3c5-4a4d-a...2Ccompress]சுசீலாவுடன் இளையராஜா[/color]
[color=var(--content-color)]* கங்கை அமரன், சங்கர் கணேஷ், மனோ, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், சுஹாசினி, கெளதமி, சந்தான பாரதி உள்ளிட்ட பல பிரபலங்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவருமே மேடையேறி, சுசீலாவைப் பற்றி பேசினர். `இசைப் பேரரசி' என்ற பட்டமும் பி.சுசீலாவுக்கு வழங்கப்பட்டது[/color]
Like Reply
ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள்: சிவசேனா பாராட்டு
மும்பை: ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள் என பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான சிவசேனா பாராட்டியுள்ளது.
[Image: Tamil_News_large_2281451.jpg]

நாடு முழுவதும், லோக்சபா தேர்தல், ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. நாளை(மே 23) தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஆருடம் கூறுகின்றன.

இந்நிலையில், பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான, சிவசேனாவின் பத்திரிகையான, 'சாம்னா'வில் எழுதப் பட்டுள்ள கட்டுரை: பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என யாரும் கூறத் தேவையில்லை. ஏனெனில், மக்கள் எல்லோரும், மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் சிவசேனா - பா.ஜ., கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பெறும்.


[Image: gallerye_042607309_2281451.jpg]


கடந்த லோக்சபா தேர்தலில் எதிர்கட்சியாக வருவதற்கு தேவையான வெற்றியை காங்., பெறவில்லை. ஆனால் இம்முறை, மத்தியில் காங்., எதிர்கட்சியாகிவிடும்; ராகுல் எதிர்கட்சி தலைவராகிவிடுவார். இது ராகுலுக்கு கிடைத்த வெற்றி. ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Like Reply
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் தனியார் தண்ணீர் லாரிகள் 27-ந்தேதி முதல் வேலைநிறுத்தம்
[Image: 201905220301106434_Chennai-Thiruvallur-K...SECVPF.gif]
சென்னை, 

பருவமழை பொய்த்ததன் விளைவாக சென்னையின் குடிநீர் ஆதாரங்களான ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வந்தது. தற்போது ஏரிகள் முற்றிலும் வறண்டு போக தொடங்கிவிட்டன. இதனால் தலைநகர் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. வீட்டு குழாய்களில் தண்ணீர் வந்து பல நாட்கள் ஆகின்றன.
இதனால் குடிநீருக்காக மக்கள் செய்வதறியாது தவிக் கின்றனர். தற்போதைய சூழலில் தண்ணீர் லாரிகளே மக்களுக்கு கடவுளாக காட்சி தருகின்றன. எப்போது தண்ணீர் லாரிகள் கண்ணில் பட்டாலும் ஓட்டமாக ஓடி போதிய தண்ணீர் பிடித்துவந்தால் போதும், அன்றைய மிகப்பெரிய சாதனையாக அக்கம்பக்கத்தினருடன் பெருமை பேசிக்கொள்கின்றனர்.

கொஞ்சம் வசதி படைத்தவர்கள் முறையாக குடிநீர் வாரியத்திடம் முன்பதிவு செய்து தங்கள் குடியிருப்புகளுக்கு அவ்வப்போது குடிநீர் பெற்று பணத்துக்கு இணையாக சிக்கனமாக குடிநீரை செலவு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தவித்து கொண்டிருக்கும் மக்களுக்கு இன்னொரு அடி விழுந்திருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அதிரடியாக வேலைநிறுத்தத்தை அறிவித்து உள்ளனர். இது மக்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.முருகன் கூறியதாவது:-

நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை ஏதோ திருட்டு போல அரசு முத்திரை குத்த தொடங்கிவிட்டது. செழிப்பான நிலத்தடி நீர்மட்டம் உள்ள இடங்களில் தண்ணீரை உறிஞ்சி அதை தேவைப்படும் இடங்களுக்கு சென்று மக்களிடம் வினியோகம் செய்கிறோம். இந்த நடைமுறைக்கு முறையான உரிமம் கேட்டு பல ஆண்டுகளாக அரசிடம் கையேந்தி நிற்கிறோம். ஆனால் அரசு பாராமுகமாகவே இருந்து வருகிறது.

