Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீ by முகிலன்
#31
சட்டென நிமிர்ந்து ”ம்..?” என என்னைப் பார்த்தாய்.
”நா சொல்றது புரியுதா..?”
” புரியுதுங்க..! என்னால நீங்க கெட்ட பேரு வாங்க வேண்டாங்க..! நா ஏதாவது தப்பா பேசிருந்தா.. என்னை மன்னிச்சுருங்க..! அறிவில்லாம பேசிட்டேன்..!!” என்றாய்..!!
”ஏய்… பரவால்ல..!!”

ஊட்டி மலைரயில்… அப்போதுதான்… ‘ ஊ..ஊ..’ என ஊளையிட்டவாறு.. ரயில் நிலையத்தை வந்து சேர்ந்தது..! அதை நீ ஆர்வமாகப் பார்த்தாய்.!
” இப்பத்தான் வருதுங்களா..?” எனக் கேட்டாய்.
”ம் ம்..!!”
”மேலருந்து தானுங்களே வருது..?”
” ம்..!!”
” ஒரு நாளைக்கு எத்தனை தடவைங்க… போய்ட்டு வரும்..?”
”ஒரே தடவதான்..!! காலைல போனா… சாயந்திரம் வந்து சேரும்…!! அதுவும் பாவம் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு ஓடிட்டிருக்கு..!!”
”ஏங்க ..?”
” இந்த மாதிரி.. மழை சீசன்ல எல்லாம் மாசத்துல பாதி நாள் ஓடறதே பெரிய விசயம்தான்..!! ஒன்னு ரயில் எஞ்சின் ரிப்பேராகி நடு வழில நின்றும்..! இல்ல மண்சரிவு ஏற்பட்டு… ரோடு பிளாக்காகி நின்றும்..!!”
”இந்த ரயில்ல நீங்க போயிருக்கீங்களா..?”
” அந்தளவுக்கு… பொறுமை கெடையாது.. எனக்கெல்லாம்..”
”எல்லாம் ஜாலிக்குத்தானுங்களே..இதுல போறாங்க..?”
”அது.. சரிதான்..! ஆனா… அது வெளியூர்காரங்களுக்கு… நம்மூர்க்காரங்க… அதுல போனா வெறுத்துருவாங்க…!! சரி… நீ எப்படி…?” என நான் கேட்க..
” நான்லாம்… இன்னும் ரயில்ல போனதே இல்லீங்க..” எனச் சிரித்துக் கொண்டே சொன்னாய்.!

ஒரு குறுகலான சந்துக்குள் நுழைந்து.. என் வீட்டிற்கு அழைத்துப் போனேன். முன் கதவைத் திறந்து உள்ளே போக… பெரிய வாசல்.!
வாசலுக்கு அடுத்தது..வீட்டுக்கதவு..! அந்தக் கதவைத் திறக்க… உள்ளே தெற்கு வடக்காக இரண்டு அறைகள்..!

” முன்னாடியே.. வீடுன்னு நெனச்சங்க..! அது வெறும் கதவுங்களா…?” என்றாய்.
” ம்.. அது மதில் சுவர் கதவு..! இது பழைய காலத்து வீடு..!! வா.. உள்ள வா..!!” என்று விட்டு வீட்டில் நுழைந்தேன். வீடு இருளில் மூழ்கியிருக்க.. விளக்கைப் போட்டேன்..!

உள்ளே வந்து.. வீட்டைப் பார்த்து… ”வீடு நல்லாருக்குங்க.” என்றாய்.
கட்டில் மேல் குவியலாய் கிடந்த.. போர்வையை எடுத்து மடித்து வைத்தேன். நாற்காலியில் கிடந்த.. என் லுங்கி..ஜட்டியெல்லாம் எடுத்து விட்டு.. ”உக்காரு…” என்றேன்.
” பரவால்லீங்க…!!” சங்கோஜமாக என்னைப் பார்த்தாய்.
”இதான்.. என் வீடு…” சாத்தியிருந்த ஜன்னலைத் திறந்து வைக்க.. லேசான காற்று அறைக்குள் நுழைந்தது ”வசந்த மாளிகை..!!”
” நல்லாருக்குங்க..” மறுபடி சொன்னாய்.
”இந்த வீட்ல நான் மட்டும்தான் ஒண்டி ஆளு..” பேன் சுவிட்சைப் போட்டு விட்டேன்.

சுவற்றில் மாட்டியிருந்த போட்டோவைப் பார்த்தாய்.
”என் அம்மா…!!” என்றேன்.
நீ புன்னகைத்தாய்..!
”ஏதாவது சாப்பிடறியா..?”
”ஐயோ… அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க..!”
” காபி குடிக்கலாமா..?”
”எனக்கு வேண்டாங்க…! நீங்க வேனா…”
”நீ.. குடிப்ப இல்ல..?”
”ம்..!!” தலையசைத்தாய்.

சமயலறைக்குள் போய் பார்த்தேன்.! காபி தூள்.. சர்க்கரை எல்லாம் இருந்தது.! பால் மட்டும் வேண்டும். .!
” நீ.. உக்காரு..நான் போய் பால் வாங்கிட்டு வந்துர்றேன்..” என்க..
”எங்கீங்க…?” எனக் கேட்டாய்.
” கடைலதான்..!”
”இங்க.. முன்னாடி ஒரு கடை இருந்துச்சுங்களே..?”
Reply
#32
ம்…அதான்…”
”காசு குடுத்தீங்கன்னா.. நானே போயி…”
” பரவால்ல இரு..!! நானே போய்ட்டு வந்தர்றேன்..! இன்னிக்கு நீ.. என்னோட விருந்தாளி…!!” எனச் சொல்லி விட்டு.. கடைக்குப் போனேன்..!

அரை லிட்டர் பால்… மேரி கோல்டு பிஸ்கெட் ஒன்று வாங்கிக்கொண்டு… திரும்ப.. நீ வாசல் கதவருகே வந்து நின்று கொண்டிருந்தாய்.
” அட… இங்க ஏன் வந்து நிக்கற..? உக்காரலாமில்ல..?” என்றேன்.
” இல்ல.. பாத்தங்க..” எனச் சிரித்தாய்.
”கதவ சாத்திட்டு வா..” என்று விட்டு வீட்டுக்குள் போனேன்.

சமையல் கட்டில் நுழைந்து..சிலிண்டர் கேஸை ஓபன் செய்து விட்டு.. பால் பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து… கவரை உடைத்துப் பாலை ஊற்றி விட்டு.. அடுப்பைப் பற்ற வைக்க.. நீ… என் பக்கத்தில் வந்து நின்றாய்..!
” நீ.. சமைப்பியா…தாமரை..?” என்று.. உன்னைப் பார்த்துக் கேட்டேன்.
சிரித்தாய் ” உங்களுக்கு புடிக்குமோ… என்னமோ..?”
Reply
#33
Nice bro
Reply
Users browsing this thread: 1 Guest(s)