‘நீரை கனிம வளத்தில் சேர்த்துவிட்டோம், எனவே அரசு தவிர தனியாருக்கு இந்த உரிமம் தர இயலாது’ என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். நீரை கனிம வளத்தில் சேர்க்கமுடியாது. மலைகளை வெட்டினால் வளராது. ஆனால் மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தவிர இதுவும் ஒருவகையில் மக்கள் சேவைதான். அதுவும் இந்த சூழ்நிலையில் எங்கள் பணி இன்றியமையாத ஒன்று.

மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் முதற்கட்டமாக வருகிற 27-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்து உள்ளோம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு இது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் இயங்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே 27-ந்தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் இயங்கும் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தனியார் லாரிகள் இயங்காது.

எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க உரிமம் தரும் பட்சத்தில் எங்கள் போராட்டத்தை கைவிடுவோம். இதுதொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தற்போதைய சூழலில் தனியார் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “சந்தர்ப்பம் பார்த்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் எங்களை மேலும் சோதிக்கிறார்கள். ஏற்கனவே தண்ணீர் பெற படாதபாடு படுகிறோம். இதில் இந்த பிரச்சினை வேறு... தலைநகருக்கும், தண்ணீர் தட்டுப்பாடுக்கும் இடையேயான சோகமான உறவு என்றைக்கு முடிவு பெற போகிறதோ...” என்று வேதனை தெரிவித்தனர்.
Like Reply
சென்னை உயர்நீதிமன்றத்தில் 50 ஆயிரம் வரை சம்பளத்தில் வேலை !
[Image: 64094.jpg]
சென்னை உயர்நீதிமன்றத்தில் ரெசிடென்சியல் அசிஸ்டெண்ட் எனப்படும் வீட்டு உதவியாளர் பணிக்கு, நேரடி தேர்வின் மூலம் 180 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அலுவலக உதவியாளர் பணியிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்டதுதான் இந்த வீட்டு உதவியாளர் பணி.   
பணி:
வீட்டு உதவியாளர் (ரெசிடென்சியல் அசிஸ்டெண்ட்)


[Image: 045542_hc.jpg]
காலிப்பணியிடங்கள்:
மொத்தம் = 180 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியான தேதி: 15.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.06.2019
வங்கி மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்:14.06.2019

ஊதியம்:
குறைந்தபட்சமாக, ரூ.15,700 முதல் அதிகபட்சமாக ரூ.50,000 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:
1. ஒதுக்கீடு வகையினருக்கு, குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 35 வயது வரையும் இருத்தல் வேண்டும்.
2. ஒதுக்கீடு வகையினரை தவிர மற்ற வகுப்பினருக்கு, குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரையும் இருத்தல் வேண்டும்.
3. நீதித்துறை சார்ந்த பணியிலுள்ள விண்ணப்பதாரர்களாக இருந்தால், குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 45 வயது வரையும் இருத்தல் வேண்டும்.

தேர்வுக்கட்டணம்:
1. பொது / ஓபிசி பிரிவினர் - ரூ.500
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / ஆதரவற்ற விதவைகள்  போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

கல்வித்தகுதி:
அறிவிப்பு வெளியான தேதியன்று, எட்டாம் வகுப்பு அல்லது அதற்கிணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 

முன்னுரிமை தகுதிகள்:
1. ஒரு வருட கைவினை பயிற்சி / முழு நேர வீட்டுப் பராமரிப்பு / உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு / சமையல் பேக்கரி பொருட்கள் தயார் செய்தல் - அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் மேற்கண்ட துறைகளில் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

2. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட வேண்டும்.
3. இலகு ரக வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், https://www.mhc.tn.gov.in/-என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

[Image: 041055_TET-Hall-Ticket.jpg]
தேர்வு செய்யும் முறை:
1. எழுத்துத் தேர்வு
2. செய்முறை தேர்வு
3. வாய்மொழித்தேர்வு

மேலும், இது குறித்த முழு தகவல்களுக்கு, https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_84_2019.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்
Like Reply
”இன்னைக்கும் லீவு சார்... தண்ணி லாரி வரல!” - சென்னை OMR-ன் பரிதாப நிலை

[/url][Image: 491_thumb.jpg]கார்க்கிபவா
[url=https://www.vikatan.com/author/491-karki-b]
 Follow

[Image: 2Years_end_of_year_sale_728x90.gif]
சென்னையின் மிகப்பெரிய நீராதாரம், பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள். என்ன ஆனாலும் அவை தண்ணீர் தரும் என நீர் ஆராய்ச்சியாளர்கள் முன்பு சொல்லுவார்கள். அந்த இடத்திலிருந்து சில கி.மீ தூரமே இருக்கும் பகுதிகள்தான் இப்போது தண்ணீருக்காக அலைந்துகொண்டிருக்கின்றன.
[Image: 158025_thumb.jpg]
ஐ.டி மக்கள் மீது ஒரு பிம்பம் உண்டு. “ஓ.எம்.ஆர்ல சம்பாதிக்கிறத ஈ.சி.ஆர்ல செலவு பண்றவங்கதான” என்று சொல்வார்கள். மற்ற பகுதி ஐ.டி.வாசிகள் எப்படியோ... OMR, ECR வாசிகள் தண்ணீராகச் செலவு செய்கிறார்கள் என்பதைவிட, தண்ணீருக்காக அதிகம் செலவு செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. 
கடந்த 10,15 ஆண்டுகளில் வளர்ச்சி கண்ட இந்தப் பகுதிகளில்தான் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம். ஆனால், பெரும்பாலான கேட்டட் கம்யூனிட்டிகளில் (gated community) போர்வெல் என்பதே கிடையாது. மெட்ரோ வாட்டரும் கிடையாது. தண்ணீருக்கான இவர்களின் ஒரே  மூலாதாரம், தண்ணீர் லாரிகள்தாம். திருப்போரூருக்கு அந்தப் பக்கமிருக்கும் கிராமங்களில் விவசாயிகளின் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து, அந்த நிலத்தடி நீரைத்தான் OMR, ECR மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு லாரிகளில் விநியோகம் செய்துவருகின்றன தனியார் நிறுவனங்கள். ஒரு ஃபோன் செய்தால் போதும், லாரி வந்துவிடும். 5 முதல் 10 லட்சம் வரை கடன் சொன்னாலும் தண்ணீர் தந்துவிடுவார்கள். காரணம், தண்ணீருக்காக வேறு ஒரு வழியை யாரும் கண்டுவிடக் கூடாது என்பதுதான். அந்த ஒற்றைத் தீர்வு உத்திதான் இப்போது பெரும் பிரச்னையாக மாறியிருக்கிறது.
நேற்று ஒரு செய்தி வெளியானது. “27-ம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்” என்ற அந்தச் செய்தி, ஒட்டுமொத்த OMR, ECRவாசிகளைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கெனவே, தண்ணீர் லாரிகளின் விலை அதிகரித்திருக்கிறது. முன்பெல்லாம் 2-3 மணி நேரத்தில் வந்த லாரித் தண்ணீர், இப்போது ஒன்றிரண்டு நாள்கள் கழித்தே கிடைக்கிறது. இந்தச் சூழலில் வேலை நிறுத்தமா என அலறினார்கள். எக்ஸிட் போல் பற்றி அரசியல் ஆராய்ந்த அத்தனை வாட்ஸ் -அப் குரூப்பிலும் இப்போது இதுபற்றிய விவாதங்கள்தாம். பயந்துபோய் ஆளாளுக்கு லாரி கேட்க, அவர்களும் வழியற்றுப்போனார்கள். அப்படியே வந்தாலும், வீட்டிலிருக்கும் ஒரு வாட்டர் பாட்டில் விடாமல் எல்லாவற்றிலும் தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்வதால், பல நாள் தாங்கும் தண்ணீரின் அளவு சில மணி நேரத்திலே தீர்ந்துபோனது.


[Image: unnamed_10361.jpg]
[color][font]




சோழிங்கநல்லூரிலிருக்கும் ஒரு கேட்டட் கம்யூனிட்டிவாசி முருகனிடம் இதுபற்றிக் கேட்டேன்.
“எங்க அப்பார்ட்மென்ட்ல மொத்தம் 1000 வீடு. 700 வீடுகள்ல ஆளுங்க வந்துட்டாங்க. 2500 பேர்கிட்ட இருக்கோம். ஒரு வருஷமாவே தண்ணி லாரிதான். இன்னும் எங்களோட மெயின்ட்டெனன்ஸ் வேலைகளை பில்டர்தான் பாக்குறாங்க. ஏன்னா, 2 வருஷத்துக்கான  பணத்தை முன்னாடியே எங்ககிட்ட வாங்கிட்டாங்க. தண்ணி லாரி வர வைக்கிறதெல்லாம் அவங்க வேலைதான். ஆனா, சரியா பேமென்ட் பண்ணாததால, அப்பப்ப லேட்டா வரும். இப்ப டிமாண்டு அதிகமா இருக்கிறதால சுத்தமா வரல. 2 நாளா ஆபீஸே போகல. வேற என்ன சோர்ஸ்னே தெரில. அக்ரிமென்ட்படி போர்வெல் போட்டிருக்கணும். ஆனா, தண்ணி உப்புன்ற காரணத்தால போடல. வீடு வாங்கினப்புறம் கேட்டா என்ன பதில் கிடைக்கப்போகுது? தண்ணி வரிகூட கட்டுறோம். ஆனா, மெட்ரோ வாட்டருக்கான கனெக்‌ஷன் கூட இல்ல. மெட்ரோல தண்ணி லாரி புக் பண்ணா 20 நாள் ஆகுது. இங்க வீடு வாங்கினது எங்க தப்புதான். ஆனா, அரசாங்கம்தான இதுக்குத் தீர்வு தரணும்” என்று கொந்தளித்தார்.
அனைத்து மக்களுக்கும் சுத்தமான தண்ணீர் தரவேண்டியது அரசின் கடமை. அதற்கு வழி செய்யாமல், நகரத்தை விரிவாக்கம் செய்துகொண்டேபோவது முட்டாள்தனம்தான். OMR சாலையின் நீளம், மத்திய கைலாஷிலிருந்து கேளம்பாக்கம் வரை மட்டுமே 23 கி.மீ.  3 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் 12 லட்சம் பேர் இந்தப் பகுதியில் வசிக்கிறார்கள். அதுபோக, பல லட்சம் பேர் வேலைக்காக இங்கு வந்து செல்கிறார்கள். அத்தனை பேருக்கும் ஒரு நாளைக்கு ஏறத்தாழ 3 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இங்கிருக்கும் நிலத்தடி நீர் உப்பாக இருப்பதால், அதைப் பயன்படுத்தவே முடியாது. அதனால், 3 கோடி லிட்டர் தண்ணீரில் 90 சதவிகிதம் லாரி தண்ணீர்தான். 
TOP COMMENT
[Image: user_avt.png]
ashok

சென்னை தமிழகத்தில் விவசாய நிலமில்லாத மாவட்டமாகும் . ஆனால் ஏரிகள் நிறைந்த மாவட்டம் விவசாய நிலங்கள் இருந்திருந்தால் மழைநீரை தாங்கி நின்று நிலத்தடி நீர் மட்டத்தையாவது கொடுத்திருக்கும் . சென்னை போல பிற ...
[/font][/color] [color][font]

”தண்ணீர் எடுக்க தங்கள் நிலங்களை விவசாயிகள் கொடுப்பது எப்போதுமே அந்தப் பகுதியில் பிரச்னைதான். இப்போது, சென்னை முழுக்கவே தண்ணீர்ப் பிரச்னை அதிகரித்திருப்பதால், அங்கே தண்ணீர் எடுக்க எதிர்ப்பு வலுத்திருக்கிறது. சென்ற வாரம், காவலர்கள் அந்தப் பகுதியில் முறையற்ற தண்ணீர்க் கிணறுகளை மூடியிருக்கிறார்கள். அதனால் லாரி ஓட்டுநர்களுக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. அரசிடம் அதுபற்றி பேசத்தான் இப்போது வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறார்கள். அரசு உடனே இதைப்பற்றி பேசி சரி செய்ய வேண்டும்” என்கிறார், துரைப்பாக்கத்தைச் சேர்ந்த அபிஷேக்.
[/font][/color]
[Image: 157855_thumb_12214.jpg]
[color][font]
ஈ.சி.ஆரிலிருக்கும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், இந்தப் பகுதி மக்களுக்கு என்றுதான் தொடங்கும்போது சொன்னார்கள். ஆனால், ஒரு சொட்டு நீர்கூட இவர்களுக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. OMR -க்கு என அப்படியொரு பிரத்யேக பிளான்ட்டு தேவை என்பது இவர்களின் நீண்டகால கோரிக்கை. அடுத்த சில நாள்களில் பிரச்னை சரியாகவில்லையென்றால், சாலைக்கு வந்து போராடுவதுதான் ஒரே வழி என்கிறார்கள், OMRவாசிகள்.
ஐ.டி நிறுவனங்கள், உணவு விடுதிகள், வீடுகள் மட்டுமல்ல கட்டுமானத்துறையும் இப்போது பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மந்தமான நிலையிலிருந்த ரியல் எஸ்டேட், இப்போதுதான் கொஞ்சம் வளர்ந்தது. அதற்குள் தண்ணீர்ப் பிரச்னை அவர்களுக்குத் தலைவலி ஆகியிருக்கிறது. இந்தப் பகுதியில் கட்டப்படும் புதிய வீடுகளின் விற்பனையை இது பாதிக்கும் என்பது ஒரு பிரச்னை. அவற்றைக் கட்டி முடிக்கவே தண்ணீர் இல்லையென்பது இன்னொரு பிரச்னை.
இது கோடை விடுமுறைக்காலம். பலர் வெளியூர்களுக்குப் போயிருக்கிறார்கள். அவர்களெல்லாம் திரும்பினால், தண்ணீர்த் தேவை இன்னும் அதிகரிக்கும். அதை சென்னை எப்படி சமாளிக்கப்போகிறது என்பது தெரியவில்லை. சில அப்பார்ட்மென்ட்டில் பொறுப்புடன் தண்ணீரைச் சேமிக்க மழைநீர் வடிகால் அமைத்திருக்கிறார்கள். மறுசுழற்சி செய்கிறார்கள். சிக்கனமாகத் தண்ணீரைச் செலவு செய்ய பல வழிகளைக் கையாள்கிறார்கள். அவற்றை அனைவரும் பின்பற்றுவது அவசியம். அரசும் சில அறிவுரைகளைச் சொல்லியிருக்கிறது. 
சென்னையின் மிகப்பெரிய நீராதாரம், பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள். என்ன ஆனாலும் அவை தண்ணீர் தரும் என நீர் ஆராய்ச்சியாளர்கள் முன்பு சொல்லுவார்கள். அந்த இடத்திலிருந்து சில கி.மீ தூரமே இருக்கும் பகுதிகள்தான் இப்போது தண்ணீருக்காக அலைந்துகொண்டிருக்கின்றன. 
வந்தாரை வாழவைத்த சென்னையை யார் வாழ வைக்கப்போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. [/font][/color]
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)